Sunday, November 10, 2013

குடைமிளகாய் குழம்பு/(Red) Capicum Gravy

எங்க வீட்டுச் செடியில் காய்த்த குடைமிளகாயைப் பழமாக்கிப் பறித்து...
கடையில் வாங்கிய பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் குடைமிளகாய்களுடன் சேர்த்து..
கலர்ஃபுல்லாக ஒரு குழம்பு வைத்து இந்த வாரஇறுதியில் ருசித்தாயிற்று. ருசித்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. :) 
தேவையான பொருட்கள்
நறுக்கிய குடைமிளகாய்-11/2கப்
நறுக்கிய வெங்காயம்-1/4கப்
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப் 
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி-கொஞ்சம்
எண்ணெய்
உப்பு 
வதக்கி அரைக்க
எண்ணெய்-1டீஸ்பூன்
வெந்தயம்-5
உளுந்துப் பருப்பு-1டீஸ்பூன்
கொத்தமல்லி (தனியா)-1 டேபிள்ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை-1டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு-1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)

செய்முறை
குடைமிளகாய்களை கழுவி, விதைகளில்லாமல் பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து வதக்கி அரைக்க வேண்டிய பொருட்களை கருகாமல் வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய்த்துண்டுகளைச் சேர்க்கவும்.
அடுப்பில் தீயை அதிகரித்து, குடைமிளகாய் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.(தண்ணீர் சேர்ப்பது உங்கள் விருப்பம்,    திக்கான க்ரேவியாக வேண்டுமென்றால் கொஞ்சமாகத் தண்ணீர் விடலாம், நான் கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் சேர்த்து செய்திருக்கிறேன்.)
குழம்பு நன்றாக கொதித்து மசாலாவின் வாசம் அடங்கியதும் தீயை ஸிம்-மில் வைத்து கொதிக்கவிடவும்.
குழம்பு விரும்பிய பக்குவத்திற்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும்,  நறுக்கிய கொத்துமல்லித் தழை, சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் குடமிளகாய் குழம்பு தயார்.  குழம்பு செய்து ஒரு மணி நேரம், 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் புளிப்புச் சுவை நன்றாகச் சேர்ந்து சூப்பராக இருக்கும். :)
இந்தக் குழம்பு ஆறியதும்  கொஞ்சம் கெட்டியாகும் வாய்ப்பு உண்டு, எனவே தண்ணீர் அளவை பார்த்து வைத்துக்கொள்ளவும்.
இந்த கலர்ஃபுல் குடைமிளகாய் குழம்பு புலாவ், பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தக் குழம்புடன் எங்க வீட்டில் ஜோடி சேர்ந்தது மைல்ட் வெஜிடபிள் புலாவ். :) 

14 comments:

 1. அரைச்சு வச்ச குழம்பு சூப்பரா இருக்கு மகி, அதென்னமோ கேப்ஸிகம் போட்டாலே இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மார்க்கெட்டில் விதவிதமான, கலர்கலரான மிளகாய்களைப் பார்த்துவிட்டு வருவதோடு சரி. ம்ம்...நல்லா சாப்பிடுங்க !

  ReplyDelete
 2. ஆவ்வ்வ்வ் வீட்டுக் குடை மிளகாயில் குழம்போ.. சூப்பர். நான் குடை மிளகாய்க் கறிக்கு தேசிக்காய்ப் புளி மட்டுமே சேர்ப்போம்ம்.. பழப்புளி சேர்ப்பதில்லை.

  ReplyDelete
 3. வறுத்து அரைக்கப் பாவித்திருக்கும் இன்கிறீடியன்ஸ் சூப்பர்ர்.... கறி நிட்சயம் சூப்பர் ரேஸ்ட்டாக இருக்கும்.

  ReplyDelete
 4. செய்து பார்த்து விட வேண்டியது தான்.

  ReplyDelete
 5. வாவ் மகி என்ன சூப்பரா இருக்கு.கலர்புல்லா இருக்கு உங்க குழம்பு.வீட்டில் காய்த்த குடைமிளகாய் பார்க்க அழகா இருக்கு.
  இங்கு இந்தமிளகாயை கண்டால் சும்மாவே ( மிளகும்,உப்பும் தூவி)சாப்பிட்டுவிடுவார்கள். வெஜிபுலாவ் வித் குழம்பு சூப்பர்.

  ReplyDelete
 6. மனதையும் கண்ணையும் கவ்விக்கிட்டுது குழம்பு..:)
  அதுவும் அரைச்சு வைச்ச குழம்பு ... ம்.. வாசனைக்கு சொல்லவே வேணாம்.
  ருசியும் பிரம்மாதமா இருக்கும். சூப்பர்..:)

  ReplyDelete
 7. Very flavorful and colorful kuzhambu..

  ReplyDelete
 8. அரைத்து வைத்த குழம்பு எங்கள் மனதிலும் அப்பிக் கொண்டது சிறப்பு. சுவை மட்டும் குறையவா போகுது! ருசி அருமையாக தான் இருக்கும். பகிர்வுக்கு நன்றி சகோதரி..

  ReplyDelete
 9. மசக்கைகாரர்கள்கூட மிகவும் விரும்புவார்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கூட ஒரு பிடி சாதம் உள்ளே போகும்.
  அன்புடன்

  ReplyDelete
 10. try using coconut milk and yoghurt with ground nut powder to make capsi curry next time.

  ReplyDelete
 11. குடை மிளகாய் கண்ணை பறிக்கிறது..குழம்பு மண மணக்கிறது..

  ReplyDelete
 12. அன்பின் மகி - குடமிளகாய்க் குழம்பு - பதிவு அருமை - செய்முறை விளக்கம் நன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails