ஞாயிற்றுக்கிழமை மாலை..கதிரவன் வானெங்கும் மஞ்சளும், நீலமும், சிவப்பும். கருப்புமாய் வண்ணக்குழம்பெறிந்து மேற்கில் சரிந்த பொழுதில்..
மெல்லிய கீற்றாய் மேல்வானில் இந்தின் இளம்பிறை..
மஞ்சள் அரைக்கும் வானமகள்..ஆங்காங்கே கார்காலத்தில் பிசிறி விட்ட பஞ்சுத் துணுக்குகளாய்க் கருமேகக்கூட்டங்கள்! அவற்றில் வாயு தேவன் தீட்டும் எழிலுறு ஓவியங்கள்!
இயற்கையுடன் போட்டி போட்டுத் தோற்கும் சாலையோர விளக்கு..
மெல்லிய கீற்றாய் மேல்வானில் இந்தின் இளம்பிறை..
மஞ்சள் அரைக்கும் வானமகள்..ஆங்காங்கே கார்காலத்தில் பிசிறி விட்ட பஞ்சுத் துணுக்குகளாய்க் கருமேகக்கூட்டங்கள்! அவற்றில் வாயு தேவன் தீட்டும் எழிலுறு ஓவியங்கள்!
இயற்கையுடன் போட்டி போட்டுத் தோற்கும் சாலையோர விளக்கு..
கேமராவில் சிறை பிடிக்கப் பிடிக்கச் சற்றும் சலிக்காத அழகு வானம்!
மாடியிலிருந்து சில படங்கள்..கீழே இறங்கி வந்து சில படங்கள் எனச் சில்லென்ற ஒரு அக்டோபர் மாலைப் பொழுதில் க்ளிக்கிய மூன்றாம் பிறை!
முடிந்தால் மூன்றாம் பிறை முழுநிலவாவதையும் படமெடுத்து இணைக்கிறேன். :)
முடிந்தால் மூன்றாம் பிறை முழுநிலவாவதையும் படமெடுத்து இணைக்கிறேன். :)
~~~
இன்றைய இணைப்புகள்
நிழலும் நிஜமும்..
;)
மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்று மூவண்ணத்தில் ஒரு சிம்பிள் வீகெண்ட் லன்ச்! :)
அஆஅவ் !!!!! மகி கை கொடுங்க எல்லா படங்களும் அவ்ளோ அழகோ அழகு ..ஜீநோவும் கியூட்
ReplyDeleteபடங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்.போட்டிபோடும் வசனங்களும் சூப்பர்.
ReplyDelete'முடிந்தால் மூன்றாம் பிறை முழுநிலவாவதையும் படமெடுத்து இணைக்கிறேன்'____ இதோ,பௌர்ணமி வரும் நாளை பார்க்க காலெண்டரை எடுக்கப்போறேன்.
தோட்டத்தில கொஞ்ச நாளா ஆளக் காணோம்னு பார்த்தேன்.இங்கதான் போஸ் கொடுத்துட்டு இருக்காறா! சூப்பர்.
முழு பருப்ப தாளிச்சு சாப்டுவீங்களா!புதுசா இருக்கே.
ஏஞ்சல் அக்கா, "கை"ய பார்சல்ல அனுப்பிவிடவா? ;)
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
~~
சித்ராக்கா, //பௌர்ணமி வரும் நாளை பார்க்க காலெண்டரை எடுக்கப்போறேன்.
// பாருங்க..பாருங்க! பார்த்துச் சொல்லுங்க. :)
//தோட்டத்தில கொஞ்ச நாளா ஆளக் காணோம்னு பார்த்தேன்.இங்கதான் போஸ் கொடுத்துட்டு இருக்காறா// ஹஹஹா! ஆமாம் அக்கா! அவர் இப்ப இன்டோர் மாடல் ஆகிட்டார்! :)
//முழு பருப்ப தாளிச்சு சாப்டுவீங்களா!// உப்பு பருப்பு பருப்பை குழைய வேகவைச்சும் செய்யலாம், இப்படி பருப்பு பருப்பா வேகவைத்தும் செய்யலாம். இப்படிச் செய்தால் அது ஒரு தனி ருசி சித்ராக்கா, டிரை பண்ணிப் பாருங்க!
நன்றி!
படங்கள் அனைத்தும் அழகு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமூன்றாம் பிறை மனம் மயக்கியது..பாராட்டுக்கள்..!
ReplyDeleteநீரில் மரங்களில் நிழல் பார்த்திருக்கிறேன். வானில் நிழல்!! அற்புதம்.
ReplyDeleteஜீனோவும் பொம்மையும் இருக்கிற மெத்தை சூப்பர். ;))
//மஞ்சள் அரைக்கும் வானமகள்..// அடடா அழகு :)
ReplyDeleteபடங்களும் அதற்கு உங்கள் சொற்களும் அருமை..உங்கள் செல்லப்பிராணி, சாப்பாடு எல்லாம் அருமை!
வணக்கம் சகோதரி தங்களது ரசனைக் குணத்தை தங்கள் பதிவு கண்ணாடியாய் காட்டுகிறது. அழகான இயற்கைச் சூழலை அப்படியே அழகாய் சூட் பண்ணிட்டீங்க. எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு நன்றீங்க சகோ!
ReplyDeleteஎல்லாமே அழகு.... படங்கள் கண்களை விட்டு அகலவில்லை..
ReplyDeleteமூன்றாம்பிறை முழு நிலவாவது எப்போ? ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDeleteNalla azhagaana photos mahi......evvalo rasichu Eduthu irukkeenga.....hi jeeno number toy supra irukku.
ReplyDeleteHi jeeno adhu new toy superaa irukkunu sonnenpa.
Deleteமூன்றாம் பிறை, வானத்தின் அழகியகோலங்கள் கண்கொள்ளாக்காட்சி.
ReplyDeleteஅடடா.. ஒரு குட்டியூண்டாத் தெரியுது:) 3 பிறை:).. அதுக்கு ஒரு பூதக் கண்ணாடி வேணும் பார்க்க:)).. அதுக்கு என்னா பில்டப்பூஉ:)).. சரி சரி முறைக்காதீங்க.. ரொம்ப அழகா படம் பிடிச்சிருக்கிறீங்க... 2 வது படத்தில ஜீனோ சூப்பர் அழகு... ஆனா கண்ணைப் பார்த்தால்ல் மம்மி ஏதோ வெருட்டி இருக்க வச்சமாதிரி இருக்கே:).. கலர்ஃபுல் சாப்பாடு சூப்பர்.. கொஞ்சம் தயிரும் சேருங்க இன்னும் சூப்பராகும்...
ReplyDelete@தனபாலன் சார், நன்றி!
ReplyDelete~~
@இராஜேஸ்வரி மேடம், என் மனதை மயக்கிய பிறைநிலா உங்களையும் கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி! கருத்துக்கு நன்றி! :)
~~
@இமா, //ஜீனோவும் பொம்மையும் இருக்கிற மெத்தை சூப்பர். ;))// அவ்வ்வ்வ்வ்வ்!! :)
ரசித்து கருத்து தந்தமைக்கு நன்றீங்க றீச்சர்! :)
~~
@கிரேஸ், ரசித்துப் படித்து கருத்துத் தந்திருக்கீங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க, நன்றி!
~~
@பாண்டியன், ஒவ்வொரு பதிவுக்கும் உங்கள் ஊக்கம்தரும் பின்னூட்டம் ஒரு கப் ஹார்லிக்ஸ் குடிச்ச உற்சாகத்தைத் தருகிறது. மிக்க நன்றிங்க! :)
~~
@ஆதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
@ராஜி மேடம், இந்தச் சனிக்கிழமை முழுநிலவாகிறது..ஆனால் அதைப் படமெடுக்கும் எக்ஸ்பர்ட் இந்த வாரம் கொஞ்சம் பிஸியாக இருக்கிறார்..பார்ப்போம் நிலவு இணையம் புகுந்து எல்லாரின் இதயமும் புக வருகிறதா என! :)
நன்றிங்க!
~~
@கொயினி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க! உங்க போன்லயும் ஸ்பெல்செக் தன் வேலையைக் காட்டிருச்சு போல இருக்கு! :) திரும்ப வந்து ஜீனோவுக்கு ஸ்பெஷல் விளக்கம் தந்ததுக்கும் நன்றிகள்!
~~
@அம்முலு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்முலு!
~~
@அதிராஆஆஆஆவ், எல்லாப் பக்கமும் மூன்றாம் பிறை குட்ட்ட்ட்டியூஊஊஊண்டாஆஆஆத்தான் தெரியும், அப்பத்தான் அது மூணாம் பிறை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))
//அதுக்கு ஒரு பூதக் கண்ணாடி வேணும் பார்க்க:))// இல்லையே, பூஸ் கண்ணாடி போதுமாமே! ;))))
//மம்மி ஏதோ வெருட்டி இருக்க வச்சமாதிரி இருக்கே:).. // நோ...எல்லாரையும் திசை திருப்பாதீங்க மியாவ் பெயார்! ஜீனோவுக்கு கண்ணே கொஞ்சம் பெரிசு..ஆல்மோஸ்ட் முழியாங்கண்ணு! ;) இந்தக் கோணத்தில் அது இன்னும் பெரிதாத் தெரியுது, தட்ஸ் ஆல்! மம்மி வெருட்டவெல்லாம் மாட்டா! ஷி இஸ் எ குட் மம்மி! ;):)
//கொஞ்சம் தயிரும் சேருங்க இன்னும் சூப்பராகும்...// ஒக்கே, அடுத்த முறை சேர்த்துடறேன்! ஆக்ச்சுவலி, இங்க கிடைக்கும் மோர் ரொம்ப சூப்பர் அதிரா! தயிர் எல்லாம் தள்ளி நிக்கணும்! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நன்றி, நன்றி! :)
~~