இனிப்புக் கொழுக்கட்டை, மோதகம், உப்புக் கொழுக்கட்டை, உப்மாக் கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை, உளுந்துக் கொளுக்கட்டை, அம்மணிக் கொழுக்கட்டை, பால் கொழுக்கட்டை, ராகி கொழுக்கட்டை, மல்டி-க்ரெய்ன் கொழுக்கட்டை, ஹெல்த்தி கொழுக்கட்டை, ஹவ் டு ஷேப் மோதகம், ஹவ் டு மேக் பாசிப்பருப்பு இனிப்பு கொழுக்கட்டை, ஹவ் டு மேக் கடலைப் பருப்பு இனிப்புக் கொழுக்கட்டை, ஹவ் டு மேக் எள்ளுக் கொழுக்கட்டை, சுண்டல் வகைகள், ஹெல்தி சுண்டல் வகைகள் என்று (எனக்குப் பரிச்சயப்பட்ட) வலையுலகமே விநாயகர் பர்த்டே ஃபீவரில் தகித்துக் கொண்டிருப்பதால்...Lets take, "the Road not taken!" :)))
கடந்த வருடம் கோவையில் எங்கள் வீட்டுப்பக்கத்துப் பிள்ளையார் கோயிலில் நடந்த பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டத்தின் படங்கள் இந்தப் பதிவில்!
~~~
கோவையில் சில வருடங்கள் முன்பிருந்து ஒவ்வொரு விநாயகர் சதுர்த்திக்கும் ஒவ்வொரு சிற்றூரின் விநாயகர் கோயிலிலும் பலமான கொண்டாட்டங்கள் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. ஐந்தடி விநாயகர், ஏழடி விநாயகர், ஒன்பதடி விநாயகர் என பிரம்மாண்டமான, விதவிதமாகச் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கோயில்களில் 5 நாட்கள், 7 நாட்கள் வைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளங்கள், ஆறுகளில் கரைக்கப்படும். அப்படிச் செய்யப்பட்ட விநாயகர்தான் மேலே படத்தில் இருக்கிறார்.
சதுர்த்தி அன்று கோயிலில் கேரளா ஸ்பெஷல் செண்டை மேளத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கொளுத்தி எடுத்த வெயிலில் மக்கள் கூட்டம் செண்டை மேள இசையை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரசித்தார்கள். :)
ஒரு சின்ன க்ளிப் இங்கே..சற்றே பெரிய 2 நிமிட வீடியோ பதிவில் இறுதியில்!
கோயில் சிறிது, கூட்டமோ பெரிது! விநாயகருக்கு அழகாக அலங்காரம் செய்திருந்தார்கள்.
கூட்டம் கொஞ்சம் குறைந்த பிறகு காற்றாட அமர்ந்திருந்த பிள்ளையார்! :)
கோயிலில் வந்து தரிசிக்க முடியாத மக்களுக்கு...
அவரவர் வீட்டுக்கு அவராகவே செண்டை மேள ஊர்வலத்துடன் வந்து...
தரிசனம் தந்த விநாயகர்! :)
~~~
சற்றே நீளமான செண்டை மேள இசை..
~~~
ஐந்து கரத்தனை
ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவமே!
~~~
பாலும், தெளிதேனும், பாகும், பருப்புமிவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்,
கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே, நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா!
~~~
வித்த்யாசமாக இருக்கு மகி.
ReplyDelete//பாலும், தெளிதேனும், பாகும்,// இதுதான் முதலில் நான் படித்த பாடல். பிள்ளையாரை மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஎப்போ பிள்ளையார் சதுர்த்தி? இன்றா? எனக்கு மோதகம் சாப்பிட ஆசையாக இருக்கிறதே!
அத்தனையும் அருமை!
ReplyDeleteஎங்கே உங்கள் பிரசாதம்..:)
விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் மகி!
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்...
ReplyDeleteஹப்பி பேர்த்டே ரூ வள்ளியின் மைத்துனர்.. கணபதிக்கு.
ReplyDeleteஇனிய சதுர்த்தி வாழ்த்துக்கள்.
சிறப்பான பகிர்வு .இனிய நல் வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteஇரண்டாவது படத்தில் அந்த குட்டிப்பெண் இரண்டு காதையும் மூடி இருப்பது பார்த்து சிரிப்பு வந்தது. பாலும் தெளிதேனும்-இதை 4th std-il தினம் tamil period-ல் தமிழ் டீச்சர் வந்தவுடன் பாடிவிட்டு தான் உட்கார வேண்டும். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் மகி.
ReplyDeleteஅழகாயிருக்கிறார் ஆனைமுகன்.
வித்தியாசமான விநாயகர் சதுர்த்தி பதிவு மகி
ReplyDeleteவிநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மகி.(உங்க ஊர்)சதுர்த்தி விழாவைப் பார்த்ததில் ஒரு திருப்தி.காற்றாட அமர்ந்துள்ள பிள்ளையார் கொள்ளை அழகாக இருக்கிறார்.
ReplyDelete"பாலும் தெளிதேனும்"_____பழைய ஞாபகத்தில் பாடிக்கொண்டே வந்தால் இரண்டு இடங்களில் இடிக்கிறது.ஒரு பிழை இருக்கிறது,ஒரு வார்த்தையைக் காணவில்லை.எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம்.
சித்ராக்கா, //ஒரு பிழை இருக்கிறது,ஒரு வார்த்தையைக் காணவில்லை.எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம்.// காணாமப் போன வார்த்தையைச் சேத்துட்டேன். எப்படி மிஸ் பண்ணினேன் எனத் தெரியாமலே விட்டிருக்கேன்! அவ்வளவு கேர்லெஸ்-ஆக டைப் செய்து போஸ்ட் பண்ணியிருக்கேன். அவ்வ்வ்வ்வ்வ்! [புள்ளையாரப்பா..ப்ளீஸ், என்னை மன்னிச்சிருப்பா!] ஆனால் பிழை என்ன என்று தெரியலை. நீங்களே சொல்லிருங்க.
ReplyDelete//காற்றாட அமர்ந்துள்ள பிள்ளையார் கொள்ளை அழகாக இருக்கிறார்.//ஆமாம், அழகாக அலங்காரம் செய்திருந்தாங்க. எனக்கு அந்த தீபாராதனையில் இருட்டில் ஜொலிக்கும் பிள்ளையாரும் குறிப்பாக அவரது கண்ணும் பார்க்கப் பார்க்க அலுக்காதவை! :)
நன்றி அக்கா!
~~
தியானா, நன்றிங்க!
~~
அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
சௌம்யா, //குட்டிப்பெண் இரண்டு காதையும் மூடி இருப்பது பார்த்து சிரிப்பு வந்தது. // நானும் அப்லோட் செய்யும்போதே கவனித்தேன். :) காதை மூடினாலும் அங்கயே நின்னு கேக்கிறாங்க பாருங்க! :)
எல்லாரும் பாலும் தெளிதேனும் கேட்டு பள்ளிக்காலத்துக்கே போயிட்டீங்க? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌம்யா~
~~
அம்பாளடியாள், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
//ஹப்பி பேர்த்டே ரூ வள்ளியின் மைத்துனர்.. கணபதிக்கு.// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! எல்லாரும் ஒரு வழியாப் போனா, பூஸாருக்கு மட்டும் தனி வழி!! :))) வள்ளி மைத்துனருக்கு வாழ்த்துக்கள் சொன்ன உங்க கிட்னிய;) என்ன்ன்ன்ன்ன்ன சொல்லிப் பாராட்ட? ஜூப்பருங்கோ அதிராவ்! :)
நன்றி!
~~
தனபாலன், வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க!
~~
இளமதி, //கஎங்கே உங்கள் பிரசாதம்..:)// இதோ..இப்ப வந்து பாருங்களேன், பிரசாதம் இருக்கு. பூஜை முடிந்ததும்தானே பிரசாதம் கிடைக்கும்? :)
நன்றி இளமதி!
~~
இமா, //எனக்கு மோதகம் சாப்பிட ஆசையாக இருக்கிறதே!// அதான் அழகாச் செய்து சாப்ட்டுட்டு எங்களுக்கும் தந்துட்டீங்களே! எங்க வீட்டு மோதகமும் எடுத்துக்குங்க இமா! :)
வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி!
~~
ஸாதிகாக்கா, நன்றி!
~~
'நான்கும்' என்பதற்கு பதில் 'நாலும்' என்றிருந்தால் பாட வசதியாக இருக்கும்.
ReplyDelete"புள்ளையாரப்பா..ப்ளீஸ், என்னை மன்னிச்சிருப்பா!" __________ அவர் ஒன்றும் கோபிக்கமாட்டார் மகி, அவர்தான் நம்மோட செல்ல பிள்ளையா(ரா)ச்சே.
Interesting post, nice reading it..
ReplyDelete//'நான்கும்' என்பதற்கு பதில் 'நாலும்' என்றிருந்தால்// அதைத்தான் சொல்வீங்க என நினைச்சேன், சரியாத்தான் போச்சு! :) ஆனால், நான் படித்தது, பாடியது எல்லாமே "நான்கு"தான் சித்ராக்கா! :)))
ReplyDeleteபுள்ளையார் கோவிச்சுக்கமாட்டார் என்கிறீங்க, சரி! இருந்தாலும் இப்படி மறந்திருக்கேனேன்னு எனக்குதான் ஷை-யாப் போச்சு! ;)
~~
ஹேமா, நன்றிங்க!
~~
சூப்பர் சூப்பர் மகி,பகிர்வுக்கு மகிழ்ச்சி.படங்கள் அருமை.மேளதாளத்தை ரசித்த அந்த 2 குட்டீஸ் சுவாரசியம்.கொண்டாட்டம் என்னையும் தொற்றிக் கொண்டது.
ReplyDeleteஆமாம் ஆசியாக்கா! செண்டை மேளம் கேட்க ரொம்ப நல்லா இருக்கும். ஆனா வெயில்தான் தாங்க முடியாம இருந்தது! குட்டீஸ்களுக்கெல்லாம் அன்று நாள் பூராவும் கொண்டாட்டம்தான்! :)
ReplyDeleteநன்றி அக்கா கருத்துக்கு!