இங்கே இண்டியன் ஸ்டோரில் புடலங்காய்-அவரைக்காய் இவற்றைப் பார்ப்பது மிகவும் அரிது. அதுவும் இப்படியான கல்கட்டிய புடலைகளைப் பார்ப்பது மிக மிக அரிது. குட்டைப் புடலங்காய்கள் எப்போதாவது வந்தாலும் அவ்வளவு ஃப்ரெஷ்ஷாகவும் இருக்காது. மேலும், சின்னக் காய்களை விடவும் இந்த நீளக்காய்கள்தான் ருசியும் நன்றாக இருக்கும். இவ்வளவு முன்னுரைக்கப்புறம் இந்தக் காயைக் கடையில் கண்டால் வாங்காமல் வரமுடியுமா? 2 காய்களை வாங்கிவந்தேன். வழக்கமாகச் செய்யும் முறையை விட சற்றே மாறுதலாகச் செய்யலாம் என்று முயற்சித்ததை இங்கேயும் பகிர்கிறேன்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் (தோல் சுரண்டி, சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1கப்
வெங்காயம் (சிறியது)-1
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்து பருப்பு-1டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
அரைக்க
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
பூண்டு-2 பல்
சோம்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
தேங்காய்- கொஞ்சம்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவத்து கடுகு-உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கடாயை மூடி வேகவைக்கவும்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் (தோல் சுரண்டி, சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1கப்
வெங்காயம் (சிறியது)-1
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்து பருப்பு-1டீஸ்பூன்
மஞ்சள் தூள்-1/8டீஸ்பூன்
உப்பு
அரைக்க
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
பூண்டு-2 பல்
சோம்பு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
தேங்காய்- கொஞ்சம்
செய்முறை
கடாயில் எண்ணெய் காயவத்து கடுகு-உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கியதும் நறுக்கிய புடலங்காய், தேவையான உப்பு, ஒரு சிட்டிகை சர்க்கரை மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து கிளறிவிட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, கடாயை மூடி வேகவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை (தண்ணீரில்லாமல்) கொறகொறப்பாக அரைத்து வைக்கவும்.
புடலங்காய் வெந்ததும், அரைத்த கலவையைச் சேர்த்து கலந்து விடவும்.
காயிலுள்ள தண்ணீர் வற்றி, மசாலாவின் வாசனை அடங்கியதும் பொரியலை அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான புடலங்காய் மசாலா பொரியல் ரெடி. எல்லா வகையான சாதங்களுடன் நன்றாக இருக்கும்.
Recipe Source : Here
~~
மேலே படத்திலிருந்த இரண்டாவது புடலை பின்தொடர்ந்த ஒரு வார இறுதியில் புடலங்காய்-கடலைப்பருப்பு கூட்டாக அவதாரமெடுத்து காலியானது. தட்டில் இடமிருந்து வலம், முட்டைக்கோஸ் பொரியல், புடலங்காய் கூட்டு, மோர் மிளகாய், பச்சைப்பயறு கடைசல், சோறு, ரசம்(படத்தில் வரவில்லை). எங்க ஃபேவரிட் (சிம்பிள்) வீகெண்ட் லன்ச் மெனு! :)
புடலங்காய் ஞாபசக்திக்கு நல்லதாமே ..!
ReplyDeleteஅருமையான குறிப்புகளுக்குப் பாராட்டுக்கள்.
இதே செய்முறையில் புடலங்காய் பொரியல் செஞ்சு எங்க ஊர் புடலங்காய் படத்தையும் (குட்டிகுட்டியா சுருண்டு இருக்கும்) போடுகிறேன்.
ReplyDeleteசாப்பாட்டுத் தட்டை பார்த்ததுமே ஊர் ஞாபகம்தான் வருகிறது.தட்டின் உள்ளேயே பொரியலை எல்லாம் வச்சி சாப்பிடுவோம்,ம்ம்...
புடலங்காய் மசால் பொரியல் குறிப்பு அருமையா இருக்கு மகி.வீக்கென்ட் இப்படிதான் நானும் லன்ச் செய்வது. நன்றாக இருக்கு. நன்றி பகிர்வுக்கு
ReplyDeleteமகி... அசத்துறீங்கப்பா...;). புடலங்காக்கூட்டு, பொரியல்ல்ல்ல்...:).
ReplyDeleteம்.ம். நடக்கட்டும். நடக்கட்டும்...
அதுவேறை நம்ம வீக்கெண்ட் லஞ்ச் மெனுன்னு தட்டுலபோட்டு காட்டி இப்படி எங்களை வழியுற வாயோட அலைய விடறீங்களே... ஞாயமான்னேன்...:))).
அதுசரி பொரியலுக்கு எதுக்கு //ஒரு சிட்டிகை சர்க்கரை// போட சொல்றீங்கப்பா... சொன்னா தெரிஞ்சுக்குலாமே...
அருமை. நல்ல குறிப்புகள்.. வாழ்க வளமுடன்!
//அதுசரி பொரியலுக்கு எதுக்கு //ஒரு சிட்டிகை சர்க்கரை// போட சொல்றீங்கப்பா... சொன்னா தெரிஞ்சுக்குலாமே...// இளமதி, பச்சை நிற காய்கள், கீரைகள் சமைக்கையில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தா பசுமை நிறம் மாறாம இருக்கும். அதற்காகத்தான் சர்க்கரை சேர்ப்பது. அதுவுமில்லாம குழம்பு, குருமா, ரசம், காய்கள் எல்லாவற்றிலும் கொஞ்சமே கொஞ்சம் சர்க்கரை சேர்த்தா ருசி நல்லா இருக்கும்.
ReplyDelete/வீக்கெண்ட் லஞ்ச் மெனுன்னு தட்டுலபோட்டு காட்டி/ ஹிஹி..ஒரு போட்டோவுக்கே இப்பூடிச் சொன்னா எப்பூடி? இப்பல்லாம் அடிக்கடி படமெடுக்கறோமே, லன்ச் ப்ளேட்டை?!!! ஹஹஹாஆஆ! :) ;)
வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க!
~~
அம்முலு, வருகக்கும் கருத்துக்கும் நன்றிங்க. நீங்களும் இப்படித்தான் செய்வதா? படம் போடுங்கோ..எல்லாரும் பார்த்து ரசிக்கலாமில்ல? :)
~~
//(குட்டிகுட்டியா சுருண்டு இருக்கும்) போடுகிறேன். // அட!! சுருண்டு இருக்கும் புடலையா? அனேகமா கல் கட்டாம அப்படியே வளர்த்திருப்பாங்களோ? அதுவும் ஃபார்மர்ஸ் மார்க்கெட் சரக்குதானோ? :) போடுங்க, போடுங்க!!
// ஊர் ஞாபகம்தான் வருகிறது.தட்டின் உள்ளேயே பொரியலை எல்லாம் வச்சி சாப்பிடுவோம்,ம்ம்...// அப்ப,,,,இங்கே இப்படிச் சாப்பிட மாட்டீங்களா? நாங்க எப்பவுமே இப்புடித்தான் சாப்புடறது! ;) :)))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராக்கா!
~~
இராஜேஸ்வரி மேடம், புதிய தகவலுடன் கருத்துக்கு நன்றிங்க!
~~
ReplyDeleteவணக்கம்!
புடலங்காய்க் கூட்டு! புலவன்என் நெஞ்சை
வடம்கொண்டு இழுக்கும் வளைத்து!
கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அதென்ன பச்சைபயறு கடைசல் . ?
ReplyDeleteஅந்த மெனு போடுங்களேன். ரொம்ப சுவையாக இருக்கும் போல் தெரிகிறது .புடலங்காய் மசாலா கறி
விளக்கம் அருமை மகி
இன்றைய டிப்.. சாப்பாட்டு மேசையில் ஒரு புடலங்காயை வைத்திருங்கள். எட்ட இருக்கிற தட்டை யார் உதவியும் இல்லாமல் கொழுக்கி போட்டு அருகே இழுக்க உதவும். ;))
ReplyDeleteஅந்த முட்டைக்கோஸ் குறிப்பு வேணும் மகி.
புடலங்காய் மசாலா பொரியல் குறிப்பிற்கு நன்றி...
ReplyDeleteம்ம்.. இந்த புடலங்காய் பார்த்து நாளாச்சு.. ஆமா மகி .. நம்ம மாட்டீங்க.. எங்க ஊர் மார்கெட்டில் பன்னி புடலங்காய்தான் வருது..) இங்க குட்டி புடலங்காயை இந்த பேர் சொல்லித்தான் கேட்பார்கள். உங்க படத்தில இருக்கிற பாம்பு புடலை இங்க இப்பல்லாம் பார்க்க முடியல்லை. பொரியல் நல்லா இருக்கு.
ReplyDelete// இளமதி, பச்சை நிற காய்கள், கீரைகள் சமைக்கையில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தா பசுமை நிறம் மாறாம இருக்கும். அதற்காகத்தான் சர்க்கரை சேர்ப்பது//
ReplyDeleteஉண்மையாவோ மகி? இது எனக்கு புதுசு நியூஸ். பச்சை இலைகள் சமைக்கும்போது உப்பு போடாமல் சமைத்து இறக்கும்போது அல்லது இறக்கியபின் போட்டால் பசுமை மாறாமல் இருக்குமென அறிந்திருக்கிறேன்.
இனி சக்கரைதான் ....:)
அதென்னது புடலங்காயோ பாம்போ? ஆவ்வ்வ்வ்வ்:). அஞ்சுவைக் காணல்ல:) பாருங்கோ புடலங்காய் வாங்கப் போயிட்டாபோல.. அடுத்து புடலங்காய்தான் அஞ்சு வீட்டில:).
ReplyDeletethanks for this recipe mahi....intha kayellam samaithathe ilai naan..samaikumpothu ungain kuripu use agum enaku...pudalai usili kooda seyyalam illiya mahi ..
ReplyDelete//கி. பாரதிதாசன் கவிஞா் // வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! :)
ReplyDelete~~
//அதென்ன பச்சைபயறு கடைசல் . ?
அந்த மெனு போடுங்களேன். // ராஜலக்ஷ்மி மேடம், பச்சைப்பயறு கடைசல் ரெசிப்பி ரொம்ப நாள் முன்னாலயே போட்டிருக்கேன், இப்ப லிங்க் இணைத்திருக்கேன், க்ளிக் பண்ணீங்கன்னா ரெசிப்பியக் காணலாம்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
~~
// எட்ட இருக்கிற தட்டை யார் உதவியும் இல்லாமல் கொழுக்கி போட்டு அருகே இழுக்க உதவும். ;))// :))))) என்னே ஒரு கற்பனை!! ஐ யம் ஸ்பீச்லெஸ் ரீச்சர்! :))))
//அந்த முட்டைக்கோஸ் குறிப்பு வேணும் மகி.// லிங்க் இணைத்துட்டேன், க்ளிக்கிப் பாருங்கோ!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
~~
தனபாலன், நன்றிங்க!
~~
//இங்க குட்டி புடலங்காயை இந்த பேர் சொல்லித்தான் கேட்பார்கள்// ஆஹா! இப்படியும் ஒரு பேர் புடலங்காய்க்கு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவேயில்லை! ஹஹஹா! அருப்புக்கோட்டையை நினைச்சா இனி பன்னி புடலங்காயும் ஞாபகம் வரும்! :)))
நீளப் புடலங்காய் கிடைச்சா கட்டாயம் டிரை பண்ணிப்பாருங்க ராதாராணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
//பச்சை இலைகள் சமைக்கும்போது உப்பு போடாமல் சமைத்து இறக்கும்போது அல்லது இறக்கியபின் போட்டால் பசுமை மாறாமல் இருக்குமென அறிந்திருக்கிறேன்.// இது எனக்குப் புதுசு அதிராவ்! :) கீரைக்கு முதலிலேயே உப்பு போட்டால் ஏமாத்திரும். சமைக்கும் முன் இருக்கும் அளவு அமோகமா இருக்கும், அடுப்பில் போட்டதும் சுண்டி இத்துனூண்டா ஆகிரும், அதனால் நான் கடைசியில் உப்புப் போடுவேன். :)
சர்க்கரை போட்டா பச்சை மாறாம இருக்கும் என்பது புத்தகத்தில் படித்த குறிப்பு!
//அதென்னது புடலங்காயோ பாம்போ? ஆவ்வ்வ்வ்வ்:). // ஷ்ஷ்ஷ்ஷ்!! சமையல் ரூமிலை வந்து கண்ட நிண்ட பேரெல்லாம் சொல்லப்படாது அதிராவ்வ்வ்வ்...சின்னப் புள்ளைங்கள்லாம் பயப்படுவோமில்ல?!!
//அஞ்சுவைக் காணல்ல:) பாருங்கோ புடலங்காய் வாங்கப் போயிட்டாபோல.. அடுத்து புடலங்காய்தான் அஞ்சு வீட்டில:).// :) லெட்ஸ் வெயிட் அண்ட் ஸீ!
~~
கொயினி, நிஜமாவே புடலங்கா சமைச்சதே இல்லையா நீங்க??! நம்பவே முடிலைங்க! :)
பருப்பு உசிலிக்கு புடலங்கா பொருத்தமா இருக்காதுன்னு நினைக்கிறேன், இதுவரை செய்து பார்த்ததோ, கேள்விப்பட்டதோ இல்லை. நீங்க செஞ்சாச் சொல்லுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
aamam magi naan samaithathe ilai...but kelvipatiruken pudalai usili seyvaanganu adhai usili kooda sollamatanga pudalaiputtu ena sollamatanga ooril...naan samaikumpothu epovachum pudalai vaginal try psnnitu solkirenpa..
ReplyDeleteNice different curry with that fresh masala..
ReplyDeleteபுடலங்காய் புட்டு?! இப்பதான் கேள்விப்படறேன் கொயினி! நீங்க செய்தா ரெசிப்பியை கண்டிப்பா சொல்லுங்க, செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteநன்றீ!
~~
ஹேமா, ஆமாங்க..வழக்கமா செய்யும் சமையல் போர்! இப்படி அங்க இங்க பாத்து புதுசா செய்தா இன்ட்ரஸ்டிங்கா இருக்கு! :)
நன்றி!
~~
Love this poriyal
ReplyDeletehttp://www.followfoodiee.com/