Friday, October 17, 2014

மலர்களே..மலர்களே!

 ஆரஞ்சு நிறத்தில் பூத்திருக்கும் இந்த
அழகுப்பூக்களை "இட்லிப் பூ" எனச் சொல்வோம் எங்களூரில்! :)
 இது அரளிப்பூ..பட்டிப்பூ என்று பண்ருட்டிப் பக்கம் சொல்வதாக அறிந்தேன்! :)
மல்லி, முல்லை, ஜாதிமுல்லை...
இவையெல்லாமே என் அம்மா வீட்டிலிருந்து..
மல்லியும் ஜாதிமல்லியும் ஏற்கனவே வைத்திருந்தார்கள்..முல்லைக்கொடி மட்டும் இல்லாதிருந்தது. இந்த முறை வாங்கி வைத்துவிட்டு வந்திருக்கிறோம், அடுத்த முறை ஊருக்குப் போகையில் முல்லைச்சரம் தொடுத்துவிடலாம்! 
 பூச்சரத்தைக் கையில் கட்டுவது வழக்கமாய்ச் செய்வது..மாற்றாக, நீளமான காம்புள்ள பூக்களை காலிலும் கட்டலாம். கையால் தொடுப்பதை விடச் சுலபமானது இம்முறை..வண்ணமயமான எம்ப்ராய்டரி நூல்களிலோ, பட்டு நூல்களிலோ கட்டும்போது பூச்சரத்தின் அழகு கூடும். இந்த முறை கொஞ்சம் நேரப்பற்றாக்குறை இருந்ததால் சும்மா 2 படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலேயுள்ள படம் பூச்சரத்தின் முன்பகுதி..அடுத்துள்ள படம் சரத்தின் மறுபக்கம்.
 இங்கே வீட்டில் ஜாதிமல்லி பூக்கையில் வீடியோ எடுத்து இணைக்க முயல்கிறேன். இப்போதைக்கு இப்படங்கள் மட்டுமே!

வீட்டில் தோட்டம் போடுகையிலேயே பவளமல்லி வைக்கவேண்டும் எனச் சொல்லி, அவர்களும் வைத்து பவளமல்லி சிறு மரமாக வளர்ந்திருக்கிறது. பூக்களும் நிறையப் பூக்கின்றன.
கிண்ணம் நிறையப் பூவைப் பறித்து..
ஒரு பூக்குட்டியின் கையில் கொடுத்தால் என்னாகும்??...
இதுதான் ஆகும்! :) ;) 
லயாவிற்கு பவளமல்லிப் பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பதும், நசுக்கிப் பார்ப்பதும், பிய்த்து எறிவதும் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது!
~~~
கோவையின் வண்ண மலர்களை ரசித்தமைக்கு நன்றிகள்! முதலிரு படங்களும் திருப்பூர்ப் பூக்கள், படமெடுத்ததும் நானில்லை..லயாவின் அப்பா! :) மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம், நன்றி!

9 comments:

  1. வணக்கம்
    கண்னைக்கவரும் படங்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. Jathi malli is my favorite, how old is Laya now, oru vayasu akiducha..

    ReplyDelete
  3. மலர்களே மலர்களே !! //எங்களையா கூப்பிட்டீங்க மகி:))

    ஒரு பூ சில பூக்களை வைத்து கோலம் போட்டிருக்கு :)

    ReplyDelete
  4. மொட்டு(குட்டிப் பூ) ஒன்று பூவை நசுக்குகிறதே, அடடா, !!!!!!!!!!!!

    ReplyDelete
  5. எங்க ஊரிலும் இதை இட்லிப்பூ என்றுதான் சொல்லுவோம். பல நிறங்களிலும் கொத்தாகப் பூக்கும்.

    ஜாதிமல்லி சரத்தைப் பார்த்ததும் "இந்த முறை இந்தச்செடி கடையில் வரும்போது கண்டிப்பாக வாங்கிவிட வேண்டும்" என்று தீர்மானமே போட்டாச்சு.

    ReplyDelete
  6. கண்ணை கவரும் படங்கள்....

    தொடுத்த முல்லை சரம் super.... ..

    ReplyDelete
  7. கருத்துக்கள் தந்த அனைவருக்கும் இனிய நன்றிகள்!

    @ஹேமா, இன்னும் 25 நாட்களில் ஒரு வயது ஆகிடும்ங்க லயாவுக்கு! :)

    @ஏஞ்சலக்கா, ஆமாம்..உங்கள எல்லாரையும்தான் கூப்ட்டேன். :) கவிதையெல்லாம் சூப்பரா சொல்றீங்க..நன்றிங்கோ! ;)

    @வித்யா, உங்களை நினைவிருக்குங்க..நேரப்பற்றாக்குறையால் முன் போல நிறைய இடங்களுக்கு வர முடிவதில்லை. கண்டிப்பாய் உங்க ப்ளாகையும் பார்க்க வருகிறேன்.

    @சித்ராக்கா, உங்க கவிதையும் சூப்பரு...டாங்க்ஸ்! :) எங்கூட்டுல இருக்க ஜாதிமல்லிச் செடியவே அனுப்பிவிடட்டா உங்களுக்கு?! ;)

    ReplyDelete
  8. //பட்டிப்பூ // http://en.wikipedia.org/wiki/Catharanthus_roseus

    கொலுசு அணிந்த குட்டிக்கால் க்யூட். :-) இடுகை... வாசம் வீசுது.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails