................
மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!
................
எங்கே..எங்கே..எங்கே..எங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ தேடறீங்க?? இங்கே..இங்கே..இங்கே..இங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ பாருங்க!
..............
நாந்தான் மழை,மழை,மழேஏஏஏஏஏஏஏஏஏஏ வந்திருக்கேன்!
:))))))))))))))))))))))))))))))))
எல்லாரும் சுகமா..எனது காதலி..மனைவி, என் முதலும் முடிவுமான பூமிப்பெண் சுகமா இருக்காளா? ஒரே ஆள், பலமுகம் கொண்டவள் என் காதலி!!! காதல்வெறியில் அவ்வப்பொழுது சிலசமயம் பெய்தும் கெடுப்பேன்,பலசமயம் காய்ந்தும் கெடுப்பேன். love drives people crazy, not only people,but including me!!... :P:P:P
ஹிஹீஹீ..என்ன பார்க்கறேள்? மழை இங்கிலீஷ் பேசுதேன்னா...நான் எல்லா பாஷையும் பேசுவேன். அதை விடுங்கோ..இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன்!!! இதோ இந்தப் பொண்ணைப் பாருங்களேன். இவ பேரு வர்ஷா(வர்ஷா = மழை) ..காலேஜில படிச்சுட்டு இருக்கா..லீவில் ஊருக்கு போறப்ப எப்பூடி என்னை ரசிக்கிறா எண்டு பாருங்க! இதைப் பார்க்கறப்ப எனக்கே டான்ஸ் ஆடலாம் போல வருது! :)
இந்தியப்பெண்ணாய் என் காதலியைப் பார்க்க நினைத்தால் இந்தியத் தீபகற்பம் பக்கம் வந்து பார்ப்பேன்..நவீன யுவதியாகப் பார்க்க நினைச்சால் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களிலே பார்ப்பேன்.வெள்ளைப் பனித் தேவதையாய் அவளைக் காண நினைத்தால் அண்டார்ட்டிக்காவில் பார்ப்பேன்..பச்சைப்பட்டுடுத்திய தேவதையாய்ப் பார்க்க நினைத்தான் அமேஸான் காடுகளிலே ஓடிப்போய்ப் பார்ப்பேன்..மொத்தத்தில் அவள்மீது பைத்தியமாய்ப் பால்வெளியெங்கும் திரிகிறேன்!!!!!! இப்பொழுது கூடப் பாருங்க..மழை வந்திருக்கேன்,கதை சொல்லப்போறேனு சொல்லிட்டு பூமிப்பெண்ணைப் பற்றி பிதற்றிட்டு இருக்கிறேன்! அவ்வளவு காஆஆஆஆஆதலுங்க! ;))))
அட,நம்ம வர்ஷாப் பொண்ணை எங்க விட்டோம்?? ஆங்...அவிங்க ஊர்ல!! வர்ஷா கற்பனையில் மூழ்கி, கவிதையில் முத்தெடுத்து, எழுத்திலே கோர்த்து வைத்திருக்கா..அதை இந்தப்பையன் களவாடிட்டான்..ஆனாலும் பரவாயில்லை,நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே பாடறான். :)
சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்..
பயிர் வேரினிலே விழுந்து நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்!! ...ம்ம்ம்ம்ம்...அனுபவிச்சு எழுதிருக்காங்கள்ல? இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.
இப்புடியே நாள் ஓடிட்டு இருக்கப்ப பாவம்,காலேஜில படிச்சிகிட்டு இருக்கற வர்ஷாவுக்கு கலியாணம் முடிவு பண்ணறாங்க... கரீக்ட்டா நான் போய், அந்தப்புள்ளை வீட்டுக்கு போவதை தாமதப்படுத்திட்டேன்..வர்ஷா ஒரே சந்தோஷமாயிருச்சு..என்னையக் காரணம் காட்டி வீட்டுக்கு லேட்டாப்போலாம்ல?? என்ன ஒரு சந்தோஷம் பாருங்களேன்..
எப்படியோ ஒரு வழியா பெண்பார்க்கும் படலத்தைத் தாமதப்படுத்தியாச்சு..நாட்கள் ஓடிட்டே இருக்கு. ஒருநாள் நான் என் காதலியைப் பார்க்க சென்னை மாநகருக்கு வந்தப்ப, மார்க்கெட்ல இருந்த ஒரு பையன் என்னைப் பார்த்து, நான் ஏற்படுத்தும் ஒலிகளையும் ரசிச்சு பாடறான்..அதே நேரம் அந்தப்பக்கம் நம்ம வர்ஷாப்புள்ளையும் பாடுது.
பாட்டு நல்லாருக்கும்..பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ, விசய்-திரிசா :):)வைப் புடிக்கும்னா கண்ணையும் காதையும் ஓபனா வைச்சிகிட்டே என்சொய் பண்ணுங்ஓஓஓ!;) ;)
ஒத்த ரசனையோட இருக்க ரெண்டு பேரும் எதிர்பாராத விதமாச் சந்திச்சு, தடக்-தடக்குன்னு கலியாணம் பண்ணி, ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு குட்டீஸும் வந்து மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. ஒரு ஹோலி நாளில் எல்லாரும் வண்ணங்கள் பூசி மகிழ்வதைப் பார்க்க நானும் பூமிக்கு வந்தேன்..பாட்டுப்பாடி நடனம் ஆடி, கலர்ப்பொடி பூசின்னு ஒரு நாள் சந்தோஷமாக் கழிஞ்சது.
கதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!
பி.கு. அதிரா ஆரம்பித்து வைத்து, ஆசியாக்கா என்னைக் கோர்த்துவிட்ட "இசையும் கதையும்" தொடர்பதிவு இது. இதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.
mee..mee... da firstuuuuuuuuuuuu
ReplyDeleteஹா..ஹா..ஹா.. 13 மணித்தியாலம் பதிவுபோட்டென இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). பதிவை வெளியிடும்போது ஒருதடவை நேரத்தை மாத்திப்போட்டு வெளியிடுங்க, இல்லையெனில் ரைப்பண்ணத் தொடங்கிய நேரமே காட்டும்:))
ReplyDeleteஉஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டிசுரேப்பு மீ... நான் இசையும் கதையும் படிக்கோணும் ஓக்கை?.. நில்லுங்க படிச்சிட்டு வாறேன்.. அதெதுக்கு தலைப்பிலேயே தொடர்பதிவென கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
ReplyDeleteஇதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.///
ReplyDeleteஹா..ஹா..ஹா... இது ஜூப்பரூஊஊஊஊஊ... நான் முடிவை முதலில் படித்தேன்.. நானும் இமாவை அழைத்ததாக நியாபகமாக இருக்கே ஒரு தடவை செக் பண்ணோனும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
அதெதுக்கு வேப்பங்குழை அடிச்சு நன்றி சொல்லுறீங்க? ஒருவேளை நம்மட சிவாவுக்கோ? ஹையோ நான் ஒண்ணுமே சொல்லல சாமீஈஈஈஈஈ.... அது வேப்பங்குழை அல்ல வேப்பெண்ணைதானே கொடுக்க கலைத்தோம்:)))
ReplyDeleteஹை.... சின்ன சின்ன மழைத்துளிகள்.. என் பேஏஏஏஏஏஏஏஏஏஏஏஎவரிட் பாட்டூஊஊஊஊஊஊஊ சூப்பர்....
ReplyDelete//இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.//
ReplyDeleteமகியைக் கேட்டால் வாங்கித் தருவாவே...:)..
மழையே நீ நல்லா இருப்பியா?:))) சிவாவை நினைக்க வைக்குது...
மழையை வச்சே ஒரு கதை சூப்பர் மகி, வித்தியாசமாக யோசித்திருக்கிறீங்க.. மழை எனவே தலைப்பையும் கொடுத்திருக்கலாம்.. தொடருக்குப் பதில்.. இட்ஸ் ஓக்கை இதுவும் கடந்து போகும்...
ReplyDeleteகதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!//
ReplyDeleteஹா..ஹா..ஹா.. எத்தனை காய்ச்சது? குழம்புக்கு ரெண்டு கடனாத் தருவியளோ?.. ஓக்கை முறைக்க வாணாம் சீயா மீயா....
வாங்க அதிரா! பதிவை பப்ளிஷ் பண்ணிட்டு பலநிமிஷங்கள் இங்கயேதான் இருந்தேன்..ஆரையும் காணோம்! சரின்னு போய் லன்ச்சை முடிச்சு வரதுக்குள்ள வந்துட்டு கிளம்பிட்டீங்க? :)
ReplyDelete/மழை எனவே தலைப்பையும் கொடுத்திருக்கலாம்.. தொடருக்குப் பதில்../ தலைப்பை கொஞ்சம் மாத்திட்டேன்.ஓக்கேவா?! :)
கத்திரிக்காய் ஏதோ கொஞ்சம் காய்ச்சிருக்கு.பொதுவா கடனெல்லாம் தரமாட்டேன், உங்களுக்கு வேணுமானா பொலிதீன் கவர்லே ராப் பண்ணி அனுப்பிவிடறேன்..ஆம்பார் வையுங்கோ!;) ;)
/அதெதுக்கு வேப்பங்குழை அடிச்சு நன்றி சொல்லுறீங்க?/மழை வந்து கதை சொல்வதைக் கண்டு ஆரும் பயப்புடக்கூடாதல்லோ? ..அதுக்குத்தான் வேப்பங்குழை!! :D
அதூஊஊஊ கோவை(கணபதி) மழையாக்கும்.சுடச்சுடப் படமெடுத்து வைச்சிருந்தேன்,இப்ப உபயோகப்பட்டுது.
காதல் கதை எழுதப்படாதுன்னு நினைச்சு கொஞ்சூண்டு வித்யாசமாய் முயற்சித்தேன்,ஆனா பாருங்க, முடிவில அதுவாவே முடிஞ்சிருச்சு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா!
/13 மணித்தியாலம் பதிவுபோட்டென இருக்கே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)).//ஹிஹிஹிஹி..அது நான் டைம் மாத்தும்போது செய்த குளறுபடி..இப்ப சரியாக்கிட்டேன்! :)
ReplyDelete/நானும் இமாவை அழைத்ததாக நியாபகமாக இருக்கே ஒரு தடவை செக் பண்ணோனும்/ பண்ணியாச்சு..அழைத்திருக்கீங்க! அதனாலென்ன..இப்ப ரெண்டு அழைப்புவந்தாச்சில்ல..ரீச்சர் எழுதிருவாங்கோ! ;)))))
ஹா!! நாளைக்கு க்றிஸ்மஸ் இருக்க இப்ப கோர்த்து விடுறியளே நியாயமா!! இவ்வளவு நாளும் நித்திரையா இருந்து இப்பதான் பகோடாவும் முறுக்கு என்கிற பெயரில என்னவோ ஒன்றும் பொரிச்சு வச்சுப்போட்டு வந்திருக்கிறன்.
ReplyDeleteஅதீஸ் க்றிஸ் அங்கிள் ஹெல்ப் பண்ணினா அது கதை மாதிரியோ இருக்கும். கிக் கிக்
அப்ப ரெண்டையும் சேர்த்து ஒரு கதையா எழுதலாம் எண்டுறியள்! ஓகே. புதுவருஷம் ரிலீஸ் அதுதான். நல்லா இல்லையெண்டால் என்னைப் ஏசப்படாது.
இப்பதான் அதிராவின்ர இசையும் கதையும் வாசிச்சு... இல்லையில்லை எட்டிப் பார்த்துப் போட்டு வந்தனான். ஹைலைட் பண்ணிப் பார்த்தாச்சுது.
noooooooooooooooooooo mee the firstu ....
ReplyDeleteஎன்னது மறுபடியும் மழையா..
ReplyDeleteவேணாம் சிவா வேணாம்
ஓடு ஓடு ....
குடையை எடுத்துக்கொண்டு ஓடு...
மகிமா
ReplyDeleteவர்சவே பேசறது போல
இருக்கு
நல்ல இருக்கு இசையும் கதையும்
ஒரு வசன கர்த்தா
விட super..
ஹா..ஹா..ஹா... இது ஜூப்பரூஊஊஊஊஊ... நான் முடிவை முதலில் படித்தேன்.. நானும் இமாவை அழைத்ததாக நியாபகமாக இருக்கே ஒரு தடவை செக் பண்ணோனும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
ReplyDelete22 December 2011 14:௪௧//
'அதெலாம் கூடாது படித்து விட்டு மறந்து விட வேணும்..
ம் ..:)
வருணா பகவானே
நீதான் எனக்கு உதவி புரியணும்
சாரி கால பகவானே
வேப்பங்குழை//அப்படி என்றால் என்ன பேபி அதிரா
ReplyDeleteஎல்லா பாட்டும் அருமை மகி. அதுக்கு எத்த மாதிரி சொல்லி இருக்க கதை நடையும் அருமை....
ReplyDeleteஎனக்கும் சின்ன சின்ன மழை துளிகள் பாட்டு ரொம்ப புடிக்கும்... அருமையான வரிகள்...
ReplyDelete//siva said...
ReplyDeleteவேப்பங்குழை//அப்படி என்றால் என்ன பேபி அதிரா//
நான் நினைக்கிறேன் நீங்க வேப்பங் கொத்து எனச் சொல்லுவீங்களாக்கும்...
//மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!//
ReplyDeleteதலைப்பையும் இந்த மைக் டெஸ்டிங் ஐயும் பார்த்து மகி தான் ஏதோ பாட்டு ரெகார்ட் பண்ணி பதிவு போட்டு இருக்காங்கன்னு பயந்து பயந்து வந்தேன் அப்பா நல்ல வேளை அந்த மாதிரி அசம்பாவிதம் எல்லாம் இன்னும் நடக்கல
//பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ// விசய் திரிசா ரசிகர்கள் இத படிச்சிட்டு தீ குளிக்க போறாங்களாம் !!
ReplyDelete//போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!// அது என்ன முடிந்தால் மீண்டும் சந்திப்போம்?? Why yaa
ReplyDelete//இப்பதான் பகோடாவும் முறுக்கு என்கிற பெயரில என்னவோ ஒன்றும் பொரிச்சு வச்சுப்போட்டு வந்திருக்கிறன். //
டீச்சர் அதை ஒரு பதிவா போட்டு எங்களையும் சாப்பிட கூப்பிட்டு இருக்கலாம் இல்ல?
வேப்பங்குழை//அப்படி என்றால் என்ன பேபி அதிரா//
ReplyDeleteSIVA THATS MARGO SOAP
பெரிய சதி நடக்குது என்னால் அரவிந்த்சாமி பாட்டு பாக்க முடியல
ReplyDeleteஇசை ப்ளஸ் கதை சூப்பர் .பேஸ்ட்ரி ஷீட்ஸ் லிங்குக்கு நன்றி மகி
ReplyDeleteஅய்யோ மகி! இது எப்படி என் கண்ணில் படாமல் போனது.எனக்கு கொஞ்ச நாளாக டேஷ் போர்டில் ரீடிங் லிஸ்ட் தெரியாமல் இருந்தது,யாராவது வந்தால் அவங்களை தொடர்ந்து போய் கருத்து சொல்வதை வழக்கமாய் கொண்டிருந்தேன்.அப்ப தான் நீங்க இந்த தொடரை தொடர்ந்திருக்கீங்க போல.
ReplyDeleteவித்தியாசமாய் மழையை வைத்து நல்ல இசையும் கதையும் தந்து அசத்திட்டீங்க.
மிக்க நன்றி.மகிழ்ச்சி.