அக்டோபரில் தொட்டித்தோட்ட மலர்கள், மஞ்சள் நிற இளவெயிலில் ஒயிலாக கேமராவுக்கு போஸ் கொடுத்த ஆரஞ்சு ரோசா..
~~
வானமகள் தெளித்த பன்னீரில் தலைகுளித்து, மழைத்துளிகளையே ஆபரணமாகப் பூண்டு புன்னகை புரியும் என் வீட்டு ரோஜாமகள்! ...
மொட்டில் ஒரு நிறம்..மொட்டு மலர மலர நிறங்கள் கண்ணாமூச்சி ஆடுகின்றன இந்த ரோஜாச்செடியில்..
ஒரு மாலை நேர மதிமயக்கும் வெயிலில் என் மதியை மயக்கிய ரோஜாக்கள்..
பொதுவாகப் பூக்களைப் பறிக்காமல் ரசிப்பதே என் வழக்கம். :) ஆனால் அம்மா சொல்வாங்க, "ஒரு பெண், பூ பூத்திருக்கும் செடியைக் கடந்து செல்கையில், செடியில் மலர்ந்திருக்கும் ஒரு பூவையாவது பறித்து தலையில் சூடாமல் சென்றால், செடி வருத்தப்படுமாம்! இத்தனை பூக்கள் பூத்திருக்கிறேன், ஒரு பூவையாவது பறித்துச் சூடாமல் செல்கிறாளே இந்தப் பெண் என்று!" :)))) அந்த நினைவு வந்த ஒரு நாளில் ரோஜாக்கள் எல்லாம் செடியை விட்டு விடுதலை பெற்றன.
~~
கொலாஜில் இருப்பது "பூவாகிப் பிஞ்சாகிக் காயான ஒரே கத்தரிக்காய்" என்று நீங்கள் நினைத்தால்..... :)))) ஹிஹ்ஹிஹிஹ்ஹி....இல்லீங்கோ!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனி காய்கள். இப்போதைக்கு ஒரு கத்தரிதான் முற்றி பறிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. "பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது" என்ற பழமொழி நினைவு வரவே நாளைக்கு பறிக்கலாம்(இங்கே இப்போது செவ்வாய் மாலைதான்! :)) என இருக்கிறேன். பறித்த பிறகு என்ன சமைத்தேன் என அப்டேட் செய்கிறேன்.
~~
கத்தரிக் கதையைப் படித்து உஷாராகி, மகி வீட்டில இவ்ளோஓஓஓஓஓஓஓ குடைமிளகாய்கள் காச்சிருச்சு-அப்படின்னு நீங்க நினைச்சா.......:)))) ஹிஹ்ஹிஹிஹ்ஹி....இல்லீங்கோ!! இது ஒரே குடைமிளகாய்தான்! அப்பப்ப எடுத்த பல படங்கள், காய் ஒன்றே ஒன்றுதான். முதலில் லேசாக முகம் சிவந்து, பிறகு மெல்ல மெல்ல உடலெல்லாம் சிவப்பு பரவப் பழுத்து புதன் அறுவடைக்குத் தயாராய்..
மிளகாய்ப் பழத்துக்குப் பதிலாக இலைகள் ஃபோகஸ் ஆகிட்டுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! ;)
~~
சீஸன் முடியும் தருவாய் என எண்ணும்படியாக மணத்தக்காளிச் செடி நோஞ்சானாகி, பூச்சித்தாக்குதலில் நோயுற்று நிற்கிறது. இதுவரை பலமுறை மணத்தக்காளிக்காய்களைப் பறித்தாயிற்று. அவற்றில் ஒருபகுதி...
~~
99 காசு கடைக்கு ஒரு விசிட் அடித்தபொழுது கிடைத்த மிளகாய், பேஸில், தக்காளி (விட மாட்டம்ல..தக்காளியா, மகியா? ஒரு கை பாத்துருவோம்னு ஒரு செடியை வாங்கிட்டேன்! ;)) செடிகள்.
பெரிய தொட்டிகளில் மாற்றியும் வைத்தாயிற்று.
குளிர் அவ்வப்போது தீவிரமாகவும், அவ்வப்போது மிதமாகவும் அடித்துக்கொண்டிருக்கிற காரணத்தால் செடிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
செம்பருத்திப் பெண்ணின் சிரிப்பு... :)
நன்றி!
வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல... :)
ReplyDeleteபூக்கள் அழகா இருக்கு, மழையில் நனைந்த பிறகு அது இன்னும் கூடிவிட்டது. ஹும்..இங்கு மழையே இல்லை.
ReplyDeleteதக்காளி செடி வேணும்னா சமையலில் சேர்க்கும் தக்காளியின் விதை பகுதியை அப்படியே தொட்டி மண்ணில் போட்டு விடுங்க. போதும்போதும்னு சொன்னாலும் குட்டிகுட்டி செடிகள் வந்துட்டே இருக்கும். மிளகாயும் அப்படியே. காய்ந்தமிளகாய் விதைகளைத் தூவினாலே செடிகள் வந்துவிடும். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆன பிறகு ஸ்ப்ரிங்கில் ட்ரை பண்ணி பாருங்க.
நானும் இன்னும் கொஞ்ச நாளில் மணத்தக்காளி புளிக்குழம்பு வப்பேன்னு நினைக்கிறேன்.அதுவரை பூச்சி வராம இருக்கணும்.
நானும்... //வாவ் வாவ் வாவ்... வேறு என்ன சொல்ல...// சூப்பர் போஸ்ட் மகி.
ReplyDelete//செடியில் மலர்ந்திருக்கும் ஒரு பூவையாவது பறித்து தலையில் சூடாமல் சென்றால், செடி வருத்தப்படுமாம்! இத்தனை பூக்கள் பூத்திருக்கிறேன், ஒரு பூவையாவது பறித்துச் சூடாமல் செல்கிறாளே இந்தப் பெண் என்று!" :)))) // ஆஹா! இப்படி நானும் நினைப்பேனே! ;) ஊரில் இருக்கும் வரை ஒற்றை ரோஜா, ஒரு மல்லிகை. சிலசமயம் கையளவு மல்லிகை கோர்த்து சூடிக்கொள்வேன். இங்கும் தினமும் காலை ஒரு மலர் பிடுங்குவேன்... அது வேறு ஒருவருக்காக. செடியில் மலர் இல்லாத நாட்கள் இருந்ததேயில்லை.
அழகோ அழகு!
ReplyDeleteso refreshing to eyes! lovely roses. remembering the good old days when we harvested huge amount of manithakkali. The vathal made at home using it tasted divine! miss them a lot (shop bought ones don't have that taste). appidiye enakkum oru thattula dosai, kuzhambu kudunga.... onga thottatha suthi parthadula ore pasi!
ReplyDeleteரோஜா !! ரோஜா லாலலாலா ரோஜாலாலா ரோஜா :)
ReplyDeleteகர்ர்ர்ர் டோன்ட் LAUGH மியாஆவ் :))
ரோஜா மகளே ராஜ குமாரி :)) நான் சொன்னது மகியை ..அடடா எவ்ளோ அழகு மலர்கள் ..மகியின் ரசனை ப்ளஸ் அன்பு அப்படியே அழகிய மலர்களாக மலர்ந்திருக்கு
அடுத்தது பெரிய கர்ர்ர்ர் FOR மஹி :))உங்கூர்ல சூரியன் ஜொலிக்கறார் எங்களுக்கு வெயில் கண்ணில் பட்டு நாளாகுது ...இருட்டு ..குளிர்ர்ர்ரர் ..
மீண்டும் மணத்தக்காளியா :)) நோட் திஸ் அதிறாவ் :)
கம்பு தோசை ஊறவச்சு செஞ்சிங்களா மகி இல்லை மாவு கரைத்தா
wow............beautiful roses & kitchen garden mahi. thanks for sharing your lovely roses......
ReplyDeleteஆ... ரோஜா இப்போ பூத்ததா. நீங்க கொடுத்து வைச்சங்க .அழகா இருக்கு.அதற்கு உங்க கவித்துவமானவரிகள் சூப்பர்.
ReplyDeleteநான் எல்லாருக்கும் சேவ்டியா சுத்திக்கட்டியாச்சு.
//அடுத்தது பெரிய கர்ர்ர்ர் FOR மஹி :))உங்கூர்ல சூரியன் ஜொலிக்கறார் எங்களுக்கு வெயில் கண்ணில் பட்டு நாளாகுது ...இருட்டு ..குளிர்ர்ர்ரர் ..// நானும் ரிப்பீட்டு.
முதல் ஸ்னோ வேறு நேற்று கொட்டியது கொஞ்சமா.
மிகவும் அருமை ரோஜாக் கூட்டம் மகி. தோட்டத்தின் மேல் பயங்கர காதல் போல் தெரிகிறது.
ReplyDeleteSuper roses and yummy vegetables.
ReplyDeleteSuper mahi. You are well organised and love the way u narrate.
ReplyDeleteஆவ்வ்வ்வ் கண்ணுபடப் போகுதம்மா!!1.. ஆனாலும் பூக்களைப் பறிக்கக்கூடாது சொல்லிட்டேன்ன்ன்:)
ReplyDeletewow...all super..
ReplyDeleteenakku roja kootam vida..singlea erukkum semparuthi poothaan..
pidichu erukku...
sweet photos mahima..
thank you for sharing..
கருத்துக்கள் தந்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள்! :)
ReplyDelete