Thursday, May 8, 2014

சின்ன உருளைகிழங்கு வறுவல்/Baby Potato Roast

தேவையான பொருட்கள்
குட்டி உருளை கிழங்கு - 14
வரமிளகாய்-5 அல்லது 6
கொத்துமல்லி விதை/தனியா -1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன் 
கடுகு-1/4டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/8டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
உப்பு 
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரிக்கவும். கிழங்கில் முட்கரண்டியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும்.
 வெறும் கடாயில் கொத்துமல்லி,சீரகம், வரமிளகாயை வாசனை வரும்வரை வறுத்து ஆறவைக்கவும். ஆறியதும் பொடித்துக்கொள்ளவும்.
 வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி கடுகு தாளித்து, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வெந்த உருளைக்கிழங்குகளை சேர்க்கவும்.
 மிதமான தீயில் கிழங்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பிறகு பொடித்து வைத்த பொடியைச் சேர்க்கவும்.
 பொடி எல்லாக் கிழங்கிலும் படுமாறு பிரட்டிவிட்டு சில நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
 ஈஸியான டேஸ்ட்டி உருளை வறுவல் ரெடி. எல்லா வகையான சாதங்களுடனும் பக்க உணவாகச் சாப்பிடலாம்.
 படத்தில் இருப்பது அரிசிம்பருப்பு சோறு & குட்டி உருளை வறுவல்
குறிப்பு
தனியா-சீரகம்-மிளகாயை மிக்ஸியில் நைஸாகப் பொடித்தும் சேர்க்கலாம், நான் கையுரலில் ஒன்றிரண்டாக அரைத்துச் சேர்த்தேன்.[காரணம் எங்க வீட்டுப் பெண்ணரசி! ;) ]. 5 மிளகாய் சேர்த்திருந்தாலும் காரமில்லாத மிளகாய்கள் என்பதால் வறுவல் மைல்ட்-ஆகவே இருந்தது. கொஞ்சம் காரம் "சுருக்"-குன்னு இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் என நினைக்கிறேன்! ;) நீங்க பார்த்துப் போட்டுக்குங்கோ! நன்றி! 

10 comments:

  1. வித்தியாசமான வறுவலா இருக்கே. சாதத்துடன் உ.கிழங்கு பார்க்கவே சூப்பரா இருக்கு மகி.

    இப்போதைக்கு பொடியைத்தான் நைஸா பொடிக்க முடியல. இன்னும் கொஞ்ச நாளில் இளவரசி நடக்க ஆரம்பிச்சாங்கன்னா இப்படி சமைச்சு, ஃபோட்டோ எடுத்து ...... ஹ்ம் !

    ReplyDelete
  2. அட...! அருமையாய் இருக்கே... இன்றே செய்து பார்த்து விடுகிறோம்... நன்றி...

    ReplyDelete
  3. இந்த உருளைக்கிழங்கு வாங்கனும் என நினைப்பேன். வாங்கியதில்லை. நீங்க குறிப்பு தந்திட்டீங்கல்ல. வாங்கி செய்திடவேண்டியதுதான். நன்றி மகி.

    ReplyDelete
  4. ஹை !!! வறுவல் நல்லா இருக்கு நானும் செய்யறேன் ..

    பெண்ணரசி !:) ஹா ஹா ..எங்க வீட்டில் தும்மல் போடக்கூட அனுமதிக்கவில்லை எங்க வீட்டு பெண்ணரசி தூங்கும்போது .

    @chitra //. இன்னும் கொஞ்ச நாளில் இளவரசி நடக்க ஆரம்பிச்சாங்கன்னா //
    haa :)
    ஒவ்வொரு உருளைகிழங்கா மகி தேடி எடுத்து வரணும் சோபா டேபிள் எல்லா இடத்தில இருந்தும்


    ReplyDelete
  5. ப்ராசெசருக்கு ஒரு சைலன்சர் பூட்டுங்க. ;)
    14 கிழங்கா! யாராவது விருந்துக்கு வந்தாங்களா!

    ReplyDelete
  6. பேபி பொட்டடோ அருமையா இருக்கு.. பருப்பு சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.. செய்யணும் மகி, இங்க கடைகளில் கிடைக்கறது. பகிர்வுக்கு நன்றி...:)

    ReplyDelete
  7. Looks yummy. I don't potatoes that much. But will try this recipe very soon.

    ReplyDelete
  8. மகி,

    எங்க வீட்டு பூண்டு செடியில பூண்டு வந்தாச்சூ, நேரமிருக்கும்போது வந்து பாருங்கோ !

    ReplyDelete
  9. ஆஆஅ மகி நலமா? குட்டி மகியும் நலமோ?.. எனக்கு இந்த பேபி ரொம்ப பிடிக்கும் ஐ மின் பேபி பொட்டாட்டோ... நான் இதனை அவித்து உரித்து தண்ணிபோல குழம்பு வைப்பேன். உங்கட முறை இன்னும் சூப்பர். இனி முயல்கிறேன்.

    ReplyDelete
  10. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    @சித்ராக்கா & ஏஞ்சலக்கா, உங்க எதிர்பார்ப்புகள் நிறைவேறும் சமயம் மறக்காம சொல்லறேன், அப்ப இன்னுங் கொஞ்சம் சந்தோஷப்படுங்க! ;) :)

    @இமா, இது எங்க 2 பேருக்கு மட்டும்தான் செய்தது. இத்துனூண்டு இருக்கு, இத எப்படி விருந்தாளிகளுக்குத் தரது? ஹிஹி..

    @அதிரா, நாங்க நலம், நீங்க நலமோ? :)
    பேபி பொட்டட்டோவில் தண்ணிக்குழம்பு...கேக்கவே வாயூறுது! அம்மாவும் குழம்பு வைப்பாங்க..அடுத்த முறை வாங்கி தண்ணி குழம்புதான். உங்க ரெசிப்பி சொன்னா டிரை பண்ணலாம்! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails