Wednesday, May 29, 2013

ஈஸி கொண்டைக்கடலை, கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழம்பு

தேவையான பொருட்கள்
ஊறவைத்து முளைகட்டிய கொண்டைக்கடலை -1/4கப் 
வெங்காயம்-1
தக்காளி-2
கத்தரிக்காய்-3
உருளைக் கிழங்கு -1
புளிக்கரைசல்-அரைக்கப் 
சர்க்கரை-1/2டீஸ்பூன் 
கடுகு-1/2டீஸ்பூன்
எண்ணெய் 
உப்பு 
கொத்துமல்லி இலை கொஞ்சம் 
அரைக்க
தேங்காய்த் துருவல் -2டேபிள்ஸ்பூன்
சோம்பு-1டீஸ்பூன்
வரமிளகாய்-4
மிளகு -7

செய்முறை 
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும். 
வெங்காயம் தக்காளியை நறுக்கி வைக்கவும்.
கத்தரி-உருளையை நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். [உருளையை பெரிய துண்டுகளாகவும், கத்தரிக்காயை காம்பு நீக்கி, நான்காக பிளந்து வைக்கவும்.]
குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு போடவும். 
கடுகு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி, காய்கள் மற்றும் ஊறிய கடலையையும் சேர்க்கவும். 
சிலநிமிடங்கள் வதக்கிவிட்டு, புளிக்கரைசல்-தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
புளித்தண்ணீர் நன்றாக கொதி வந்ததும், அரைத்த மசாலா-தேவையான தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ப்ரெஷர் இறங்கியதும் கொத்துமல்லி இலை சேர்க்கவும். சுவையான கொண்டைக்கடலை-கத்தரிக்காய்-உருளைக் கிழங்கு குழம்பு தயார். சாதம்-இட்லி மற்றும் தோசைக்கு பொருத்தமாக இருக்கும்.


குறிப்பு 
இந்த குழம்பை முளை கட்டாத கொ.கடலை, பட்டாணி இவற்றிலும் செய்யலாம். கருப்பு கொண்டைக்கடலையும் உபயோகிக்கலாம். [கருப்பு கொண்டைக்கடலை குழம்பை காண இங்கே க்ளிக் செய்யவும்.] கடலை மற்றும் காய்கள் மசாலாவுடன் ப்ரெஷர் குக் செய்யப்படுவதால் சுவை அலாதியாக இருக்கும். :)
~~~
கொண்டைக் கடலை குழம்புடன் லன்ச் போட்டோ எடுக்காமல் விட்டிருக்கிறேன்.  என் சாப்பாட்டுத் தட்டைப் பார்க்க ஆவலோடு வரும் ரசிகப் பெருமக்களை ஏமாற்றக் கூடாது என்று...

20 comments:

  1. ருசியான கொண்டைக்கடலை... கத்தரிக்காய்... உருளைக் கிழங்கு குழம்பு அருமை... படத்துடன் விளக்கங்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. கடைசிப்படம் சுண்டி இழுக்குது.மீதமாச்சுன்னா ஒரு கிண்ணம் குழம்பு மட்டும் அனுப்பிடுங்க;அடிக்கிற வெயிலுக்கும்,பழைய சாதம் + இக்குழம்புக்கும் சூப்பரா போகும்.பார்க்கவே சூப்பரா இருக்கு மகி,சுவைக்கு சொல்லவா வேண்டும்!

    ReplyDelete
  3. சுவைமிகுந்த குழம்பு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. சூப்பர் குழம்பு.
    கத்திரிக்காய்,கொண்டைக்கடலை,உருளை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா?அந்தக் கடைசி ப்லேட்டைக்(அதான் உன்னோட சாப்பாடு தட்டு) காணோம்.ஹி..ஹி...அதனைப் பார்க்கத்தான் ஓடோடி வந்தேன்..

    ReplyDelete
  5. ஒரு புதுவிதமான சைட் டிஷ்ஷை காட்டித்தந்தமைக்கு தாங்க்ஸ் மகி.

    ReplyDelete
  6. yummy kulambu with mixed vegetables and channa........

    ReplyDelete
  7. wonderful combo of veggie,too temping...

    ReplyDelete
  8. குழம்பு செம கலர்புல்லா இருக்கு,சூப்பர் !!

    ReplyDelete
  9. அட, சுவையா இருக்கும்போல இருக்கே!

    ReplyDelete
  10. Love this combination, chickpeas with potato and eggplants, andha keerai kadaisal and ennai kathirikkai combovum kooda..

    ReplyDelete
  11. ஆஹா ! அந்த ப்லேட்,இதை இதைத்தான் நான் கேட்டேன்...திவ்யமாக இருக்கு.தொடரட்டும்,நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. கொண்டைக் கடலை கொண்டை வைத்திருப்பதைப் பார்க்க ஆசையாக இருக்கு.. ஐ மீன் முளை வந்திருக்கு... சூப்பர் குழம்பு.. எண்ணெய் மிதந்து வந்தாலே குழம்பு சூப்பர்தான் போங்கோ:)).. சே..சே.. வாங்கோ:).

    ReplyDelete
  13. Very nice recipe and thank you so much for your wishes.

    ReplyDelete
  14. கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  15. mee the first ellai...lastu...enakuthan kondakadalai kulambu..oru plate parcel....

    nice post mahima...thanks for sharing

    ReplyDelete
  16. kulambu vaitthu sappitachupa nalla irundadhu ..chapathikku earthen konjam thickaga..nice recipient thanks mahi.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails