Tuesday, February 16, 2010

அரிசி-பருப்பு சாதம்


தேவையான பொருட்கள்
அரிசி - 1டம்ளர்
துவரம் பருப்பு - கால் டம்ளர்
வெங்காயம் - 1(மீடியம் சைஸ்)
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 3 பல்
தேங்காய்த் துருவல் - 3ஸ்பூன்
கடுகு - 1ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை

குக்கரில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.



வெங்காயம் தக்காளி வதங்கியதும் அரிசி-பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.


தேவையான
தண்ணீர் சேர்த்து, மல்லி இலை தூவி குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.



பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு பரிமாறவும்.



குறிப்பு

இது ரொம்ப பேசிக் மெத்தட்..இதில்
  • கடுகு தாளிக்கும்போது சிறிது சீரகமும் சேர்த்து தாளிக்கலாம்.
  • காய்ந்த மிளகாயைத் தவிர்த்து தனி மிளகாய்த்தூள் சேர்த்தால் ஒரு சுவை.
  • மிளகாய்த்தூளுக்கு பதிலாக சாம்பார்த்தூள் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்தால் ஒருசுவை.
  • தேங்காயைப் பல்லுப் பல்லாகப் போட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.தேங்காய் போடாமலும் செய்யலாம்.
  • கத்தரிக்காய்- உருளைகிழங்கு பொரியல் இதற்கு பெஸ்ட் காம்பினேஷன்..வேறு எந்தப்பொரியலும் செய்து கொள்ளலாம். அல்லது வெறும் ஊறுகாய் போதும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
  • சாதம் பழசானால் இன்னும் சுவையாக இருக்கும்.

11 comments:

  1. இப்படி சூப்பராக ஒரு கிச்சன் இருப்பது எனக்கு தெரியாம போச்சே.மகி நீங்க எங்கே, நான் எங்கே!சாலமன் பாப்பையா ஸ்டைலில் அருமை,அருமை.

    ReplyDelete
  2. அடேங்கப்பா.. அரிசிம்பருப்பு சாதத்துக்கு இப்படியொரு பில்டப்பா? :)) சண்டே தான் பண்ணியிருந்தோம் மஹி.. நீங்க சொன்ன மாடிஃபிகேஷன் எல்லாம் கடைபிடிச்சு.. :)))

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா,தாஜ், சாரு & சந்தனா!

    //மகி நீங்க எங்கே, நான் எங்கே!// நீங்க உங்க ஊர்ல..நான் வடஅமெரிக்காவில!ஆசியாக்கா, இந்த கிண்டல்தானே வேணாங்கிறது? உங்க எக்ஸ்பீரியன்ஸ் என்ன..என் எக்ஸ்பீரியன்ஸ் என்ன?? :)

    //அரிசிம்பருப்பு சாதத்துக்கு இப்படியொரு பில்டப்பா? :)) //நம்மூர்க்காரங்களுக்கு அப்பிடித்தான் தோணுமம்மிணி! ஆனா மற்ற மாவட்டத்துக்கராங்களுக்கு இன்னும் இது ஒரு நியூ ரெசிப்பிதான்! ;)

    ReplyDelete
  4. அதானே, நமக்கெல்லாம் இது நியூ ரெசிபிதான். பார்க்கப் பார்க்க டெம்ப்டேஷனாக இருக்கு மகி. இருந்தாலும் இப்போ முடியாது.

    ReplyDelete
  5. முடிந்தப்போ செய்து பாருங்க இமா..குயிக் அண்ட் ஈசி ரெசிப்பி இது..கருத்துக்கு நன்றி!

    ReplyDelete
  6. அரிசி பருப்பு சாதம் உருளைக்கிழங்கு பொரியலோட சூப்பர் ஆக இருந்தது . செய்வதற்கும் எளிமையாக இருந்தது
    நன்றி

    ReplyDelete
  7. செய்து பார்த்து,மறக்காமல் கருத்தும் தந்ததுக்கு நன்றிங்க எல்எஸ்!

    ReplyDelete
  8. Mahi today I tried your style arisi paruppu rice. Yummy. Thanks

    ReplyDelete
  9. பீட்ரூட்டுகுப் பதிலாக உருளைக்கிழங்கு மட்டும் இருந்திருந்தால் அவ்வளவுதான். சாதத்தைப் பார்க்கவே சாப்பிடத் தூண்டுகிறது. இது உங்க ஊர் ஸ்பெஷலா !

    'தேங்காய்த்துருவல் சேர்க்கவும்' _________ ஹ்ம் ... தேங்காய் துண்டுகளாகத்தானே தெரிகிறது. ஓ.. இதற்கான பதில் குறிப்பில் இருக்கு.

    "சாதம் பழசானால் இன்னும் சுவையாக இருக்கும்" _______ சில சாப்பாடு எல்லாம் இப்படி சாப்பிட்டால்தான் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails