Monday, September 2, 2013

வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் -1 கப் [OLD FASHIONED OATS (or) ROLLED OATS]
தண்ணீர்-2 கப் 
கேரட்-1
பீன்ஸ்-4
பச்சைப் பட்டாணி-ஒரு கைப்பிடி 
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை, கொத்துமல்லி - கொஞ்சம் 
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் 

செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாயை நறுக்கி வைக்கவும். 
கேரட் பீன்ஸை மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கேரட்-பீன்ஸ்-பட்டாணியை தேவையான தண்ணீர் விட்டு 30 செகண்ட் மைக்ரோவேவ் செய்து எடுத்துக்கொள்ளவும்.
ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வர வறுத்துவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மைக்ரோவேவ் செய்த காய்கள், தேவையான உப்பு சேர்த்து வதக்கி 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதி வந்ததும் ஓட்ஸை சேர்க்கவும்.
 ஓட்ஸ் சில நிமிடங்களிலேயே வெந்துவிடும். தண்ணீர் வற்றியதும் மல்லித்தழை சேர்க்கவும்.
 சூடான சுவையான ஓட்ஸ் உப்புமா ரெடி. 
குறிப்பு
ஓட்ஸை வறுத்து சேர்க்காமல் அப்படியே சேர்த்தால் உப்புமா கொழகொழவென ஆகிவிடும்.
இந்த உப்புமாவுக்கு QUICK COOKIN OATS-ஐ விட ரோல்ட் ஓட்ஸ்தான் சுவை நன்றாக இருக்கும், உதிரியாகவும் வரும்.
காய்களை மெலிதாக நறுக்கினால் மைக்ரோவேவ் செய்யாமல் வெங்காயத்துடன் சேர்த்து வதக்கும்போதே வெந்துவிடும். 

12 comments:

 1. குறிப்பு மிகவும் முக்கியம்... நன்றி...

  ReplyDelete
 2. ஈசியான,சத்தான திடீர் உப்புமா. வித்தியாசமாக இருக்கும் போல.நல்லதொரு பகிர்வு மகி.நிச்சயம் செய்கிறேன். நன்றி.

  ReplyDelete
 3. ம்.. எனக்குப் பிடித்தமான ஓட்ஸ் உப்புமா...:)

  கிளறி முடிந்து இறக்கும் போது சில துளி எலுமிச்சஞ்சாறு விடுப்பிடட்டினால் உதிரியாக இருக்கும். ருசியும் நன்றாகவே இருக்கும்..;)  ReplyDelete
 4. Have tried upma with quick cooking oats, rolled oats looks like a good option..

  ReplyDelete
 5. பார்க்க கலர்ஃபுல்லா இருக்கு ஓட்ஸ் உப்புமா.வறுத்து செய்யும்போது வாசனையும் சுவையும் அதிகமாகத்தான் இருக்கும்.

  வருடங்களாகிவிட்டது, ஓட்ஸை முழுசா சமைச்சு சாப்பிட்டு.முழு ஓட்ஸ் உப்புமா நல்லாருக்கு மகி.

  ReplyDelete
 6. தனபாலன் சார், டயட்-டயட் என்று எல்லாரும் தேடி தேடிச் சாப்பிடும் காலம் ஆகிருச்சே. ஹெல்த்தி உணவுகளை நம்ம டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி செய்வோம்னுதான் இப்படியெல்லாம்! உங்களுக்கும் பயனுள்ளதா இருப்பதில மகிழ்ச்சி! நன்றி! :)
  ~~
  அம்முலு, சீக்கிரமா செய்துடலாம், கொஞ்சம் அவல் உப்புமா போல இருக்கும்! செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!
  ~~
  இளமதி, //இறக்கும் போது சில துளி எலுமிச்சஞ்சாறு விட்டுப் பிறட்டினால்// நான் பொதுவா வெஜிடபிள் உப்புமாவுக்கு லெமன் சேர்க்க மாட்டேன், நினைச்சுட்டே இருப்பேன், ஆனா கடைசியில மறந்து போயிரும்! ஹிஹி..ஆனா ஓட்ஸ்லயே எலுமிச்சஞ்சாதம் செய்தேனே, சூப்பரா இருந்துச்சு, சீக்கிரம் ரெசிப்பிய போஸ்ட் பண்ணறேன். டிப்ஸுக்கு தாங்க்ஸுங்க! :)
  ~~
  ஹேமா, ரோல்ட் ஓட்ஸ் குழையாம உதிரியா வரும், செய்து பாருங்க. நன்றி!
  ~~
  சித்ராக்கா, //வருடங்களாகிவிட்டது, ஓட்ஸை முழுசா சமைச்சு சாப்பிட்டு// நீங்கதான் வறுத்து பொடிச்சிடறீங்களே! எனக்கு அதுக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம்! ;) ஒருமுறை இப்படி செய்து பாருங்க. நல்லா இருக்கு.
  நன்றி அக்கா கருத்துக்கு!
  ~~
  வானதி, நன்றி!
  ~~
  விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~

  ReplyDelete
 7. very very healthy dish mahi. Looks sooo yummy too. Thanks for sharing.

  I have only quick version & will try with the rolled oats very soon.

  ReplyDelete
 8. //ஓட்ஸை வறுத்து சேர்க்காமல் அப்படியே சேர்த்தால் உப்புமா கொழகொழவென ஆகிவிடும்.//

  இதே டவுட்டேடயேதான் வாசித்தேன்ன்.. வறுத்தால் ஒட்டாது எனச் சொல்லிட்டீங்க இனி ட்ரை பண்ணிடலாம். நான் இதுவரை தோசை மட்டும் செய்ததுண்டு, இட்லி ட்ரை பண்ணினேன் சரியா வரவில்லை:(

  ReplyDelete
 9. Nice ........healthy upma. Thanks mahi .

  ReplyDelete
 10. சுபா, ஸ்ப்ரவுட்ஸ்-ல இருந்து ரோல்ட் ஓட்ஸ் வாங்கிப் பாருங்க, சுவை ரொம்ப நல்லா இருக்கு. ஆல்மோஸ்ட் அவல் உப்புமா மாதிரி உதிரியா வருது உப்புமா! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  அதிராவ், கரெக்ட்தான்! நானும் சிலபலமுறைகள் ஓட்ஸ் களி செய்து அனுபவப்பட்டேன்! ;) அதுவும் இல்லாமல் ஓட்ஸின் தரமும் நல்லா இருக்கணுமே!

  //இட்லி ட்ரை பண்ணினேன் சரியா வரவில்லை:(// எதுக்கிந்த ரிஸ்க் எல்லாம் எடுக்கறீங்க? நான் நார்மல் இட்லி மட்டும்தான் செய்வது. மற்றபடி, ப்ரவுன் ரைஸ், பார்லி, கீன்வா, ஓட்ஸ் எல்லாம் ஒன்லி தோசை-அடை இப்படித்தான் செய்வேன். ரிஸ்க் ஃப்ரீ அண்ட் ஹெல்த்தி! :)
  செய்து பார்த்து சொல்லுங்க அதிரா! நன்றி!
  ~~
  கொயினி, ரொம்ப நாளா உங்களைக் காணோமே! பிஸியா? :)

  அதிசயமா ப்ளாகைப் பார்த்த என்னவர் கண்ணில உங்க பெயர் பட்டுவிட்டது!! இது என்ன புது பேரா இருக்கு.. என்ன அர்த்தம் என்று கேக்கறார், கொஞ்சம் சொல்லுங்களேன்! :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails