தேவையான பொருட்கள்
துருவிய சுரைக்காய்-1/2கப்
பால்-2கப்
சர்க்கரை-1/4கப்
நெய்-2டேபிள்ஸ்பூன்
முந்திரி-கொஞ்சம்
ஏலக்காய்-2
முந்திரி, பாதாம், ஏலக்காய், சர்க்கரை சேர்த்து பொடித்த பொடி-1டேபிள்ஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை
சுரைக்காயைக் கழுவி, தோல் சீவி, விதைகள் இருப்பின் அவற்றை நீக்கிவிட்டு துருவிக் கொள்ளவும். துருவிய காயை நன்றாகப் பிழிந்து, சுரைக்காயின் நீர் இல்லாமல் எடுத்து வைக்கவும்.
கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் காயவைத்து சிறு துண்டுகளாக உடைத்த முந்திரியை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
அதே கடாயில் துருவிய சுரைக்காயைச் சேர்த்து மிதமான தீயில் சுருள வதக்கவும்.
பக்கத்து அடுப்பில் 2 கப் பாலை காய்ச்சி, பொங்கியதும் தீயைக் குறைத்து பால் கொஞ்சம் வற்றும்வரை சுண்டவைக்கவும்.
வதக்கிய சுரைக்காயைச் பாலுடன் சேர்த்து கலந்துவிடவும்.
சிலநிமிடங்கள் கழித்து கால்கப் சர்க்கரையைச் சேர்க்கவும்.
சர்க்கரை கரைந்து பாயசம் சற்றே கெட்டியானதும் பாதாம்-முந்திரி-ஏலம்-சர்க்கரை பொடியைச் சேர்க்கவும்.ஏலக்காய் பொடித்து சேர்த்து, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும். வறுத்துவைத்துள்ள முந்திரியைச் சேர்க்கவும்.
க்ரீமி அண்ட் ரிச் சுரைக்காய் பாயசம் தயார்.
சூடாகவும் பரிமாறலாம், அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சில்ல்ல்ல்ல்ல்லென்றும் பருகலாம்.
சூடான பாயசத்தை விடவும் ஜில்ஜில் பாயசம் ரொம்ப அருமையாக இருந்தது. சூடாக சாப்பிடுவது ஒரு ருசி, குளிரவைத்து ருசிக்கையில் இன்னொரு ருசி. எது உங்க ஃபேவரிட் என்று செய்து சாப்பிட்டுப்பார்த்து மறக்காமச் சொல்லுங்க! :)
நன்றி!
குறிப்பு
- சம அளவு (1/4கப்) பாதாம், முந்திரி இவற்றையும் ஏலக்காயையும் வெறும் கடாயில் லேசாகச் சூடாக்கி ஆறவிடவேண்டும். ஆறியதும் கால்கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் பொடித்து வைத்துக்கொண்டால் இப்படியான பாயசங்கள் மற்றும் மில்க் ஸ்வீட்களுக்கு ஓரொரு டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம். இனிப்புப் பண்டத்தின் சுவை கூடுவதுடன், கொஞ்சம் கெட்டியாகும், க்ரீமியாகவும் இருக்கும்.
- இந்தப் பொடியைச் சேர்த்து மசாலா பால் கூட செய்யலாம். பாலைக் காய்ச்சி தேவையான அளவு பொடி, தேவைப்பட்டால் சர்க்கரையும் சேர்த்தால் மசாலா பால் ரெடி.
- இனிப்புகளுக்கு ஏலக்காயைப் பொடித்துச் சேர்த்தவுடன் சூடாக்காமல் இருந்தால் ஏலத்தின் வாசனை தூக்கலாக இருக்கும். அதனால் அடுப்பிலிருந்து இறக்கும்போது ஏலப்பொடி சேர்க்கவும்.
- lauki-dudhi என்பன ஹிந்தியில் சுரைக்காயின் பெயர்கள். bottle gourd என்பது ஆங்கிலப்பெயர். [இது கூட எங்களுக்குத் தெரியாதா என நீங்க டென்ஷன் ஆகுமுன் மீ த எஸ்கேப்பூ! ;))))]
டிப்ஸ் எல்லாம் கொடுத்து புதுசுபுதுசா செஞ்சு கலக்குறீங்க. ஹும்... சுரைக்காய் பாயசம் ஜம்முன்னு இருக்கு.
ReplyDeleteகுட்டியூண்டு பிஞ்சு சுரைக்காய் இருக்கு.செய்வதற்குதான் யோசிக்கிறேன். சிலவற்றை செய்தால் நான் மட்டுமே சாப்பிட வேண்டும்.அதனால்தான்.
இதெல்லாம் புதிது எங்களுக்கு... படத்துடன் செய்முறை விளக்கம் அருமை... செய்து பார்ப்போம்... பாராட்டுக்கள்... நன்றி...
ReplyDeleteஅட.. அருமையான குறிப்பு. ஃபிரிட்ஜ்ல் பாதி காய் இருக்கு.. இதுவரை செய்து பார்த்திராத குறிப்பை இன்றே செய்துவிடுகிறேன் மகி.. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteஆகா மகி புதிசா இருக்கு இப்பாயாசம்.நான் கேள்விப்பட வில்லை.படங்களுடன் செய்முறை விளக்கம் அருமை.சுரைக்காய் கிடைத்தால் செய்துபார்க்கிறேன்.
ReplyDeleteLooks tasty!
ReplyDeleteசுரைக்காய் கூட்டு, சுரைக்காய் ரொட்டி தெரியும்...பாயாசமா? வாவ்! செஞ்சுடலாம்!
ReplyDeleteகுறிப்புகளுக்கும் நன்றி மகி!
மகி.... :)
ReplyDeleteபடங்களே அருமையாகச் செய்முறையைக் காண்பிக்கின்றன.
மிக மிக அருமை மகி! உங்கள் முயற்சிகள் எப்பவுமே அழகான துல்லியமான ஸ்பெஷலானதாகவே இருக்கும்....
இதுகூட அட இப்படியும் செய்யலாமோன்னு வியக்கவைக்கின்றீர்கள்!..:)
செய்து பார்த்திட ஆவலைத்தூண்டும் செய்முறை & உதவிக்குறிப்புகள்!
பிரமாதம்!. வாழ்த்துக்கள் மகி..:)
I have tried halwa with lauki, this kheer should have tasted delicious..
ReplyDeleteSuraikkaayla payasamaaa......nallasirukkunu photo paarkkaveee.....thanks for the recipie and the tips mahi .
ReplyDeleteLooks very yummy and delicious. Very simple procedure too. Must try.
ReplyDeleteDo we need to squeeze out the juice after grating suraikkai or not? plz let me know mahi.
Subha, thanks for asking, I forgot to add that point in the recipe! ;) we have to squeeze out the water from the veggie!..try it n let me know! Thanks!
ReplyDeleteSuper but never heard about this recipe.
ReplyDeleteஆஹா! சுரைக்காய் பாயசம் பிரமாதம்... அசத்தறீங்க.
ReplyDeleteThank you very much mahi.
ReplyDeleteLike the simplicity of the recipe..please participate in my event and t :-)wo giveaways
ReplyDeleteசுரக்காயில் பாயாசம்.. புதுவிதமா இருக்கு, பார்க்க சூப்பராக இருக்கு. ஆனா இந்த சுரக்காயில் குளிர்க்குணம் அதிகம் என்பதால் பெரிதாக சமையலுக்கு சேர்ப்பதில்லை நாங்கள்.
ReplyDeleteசித்ராக்கா, //டிப்ஸ் எல்லாம் கொடுத்து புதுசுபுதுசா செஞ்சு கலக்குறீங்க.// நன்றி! :) இது வட இந்தியாவில் ஃபேமஸான ரெசிப்பி, நமக்குத்தான் புதுசா இருக்கு. செய்து பாருங்க, சூப்பரா இருக்கும்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி அக்கா!
~~
தனபாலன் சார், செய்து சாப்பிட்டுப் பாருங்க, எல்லாருக்கும் பிடிச்சுப் போயிரும்! :) நன்றி!
~~
ராதாராணி, பாயசம் செய்து பார்த்துட்டீங்களா? எப்படி இருந்துது? உங்களுக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்! :) நன்றிங்க!
~~
அம்முலு, கட்டாயம் செய்து பாருங்க. ஈஸியான சுவையான பாயசம்.
நன்றி அம்முலு!
~~
கே.பி.ஜனா, நன்றிங்க!
~~
க்ரேஸ், சுரைக்காய் ரொட்டியா? புதுசா இருக்குங்க! எப்படின்னு சொன்னா நாங்களும் செஞ்சு பார்ப்போம்.
சுரைக்காயில் வட இந்திய ரெசிப்பிகள் ஏராளமா இருக்கு. இப்பத்தான் ஒவ்வொன்றா எக்ஸ்ப்ளோர் பண்ணறேன் நானு! அதான் இங்கேயும் பகிர்கிறேன்.
நன்றிங்க!
~~
இளமதி கருத்தைப் பார்த்தாலே ஒரு சந்தோஷமும் உற்சாகமும் தொற்றி கொள்கிறது! :) இப்படி மற்றவர்களைப் பாராட்டவும் ஒரு குணம் வேண்டும் தோழி, அன்பான கருத்துக்கு மிக்க நன்றி! :) பாயசம் செய்து பாருங்க.
~~
ஹேமா, பால் கொஞ்சம் குறைவாக விட்டு, மில்க்பவுடர் அல்லது கோயா சேர்த்து கிண்டினா ஹல்வா..இப்படி செய்தா பாயசம், தட்ஸ் ஆல்! ;) அடுத்த முறை செய்து பாருங்க. நன்றி!
~~
கொயினி, கருத்துக்கு மிக்க நன்றி! வாய்ப்புக் கிடைத்தாச் செய்து பாருங்க.
~~
வானதி, இப்ப கேள்விப்பட்டுட்டீங்கள்ல? செய்தும் பார்த்திடணும், சரியா? :) நன்றி வானதி!
~~
ஆதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
~~
ஸ்வேதா, விரைவில் உங்க ப்ளாக் வந்து பார்க்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
~~
அதிராவ், சுரைக்காயில் குளிர்தன்மை அதிகம் இருப்பதால் உடலுக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லதாக்கும். உடல் இளைக்க விரும்புவோர்( இது பூஸுக்குச் சொல்லல, பொதுவாச் சொல்லறேன்! ஹிஹிஹ்ஹ்ஹி!...நீங்கதான் நூலிடை கொண்டவராச்சே! ;)) இப்படியான காய்கள் நிறையச் சாப்பிடலாம்! :))))))
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்!
~~
Yummy Payasam.
ReplyDelete