தேவையான பொருட்கள்
கீன்வா(Quinoa)-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1கப்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
எண்ணெய்
உப்பு
எண்ணெய்
செய்முறை
அரிசி, கீன்வா, வெந்தயம் இவற்றை 2-3 முறை நீரில் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
மூன்று மணி நேரம் கழித்து, உளுந்துப் பருப்பையும் இரண்டு, மூன்று முறை கழுவிவிட்டு, அரிசி-கீன்வாவுடன் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.
அளவு கொஞ்சமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்திருக்கிறேன். அதிகமாகப் போடுவதாக இருந்தால், அரிசி-கீன்வா இவற்றை 4 மணி நேரங்களும், உளுந்தைத் தனியே 11/2 மணி நேரமும் ஊறவைத்துக்கொள்ளலாம்.
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு மாவை அரைத்து, உப்பு சேர்த்து கலந்துவைக்கவும்.
8 மணி நேரங்கள் கழித்து மாவு பொங்கி வ(ழி)ந்திருக்கும். ;)
[அரைத்த மாவை கன்வென்ஷனல் அவன் -ல் விளக்கைப் போட்டு உள்ளே வைத்தேன், காலையில் பொங்கி வழிஞ்சிருந்தது..ஹிஹிஹ்ஹி! :) நல்லவேளையா பேக்கிங் டிரேயில கிண்ணத்தை வைச்சேனோ, தப்பிச்சேன்! இல்லன்னா சிந்திய மாவைச் சுத்தம் செய்யறதுக்குள்ள ஒரு வழியாகிருப்பேன். அவ்வ்வ்வ்வ்வ்! ;) ]
பணியாரக் கல்லை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடாக்கவும். கல் சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடவும்.
சூடான, சுவையான, ஸாஃப்ட்-ஆன பணியாரம் ரெடி.
பணியாரம்-மதுரை சட்னி-கொத்துமல்லி சட்னி இதே மாவை கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையாகவும் செய்யலாம்.
தோசை சீக்கிரம் சிவந்துவிடும், கவனமாக கருகவிடாமல் எடுக்கவேண்டும்.
பணியாரத்தை வைத்து என்னவர் செய்த இன்னொவேட்டிவ் ப்ரேக்ஃபாஸ்ட் அடுத்து வரும் கொலாஜில்! :)
பணியாரத்தை இரண்டாக நறுக்கி, ஒரு புறம் கொத்துமல்லி சட்னியைத் தடவி, மறுபுறம் நறுக்கிய அவகாடோ துண்டுகளை வைத்து, பக்கத்தில் மதுரை சட்னியை வைத்துச் சாப்பிட்டார், விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம் என்பதற்காக இந்த கொலாஜ்!
:)))
~~~
:)))
~~~
அடடா... சூப்பரா இருக்கே... நன்றி...
ReplyDeleteசூப்பரான பணியாரம். படங்கள் எல்லாமே அருமை. முக்கியமாக மாவு பொங்கியது...:)
ReplyDeleteஉங்களவர் செய்த ப்ரேக்பாஸ்ட்டும் அருமை.
வாவ்... கண்ணாலேயே சாப்பிட்டேன் மகி...;)
ReplyDeleteசூப்பர் ரெஸிப்பி! இந்த கினோவா வாங்கி கபேர்ட ரொம்ப நாளா கிடந்து தூங்குது... என்ன பண்ணலாம்னு நேத்துக்கூட யோசிக்க இன்னிக்கு உங்க ரெஸிப்பி இங்கே....:0)
எப்பிடீங்க...! அசத்துறீங்க... புதுசு புதுசா நல்ல ருசியான குறிப்புகள், உபரி உபயோகக் குறிப்புன்னு..!
பாருங்க நீங்க அக்கறையோட அருமையா சமைச்சு குடுக்கிறதை இன்னும் மெருகேத்தி பிரசன்டேஷன் பண்ணி சாப்பிடத் தயார் படுத்துற உங்க கணவரை!...
அற்புதம்! கண்ணுபடக்கூடாது!
வாழ்க இருவரும்! வாழ்த்துக்கள்!
அன்பு நன்றிகள் மகி!
வாவ் பணியாரம் தோசை எல்லாம் வித்தியாசமாக உள்ளது.
ReplyDeleteபணியாரம் வாசம் ஜம்னு அடிக்குதே..பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்த்தா இன்னும் சூப்பராஇருக்கும் மகி..குண்டு குண்டா அழகா இருக்கு. கீன்வா இனிதான் கடையில் இருந்து வாங்கி வரவேண்டும். இந்த பணியாரம் செய்யவே வாங்கனும். அப்பிடியே தோசை செய்யும் ஐடியா சூப்பர். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteவித்தியாசமாக இருக்கு மகி.
ReplyDeleteHealthy and yummy! very innovative healthy creation Mahi :)
ReplyDeleteசட்டி இல்லை. ;( தோசை - பயமா இருக்கு. சுவையாக இருந்தால் அளவுக்கு மேல சாப்பிடச் சொல்லும். ஒரு தோசை & 2 பணியாரம் பார்சல் ப்ளீஸ்.
ReplyDeleteகொலாஜ் சூப்பர்.
ReplyDeleteLooks yummy. My mother gave me quinoa and the recipe to make out of it. As usual i am lazy to make it. Will try this one very soon.
ReplyDeleteசூப்பர்,சூப்பர்.மகி அசத்துங்கோ.யாராவது இப்படி பக்குவமாக மாவு அரைத்துக் கொடுத்தால் சுடலாம் தான்,நான் வர வர சோம்பேறியாயிட்டேன்.
ReplyDeleteநீண்டநாட்களாக பணியாரம் செய்யவில்லை. ஞாபகப்படுத்தியிருக்கிறீங்க.வித்தியாசமான ரெசிப்பி.உங்க படங்கள் பார்த்தாலே உடன் சாப்பிடனும் போல இருக்கும். அழகான படங்கள்.உங்க கணவரின் ப்ரேக்ஃபாஸ்ட் நல்ல ஐடியாவா இருக்கு. இப்படியா உணவு என்றால் எங்க வீட்டில் டபுள் ஓ.கே.நன்றி.
ReplyDeleteSuper healthy paniyaarams Mahi, with avocados, nice idea..
ReplyDeleteWow paniyaaram superman irukku mahi colourful chatniyoda kalakkitteenga hussu try wanna avakado paniyaaramum gooddhane ..fruits add wanna thrupthiyum vanthidum.super quinoa avacado paniyaaram.
ReplyDeleteஆவ்வ்வ்வ் சூப்பரோ சூப்பர் பணியாரம்.. நான் இப்பணியாரம் செய்யத்தான் பணியாரக் கல் தேடி களச்சு முடிவில வேறு ஒரு முறை கண்டு பிடிச்சேன்ன்ன்:) விரைவில் சொல்றேன்ன்ன் :).. இதை நாங்கள் “குண்டுத்தோசை” என்போம்.. கல்லை.. குண்டுத்தோசைக் கல் என்போம்ம்:).
ReplyDeleteஇமா சொன்னதுபோல, எங்க வீட்டிலும் அதே பிரச்சனை:) இப்படி ஏதும் செய்தால் ..மீதான் அதிகமா சாப்பிட்டு விடுவேன்ன்.. போகும்போது வரும்போது + ரீ உடன் எல்லாம் சாப்பிடுவேன் :) அதனாலயே செய்ய விரும்புவதில்லை.. கர்ர்ர்:).
ReplyDeleteபணியாரத்தை இரண்டாக நறுக்கி, ஒரு புறம் கொத்துமல்லி சட்னியைத் தடவி, மறுபுறம் நறுக்கிய அவகாடோ துண்டுகளை வைத்து, பக்கத்தில் மதுரை சட்னியை வைத்துச் சாப்பிட்டார், விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம் என்பதற்காக இந்த கொலாஜ்!/////
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மீ அவிச்ச முட்டையைக் கட் பண்ணி வைச்சுச் சாப்பிடப்போறேன்ன்ன்:).
இங்கு கினோவா கிடைக்குது, நான் முன்பு கொழுக்கட்டை செய்து காட்டினனான் எல்லோ?:).. இப்படி தோசை எல்லாம் செய்ய விருப்பம், ஆனா அதில அலர்ஜி இருந்ததுபோல ஃபீல் பண்ணினேன்.. அதனால மீண்டும் தொடப் பயம்..
ReplyDeleteஇன்ஸ்பெக்க்ஷன் எப்போ வேண்டுமானாலும் வரலாம் (வருவேன்),எதற்கும் தயாரா இருங்க.
ReplyDeleteபணியாரமும் தோசையும் போட்டி போடுது.தோசை ரொம்பவே இழுக்குது. "விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம்"________ ஆறிப்போய்டுமே மகி!
ReplyDelete'கீன்வா' வாங்கிவந்து இவர்கள் தொடவேயில்லை. நான்தான் அரிசி மாதிரியே எல்லாமும் செய்து காலி பண்ணினேன்.இன்னொரு தடவ வாங்குவேணான்னு தெரியல.
இரவு முழுவதும் லைட்ட போட்டு வச்சா இப்படித்தான் மாவு வெளில வரும்.நான் சுமார் ஒருமணி நேரத்திற்கு மட்டுமே போடுவேன்.ஆனால் காலை 9:00 மணிக்குமேலதான் நான் மாவைப் பயன்படுத்துவேன்.
மற்ற பதிவுகளை நாளைதான் பார்க்க வேண்டும்.
எனக்கு மாவு பொங்கி வழிந்து அவனை துடைத்த சோக கதை நடந்துள்ளது.
ReplyDeleteஅனைவரின் கருத்துக்களுக்கும் நன்றிகள், விரிவான நன்றி விரைவில் உரைக்கப்படும்! :)
ReplyDeleteம்.. நல்லா உரைச்சுப் பார்த்துட்டு... நன்றி இமிடேஷனா தங்கமான்னு சொல்லுங்க. ;))
ReplyDelete// நன்றி இமிடேஷனா தங்கமான்னு சொல்லுங்க. ;))// கர்ர்ர்ர்ர்ர்ர்! பேச்சு சுதந்திரம் கூட இல்லாமப் போச்சுதே! அவ்வ்வ்வ்! ;) :) என்ர நன்றி எப்பவுமே பத்தரை மாத்துத் தங்கம்தான் இமா! உரைச்சுப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை! :)
ReplyDeleteஎல்லாருக்கும் நன்றி சொல்லிட்டு அந்த கமெண்ட்டை நைஸா டெலிட் பண்ணிருப்பேன், இப்படி ஒரு ரிப்ளையப் போட்டு அதுக்கு வழியில்லாமப் பண்ணிப்புட்டீங்க..ஹ்ம்ம்ம்! இட்ஸ் ஓகே! :)
@சௌம்யா, உங்க சோகக் கதைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்! இனி சித்ராக்கா சொன்னமாதிரி 1 அல்லது 2 மணி நேரம் மட்டும் லைட்டைப் போட்டு வைச்சிட்டு மறக்காம ஆஃப் பண்ணிரலாம், டோண்ட் வொரி! :)
ReplyDelete~~
@சித்ராக்கா, //இன்ஸ்பெக்க்ஷன் எப்போ வேண்டுமானாலும் வரலாம் (வருவேன்),எதற்கும் தயாரா இருங்க.// ஆ...ஐ!! ஊரெல்லாம் சுத்திட்டு வந்து நம்மையும் மெரட்டறாங்களே...ஒருவேளை எதாச்சும் க்ளாஸுக்குப் போயிட்டு வந்திருப்பாங்களோ!! ;)
//"விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம்"________ ஆறிப்போய்டுமே மகி!// ஒரு ஆர்வக் கோளாறு வந்துருச்சுன்னா ஆறுது, ஆறலை --இதெல்லாம் கவனிக்க மாட்டம்ல? அதான் எங்க வீட்டில நடக்குது. உங்களுக்கும் விரைவில் அந்தக் கோளாறு வர வாழ்த்துக்கள்! ;) :)
//'கீன்வா' வாங்கிவந்து இவர்கள் தொடவேயில்லை.// சரிதான், அதில் உப்மா ஒரு முறை செய்தேன், டிரையாக இருந்த மாதிரி ஒரு ஃபீலிங்..அதிலிருந்து இன்னும் உப்புமா பக்கமே போகல, மாவரைச்சு தோசை-பணியாரமாகத்தான் செய்துட்டு இருக்கேன்.
//நான் சுமார் ஒருமணி நேரத்திற்கு மட்டுமே போடுவேன்.ஆனால் காலை 9:00 மணிக்குமேலதான் நான் மாவைப் பயன்படுத்துவேன்.// பாயிண்ட் நோட்டட்! தேங்க் யூ! ஆனா எனக்கு 7 மணிக்கு மாவு ரெடியாக இருக்கணும்..ஸோ, 2 அவர்ஸ் கழிச்சு லைட்டை ஆஃப் பண்ணி பார்க்கறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா. டைமிருக்கும்போது மறுபடி வாங்கோ!
~~
aதிரா, //ஆனா அதில அலர்ஜி இருந்ததுபோல ஃபீல் பண்ணினேன்.. அதனால மீண்டும் தொடப் பயம்..// கீன்வா-வில் அலர்ஜி கூட வருமோ? இப்பத்தான் கேள்விப்படறேன். எதுக்கும் ஜாக்ரைதையா இருங்கோ பூஸ்!
//மீ அவிச்ச முட்டையைக் கட் பண்ணி வைச்சுச் சாப்பிடப்போறேன்ன்ன்:).// அது சரி! அ.கோ.மு.-வையும் அதிராவையும் பிரிக்க முடியுமா என்ன? நீங்க கலக்குங்க அதிராவ்! :)
//இப்படி ஏதும் செய்தால் ..மீதான் அதிகமா சாப்பிட்டு விடுவேன்ன்.. // வீட்டுக்கு வீடு வாசப்படி! இதெல்லாம் பப்ளிக்குல சொல்லப்பூடா!!! ;))) எப்பவாவது ஒரு நாள் செய்து ஒரு புடி புடிச்சிருங்க! ;)))
//இதை நாங்கள் “குண்டுத்தோசை” என்போம்.. கல்லை.. குண்டுத்தோசைக் கல் என்போம்ம்:).// :)))) புதுப் பேர்! :))) இந்தக் கல் இங்க ஏதோ ஒரு அமெரிக்க கடைல வாங்கினதுதான் அதிரா. உங்களுக்குக் கல் கிடைச்சதா இல்லையா? சீக்கிர்மாச் சொல்லுங்க.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
@கொயினி, மொபைல்ல இருந்து கமெண்ட் போட்டிருக்கீங்க போல? 'ஒரு மாதிரியா' புரிஞ்சுகிட்டேன். :) நன்றிங்க!
ReplyDelete~~
@ஹேமா, நன்றிங்க!
~~
@அம்முலு, நானும் பணியாரம் செய்து பலநாளாச்சு. திடீர்னு ஞாபகம் வரவே முயற்சித்தேன், சூப்பரா குண்டுகுண்டு பணியாரமா வந்தது! :) நீங்களும் செய்து பாருங்க. என்னவருக்கு அவகாடோ மேல அதீத பாசம், அதான் இப்படியெல்லாம் எக்ஸ்பெரிமெண்ட்!
நன்றி அம்முலு!
~~
@//யாராவது இப்படி பக்குவமாக மாவு அரைத்துக் கொடுத்தால் சுடலாம் தான்,// ஆஹா...நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீங்களே சொன்னா எப்படி ஆசியாக்கா? ;) :) எனிவேஸ், இங்க வாங்கோ..சுடச்சுட சாப்பிடலாம்! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
@வானதி, கீன்வா-வும் கொடுத்து ரெசிப்பியும் சொல்லிருக்காங்க, அப்புறமும் செய்யலையா? கர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த வீக்கெண்ட் பணியாரம் செய்து பாருங்க, சூப்பரா இருக்கும். :)
நன்றி வானதி!
~~
@இமா, //சுவையாக இருந்தால் அளவுக்கு மேல சாப்பிடச் சொல்லும்// இது நூத்தில ஒரு வார்த்தை! ;) எனக்கும் வாய்க் கட்டுப்பாடு கிடையாது, சாப்பிடச் சாப்பிட இன்னும் பசிக்கிற மாதிரியே இருக்கும்! ;) அவ்வ்வ்வ்வ்!! நீங்க சொன்னமாதிரியே அளவா பார்ஸல் அனுப்பிடறேன். கொலாஜை ரசித்ததுக்கு டாங்க்ஸ்! :)
~~
@நீலா, நன்றிங்க!
~~
@ஸாதிகாக்கா, நன்றி! இந்த மாவில் இட்லிய விட தோசை பணியாரம் எல்லாம் நல்லா இருக்கு. செய்து பாருங்க.
~~
@ராதாராணி, வெங்காயமிளகா சேர்த்து செய்திருந்தா நல்லாதான் இருக்கும், ஆனா அவ்வளவு யோசிக்கலைங்க. தோசை செய்யலாம்னுதான் போனேன், சடனா பணியாராமிருச்சு! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
@இளமதி, //கினோவா வாங்கி // இது கினோவா-தான் என்று நானும், கினோவா அல்ல , கீன்வா என்று என்னவரும் பலநாளாக் குழப்பி, கடைசியா இண்டர்நெட்ல ப்ரனவுன்ஷியேஷன் செக் பண்ணினோம், அது கீன்வா!! :) கினோவா இல்லே என எனக்கு ஒரு பல்பு கிடைச்சது! ஹிஹ்ஹிஹி.. ;)))
கினோவால இன்னும் உப்மா வகைகள் டிரை பண்ணல அவ்வளவா..செய்துபார்த்துட்டு சொல்லறேன்.
வருகைக்கும் கனிவான கருத்துக்கும் நன்றிங்க!
~~
@ஆதி, மாவு பொங்கியதைப் பார்த்து ரசித்துட்டீங்களா? :) எனக்கும் டென்ஷன் ஆகறதுக்கு பதிலா போட்டோ எடுக்கத்தான் தோன்றியது! ஹஹஹ!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க!
~~
@தனபாலன் சார், நன்றி!
~~
இளமதியின் வலை மூலம் வந்தேன். கண்ணையும் கருத்தையும் வேறெங்கும் நகர்த்தவியலாமல் எண்ணற்ற சமையற்குறிப்புகள். எனக்குப் பிடித்த பணியாரத்தோடு பயணத்தைத் துவங்கியிருக்கிறேன். இனி அடிக்கடி வருவேன். நன்றி மகி. நன்றி இளமதி.
ReplyDeleteகீதமஞ்சரி, நல்வரவு!
ReplyDeleteஅடிக்கடி உங்க பயணம் என் வலைப்பூவுக்கு கிடைக்கும் என்பது மகிழ்ச்சிங்க. :)
வீட்டில் தினப்படி சமைக்கும் உணவுகள்தான் பெரும்பாலும் இங்கே இருக்கும், உங்களுக்குப் பிடித்ததை செய்துபார்த்துச் சொல்லுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!