Tuesday, May 7, 2013

உடும்புப் பிடி...

பிடிச்சா உடும்புப் பிடிதான் - என்று ஒரு பழமொழி உண்டு. உடும்பு என்ற பிராணி (பல்லி குடும்பத்தைச் சேர்ந்தது என நினைக்கிறேன். :)) எதையாவது வாயால் கவ்விப் புடிச்சதுன்னா அவ்வளவு சீக்கிரம் விடாதாம். அதனால் அந்தக் காலத்தில் திருடர்கள், எதிரி நாட்டினர்கள் உயரமான மதில்கள், கோட்டைச்சுவர்கள் மீது ஏற உடும்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடும்பின் வாலில்/உடலில்  பலமான கயிறு ஒன்றைக் கட்டி மதில் சுவரின் மீது வீசுவார்களாம். அதுவும் உச்சியில் விழுந்ததும் சுவற்றைப் பற்றிக் கொள்ளுமாம். அதன்பிறகு கயிற்றைப் பற்றிக்கொண்டு திருடர்கள்/எதிரிகள் மதில் மீது ஏறித்தாவி உள்ளே குதித்துவிடுவார்களாம். அதாங்க உடும்பு பிடி என்பது!! :)

சரி, அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால்...நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன். அதுக்குமிதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே கண்டுபிடிச்சுக்கலாம், சரியா?!
~~~
காட்சி: 1
நாள் : மார்ச் மாதக் கடைசியில் ஒரு சனிக்கிழமை மாலை
இடம்:  வீடுதேன்! :)
பாத்திரங்கள்: கணவர் & மனைவி
இண்டியன் ஸ்டோருக்குப் போய்விட்டு, கை நிறையப் பைகளுடன் வீடு திரும்பும் கணவர். "உஸ்...ஸப்பாடா!!" என்று பைகளை டைனிங் டேபிள் மீது வைக்கிறார். ஸோஃபாவில் மடிக்கணிணியுடன் ஹாயாக உட்கார்ந்திருக்கும் மனைவி உரையாடலைத் துவக்குகிறார்.

மனைவி: "நான் குடுத்த லிஸ்ட்ல இருந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா?"
கணவர்: ஆமாம்மா..லிஸ்ட்ல ஒண்ணு விடாம எல்லாமே வாங்கிட்டேன் மா!
மனைவி(நம்பிக்கை இல்லாத குரலில்): கோதுமை ரவை?!!
க: வாங்கியாச்..(ஒரு 4பவுண்டு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம: ஆஆ!! இதெதுக்கு இவ்ளோ பெரிய பேக்கட் வாங்கினீங்க? சின்ன பேக்கட் வாங்கிருக்கலாம்ல?
க: தேடினேன், சின்ன பேக்கட் இல்லம்மா..இதான் இருந்துச்சு. கோதுமை ரவை உடம்புக்கு நல்லதுதானே..அதான் பெரிய பேக்கட்டா இர்நுதாலும் பரவால்லன்னு வாங்கிட்டேன்.
ம: ம்ம்...அப்புறம் சேமியா? வறுத்ததான்னு பார்த்து  வாங்கினீங்களா?
க: டடா!!! இதோ, 2 பேக்கட் வாங்கிருக்கேன்! (2 சிறிய பேக்கட்டுகளை எடுத்து காட்டுகிறார்)
ம(டென்ஷனாக): இது பெரிய பேக்கட்டா வாங்க குடாது? குட்டி குட்டியா வாங்கிருக்கீங்க?
க(சுருதி குறைய): பெரிய பேக்கட் இல்லம்மா!
ம:ரஸ்க் வாங்க சொன்னேனே, வாங்கினீங்களா?
க:இதோ...
ம:--------- (அதுவும் ஒரு மெகா சைஸ் பேக்கட்...அவ்வ்வ்வ்)
க:கூடவே வேற என்ன வாங்கி வந்திருக்கேன் பாரேன்!!(ஆவலோடு ஒரு பேகை  எடுத்துக் கொண்டு சோஃபாவுக்கு கொண்டு வருகிறார்)
ம:இந்த ஸ்னாக்ஸ் வாங்கறத நிறுத்தவே மாட்டீங்களா நீங்க? இந்தக் கடைங்கள்ல இருக்கற எல்லாமே சிக்கு வாசம்தான் அடிக்கும். அதைப் போய் மறுபடி மறுபடி..(பார்வை பேகுக்குப் போகிறது)...அதுவும் ஒண்ணுகூட இல்ல...2 பேக்கட்டா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!கிர்ர்ர்ர்ர்ர்ர்!
க:கோவப்படாதம்மா..இது என்னன்னு பார்த்துட்டு அப்புறம் பேச்ச கண்டினியூ பண்ணேன்..(ஒரு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம:ஐ...ஸ்வீட் பனானா சிப்ஸ்!! (மனைவியின் முகம் 1000வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமாகிறது)
க:ஆமாம்..உனக்கு இது ரெம்ப புடிக்கும் இல்ல? கடைல இதையப் பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.
ம(கோபம், சிடுசிடுப்பு எல்லாம் மறைந்து போன இனிய குரலில்): நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..
க:ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு காரை எடுத்து, இண்டியன் ஸ்டோர் வரைக்கும் போயி, லிஸ்ட்ல இருக்க சாமான் ஒண்ணு விடாம வாங்கிட்டு வந்திருக்கான், அதைப் பாராட்டாம இது ஏன் பெரிய பேக்கட்? அது ஏன் சின்ன பேக்கட்? -நு தொணதொணத்துட்டு..
ம: சாரிங்க..கோவப்படாதீங்க..சிப்ஸ் பாக்கட்ட பிச்சு குடுங்களேன், ப்ளீஸ்!!
{மனைவி கிச்சன் சிஸர்ஸ் எடுத்து பேக்கட்களை கட் பண்ணுவதே வழக்கம். அதற்கு சோஃபால இருந்து எந்திருக்கணுமே!! அதான் இவ்வளவு ஐஸ்!! :) கணவர் பேக்கட்டை பிரித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, லேப்டாப்பை வாங்கிக்கொள்கிறார். ஒரு சிப்ஸை எடுத்து வாயில் போட்ட மனைவி ஏமாற்றத்துடன்..}
ம: என்னங்க, இந்த சிப்ஸ் இனிப்பே இல்ல!!
க:அதெல்லாம் இருக்கும்மா..வேற ஒண்ணு எடுத்து சாப்பிட்டுப் பாரு
இன்னும் சில சிப்ஸ்களை அணில் போல கொறித்துப் போட்ட மனைவி..
ம:இல்லங்க...ஒண்ணு கூட இனிப்பே இல்ல..சாதா சிப்ஸ் மாதிரி உப்பாதான் இருக்கு. (பேக்கட்டை முன்னும் பின்னும் திருப்பி பார்க்கிறார்) ஸ்வீட் சிப்ஸ்னு தானே போட்டிருக்கு?
...என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன், நீங்க பேசாம இருந்தா எப்படி?
(லேப்டாப்பில் மூழ்கியிருக்கும் கணவர்..)
க:ம்ம்ம்...என்னம்மா? அப்ப டார்க் கலரா இருக்க சிப்ஸ்-ஐ டிரை பண்ணிப் பாரேன், அது கண்டிப்பா இனிப்பா இருக்கும்.
ம:ம்ம்..எல்லாம் டிரை பண்ணிட்டோம்..இனிப்பே இல்ல.
க:(கிண்டலாக) உனக்கு நாக்கு சரியில்லையோ? ஹஹா!
ம:(கோபத்துடன்) நீங்களே சாப்பிட்டுப் பாருங்க.. {சிப்ஸ் பாக்கட்டை நீட்டுகிறார். கணவரும் சாப்பிட்டுப் பார்த்துட்டு..}
க: அடடே!! ஆமாம்..இனிப்பே இல்ல!!
ம: ஹுக்கும்...இதுக்குத்தான்  சொல்றது!! இங்க இண்டியன் ஸ்னாக் வாங்காதீங்கன்னா கேக்கறீங்களா? ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க!! கர்ர்ர்ர்ர்ர்ர்!
 க: சரி போனாப் போகுது விடும்மா..டீ போட்டுக் குடேன்!
ம: நானே சிப்ஸ் இனிப்பில்லாம போச்சேன்னு ஏமாந்து போயிருக்கேன், டீ வேணுமா உங்களுக்கு? {கோபமாக பேக்கட்டை திருப்பி தேடுகிறார்}
க:அங்க என்னம்மா தேடறே?
ம: கஸ்டமர் சப்போர்ட்- மெயில் ஐடி இருக்கும்ல...அதுக்கு மெயில் அனுப்பப்போறேன். இத சும்மா விடப்போறதில்ல!
க:(சிரிப்பை அடக்கிக் கொண்டு)...என்னது?
ம:(சீரியஸாக)..ஆமாங்க..எவ்வளவு ஆசை ஆசையா சிப்ஸ் சாப்பிடப் போனேன்? ஸ்வீட் சிப்ஸுன்னு பேரப் போட்டுட்டு பேக்கட்ல சாதா சிப்ஸை போட்டு வச்சிருக்கானுங்க.
இத நான் சும்மா விடமாட்டேன். இப்பவே மெயில் அனுப்பப்போறேன்.
க: போனா போகுதுனு விட்டுட்டு வேலயப் பார்ப்பியா? அத விட்டுட்டு கம்ப்ளெய்ன் பண்ணப்போறேன்..காமெடி பண்ணப்போறேன்னுட்டு...
{மனைவி சிப்ஸ் பேக்கட்டை ஃப்ரண்ட் அண்ட் பேக் 2 படங்கள் எடுத்துவிட்டு, பாக்கட்டில் மேனுபாக்ச்சரிங் டேட்-எக்ஸ்பயரி டேட் தேடுகிறார். அதுவும் காணப்படவில்லை. கோபம் அதிகரிக்க, 2 படங்களையும் இணைத்து அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட் பிரிவுக்கு மெயில் அனுப்பிவிட்டே ஓய்கிறார்}
~~~
காட்சி :2
காட்சி ஒன்றுக்கு அடுத்த நாள் ஞாயிறு காலை
மனைவி காலையில் காப்பியுடன் மெயில் பாக்ஸை செக் செய்துவிட்டு,
ம: ஏங்க..நேத்து நான் சிப்ஸுக்கு கம்ப்ளெய்ண்ட் மெயில் அனுப்பினேனே..
க: (கிண்டலாக)ஆமாம், அதுக்குள்ள பதில் வந்துருச்சா? பரவாயில்லயே!!
ம: இல்லங்க...மெயில் அந்த ஐடிக்கு போகவே இல்லன்னு ஃபெயிலியர் நோட்டீஸ் வ்ந்திருக்கு!
க: (இடி இடியென்று கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு) நாந்தான் அப்பவே சொன்னனே..இந்த ஆகாவழி வேலையெல்லாம் விட்டுட்டு ஆகற வேலையப் பாருன்னு!
ம:(ஏமாற்றத்துடன்)...என்னவோ போங்க..நம்ம காசு தண்டமானதுதான் பாக்கி!
.....
சிலமணி நேரங்கள் கழித்து, மறுபடி மெயில் பாக்ஸை செக் பண்ணும் மனைவி அந்த ஃபெயிலியர் நோட்டீஸ் மெயிலை பார்த்து மீண்டும் கடுப்பாகி, அந்த நிறுவனத்தின்  வலைத்தளத்துக்கே போகிறார். அங்கே "காண்டாக்ட் அஸ்" படிவம் மூலமாக, மெயிலில் அனுப்பிய அதே கம்ப்ளெயிண்டை மீண்டும் டைப் செய்து, "இனிப்பே இல்லாம இனிப்பு சிப்ஸ் செய்யும் உங்கள் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்" என்று ஒரு சர்காஸ்டிக் பன்ச்சும் வைத்து அனுப்பிவைக்கிரார். மறந்தும் கூட இது பற்றி கணவரிடம் மூச்சு விடவில்லை.
~~~
காட்சி : 3
கம்ப்ளெயின்ட் மெயில் அனுப்பி 3வது நாள்..அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர்(மேலாளர்) பதில் அனுப்பியிருக்கிறார். "தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்ட வசமான அனுபவத்துக்கு வருந்துகிறோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஸோ&ஸோ உங்களைத் தொடர்பு கொள்ளுவார் என்ற ரீதியில் மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த ஸோ&ஸோ-வுக்கும் இதே மெயில் காப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மனைவிக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. உடனே இந்த மெயிலை கணவருக்கும் ஃபார்வர்ட் செய்து விடுகிறார். பிறகு போன் செய்து வேறு இது பற்றி பிரஸ்தாபிக்கிறார். கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.
~~~
காட்சி : 4
ஒரு வீகெண்ட்
க: ஏம்மா...சிப்ஸ் கம்ப்ளெயிண்ட் ஏதோ அனுப்பியிருந்தியே, பதிலெல்லாம் கூட வந்துச்சே..காம்பன்ஷேஷன் ஏதோ அனுப்புவோம்னு அந்த ஆள் சொல்லிருந்தார்னு சொன்னே..ஒண்ணும் காணமே?!
ம: அது...அவங்க பிஸியா இருப்பாங்களோ என்னமோ? ஒரு வாரம் தானங்க ஆச்சு? இந்த வாரம் ரிப்ளை வரும் பாருங்க.
க:மனைவிக்கு தெரியாமல் சிரித்துக்கொள்கிறார்.
~~~
காட்சி : 5
இன்னுமொரு வாரக்கடைசி
க: ஹலோ கம்ப்ளெயிண்ட் ஸ்பெஷலிட்..என்னாச்சு உங்க சிப்ஸ் விஷயம்?
ம: ஹும்ம்ம்..ஒரு பதிலுமே காணமேங்க?!
க: அதெல்லாம் அவ்வளவுதாம்மா..நான் அப்பவே சொன்னேன், நீ தான் கேக்கல. ஆ..ஊன்னு சீன் காமிச்சு மெயில் அனுப்பினே..அத்தோட சரி!  ஒரு விஷயம் எடுத்தா சீரியஸா முடிக்க வேணாமா..பேச்சுக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டுட்டு அத்தோட அம்போனு விட்டுட்டியே?
ம: அதெல்லாம் இல்லங்க..நான் மறுபடி அவங்களுக்கு மெயில் அனுப்பி என்ன ஏதுன்னு கேக்கப் போறேன்.
க: (கிண்டலாக)கேளு..கேளு! அப்படியே ஒழுங்கா பதில் வரலன்னா கேஸ் போடுவேன்னும் சொல்லு!!
சிரித்தபடி போகிறார்.
~~~
காட்சி : 6
கணவரின் கிண்டலால் ரோஷத்துடன் எழுந்த மனைவி அந்த நிறுவனத்துக்கும், ஸோ & ஸோ-வுக்கும் சேர்த்து ஒரு மெயிலைத் தட்டிவிடுகிறார். "உங்களிடமிருந்து பதில் வந்தது கண்டு மகிழ்வுற்றேன். ஆனால் 2 வாரங்கள் கடந்தபின்னரும் உங்களிடமிருந்து வேறு ஒரு தகவலும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, உங்கள் பதில் கடிதம் ஒரு கண்துடைப்பு என்று. என் காசு போனது போனதுதான். கூடவே என் பொன்னான நேரத்தையும் வீணாக்கி "ஃபாலோ-அப்" மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மேலாவது உங்கள் பொருட்களின் தரத்தை கவனியுங்கள், வாடிக்கையாளர் சேவையயும் மேம்படுத்துங்கள். இதற்கு முன் நான் அனுப்பிய மெயில் "ஃபெயிலியர் நோட்டீஸ்" உடன் வந்துவிட்டது." என்று எழுதி, அந்த மெயிலையும் இணைத்து அனுப்பிவைத்து விட்டு விஷயத்தை அத்துடன் மறந்துவிடுகிறார்.
~~~
காட்சி : 7
காட்சி 6க்கு அடுத்த நாள், அந்த நிறுவனத்தின் "ஸோ&ஸோ"-விடமிருந்து ஒரு மெயில் வருகிறது. " தாமதத்துக்கு மன்னிக்கவும், நான் தான் தங்களுக்கு காம்பன்ஷேஷன் அனுப்ப மறந்துவிட்டேன். உங்கள் முகவரியைத் தந்தால் உடனடியாக சிப்ஸை அனுப்புகிறேன்" என்ற மெயில் வருகிறது. அதற்கடுத்த நாள் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து இன்னுமொரு கடிதமும் வருகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவோம். தயவு செய்து உங்கள் முகவரியை அனுப்பவும்.- என்று.

மனைவியும் முகவரியை அனுப்பிவிடுகிறார். மறக்காமல் நன்றியையும் தெரிவித்துக்கொண்டுதான்! ;) விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவர், நீ எதற்கு முகவரியை அனுப்பிவிட்டாய்? என்னுடைய லாயர் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார் என சொல்லியிருக்கலாமில்ல? கேஸ் போட்டு ஒன் மில்லியன் டாலர் வாங்கியிருக்கலாம். இப்படி மிஸ் பன்ணிட்டியே என கடுப்பேத்துகிறார் மை லார்ட்! :) :)

அதற்கடுத்த வாரத்தில் அந்த நிறுவனத்திடமிருந்து பார்சல் அனுப்பப்பட்டதாய் மெயில் வந்துவிடுகிறது. கூடவே  "ஸ்வீட் பனானா சிப்ஸில் நாங்கள் அடிஷனல் சர்க்கரை ஏதும் சேர்ப்பதில்லை, பழங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்குகிறோம். சீஸனைப் பொறுத்து பழத்தின் இனிப்பு மாறுபடும், அதனால்தான் சிப்ஸின் இனிப்பும் மாறுபடுகிறது" என்ற விளக்கமும் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து வருகிறது. ஏற்கனவே நொந்து நூடில்ஸ் ஆன மனைவி அமைதி காக்கிறார்.

சிலதினங்களில், யு.பி.எஸ்-ல் இருந்து வந்த பார்சலை எடுத்து வீட்டுக்குள் வைத்த கையோடு கணவருக்கு போனைப் போடுகிறார் மனைவி.
ம: என்னங்க..சிப்ஸ் காரங்க பார்சல் அனுப்பிட்டாங்க..வந்து சேர்ந்துருச்சு.
க: அப்படியா? பரவால்லயே..நிசமாவே அனுப்பிட்டாங்க?! ஹ்ம்ம்ம்..நீதான் மில்லியன் டாலரை மிஸ் பண்ணிட்டே! (சத்தமில்லாமல் சிரிப்பதால் மனைவிக்கு போனில் தெரியவில்லை)
ம:பெரிய பெட்டியாய் இருக்குதுங்க..உள்ள எதாச்சும் பாம்(வெடிகுண்டு) வைச்சு அனுப்பிருப்பானுங்களோ? பயமா இருக்குதே?
க: (சிரிப்பை அடக்க முடியாமல்..சிரித்துக்கொண்டே) ஏம்மா, நாங்கொஞ்சம் பிஸியா இருக்கேன், நீயே பிரிச்சுப் பாரு. இல்லன்னா நான் வந்தப்புறம் பார்க்கலாம்.
ம: சரிங்க. நீங்க வந்த பொறகே பிரிச்சுக்கலாம்.
ஒருவழியாக பெட்டியைப் பிரிக்கிறார்கள். உள்ளே இந்த சம்பவத்தின் கதாநாயகனான சிப்ஸ் பாக்கட் இல்லை!! ஹைதராபாதி மிக்ஸர் 2 பாக்கட்டும், கேரளா ஹாட் மிக்ஸர் 2 பாக்கட்டும் இருக்கிறது. அதனைப் படமெடுத்த மனைவி அந்த நிறுவனத்துக்கு படங்களையும் இணைத்து,  பின்வருமாறு மெயில் அனுப்புகிறார்.
"தாங்கள் அனுப்பிய காம்பன்ஷேஷன் ஸ்னாக்ஸ் கிடைக்கப் பெற்றேன், மிக்க நன்றி.மேலாளர் அவர்களுக்கு: தாங்கள் கூறிய பழங்கள்-இனிப்பு பற்றிய விளக்கத்துக்கு நன்றி.   நான் காசு கொடுத்து பொருளை வாங்குகிறேன். பேக்கட்டில் என்ன பெயர் எழுதியிருக்கிறதோ அதே பொருள் பேக்கட்டின் உள்ளே இருக்கவேண்டும் என்பதுதான் என் (போன்ற வாடிக்கையாளர்களின்) எதிர்பார்ப்பு.  இருந்தாலும், பழங்கள்-இனிப்பு பற்றிய தங்கள் பொறுப்பான விளக்கத்துக்கு நன்றி!" 


க: பாவம் அந்த சிப்ஸ் காரங்க...உனக்கு ஒரு பேக்கட்டுக்கு பதிலா 4 பேக்கட் அனுப்பியிருக்காங்க, அப்பவும் விடாம சிப்ஸ்-மாதிரியே பொரிக்கறியே அவங்கள!!??! 
ம: ஆமாம், உங்களுக்கென்ன தெரியும், பேசாம இருங்க..இவங்களுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தான் ஆகும். பழம் இனிக்குது, இனிக்கலன்னா அது அவன் பிரச்சனை, எனக்கென்ன வந்துச்சு? ஸ்வீட் சிப்ஸுன்னா இனிப்பா இருக்கணும், தட்ஸ் ஆல்!! 
--சுபம்!!--
ஹைதராபாதி மிக்ஸருங்கோ...தைரியமாச்;) :) சாப்பிடலாம்! ரொம்ப மோசமில்ல, சுமாரா இருக்கு! 
நன்றி, வணக்கம்!
By tha way, இது கதையல்ல, நிஜம்!! :) நாலு டாலர் குடுத்து ஒரு பேக்கட் ஸ்னாக்ஸ் வாங்கினாலும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தானங்க? பழம் இனிப்பில்லைன்னா அந்த சீஸன்ல ஸ்வீட் சிப்ஸ் போடாமல் இருக்கலாம் அல்லவா? அதை விட்டுட்டு இப்படி என் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவது சரியா? நீங்களே சொல்லுங்க?!



பி.கு. முதல் படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லைங்க..காமெடியா எதாச்சும் கார்டூன் படம் போடலாமேன்னு போட்டிருக்கேன். குழம்பிராதீங்க.

24 comments:

  1. இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க.இதே நம்ம ஊராக இருந்தால்...

    காட்சிகளை நேரில் பார்ப்பது போலவே எழுதியிருக்கீங்க,ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  2. ஆண்டவா இப்படி கூட சோதனை வருமா?விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதையால்ல இருக்கு.போராடி ஜெயித்த மகியை வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.நான் ஒரு முறை சக்கை சிப்ஸ் வாங்கிட்டு சப்பென்று இருப்பதாய் புழம்பியது நினைவுக்கு வருது.ஆனாலும் அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார் என்றால் எத்தனை சாமார்த்தியசாலியா இருக்கணும்.எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு?
    காட்சியமைப்பும் எழுத்து நடையும் கதையல்ல நிஜம்னு சொல்லாமல் சொல்லுது.

    ReplyDelete
  3. ஆசியாக்கா, //எனக்கு ஒரு சந்தேகம் ஸ்வீட் சிப்ஸ் தான் வேணும்னு எப்படி பார்சலை திரும்பி அனுப்பாமல் போச்சு?// நல்ல சந்தேகம் கேட்டீங்க! பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டு அதையெல்லாம் நான் சொல்லல! :)
    ஆக்சுவலி, கவரில் இருக்கும் பார்கோட் அப்புறம் இன்னுமொரு ஏதோ ஒரு நம்பர் எல்லாம் வெட்டி அனுப்பச் சொல்லித்தான் சிப்ஸ் பாக்கட்டில் போட்டிருந்தாங்க. ஆனா அதில்தான் மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே! சிப்ஸ் பாக்கட்டை போட்டோ எடுத்து மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பியிருந்தேன். அதுவே அவர்களுக்குப் போதுமான ப்ரூஃப் ஆக இருந்தது. அதுவுமில்லாம, இப்படியெல்லாம் யாரும் இதுவரை அவர்களுக்கு மெயில் அனுப்பி கம்ப்ளெய்ண்ட் பண்ணியிருக்க மாட்டாங்க, உண்மையில்லாம இவ்வளவு மெயில் அனுப்பியிருக்கவும் மாட்டாங்க என அவர்களுக்குத் தெரிந்திருக்கணும்.

    //அந்த மேலாளர் திரும்பவும் கூட ஸ்வீட் சிப்ஸ் அனுப்பாமல் வேறு ஏதேதோ அனுப்பி சமாளிக்கிறார்// தவறு மேலாளர் மேலே இல்லை என நினைக்கிறேன். அடுத்த மட்டத்தில் இருக்கும் ஆட்கள்தான் (பெண்மணிகள்) ஸ்னாக்ஸ் அனுப்பியிருக்கிறாங்க. எனக்கும் மெயில் அனுப்பி போரடித்துப் போச்சா...அதால இத்தோட ஸ்டாப்-பிட்டேன்! :)

    //வலைப்பூ மகளிர் அணி தலைவியாக முடி சூட்டுகிறேன்.// அட, அட!! அப்படியே ஒரு இமயமலையையே என் மேல் வைச்ச ஆசியாக்காவை வலைப்பூ மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கிறேன். :)))))

    வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~
    //இங்க உடும்புப் பிடி பிடிச்சி வாங்கிட்டீங்க// ஆமாம் சித்ராக்கா! இங்கே நமக்கு ஓய்வு நேரம் இருக்கு, இண்டர்நெட், ஐபேட் இப்படி அதிநவீன வசதிகளும் இருக்கு. அதுவுமில்லாம, இங்கே அரசாங்கம் உணவுப் பொருட்களை கடுமையா கண்காணிக்கிறாங்க. அதனால் இதெல்லாம் நடந்திருக்கு! :)
    காட்சிகளை ரசித்தமைக்கும், கருத்துக்கும் நன்றிகள்!
    ~~

    ReplyDelete
  4. உண்மையில்ல சரியான உடும்புபிடிதான் மகி.உரையாடலை அழகாக எழுதியிருக்கிறீங்க. //மேனுஃபாக்சரிங் டேட் -எக்ஸ்பயரி டேட் எதுவுமே இல்லையே!// இதில்லாம விற்கலாமா?? இங்கே கடைசிவரைக்கும் விடமாட்டாங்க. ஏசியன் கடைகளில் சரியான ஸ்ரிக்ட். இங்கு இப்ப கறிவேப்பிலைக்கு தடை. இங்கேதான் இதெல்லாம் சாத்தியம். இன்ரஸ்டிங்கான பதிவு மகி.ரசித்தேன்

    ReplyDelete
  5. //பாத்திரங்கள்: கணவர் & மனைவி// ம்.. ;))
    ///நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..// ஹையோ!! என்னல முடியலயே சாமீ!!!!!!!! ;)))))))))

    //கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.// அவ்வ்வ்வ்! ;))))))))
    //--சுபம்!!--// அப்பாடா! முடிஞ்சுதா!! ;))) அடுத்து என்ன வாங்கப் போறீங்க?? ;D

    சூப்பர் ஆசியா. ;)))))))

    வலைப்பூ மகளிர் அணி தலைவிக்கு... ஜே!!

    ReplyDelete
  6. Akka , ella scenesum nerilil parpathu polavae iruku ............. epaio neenga sweet chips ketathuku kara mixture anupitanga.............

    ReplyDelete
  7. i had the same experience with branded cooking oil,atleast you got mixture,they too got my address but i didnt recieve anything.I too tried then left it of.It was intersting to read your post.

    ReplyDelete
  8. ஹா... ஹா... நல்ல உரையாடல்...

    வலைப்பூ மகளிர் அணி தலைவி மற்றும் கொள்கை பரப்புச் செயலாளருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்... ஹிஹி...

    ReplyDelete
  9. சிரிச்சு சிரிச்சு கால் ஒன்று காணாமல் போச்சுது. ;)) மன்னிச்சுக்கொள்ளுங்கோ.

    ReplyDelete
  10. மகி :)))இது நல்ல ஐடியா ..நானும் அப்படிதான் ..நாம் பணம் தரோம் எதிர்பார்த்த பொருள் உள்ளே இல்லன்னா அதுவும் நேந்திரங்கா சிப்ஸ் என்றால் விடவே கூடாது ..
    பட் எனக்கு எப்பவும் உப்பு போட்டதுதான் பிடிக்கும் :))
    இங்கே இந்த லேபிளிங் மாட்டர்ஒரு பெரும் பரபரப்பை உண்டாக்கிச்சு சமீபத்தில் ..horsemeat ஸ்காண்டல் கேள்விபட்டிருப்பீங்க நாங்க கார் பார்க் பன்னுமிடத்தில்டிக்கட் மெஷின்
    உடஞ்சிருந்தது ஆனா எங்களுக்கு fineஎழுதி வச்சாங்க ..நான் கார் park பண்ணுமுன் மெஷினைபோட்டோ புடிச்சு வச்சாதால் நல்லதாபோச்சு
    எப்பவும் விழிப்புடன் இருக்கணும் ..நீங்க இப்படியே தொடருங்க உடும்பு பிடியை :))))

    அப்புறம் லெட்டர்pad அடிச்சிட்டேன் தலைவர் நீங்க கொபசெ ஆசியா ..பொருளாளர் நானு ஓகேவா .:))
    ஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே )

    ReplyDelete
  11. ம்ம்ம்ம் மகி உடும்பு பிடிக்கு வந்தது.... நான் பிறகு வந்து கருத்து தெரிவிக்கிறேன்...
    வலைப்பூவின் மகளிர் அணி தலைவராக பொறுப்பேற்றமைக்கு ஒரு ஒ ஒ ஒ ஒ போடு....

    ReplyDelete
  12. ஹெல்த் அன்ட் சேப்டிஇன்சார்ஜ் அதிரமியாவ் :)))எல்லாவற்றையும் சாப்பிட்டு டெஸ்ட் செய்ய ஒரு ஆள் வேணுமே )//
    purely for PRODUCT TESTING :))HAA HAA HAA

    ReplyDelete
  13. ;))))
    me enjoying reading all da comments. ;)
    PURRR.. Teasting. ;)

    ReplyDelete
  14. ada ada Mahi, naan unga pakkam than, udumbu pudi pidichu vaangiteenga illa, mixture than but parvaillai..

    ReplyDelete
  15. I did the same thing once. I sent an email to a chips company and they sent another packet. But I could not see any difference between the chips i bought and they sent me through mail. Horrible!

    ReplyDelete
  16. உரையாடல் சூப்பர்.

    ReplyDelete
  17. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்னால முடியல்ல:))...

    ReplyDelete
  18. இருந்தாலும்.. விடாதீங்க மகி.. எதுக்கு மிக்ஸர் அனுப்பினீங்க.. சிப்ஸ் ஏன் அனுப்பல்ல எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))

    தைரியமா கணவரைக் கேட்காமல் கண்டநிண்ட கம்பனிக்கெல்லாம்:) அட்ரசைக் கொடுத்திட்டீங்க:) பார்ஷல் வந்திட்டுதென நிம்மதியா இருக்க வேணாம்ம்.. கொஞ்சக் காலத்துக்கு ஆரும் கதவைத் தட்டினா திறக்காதீங்க சொல்லிட்டேன்ன்ன்:)).. நிம்மதியா இருக்க விடமாட்டமில்ல:)).

    ReplyDelete
  19. எனக்கு இனிப்பு சிப்ஸ் வேணும் என அடம்புடிக்கலாமில்லையோ:))//

    கர்ர்ர்ர் மியாவ் எதுக்கு ஒரு அப்பாவி சின்ன பிள்ளைக்கு wrong ஐடியால்லாம் தரீங்க :))

    ReplyDelete
  20. விடாக் கண்டன். நல்ல வேளை. கொடாக் கண்டனாக இல்லாமல் ஏதோ அனுப்பி வைத்தார்கள். கண்டன். கண்டி.

    ReplyDelete
  21. Nalla effert mahi..nanellam only pulambittu mattume irupen..nernga mrnakettu ivalo effert seythu jeyichuteenga...

    ReplyDelete
  22. Lol mahi...unga ezhuththu nadai eppavume superb...en huskittayum sonnen avaru oo andhs aatha naan paas aagitten eludhinangale avangalanu kettu..apppadiye paaru veettula irunthe evvalo velai seyyuraanga nu enakku naane aappu vaichikiten....first commentlaye type panna try pannen en paiyan phonai pidingi edukkiran ...

    ReplyDelete
  23. super akka...... :)

    ReplyDelete
  24. கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி! எப்படியோ பாதிப் பேருக்கு பதில் சொல்ல மறந்துவிட்டிருக்கிறேன். தாமதத்துக்கு மன்னிக்கவும்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails