தேவையான பொருட்கள்
கேரட் -1
ஆரஞ்சுப் பழம்(சிறியது)-2
சர்க்கரை-11/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் அல்லது 3/4கப்
செய்முறை
கேரட்டை கழுவி துண்டுகளாக்கவும்.
ஆரஞ்சுப் பழத்தைத் தோலுரித்து சுளைகளைப் பிரித்து வைக்கவும். [நான் உபயோகித்த பழங்களில் விதைகள் இருக்கவில்லை. எங்கேயோ ஒன்றிரண்டுதான் இருந்தது. :)]
கேரட் -ஆரஞ்சை மிக்ஸியில் இட்டு அரைக்கவும்.
நன்கு அரைபட்டதும் தேவையான [குளிர்ந்த] தண்ணீர், சர்க்கரை சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் அரைத்து வடிகட்டவும். கண்ணாடி டம்ளர்களில் தேவையான அளவு ஜூஸை ஊற்றி பரிமாறவும்.
குளிர்ந்த தண்ணீர் சேர்த்து செய்திருப்பதால் அப்படியே பருகலாம், அல்லது ஐஸ்கட்டிகள் சேர்த்தும் பருகலாம்.
பி.கு. : பெயர்க்காரணம்
கேரஞ்ச் = கேரட் + ஆரஞ்ச்
:) :)
மிக நல்ல குறிப்பு மகி! அருமை. நல்ல நல்ல கண்டுபிடிப்புக்கள்!
ReplyDeleteபகிர்விற்கு ரொம்ப நன்றி!
இதில் கேரட் வாசனை வராதா?பேபி கேரட் போட்டு செய்துபார்க்கிறேன். பளிச் படங்களுடன் ஜீஸ் சூப்பரா இருக்கு.பெயர்க்காரணம் இன்னும் நல்லாருக்கு.
ReplyDeleteமகி,
ReplyDeleteஇங்கு அடிக்கும் வெயிலிற்கு ஏற்ற மாதிரி ஒரு ஜுஸ்
இந்த கேரஞ்.
பார்க்க பார்க்க எடுத்து கடகட என்று குடிக்க தூண்டுகிறதே!
Yes.. Nalla idea mahi keranj juce....tnx
ReplyDeleteLovely juice dear...
ReplyDeletenice title ha ha.....i love this combo.
ReplyDeleteகேரஞ்ச் ஜூஸ் சூப்பர் ரெஃப்ரெஸிங் & அழகான பரிமாறல்.
ReplyDeleteகேரஞ்ச் சூப்பர்...!
ReplyDeleteSuper carrot juice.
ReplyDeleteகொஞ்சம் இருங்க வாறன் முதல்ல இதுக்கொரு கர் சொல்லோணும்:)..
ReplyDelete//பி.கு. : பெயர்க்காரணம்
கேரஞ்ச் = கேரட் + ஆரஞ்ச் /// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)
//vanathy said...
ReplyDeleteSuper carrot juice.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் படம் பார்த்து அவதிப்பட்டு முடிவெடுத்திட்டாபோல வான்ஸ்ஸ்..
அது கேரஞ் யூஸாம்ம் .. நானும் ஏதோ புதுப்பயம்:) அமெரிக்காவில முளைக்குதாக்கும் என ஓசிச்சு ஓடிவந்தேன்:).
ஹெல்த்தி யூஸ்ஸ்ஸ். நல்லாயிருக்கு. எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வருது. கனடாவில மோலில் நானும் கணவரின் சிஸ்டரும் ஃபிரெஸ் யூஸ் ஷொப்பில போய், எனக்கு மங்கோவும் ஸ்ரோபெரியுமோ என்னவோ ஓடர் கொடுக்க, பின்னால இருந்து ஒரு குரல் நோ..நோ.. கரட் யூஸ் பிளீஸ்ஸ் எனக் கேட்டுதா, திடீரெனப் பார்த்தால், எப்படி வந்தாரோ தெரியவில்லை எங்கட மாமா(கணவரின் அப்பா)பின்னால் நின்று சொன்னார்.
ReplyDeleteஅந்நேரம் பிரெக்னண்டாக இருந்தேன் நான், அப்போ கரட் யூஸ்தான் நல்லதென்றார்.. சரி என வாங்கி வந்து குடிக்க முடியாமல் வீசிட்டு கணவரிடம் சொன்னேன்ன்...:) அவர் சிரிச்சுப்போட்டுச் சொன்னார், அப்பா சத்தை யோசிப்பார், நீங்க பேசாமல் அதை எறிஞ்சுபோட்டு பின்பு திரும்ப வாங்கியிருக்கலாமே என:).
நான் காரட்+அப்பிள் சேர்த்து ஜூஸ் செய்து கொடுப்பேன்.இப்படி செய்யவில்லை. வித்தியாசமான பெயர்(தலைப்பு) வைப்பதில் கில்லாடிதான்.
ReplyDeleteNice name, perange juice..
ReplyDeleteஹேமா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
ReplyDelete~~
அம்முலு, கேரட்-ஆப்பிள் நான் டிரை செய்ததில்லை. கேரட்-லெமன், கேரட்-ஆரஞ்ச் செய்திருக்கேன். நீங்களும் டிரை பண்ணிப் பாருங்க. நன்றி!
~~
அதிராவ், கேரட் ஜூஸ் நல்லா இருக்காது என்ற பிரம்மையைத் தோற்றுவிக்கும் கருத்துக்கு என் வன்மையான கண்டனங்கள்! கர்ர்ர்ர்ர்ர்ர்! :) காரட் சத்துடன் ருசியாகவும் இருக்குது, நீங்க மறுபடி:) ருசித்துப் பார்த்தீங்களா இல்லையா? ;) :)
// நானும் ஏதோ புதுப்பயம்:) அமெரிக்காவில முளைக்குதாக்கும் என ஓசிச்சு ஓடிவந்தேன்:)// ஹாஹா! எப்படி மூச்சிரைக்க ஓடி வர வைச்சிட்டமில்ல? தெம்பா யூஸ்:) குடிச்சிட்டுப் போங்க அதிராவ்!
//கொஞ்சம் இருங்க வாறன் முதல்ல இதுக்கொரு கர் சொல்லோணும்:)..// மெதுவாஆஆஆவே வாங்கோ! கர் சொல்லிச்சொல்லியே களைப்பாகிருப்பீங்க, 2 கப் யூஸும் உங்களுக்கே!
நன்றி அதிரா!
~~
வானதி, நன்றி!
~~
ஆசியாக்கா, மிக்க நன்றி!
~~
மீனா, நன்றிங்க!
~~
விஜி, நன்றிங்க!
~~
கொயினி, நன்றிங்க!
~~
ராஜி மேடம், இங்கயும் வெதர் 4 நாள் வெயில், 3நாள் மழை என கும்மாளம் அடிக்கிது. அப்படியான ஒரு வெயில் நாளில் செய்த ஜூஸ்தான் இது. :)
கருத்துக்கு நன்றிங்க!
~~
சித்ராக்கா, "கேரட்- பச்சை வாசம்"!!! இந்தப் பாயிண்ட்டை நான் கவனிக்கவே இல்லையே! ஆரஞ்ச் சேர்ப்பதால் எந்த வாசனையும் வராது. நான் நார்மல் கேரட் தான் உபயோகித்தேன். நீங்க செய்து பாருங்க.
நன்றி!
~~
இளமதி, வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றிங்க!
~~