கோடையின் இறுதி என்பதால் இன்னும் இங்கே வெயிலின் தாக்கம் குறையவில்லை. ஆனால் இப்போது 2-3 நாட்களாக கொஞ்சம் சூடு குறைந்து இருக்கிறது. மீண்டும் வியாழன் முதல் டெம்பரேச்சர் ஏறுமுகம்தான்! :) பீன்ஸ் பொரியலுக்கும் ஸம்மர் பொலம்பலுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கறீங்களா? அது ஒண்ணுமில்லைங்க..இந்த விளக்கமெல்லாம் அடுத்து வர புகைப்படம் பதிவில் இடம்பெற்றதுக்கு ஒரு சால்ஜாப்பு/சாக்கு/ஜஸ்டிஃபிகேஷன் குடுக்கறதுக்காகத்தான்!! ;)))
வெயிலுக்கேற்ற ஜில்ஜில் கூல்கூல் ஃபலூடா ஐஸ்க்ரீம்! எல்லாரும் எடுத்துக்குங்க. இந்த பிங்க் கலருக்கும் பதிவில் இடம்பெறும் ரொமானோ பீன்ஸுக்கும் ஏதோ தொட்டகுறை விட்டகுறை போல ஒரு நிறத்தொடர்பு இருக்கு! அதுதான் ஐஸ்க்ரீமையும் பீன்ஸையும் சேர்த்துவைச்சிருக்கு. :) பச்சை நிற காயில் ஆங்காங்கே பிங்க் நிறத்தில் புள்ளிகள், கோடுகள் என அட்ராக்டிவ்-ஆக இருந்த இந்த ரொமானோ பீன்ஸை நான் வாங்கியது எங்கூரு ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில்!
கொஞ்சம் பட்டையாகவும், பார்க்கும்போதே வாடிப்போனது போன்ற தோற்றத்தில்(கொளுத்தற வெயில்ல கூடாரத்தில போட்டு வைச்சாத் தெரியும்னு பீன்ஸ் பொருமுறது உங்க காதுல கேக்குது?! ;)) இருந்த பீன்ஸை வாங்கிட்டு வந்துட்டேன். புதுகாய் என்பதால் புதுசா எதாச்சும் ரெசிப்பி செய்வோமே என முயன்றதுதான் இந்த மெழுகுப்பிரட்டி! இந்தப் பெயர் ஏன் வந்தது என உறுதியாத் தெரியலைன்னாலும் உத்தேசமாவாவது ஒரு பதிலைச் சொல்லிவைக்கிறேன். ;) எண்ணெய் கொஞ்சம் அதிகமா விட்டு சமைச்சு, பொரியலைப் பார்க்கையில் காய் அப்படியே மெழுகு மாதிரி மினுமினுங்கறதால "மெழுகுப்பிரட்டி"ந்னு பேரு வந்துச்சாம்! ;)) :) அதுக்காக இந்தப் பதிவில் ரொமானோ பீன்ஸ் மினுங்கலையேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேக்கப்படாது..நார்மல் பீன்ஸில் செய்த மெழுகுப்பிரட்டியப் பாருங்க, ச்ச்ச்ச்சும்மா மின்னுதுல்ல?!
இது காய் கொஞ்சம் புதுசு, நறுக்கியதும் அவரைக்காய் போலவே இருந்தது. மெழுகுப்பிரட்டிக்கு சரி வருமா என சந்தேகத்திலயே சமைச்சேன். காய் பாதி வெந்துகிட்டிருக்கும்போது, மிக்ஸி ஜார் எங்கேயோ போய் ஒளிஞ்சுகிட்டது தெரிய வந்தது. மிக்ஸியைத் தேடி எடுத்து அரைச்சு முடிக்கறதுக்குள்ள ரொமானோ பீன்ஸ் கொஞ்சம் குழஞ்சே போச்! அவ்வ்வ்வ்! அதனால நீங்க கரெக்ட்டா காயை வேகவைச்சுக்குங்க என அன்போடு கேட்டுக்கொண்டு ரெசிப்பிக்கு அழைத்துப் போகிறேன். டொட்டொய்ங்ங்ங்ங்!!! :)))
ரொமானோ பீன்ஸ் -1/4கிலோ
சின்ன வெங்காயம்-10
வரமிளகாய்-3 (காரத்துக்கேற்ப) அல்லது மிளகாய்ப்பொடி- காரத்துக்கேற்ப
பூண்டு-3 பற்கள்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
தேங்காயெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
பீன்ஸை கழுவிவிட்டு, தலையையும் வாலையும் கிள்ளி:) நாரிருந்தால் எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கவும்.
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, தேவையான உப்பும் சேர்த்து குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
~~~
தேவையான பொருட்கள்ரொமானோ பீன்ஸ் -1/4கிலோ
சின்ன வெங்காயம்-10
வரமிளகாய்-3 (காரத்துக்கேற்ப) அல்லது மிளகாய்ப்பொடி- காரத்துக்கேற்ப
பூண்டு-3 பற்கள்
கடுகு-1/2டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டீஸ்பூன்
கறிவேப்பிலை- கொஞ்சம்
தேங்காயெண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை
பீன்ஸை கழுவிவிட்டு, தலையையும் வாலையும் கிள்ளி:) நாரிருந்தால் எடுத்துவிட்டு, பொடியாக நறுக்கவும்.
கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து, தேவையான உப்பும் சேர்த்து குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
சின்ன வெங்காயம், பூண்டு, வரமிளகாய்(அ) மிளகாய்த்தூள் இவற்றை மிக்ஸியில் இட்டு கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து பச்சைவாசம் போகும் வரை வதக்கவும்.
பிறகு வெந்த பீன்ஸைச் சேர்த்து கிளறிவிட்டு, மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான ரொமானோ பீன்ஸ் மெழுகுப்பிரட்டி/ பீன்ஸ் பொரியல் தயார்.
இந்த முறையில் சமைத்ததில்லை..நல்லாயிருக்கு!!
ReplyDeleteஅட்டகாசமா இருக்கு!
ReplyDeletesupera iruku akka...
ReplyDelete@மேனகா, நன்றி!
ReplyDelete~~
@ஜனா சார், நன்றி!
~~
@விஜி, நன்றி!
~~
Differentaana seymurai.....poriyal eppavum ore madiri seythu boradikkidhu next time unga recipie try Pannaren mahi. Thanks.
ReplyDelete"மிக்ஸி ஜார் எங்கேயோ போய் ஒளிஞ்சுகிட்டது தெரிய வந்தது"_______ இதுக்குதான், மிக்ஸியை அடிக்கடி விடாம யூஸ் பண்ணனும். இல்லாட்டி இப்படிதான் ஓடப்பார்க்கும்.
ReplyDeleteஇதுக்கு பேரு ட்ரேகன் பீன்ஸ் மகி.ரெண்டு பீன்ஸையும் கலந்து வச்சிருக்காங்க.இங்கும் ஒரு கடையில இது கலர்கலரா வரும்,நின்று பார்ப்பதோடு சரி.
காயை தனியா வேக வக்காம அப்படியே சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்திருந்தால் குழைந்திருக்காது.எப்படி சேர்த்தாலும் சுவை குறையாமல் இருந்தால் சரிதான்.இந்த செய்முறையைத்தான் ஒரு தடவ ட்ரைபண்ணி பார்க்கணும்.
"டொட் டொட் டொட்டொடொய்ங்"_______ஊரில் இருந்தபோது அடிக்கடி நாங்கள் சொல்லும் வார்த்தையிது. இங்கு பார்த்த பிறகுதான் இந்த வார்த்தையை மறந்துபோனதே தெரியுது.எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்.
Very nice recipe. I have seen this beans but never bought it. Because of the lazy look in the beans....not fresh enough to buy them, that's what I think when ever I see those at the market.
ReplyDeleteHere too summer is very brutal. Yesterday it went to 100 degrees.
கொயினி, இது கேரளா ஸ்டைல் சமையல்ங்க! :) எனக்கும் ஒரே மாதிரி செய்ய போரடிச்சுத்தான் இப்படி எக்ஸ்பெரிமென்ட்ஸ் செய்யறது! ;) நீங்களும் செய்துபாருங்க, நன்றி!
ReplyDelete~~
சித்ராக்கா, டிராகன் பீன்ஸ் அளவுக்கு டார்க் மெரூன் கலர் இல்லாமல் ஃபலூடால இருக்க ப்ளெஸண்ட் பிங்க் கலர்லதான் அந்த பேட்ச்சஸ் இருந்துச்சு. ஒருவேளை பிஞ்சா இருக்க டிராகன் பீன்ஸைப் பறிச்சு ரொமானோ-வோட சேர்த்துட்டாங்களோ! ;) "இந்த பீன்ஸுக்கு பேரென்ன?" என கேட்டதுக்கு அந்த மெக்ஸிகன் அம்மா சொன்ன பதில் "ரோமா பீன்ஸ்!" :)
இந்த வாரம் காரில்ல, மார்க்கட் போக இயலாது! இனி அடுத்த வியாழன்தான்!
//காயை தனியா வேக வக்காம அப்படியே சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்திருந்தால் குழைந்திருக்காது.//அப்படியா சொல்றீங்க? அப்படி தண்ணி தெளிச்சு வேகவச்சா வெங்காயம் ,உளுந்து இவற்றின் க்ரிஸ்ப்நெஸ் குறைஞ்சுராது!? :P இந்த அளவுக்கு நீளமான நாக்க வைச்சுகிட்டு எதும் பண்ணமுடியாதுன்றீங்களா? ஹிஹி..
// இங்கு பார்த்த பிறகுதான் இந்த வார்த்தையை மறந்துபோனதே தெரியுது.எனக்கு நானே சிரித்துக்கொண்டேன்.// ஹஹ்ஹா!! நானும் சிரிச்சுக்கிட்டேதான் டைப் செய்தேன்! அப்பப்ப இப்படி வார்த்தைகள் தானா வந்து விழும், யு ஸீ! ;))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிக்கா!
~~
வானதி, நானும் இவ்ளோ காசு குடுத்து வாடிய காயை வாங்கறமோ என்ற டவுட்டிலயேதான் வாங்கினேன், ஆனா பீன்ஸ் இளசாத்தான் இருந்துச்சு. நீங்களும் ஒரு முறை வாங்கி டிரை பண்ணிப் பாருங்க.
ஸம்மர்..அவ்வ்வ்வ்! ஸ்பீச்லெஸ் ஸம்மர் இந்த வருஷம்..இங்க 90டிகிரிய தொட்டாலே சூடு-சூடுன்னு குதிக்கிறேன் நானு..100 எல்லாம் ரொம்பவே கஷ்டம்தான்! பத்திரமா இருங்க.
நன்றி வானதி!
~~
பார்த்தால் அவரைக்காய் மாதிரியே இருக்கு.பார்த்த ஞாபகமில்லை.கண்டால் வாங்கி சமைக்க வேண்டியது தான்.மகி இருக்க பயமேன் . டொட்டடொய்ங்ங்ங்... நல்லாயிருக்கு ரியூன். ஐஸ்கிரீம் ம்.ம்.சாப்பிடுங்க.இங்கு மழை.கொஞ்சம் குளிர்ர மாதிரி.இலைகள் உதிரஆரம்பிக்கின்றன.நன்றி மகி.
ReplyDeleteதேங்காஎண்ணெயில் செய்த இந்த காய் அதிக சுவையாய்தான் இருக்கும். காய் பக்குவம் படத்துலய தெரியுதே... அடுத்த முறை இந்த காய் வாங்குபோது செய்துட வேண்டியதுதான்.
ReplyDeleteம்... அப்ப பாரஃபின் வாக்ஸ் போட்டு கிளறுறது இல்லையா!
ReplyDeleteஅம்முலு, காயின் ருசியும் கூட கொஞ்சம் அவரைக்காயையே நினைவுபடுத்துச்சு! :) கிடைத்தால் செய்து பாருங்க. டியூனை ரசித்தமைக்கு டாங்க்ஸூ! ;) :)
ReplyDeleteஇங்கே ஒரு சில மரங்களில் இலைகள் உதிர ஆரம்பிச்சாச்சு, ஆனால் வெயில் குறையவில்லை!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!
~~
ராதாராணி, செய்துபாருங்க. கேரள ஐட்டம் என்பதால தேங்காயெண்ணெய் தானே ஸ்பெஷல்!! நல்லா இருக்கும். கருத்துக்கு நன்றிங்க!
~~
இமா, உங்களுக்கு மட்டும் ஸ்பெஷலா ரெட்கலர் ஃபாரபின் வாக்ஸ் போட்டு கிண்டி பார்சல்ல அனுப்பிவிடறேன், மிச்சம் வைக்காம ஒரே முறைல சாப்பிட்டணும், சரியா? ;))))
நன்றி இமா!
~~
சூப்பர், எனக்கு பீன்ஸ் ரொம்ப பிடிக்கும்.
ReplyDeleteஆசியாக்கா, நன்றி! :)
ReplyDelete//பீன்ஸில் செய்த மெழுகுப்பிரட்டியப் பாருங்க, ச்ச்ச்ச்சும்மா மின்னுதுல்ல?!// மின்னுதா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமில்ல?:)
ReplyDelete//வெயிலுக்கேற்ற ஜில்ஜில் கூல்கூல் ஃபலூடா ஐஸ்க்ரீம்! எல்லாரும் எடுத்துக்குங்க.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. ஒரு குட்டியூண்டு டிஷ்ல:) ஒரு கேண்டி:) ஐஸ்கிரீமை வச்சுப்போட்டு எல்லோரையும் எடுக்கட்டம்ம்ம்ம்:)) நோஓஓஒ இது செல்லாது செல்லாது... எனக்கு ஃபலூடா எனில் ஃபலூடாபோல, பால் விட்டு ஐஸ்கிரீம் போட்டு, கசகச.. பிறகு ஜெலி பிறகு ஃபுரூட்ஸ் எல்லாம் போட்டு, ஒரு பிஸ்கட்டும் வச்சு வேணும்:).. எங்கிட்டயேவா:)
ReplyDelete//அதுக்காக இந்தப் பதிவில் ரொமானோ பீன்ஸ் மினுங்கலையேன்னு குறுக்குக் கேள்வியெல்லாம் கேக்கப்படாது.// சரி நினைவு வச்சு:) அடுத்த பதிவில் கேட்கிறேன்ன்:))..
ReplyDeleteஆனா பீன்ஸ் பிரட்டல் பார்க்க சும்மாவே சாப்பிடலாம்போல இருக்கு.
yumy n healthy...
ReplyDelete// ...ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க?:).. அதிரா கண்ணுக்கு எல்லாம் தெரியுமில்ல?:)// ஆங்ங்ங்ங்ங்ங்...அந்த ச்சோடா புட்டிக் கண்ணாடிய கழட்டி அங்கால வீசிட்டுப் பாருங்கோ, தெரியும்! ;) :)
ReplyDelete//ஃபலூடா எனில் ஃபலூடாபோல, பால் விட்டு ஐஸ்கிரீம் போட்டு, கசகச.. பிறகு ஜெலி பிறகு ஃபுரூட்ஸ் எல்லாம் போட்டு, ஒரு பிஸ்கட்டும் வச்சு வேணும்:).. எங்கிட்டயேவா:)// எங்க ஊர்ல ஃபலூடா என்ற பேரில் இதுதான் குடுக்கினம் அதிரா! நீங்க சொல்லற "மானே, தேனே, பொன்மானே" எல்லாம் சேர்த்த ஃபலூடாவை நான் ருசித்ததே இல்லை! எனக்கே இல்லாதப்ப உங்களுக்கெப்படி தரது? செல்லாது, செல்லாது!! :)))
//சரி நினைவு வச்சு:) அடுத்த பதிவில் கேட்கிறேன்ன்:))..// அதானே? பூஸா, கொக்கா? கிட்னிய யூஸ் பண்ணி ஞாபகம் வச்சிக்கணும், மறக்காம கேக்கோணும், இல்லன்னா நானே நியாபகப்படுத்தறேன், டோண்ட் வொரி! ;)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க அதிராவ்!
~~
Usha, thanks for the comment!
~~