தேவையான பொருட்கள்
பூண்டு - 7 முதல்10 பற்கள் (அ) ஒரு முழுப்பூண்டு
இஞ்சி - கட்டை விரல் அளவு
[யாரோட கட்டை விரல், யாரோட பற்கள் இப்படியான கோக்கு மாக்கான கேள்விகளைத் தவிர்க்கும் பொருட்டு படம் இணைக்கப்பட்டுளது மக்காஸ்!! படம் பார்த்துப் பொருளறிக! ;):) ]
புளி - சிறு துண்டு
வரமிளகாய் -1
உப்பு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். பூண்டை தோலுரித்துக்கொள்ளவும்.
இஞ்சி பூண்டை மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் காயவைத்து இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பொன்னிறமாக வதங்கியதும் புளி, வரமிளகாயைச் சேர்த்து மிளகாய் கருகாமல் வறுத்து ஆறவைக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்தெடுக்கவும். வதக்கும்போது இருக்கும் எண்ணெயையும் சேர்த்து அரைக்கவும்.
ஒரு டீஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இட்லி - தோசை- சப்பாத்திக்கு பொருத்தமான சட்னி ரெடி.
ஈஸ்டருக்கு வீட்டுக்கு வந்த டைனோஸர்கள் டைனிங் டேபிளில் இளைப்பாறிக்கொண்டிருந்தன. இட்லி-சட்னியைப் பார்த்ததும் பறந்தோடி வந்து ருசி பார்க்க காத்திருக்கும் டைனோஸர்கள்! :) :)
டைனோசர்களுக்கு ஆன கதியை நினைச்சா... நம்பி செய்து பார்க்கப் பயமா இருக்கே! ;))
ReplyDeleteகட்டாயம் ட்ரை பண்ணுவேன். பூண்டு பொரிச்சா வரும் வாசனை பிடிக்கும். முதல்ல பரோட்டா, பிறகுதான் இது.
:) ஓகே...தேங்க் யூ!! செய்து பார்த்து சொல்லுங்க.
Deleteஆஹா சூப்பர்...நான் இப்பவே ட்ரை பண்ண போறேன் அக்கா...
ReplyDelete:) தேங்க் யூ!!
Deleteரெம்ப பிடித்த பொருட்கள் இஞ்சி,பூண்டு. நானும் செய்து பார்க்கிறேன் மகி. இட்லி பார்க்க நல்லாயிருக்கு. எனக்கு இப்படி வரவேமாட்டேங்குது.(சாப்ட் ஆ)
ReplyDelete(மகனுக்கு கிட்டார் ஈஸ்டர் பரிசு.)
:) //இட்லி பார்க்க நல்லாயிருக்கு. எனக்கு இப்படி வரவேமாட்டேங்குது.(சாப்ட் ஆ)// எனக்கு உங்க ஊர் சமையல் வராது அம்முலு! இடியாப்பம் எல்லாம் செய்ய நேரமாகும்னு இப்படி இட்லி மாவு அரைச்சுக்கிறது! ஹிஹி...!
Deleteசட்னி செய்து பாருங்க! அபிக்கு கிட்டார் பரிசா ஈஸ்டருக்கு! சூப்பர்! எங்க வீட்டம்மாக்கு முட்டைகளும் அதுல ஸ்டஃப் பண்ணற டாய்ஸும் வாங்கி தீரல!! ;) :)
Thanks for the mouth watering recipe Mahi. I do try this.. How is Laya ?.
DeleteAnony, Laya is good-nga! Thanks for the comment! Do try it! :)
DeleteHello madam. There are only 7 cloves of Garlic. Where is the other 3?:P
ReplyDeleteHello Anony, thanks for mentioning! Now check the ingredients list. As changing photo is time consuming, I changed the ingredients list! ;) :P
Delete