வசந்தம் வந்தாச்சு! வாங்க, எங்க வீட்டு பால்கனித் தோட்டத்தைப் பார்க்கலாம். ஒவ்வொரு வருஷமும் தவறாம 2 தக்காளி 2 பச்சமிளகாச்செடி வாங்கி நடுவேன், இந்த வசந்தத்துக்கு காய்கறி பக்கம் போகவேண்டாம் என நானே ஒரு முடிவெடுத்துகிட்டு அவை எதுவும் வாங்கலை. கொஞ்சமா வாங்கினாலும் பெரிய பூச்செடிகளா வாங்கியாச்சு! :)
கீழிருக்கும் பூக்களில் மூன்று, சிறப்பு விற்பனைகளில் ஐம்பது பைசா - ஒரு ரூபாய்க்கு வாங்கியவை. அந்த வெள்ளைப் பூக்கள் (செவ்வந்திக்கு அருகில் இருப்பவை) மட்டும் கொஞ்சமே கொஞ்சம் காஸ்ட்லி! நல்ல நறுமணத்துடன் இருந்ததால் வாங்கிவந்துவிட்டோம்.
அடுத்ததாக, இங்கே பக்கத்தில் இருக்கும் தோழி ஒருவர் காஸ்ட்கோ-வில் டேலியா bulbs வாங்கிவந்து நட்டிருப்பதாகக் கூற, நாங்களும் காஸ்ட்கோ போனபோது பார்த்து வாங்கிவந்தோம். எல்லாருக்கும் டேலியா பூக்கள் தெரியும் என நம்புகிறேன், இருந்தாலும் அது என்ன பூ என தெரியாதவங்க இங்கே போய் படம் பார்த்துட்டு வந்துருங்க. ஏன் இதை பர்ட்டிகுலரா சொல்றேன்னா, இங்கே சில தோழிகளிடம் சொன்னபோது, டேலியா-வா? அது என்னது? எப்படி இருக்கும் என்று ஆச்சரியமாக் கேட்டுப்புட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!ஊட்டி-க்கு பக்கத்தில் இருப்பதாலோ என்னமோ..கோவையில் டேலியா பூக்கள் சாதாரணமா விற்பனைக்கு வரும். சீஸன் டைமில் காலை நேரங்களில் பூக்காரங்க சைக்கிளில் அகலமான தட்டக்கூடைகளில் பூக்களை கொண்டுவந்து ஒண்ணு ஒரு ரூபாய் என விற்பாங்க. வீடுகளிலும் டேலியா வளர்ப்பதுண்டு. பல நிறங்களில் அழகழகா இருக்கும் பூக்களை வீட்டிலேயே செடி வளர்த்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு பலநாளா உண்டு. அந்த நாட்களில் எங்க சித்தி வீட்டில் டேலியா இருக்கும், அங்கிருந்து கிழங்கு கொண்டுவந்து நட்டு நட்டு பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன். ;) ..ஹ்ம்ம்! கொசுவர்த்தி பலமாச் சுத்துது, அப்படியே அசந்து தூங்கிராதீங்க! கமான், வேக் அப்! :)
நாங்க வாங்கிய பேக்கட்டில் இரு வண்ணங்களில் டேலியா கிழங்குகள் இருந்தன, முதலே வாங்கிய தோழியிடம் வேறு இரு நிறங்கள்! அப்புறமென்ன? எங்க வீட்டு கிழங்க அவங்களுக்கு கொஞ்சம் குடுத்து, அவங்க கலர் கிழங்க நாங்க கொஞ்சம் வாங்கி, நட்டாச்சு! ரெண்டு வீட்டிலும் செடிகளும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டன, ஆனா எந்தத் தொட்டியில் எந்த நிறப் பூக்கள் வரும் என்பது இப்ப பெரிய சஸ்பென்ஸா இருக்குதுங்க! :)
மீண்டுமொருமுறை கடைக்குப் போனபோது " விண்டர் ஜாஸ்மின்" என்று ஒரு வகை செடி... அல்ல, கொடி! :) விற்பனைக்கு இருந்தது. எனக்கு அந்த செடி மேல பலகாலமா ஒரு கண்ணா இருந்துச்சா, அதையும் வாங்கிவந்துட்டோம். நம்ம ஜாதிமல்லிப் பூ போல நல்ல வாசனை! முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போல எங்க கொடிக்கும் தேர் கொடுக்க யாரும் வருவாங்களா என காத்திருக்கிறேன். ஹாஹ்ஹா! ;) விரைவில் கொடியைப் படரவிட ஆவன செய்யணும்.
Patio Garden..ஒரு முழுத்தோற்றம்..ஒவ்வொரு படத்திலும் முகம் காட்ட மறுக்கும் ஜீனோ-வை திரும்பி நிக்க வைக்க முடிந்தளவு போராடிப் பார்த்துட்டேன், ஒர்க் ஆகலை, அதனால அட்ஜஸ்ட் பண்ணிகுங்க.
Also, For a change, இந்த முறை டிஃபன் - டீ- காபி- ஸ்னான்ஸ் எதுவும் இல்லாம வெறுமனே ஒரு பதிவு. வெறுத்துப் போய் ஓடீராம கமெண்ட் போடுவீங்க என்ற நம்பிக்கையில்! ;)
Unga vettu thotathai suthi parthathil santhosam akka............
ReplyDeleteஇங்கும் வந்ததே வசந்தம். நாங்களும் நேற்று வாங்கியாச்சு பூச்செடிகள்.டாலியாவும்(ஜேர்மன் மொழி)வாங்கினோம்.எனக்கும் விருப்பம்.
ReplyDeleteநீங்க வாங்கிய பூக்கள் அழகாக இருக்கு. 3வது பூ வித்தியாசமா இருக்கு.
//..ஹ்ம்ம்! கொசுவர்த்தி பலமாச் சுத்துது, அப்படியே அசந்து தூங்கிராதீங்க! கமான், வேக் அப்!// :):)
பகிர்விற்கு நன்றி.
அழகு... அருமை...
ReplyDeleteஎழுத்து நடை - கலக்கிட்டீங்க போங்க...!
வாழ்த்துக்கள்...
ரொம்ப நல்லா இருக்கு மகி உங்கள் தோட்டம் அருமை... பூக்கள் அனைத்தும் தங்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்துகிறது. ம்ம்ம்ம் வளரட்டும் முல்லை...
ReplyDeleteஎன்ன ஏமாத்தி விட்டீங்க மகி ... ரோஜா உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்தது என்று நம்பி விட்டேன்... பரவாஇல்லை மகி.....
டேலியா பூக்கள் ..எனக்கு ஊரில் எங்க வீட்டில் நிறைய வளர்த்த நினைவிருக்கு ..
ReplyDeleteஜீனோ வுக்கு மலர்கள்னா ரொம்ப பிரியமோ ..ரொம்ப சீரியஸா தொட்டிங்க கிட்ட வேடிக்கை என்னாவாம் ??
patio தோட்டம் அழகா இருக்கு மகி ..நானும் களத்தில் இறங்கனும் அடுத்த வாரம் செய்யலாம்னு ஐடியா .
ரோஸ் உங்க வீட்ல பூத்ததா ..அழகாருக்கு
ReplyDeleteமகி... உங்க பால்கனிலயே இப்படி தோட்டம் வைச்சிருக்கீங்கன்னா...
ReplyDeleteஒரு கார்டனிங் செய்யகூடியதா பின்னுக்கு முன்னுக்கு கொஞ்சூஞ்சூண்டு நிலபுலனோட உங்க வாஸஸ் தலம் அமைஞ்சிருந்தா சொல்லவே வாணாம்.
பூஞ்சோலை, காய்கறித்தோட்டமே செஞ்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்...:)
நிஜம்மாவே உங்க ஆர்வத்தைப்பார்த்து வியக்கிறேன் மகி... பாருங்க உங்க ஜீனோவும் சேர்ந்து கண்காணிப்பு வேலைலே இறங்கீட்டார்...:)சூப்பர்!
எங்க விளையுதுன்னு தெரியாது,ஆனாலும் இந்தப் பூக்கள் எங்க ஊரிலும் நிறைய வரும்.எல்லோர் தலையிலும் ஏறியிருக்கும்.கிழங்கை நட்டு வைக்க வேண்டும் என்பது இப்போதுதான் தெரியும்.
ReplyDeleteமுதலில் படத்தைப் பார்த்துவிட்டு சேப்பங்கிழங்கு! அல்லது குட்டிகுட்டியான கருணைக்கிழங்கு! அறுவடையோ என நினைத்துவிட்டேன்,சாரி பொறாமைபட்டுவிட்டேன்.இப்போதான் நிம்மதியாச்சு.
தோட்டம் போட்ட களைப்பில் சாப்பாடு ஆர்டர் பண்ணிட வேண்டியதுதான்.
Your little garden looks lovely..
ReplyDeleteம்.. இதே வின்டர் ஜாஸ்மினைத்தான் முன்னால் சர கட்ட முயன்றேன். ;)
ReplyDeleteநிறைய தொட்டிச் செடிகள் தெரிகிறது. ஆசையா இருக்கு.
அந்த ரோஸ் அருமையான நிறம். பூச்சாடியில் வைத்ததைக் கூட முளைக்க வைக்கலாம். அடுத்த தடவை ட்ரை பண்ணுங்க.
டேலியா நட்டது நீங்க இல்ல. ;)
I used to have lots of plants too. Now I am very lazy to water the plants. My mom has house full of plants. She tells me how many flowers bloomed today and about a squirrel, who buries nuts in her pots, and gets those nuts after some times. Very interesting to hear.
ReplyDeleteகருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
ReplyDelete@ அம்முலு, // 3வது பூ வித்தியாசமா இருக்கு.// மஞ்சள் பூவையா சொல்றீங்க? அது செண்டுமல்லி என சொல்லுவோம். ஊரில் ரொம்ப சாதாரணமா இந்தப் பூவைப் பார்க்கலாமே! :)
@ தனபாலன், நிஜமாலுமேவா சொல்றீங்க? உள்குத்தெல்லாம் இல்லையே?! ;) நன்றீங்க!
@ விஜி, // ரோஜா உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்தது என்று நம்பி விட்டேன்... பரவாஇல்லை மகி.....// :) தெளிவாச் சொன்னபிறகும் இப்படிச் சொன்னா எப்புடி? கடையில் இருந்து வாங்கிவந்த பூங்கொத்துங்க அது! :)
@ ஏஞ்சல் அக்கா, //ஜீனோ வுக்கு மலர்கள்னா ரொம்ப பிரியமோ ..ரொம்ப சீரியஸா தொட்டிங்க கிட்ட வேடிக்கை என்னாவாம் ??// ஜீனோவுக்கு பூக்கள்ல வாசனை பிடிக்க ரொம்ப விருப்பம்! :) அவன் உயரத்துக்கு எட்டுற ஒவ்வொரு பூவா முகர்ந்து பார்ப்பான்! :))
நீங்க தோட்டம் போட்டாச்சா? ராணா எப்படி இருக்கார்?
ரோஜா பூங்கொத்தில் வந்தது ஏஞ்சல் அக்கா! எங்க வீட்டு ரோஜாக்கள் இப்பத்தான் தழைய ஆரம்பித்திருக்கு, இனிமேல்தான் பூக்கும்!
@ இளமதி, //ஒரு கார்டனிங் செய்யகூடியதா பின்னுக்கு முன்னுக்கு கொஞ்சூஞ்சூண்டு நிலபுலனோட உங்க வாஸஸ் தலம் அமைஞ்சிருந்தா சொல்லவே வாணாம். // ஹ்ம்ம்..நினைக்கவே நல்லாத்தான் இருக்குங்க! சீக்கிரம் நீங்க சொன்னபடி நடக்கட்டும்! :)
ஜீனோ கண்காணிப்பது செடிகளை அல்ல..அங்கே bird feeder இருக்குது, அதை அப்பப்ப டேஸ்ட் பண்ண ட்ரை பண்ணுவார். ;) :)
@ சித்ராக்கா, //அறுவடையோ என நினைத்துவிட்டேன்,சாரி பொறாமைபட்டுவிட்டேன்.இப்போதான் நிம்மதியாச்சு.// ஹாஹ்ஹா! உங்களோட ஒரே காமெடி! :))) உங்க பேடியோல செடிகள் வளர்க்க முடியாதா? நல்லா வெயில் அடிக்குதே..சின்ன செடிகள் வளர்க்கலாமே?
@இமா, //அந்த ரோஸ் அருமையான நிறம். பூச்சாடியில் வைத்ததைக் கூட முளைக்க வைக்கலாம். அடுத்த தடவை ட்ரை பண்ணுங்க. // நிஜம்மா?? நிஜம்மா? நிஜமாவா சொல்றீங்க? பட் இட்ஸ் டூ லேட் இமா! கடைல இருந்து வரப்ப நீஈஈளமா காம்புகளோட வந்தது, அப்பவே கொஞ்சம் நறுக்கிட்டு வேஸ்-ல வைச்சேன், இப்ப செகண்ட் டைமும் நறுக்கிப் போட்டாச்சு..இப்ப எதும் செய்ய முடியாதே! ஹூம்!!
@ வானதி, செடிக்கு தண்ணி ஊத்த சோம்பேறிதனமா? இது அநியாயம்! உங்க செடிகளை நான் பாத்திருக்கேனே..ஒழுங்கா மறுபடி வளருங்க! :) உங்க அம்மாவின் கதை ரொம்ப இன்றஸ்டிங்கா இருக்கு! :)
waw waw waw..... Mahi பின்றேல் போங்கோ! Patio கார்டன் ரொம்ப அழகா maintain செய்றீங்க!!
ReplyDelete...." கொசுவர்த்தி பலமாச் சுத்துது, அப்படியே அசந்து தூங்கிராதீங்க! கமான், வேக் அப்! :)"... :D lol