Sunday, September 29, 2013

புதினா-வெங்காய சாண்ட்விச் / Mint Onion Sandwich

தேவையான பொருட்கள்
புதினா சட்னி 
சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகள்-1/4கப்
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப) 
தேங்காய்த் துருவல்-1டேபிள்ஸ்பூன்
புளி-சிறிது
உப்பு
எண்ணெய் 
வதக்கிய வெங்காயத்திற்கு
நீளமாக நறுக்கிய வெங்காயம்-1
சீரகம்-1/4டீஸ்பூன்
கறிமசாலாதூள்-1/2டீஸ்பூன்
மல்லித்தூள்-1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1/8டீஸ்பூன்
உப்பு 
எண்ணெய் 
வீட் ப்ரெட் (அ) விருப்பமான ரொட்டித் துண்டுகள்-6
ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் சிறிது எண்ணெய் காயவைத்து பச்சைமிளகாயை வதக்கவும். அதனுடன் புதினா இலைகள், புளி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கி எடுத்துவைக்கவும். 
ஆறியதும் இவற்றுடன் தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைத்தெடுக்கவும்.
புதினா வதக்கிய கடாயிலேயே இன்னும் சிறிது எண்ணெய் சூடாக்கி, சீரகத்தை பொரியவிடவும். 
நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சுவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய்-மல்லி-கறிமசாலாப் பொடிகளைச் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும்.
க்ரில்லில் லேசாக எண்ணெய் தடவி, சூடாக்கிக் கொள்ளவும்.
ரொட்டித் துண்டுகளில் ஒரு புறம் புதினா சட்னியைத் தடவி, அதன் மேல் வதக்கிய வெங்காயத்தை வைத்து..
இன்னொரு ரொட்டித் துண்டை அவற்றின் மீது வைத்து, ஆலிவ் ஆயில் கொஞ்சம் தெளித்து விட்டு..
க்ரில்லை மூடி வைக்கவும்.
2 அல்லது 3 நிமிடங்களில் சுவையான புதினா-வெங்காய சாண்ட்விச் ரெடியாகி இருக்கும்.
கத்தியால் முக்கோணமாக நறுக்கி, சூடாகப் பரிமாறவும்.
சுடச்சுட சாப்பிட காரசாரமான  சுவையான மொறுமொறு "மின்ட்-ஆனியன் சாண்ட்விச்" ரெடி!
ஈவினிங் டீ-யுடன் சூப்பர் ஜோடி இந்த சாண்ட்விச்! :) 
க்ரில்-லிற்கு பதிலாக ப்ரெட் துண்டுகளை தோசைக்கல்லிலும் வாட்டி எடுக்கலாம். இங்கே கொடுத்துள்ள அளவிற்கு 6 முதல் 8 ரொட்டித்துண்டுகள் உபயோகித்து 3 அல்லது 4 சாண்ட்விச்கள் செய்யலாம். 

Recipe Inspiration: Here

16 comments:

  1. இந்த சாண்ட்விச் வித்தியாசமாக இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
  2. வெறும் வெங்காயத்தை மட்டும் வைத்தே சாண்ட்விச் பண்ணிக்காட்டி விட்டீர்களே!

    ReplyDelete
  3. mm ரொம்ப சுலபமாக இருக்கே. சட்னி +வெங்காயத்துடன் சாப்பிடும் போது இன்னும் சூப்பராக இருக்கும் இல்லையா?
    மகி

    ReplyDelete
  4. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! அருமை!

    ReplyDelete
  5. Hay good ideappa thanks mahi ......simple and superb.

    ReplyDelete
  6. Love the stripes on the sandwiches. Super.

    ReplyDelete
  7. 'க்ரில்'ல் செய்ததை பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.புதுபுது ரெஸிபியில் கலக்குறீங்க.ஆரோக்கியமானதாவும் இருக்கு. ப்ரெட் வாங்கி ரொம்ப நாள் ஆச்சு.வாங்கினால் செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. ஸ்..ஸ் நல்ல ருசியாக அதுவும் புதினா வாசத்துடன் சூப்பர் சான்விச் மகி... :)
    அருமையாக இருக்கும்... ஆமா இதேபோல் கொத்த மல்லிக் கீரையிலும் அரைத்துச் சேர்கலாம்தானே.. கைவசம் இருக்கு அதனால் கேட்டேன்...:).

    மிக்க நன்றி மகி நல்ல குறிப்பு!

    ReplyDelete
  9. சூப்பர்ப் மகி.
    அழகாகவும் இருக்கு.

    ReplyDelete
  10. Looks spicy, crunchy and yummy mahi. Perfect clicks.

    ReplyDelete
  11. சாண்ட்விச் பார்க்க அழகாகவும்,.செய்முறை ஈசியாகவும் இருக்கு.நன்றி மகி.

    ReplyDelete
  12. பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடிக்குமோ தெரியேல்லை:)

    ReplyDelete
  13. @அதிரா, //பார்க்க நல்லாயிருக்கு, ஆனா எனக்குப் பிடிக்குமோ தெரியேல்லை:)// செய்து சுவைத்துப் பார்த்தால்தானே தெரியும்? ;) ஒருக்கா டிரை பண்ணிப் பாருங்க அதிரா!
    நன்றி!
    ~~
    @அம்முலு, க்ரில் செய்ததால் சாண்ட்விச் அட்ராக்டிவ் ஆக இருக்கு, ருசியாகவும் இருக்கும், செய்து பாருங்க, நன்றி!
    ~~
    @சுபா, சுடச்சுட சாப்பிட அருமையா இருக்கும், ஈவினிங் டீ-டைம்ல செய்து பாருங்க. நன்றி!
    ~~
    @இமா, தேங்க் யூ!
    ~~
    @இளமதி, //கொத்த மல்லிக் கீரையிலும் அரைத்துச் சேர்கலாம்தானே.. கைவசம் இருக்கு அதனால் கேட்டேன்...:).// தாராளமாகச் செய்யலாம் இளமதி, செய்து பார்த்துச் சொல்லுங்க! நன்றி!
    ~~
    @சித்ராக்கா, ப்ரெட் வாங்கியதும் செய்து பார்த்துச் சொல்லணும்! :)
    நன்றி!
    ~~
    @வானதி, கேமரால போட்டோ பிரிவியூ பார்த்தப்பவே அழகாஇருந்துது, அதான் உடனே இங்கே போஸ்ட் பண்ணிட்டேன்! :)
    நன்றீ!
    ~~
    @ஆசியாக்கா, நன்றி!
    ~~
    @கொயினி, நன்றிங்க!
    ~~
    @ஜனா சார், பார்க்க அழகாகவும், செய்வதற்கு சுலபமாகவும், சாப்பிட ருசியாவும் இருக்கும். இதெல்லாம் யோசிச்சுதனே செய்திருக்கோம்! ஹஹாஹா! :) நன்றீங்க கருத்துக்கு!
    ~~
    @ஜலீலாக்கா, ஆமாம்..சிம்பிள் அண்ட் டேஸ்ட்டி ஸ்டஃபிங்! செய்து பார்த்து சொல்லுங்க! நன்றி!
    ~~
    @ஸாதிகாக்கா, நிறைய வேலை இல்லாம சீக்கிரமா சாப்பிடலாம்ல! அதான்! :) நன்றிக்கா!
    ~~
    @தனபாலன் சார், வருகைக்கும் கருதுத்க்கும் நன்றிகள்!
    ~~

    ReplyDelete
  14. Tried it mahi but used coriander chatni it was very easy & tasty.

    ReplyDelete
  15. மஹி ரொம்பநாளைச்சு பார்த்து. கிரில் ஸாண்ட்விச் ரொம்ப நன்றாக இருக்கு. இங்கே மஶ்ரும்,வெங்காயம்,தக்காளி எல்லாம் போட்டுக்கூட மருமகள் பண்ணுகிராள். ப்ரோக்கலி,மஶ்ரூமெல்லாம் ஸ்லைஸா நறுக்கி ,இரண்டு நிமிஶம் மைக்ரோவேவ் பண்ணிவிட்டு,துளி மஸாலாவும் போட்டுப் பண்ணுகிறாள்.
    பார்க்க அழகோடுமட்டுமில்லை. வேண்டிய பொருள்கள் சேர்த்து உண்ணவும் கண்கவர்தான்.
    மஹி செய்தால் கேட்க வேண்டுமா என்று பதிவு பார்த்து நினைத்துக் கொண்டேன். நான் ரொம்பநாளாய் ஆப்ஸென்ட்.
    அன்புடன்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails