Thursday, June 4, 2015

மாங்காய் தொக்கு / Mango Thokku

தேவையான பொருட்கள்
மாங்காய்-1
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்
வெந்தயம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
வெல்லம் - சிறிது
உப்பு
நல்லெண்ணெய்-1/4கப் 

செய்முறை
மாங்காயைக் கழுவித் துடைத்து தோல் சீவிக்கொள்ளவும்.
காய் துருவியில் மாங்காயைத் துருவவும்..
வெந்தயத்தை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து,
ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து, கடுகு பெருங்காயம் தாளித்து துருவிய மாங்காயைச் சேர்த்து வதக்கவும்.
மாங்காய் வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
தீயைக் குறைத்து வைத்து தொக்கில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். வெல்லத்தூளும், வெந்தயப்பொடியும் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
சுவையான மாங்காய்த் தொக்கு சுவைக்கத் தயார்.
சுத்தமான கண்ணாடிப் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் நாள்படவும் இருக்கும்.

இந்தத் தொக்கு கோவை டு டெல்லி டு ஶ்ரீரங்கம் - ஆதி வெங்கட்-டின் வலைப்பூவைப்பார்த்துச் செய்தது. இங்கே உபயோகித்த மாங்காயை மாங்காய் என்பதை விடவும் கெட்டியாக இருக்கும் மாம்பழம் என்றே சொல்லலாம், அப்படி இனிப்புச் சுவையுடன் இருந்தது. ஆனாலும் ருசி அபாரம். சுவையான குறிப்புக்கு நன்றி ஆதி!


8 comments:

  1. வணக்கம்
    பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறுகிறது.. நிச்சயம் செய்து பார்க்கிறோம் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ரூபன்!

      Delete
  2. //நிச்சயம் செய்து பார்க்கிறோம்// ரூபன் சமைச்சுட்டு திரும்ப வந்து சொல்லுவார் மகி. :-)

    ReplyDelete
  3. Roasted Venthayam tasted so bitter when I ground it. And the food tasted bad too. Did I make any mistake in picking venthayam

    ReplyDelete
    Replies
    1. You might have over roasted the venthayam or the quantity of the venthayam might have been more anony! Venthayapodi always enhances the taste of the thokku and all pickles. Hope this helps! :)

      Delete
  4. மகி,

    மாங்காயாகக் கிடைத்தால் சந்தோஷம்தான். செய்து பார்த்திடலாம்.

    ReplyDelete
  5. தொக்கு சூப்பர்..

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails