Friday, May 10, 2013

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம்-11/2கப்
தேங்காய்த் துருவல்-1/4கப்
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
சமையல் எண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு , உளுந்துப் பருப்பு-தலா 1டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-2
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
சாதத்தை உதிரியாக செய்து ஆறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் + தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை என்ற வரிசையில் தாளிக்கவும். 
பருப்புகள், கடலை வறுபட்டவுடன் கீறிய பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை-உப்பு சேர்த்து, கடாயை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு, சாதத்தை கட்டிகளில்லாமல் உதிர்த்து சேர்க்கவும்.
தேங்காய்க் கலவையுடன் சாதத்தை கலக்கி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
சாதம் லேசாகச் சூடேறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு மேலும் சில நிமிடங்கள் கடாயை அடுப்பிலேயே வைத்திருக்கவும். 

சுவையான தேங்காய் சாதம் தயார். விருப்பமான பக்க உணவு(களு)டன் சாப்பிடலாம். படத்தில் நீங்கள் பார்ப்பது பருப்புச் சட்னி, கேரட் ப்ரோக்கலி பொரியல் மற்றும் அவித்த முட்டை. 
பொதுவாக தாளித்த சாதத்துக்கு வெங்காயம் சேர்க்காமல் செய்வது எங்க வீடுகளில் வழக்கமில்லை. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் போன்றவற்றில் வெங்காயம் சேர்க்காமலே செய்யலாம் என்று எனக்கு இணையத்தைப் பார்த்த பிறகே தெரிய வந்தது. [ஆரது அங்கே? சத்தமில்லாமச்  சிரிக்கிறது?? கர்ர்ர்ர்ர்ர்!!]  ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகே எலுமிச்சை-தேங்காய் சாதங்கள் மட்டும் வெங்காயம் இல்லாமல் செய்கிறேன். சுவையும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, வேலையும் குறைவு. ;) :) வெங்காயம் சேர்த்த தே.சாதம் ரெசிப்பி இங்கே.
ப்ரோக்கலி-கேரட்-துவரம்பருப்பு-தேங்காய் என்று கலர்ஃபுல் பொரியல்.  பொரியலுக்கு பெருங்காயம் தாளிப்பது எனக்குப் புதிதாக இருந்தது. செய்து பார்த்தேன், சூப்பரா இருந்தது பொரியல். ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியைக் காண இங்கே க்ளிக்குங்க.

ரெசிப்பி கர்ட்டஸி : நாங்களும் சமைப்போமில்ல? வலைப்பூ. 
பின்குறிப்பு 
கடந்த பதிவு நீளம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக மேலிடத்தில் இருந்து (எங்க ஊட்டுக்காரர்தேன்! ;)) புகார் வந்தது. இந்தப் பதிவு சுருக்கமாப் போடணும் என நினைச்சு அதையும் இறுதியில் கொஞ்சம் இழுத்துட்டேன், அஜீஸ்;) பண்ணிக்குங்கோ!! நன்றி!

15 comments:

  1. thengai saadam super, namma veetala solluruthai ellam ketpoma Mahi..

    ReplyDelete
  2. தேங்கா சாதம் !!! நானும் எப்பவும் வெங்காயம் சேர்த்ததில்லை மகி ..
    ..முட்டையை ஹைட் செய்யுங்க :)) யாரோ cat walk இல் வர மாதிரி இருக்கு :))
    ஹாப்பி வீக்கெண்ட்

    ReplyDelete
  3. தேஙகாய் சாதம் அழகா பார்க்க நல்லா இருக்கு.. ருசியும் சொல்லவே வேணாம் சாதத்தில் வறுத்த கடலை பருப்பும் பக்க உணவும் சாப்பிட தூண்டுது. பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  4. சுவையான தேங்கா சாதம்... படங்களுடன் விளக்கம்...

    நன்றி...

    ReplyDelete
  5. மகி நானும் இதேமுறை தான் கையாளுவேன். நான் ஒருவாரத்திற்கு முன்பாக இதை செய்து விட்டு படமெல்லாம் எடுத்து வைத்துவிட்டேன்... ஏன் வலையில் குறிப்பும் எழுதிவிட்டேன் ... ஆனால் என்ன போட்டோவை
    காமேரவிளிருந்து கணினிக்கு மாற்றுவதற்குள் அப்பப்பா ... அதனால் தான் இன்னும் வெளியிடவில்லை ..... இப்பொழுது ம்ம்ம் மகி சூப்பர் ...

    ReplyDelete
  6. மஹி அழகாய் அருமையாய் காட்சி தரது தேங்காய் சாதம். ஹி வெங்காயம் சேர்த்து செய்ததில்லே, பெருங்காயம்தான் தூக்கலா இருக்கும். பேஷாயிருக்கு

    ReplyDelete
  7. மகி,

    இங்கேயும்,அங்கேயுமா உலுக்கி,உலுக்கி எழுப்பினாலும் எழுந்திருக்கும் ஐடியா வரவே இல்லை.மதியத்துக்குமேல் வருகிறேன்.

    ReplyDelete
  8. ஆஹா ஆஹா சூப்பர்.... இப்படியா தேங்காய் சாதம் செய்வது? அரைத்துப் போடுவதில்லையோ? அப்போ தேங்காய் கடிபடாது வாயில்?..

    எவசில்வர் பிளேட்டில், அவித்த முட்டை வைத்தமைக்கு, என் வன்மையான கண்டனங்கள்:).

    ReplyDelete
  9. வெள்ளை வெளேர் தேங்காய் சாத‌த்துடன், கலர்ஃபுல்லான பக்க உணவுகளுடன் பார்க்கவே அழகா இருக்கு.

    தேங்காயின் வாசம் பிடிக்குமானால் தேங்காய்த் துருவலை நன்றாக வதக்கிவிட்டு சாதத்தை சேர்த்துப் பாருங்க.இன்னும் சுவையாக இருக்கலாம்.

    ReplyDelete
  10. எலுமிச்சை-தேங்காய் சாதங்கள் மட்டும் வெங்காயம் இல்லாமல் செய்கிறேன். சுவையும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது..

    அருமையான படங்கள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. Tasty cocunut rice mahi..

    ReplyDelete
  12. சுவையான தேங்காய் சாதம்

    ReplyDelete
  13. ஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! // namma veetala solluruthai ellam ketpoma Mahi..//ஹிஹ்..ஹி! கரெக்ட்டாச் சொன்னீங்க! :)
    ~~
    ஏஞ்சல் அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கேட் கேட்வாக்-ல வரதுக்குள்ள முட்டைய ஒளிச்சிட்டேன், டோண்ட் வொரி! :)
    நான் சமீப காலமாத்தான் வெங்காயம் சேர்க்காம செய்கிறேன்.
    ~~
    ராதாராணி, ரசித்துக் கருத்து தந்தமைக்கு நன்றிங்க!
    ~~
    தனபாலன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    விஜி, கேமரால இருந்து போட்டோவ ட்ரான்ஸ்ஃபர் செய்துட்டீங்களா இல்லையா? சீக்கிரம் உங்க ரெசிப்பியையும் போடுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    காமாட்சிம்மா, தேங்காய் சாதத்தில் பெருங்காயம் சேர்க்கலாமா? அடுத்த முறை செய்து பார்த்துடறேன். கருத்துக்கு நன்றிம்மா!
    ~~
    வானதி, நன்றி!
    ~~
    சித்ராக்கா, //தேங்காயின் வாசம் பிடிக்குமானால் தேங்காய்த் துருவலை நன்றாக வதக்கிவிட்டு // அடுப்பிலேயே வைத்து வதக்கினால் தேங்காய் சிவந்து போகிறதுன்னுதான் கடாயை கீழே இறக்கி வைச்சு சேர்க்கிறேன். அந்த சூட்டிலேயே வதங்கிருது. :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    அதிராவ், //இப்படியா தேங்காய் சாதம் செய்வது? அரைத்துப் போடுவதில்லையோ? அப்போ தேங்காய் கடிபடாது வாயில்?..// தேங்காய் அரைத்துப் போட்டால் அது "புலாவ், பிரியாணி" போல ஆகீரும்! இதில் தேங்காய் துருவல் தானே சேர்க்கிறோம்? வாயிலெல்லாம் கடிபடாது. இண்டியன் ஸ்டோரில் கிடைக்கும் dessicated coconut powder யூஸ் பண்ணுங்கோ!

    //எவசில்வர் பிளேட்டில், அவித்த முட்டை வைத்தமைக்கு, என் வன்மையான கண்டனங்கள்:).// ஓஹோஓஒ..அ.கோ.மு.-வை வாயில் போட்டு அமுக்காம எவர்சில்வர் தட்டில் வைச்சிட்டேன்ங்கறீங்களா? ;) :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிஸ்.கேட்! :)
    ~~
    இராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    கொயினி, பையன் தான் வால் பண்றானா? பொண்ணு சமர்த்தா இருக்காங்களா? :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    ஜலீலாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails