Monday, April 11, 2016

மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்
பஜ்ஜி மிளகாய் - 6
பஜ்ஜி மாவு - 1/2கப் 
எண்ணெய் - பொரிக்க 
நறுக்கிய வெங்காயம் - 2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை - கொஞ்சம் 
எலுமிச்சை சாறு - அரை எலுமிச்சம் பழத்திலிருந்து. 

செய்முறை
பஜ்ஜி மாவுக்கு தேவையான தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.
மிளகாய்களை கழுவி, துடைத்துவிட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். சில மிளகாய்கள் காரம் இல்லாமல் இருக்கும், சிலது நல்ல காரமாக இருக்கும். ரிஸ்க் எடுக்க வேண்டாம் என நினைப்போர் மிளகாய் விதைகளை நீக்கிக்கொள்ளவும். :)
எண்ணெய் காயவைத்து நறுக்கிய மிளகாய்களை பஜ்ஜி மாவில் துவட்டி எண்ணையிலிட்டு பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரிந்ததும் பேப்பர் டவலில் எண்ணெய் வடியவைத்து எடுத்து வைக்கவும்.
நறுக்கிய வெங்காயத்துடன் பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை (என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை), எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
பஜ்ஜிகள் மீது வெங்காயக் கலவையப் பரப்பி பரிமாறவும்.
சுவையான பஜ்ஜி + சூடான டீ!! மழை பெய்யும் மாலை நேரத்துக்கு சரியான ஜோடி!! :)
குறிப்பு 
பஜ்ஜி மிக்ஸ் இல்லையெனில் கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, உப்பு சேர்த்து கலக்கி உபயோகிக்கலாம். 

12 comments:

  1. வாவ்.. சூப்பர்..வெட்டி போடுறது நல்ல ஐடியா.. முழுதாக இருப்பதால் நறுக் நறுக்கென சாப்பிடவே பிடிக்காது எனக்கு..
    மிளகாய் பஜ்ஜி யெல்லாம் இப்போ நினைக்கவே பயமா இருக்கு... :) :) :)

    ReplyDelete
    Replies
    1. நான் எப்பவுமே இப்படி கட் பண்ணிதான் பொரிப்பேன் அபி! முழு மிளகாய் பஜ்ஜி சாப்பிட்ட நினைவே இல்ல எனக்கு! இந்த மிளகா காரமில்லாமதான் இருந்தது...நீ மெதுவா சாப்பிடு..இப்ப என்ன அவசரம்?? :)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. கலர்புல்லா கலக்கலா இருக்கு மஹி ..அந்த மஞ்சள் கோப்பையும் அழகு :)

    இந்த மிளகாயில் ப்ரண்ட் கிரேவி செய்ய சொல்லி கொடுத்தாங்க செம டேஸ்ட்டி .

    ReplyDelete
    Replies
    1. :) தேங்க்ஸ் அக்கா! க்ரேவி ரெசிப்பி நீங்க அனுப்பலை.. அது கறி அல்லவா? செய்யப்போறேன், சீக்கிரம்!

      Delete
  3. Perfect for those rainy days, hot and spicy milagai bajjis..

    ReplyDelete
  4. வாவ்.. சூப்பரா இருக்கு. பஜ்ஜி மாவுக்கு எங்கன போவேன் ந்னு நினைக்க கீழே கொடுத்திருக்கிறீங்க பஜ்ஜி மாவு ரெசிப்பி. நன்றி மகி.

    ReplyDelete
    Replies
    1. அம்முலு, அந்த பஜ்ஜி மிக்ஸ் எனக்கு ரொம்ப வசதி..அது இல்லாம கடலைமாவில் செய்யும்போது அப்பப்ப சொதப்பிருவேன். ஹிஹி...!! நீங்க செய்துபார்த்து சொல்லுங்க. கருத்துக்கு நன்றி!

      Delete
  5. Hi Mahi are you a fan of Superheroes? :-)

    I had a smile seeing Thor dhal as ingredient in Quick Radish Sambar. I know it could be an auto-correct issue. But brought a smile.

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்....கரெக்ட்டு பண்ணீட்டனுங்க அனானி!! ஆமாம், அதென்ன அந்த ப்ளாகில போட்ட ரெசிப்பிக்கு இங்க வந்து கமெண்ட்டு சொல்லிருக்கீங்க?? ;) :)

      பை த வே, சூப்பர் ஹீரோஸ் எல்லாம் எனக்கு தெரியாதுங்கோ..!!

      நன்றிங்க!

      Delete
  6. In English blog,it doesn't allow Name/Anonymous option to comment. I didn't know what to do. SO commented here.

    ReplyDelete
    Replies
    1. :) Oh...okay!! I changed the settings in english blog after an unnecessary bitter experience happened in 2013.
      Thank you !!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails