Friday, January 27, 2017

ப்ரோக்கலி


அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு "Raised Bed" Garden -ஐ உருவாக்கி, காய்கறிகள் வளர்க்கலாம் என ஆர்வத்தோடு செடிகள் வாங்கபோனால்...இந்தியக்காய்கறிகள் எல்லாம் கோடை விரும்பிகள், குளிர்காலத்தில் வரும் காய்கறிகள்தான் இப்போது வளர்க்கவேண்டும் என உரைத்தது. ;) :)  சரி பரவாயில்லை என்று வாங்கி வந்து அப்படி இப்படி என்று அவையும் வளர்ந்து அறுவடையும் செய்த பின்னர் ஒரு பகிர்வு.  

மேலே படத்தில் நர்ஸரியிலிருந்து வந்து மண்ணில் நட்ட உடன், நாற்றுகள்..வலப்புற ஓரத்தில் இருப்பதுதான் ப்ரோக்கலி நாற்றுகள். சுமார் ஒரு மாதம் ஆனபின் செடிகள் உயிர் பிடித்து வளர ஆரம்பித்த போது..

அடுத்த ஒரு மாதமும் கடந்தது..செடிகள் செழித்து வளர்ந்தன. காய் பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவரவில்லை...
திடீரென்று ஒரு நாள் காலை பார்க்கையில்..
நட்டிருந்த அரை டஜன் ப்ரோக்கலி நாற்றுகளிலும் குட்டிக்குட்டியாய்ப் ப்ரோக்கலி மொட்டுக்கள் வந்திருந்தன..!! :) :D :) 

நாட்கள் நகர நகர ப்ரோக்கலி மொட்டுக்கள் அழகான :) ப்ரோக்கலி-யாக வளர ஆரம்பித்தன..
இன்னுங்கொஞ்சம் ப்ரோக்கலி மொட்டுக்கள் பெரிதானதும், கட்டுக்கள் போட்டு,  காய் முற்றும் வரை பத்திரப்படுத்துவோம் என நினைத்திருந்த நேரம் ..
மழை வந்தது..வெளியே கால் வைக்க முடியாத அளவு சேறு, குளிர்..எல்லாம் காய்ந்து எட்டிப்பார்க்கையில்...
அணில்பிள்ளைகள் வந்து தம் கைவரிசையைக் காட்டிப்போயிருந்தார்கள்!! :( :) :( 

மீதமிருந்த காய்களை செடியின் இலைகளால் மூடி ரப்பர் பாண்ட் போட்டு கட்டி வைத்தோம்..அடுத்த நாள் பார்க்கையில், 
அழகாக ரப்பர் பாண்டை- பிரித்து உள்ளே இருந்த ப்ரோக்கலிப் பிஞ்சு சுவைக்கப்பட்டிருந்தது!!! :) :) :( :)  இலைகளும் விட்டு வைக்கப்படவில்லை!! அவ்வ்வ்வ்வ்......!! 
ஆக மொத்தம் அணில்களும் நாங்களுமாக  50-50அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, ஆளுக்கு மூன்று என்ற வகையில் ப்ரோக்கலிகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்றில் ஒரு ப்ரோக்கலி, முழுவதுமாக முற்றுமுன் பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு காய்கள்..

நேற்று ஒன்றை பறித்து ...
வளைச்சுக்கட்டி ஃபோட்டோ எடுத்துட்டு...
சமைச்சுச் சாப்பிட்டாச்சு!! :)))) 
கடைகளில் வாங்கும் ப்ரோக்கலியை விட அருமையான சுவையில் சூப்பராக இருந்தது. நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!! 
அக்டோபர் முதல் வாரம் நட்டு, ஜனவரி 26ஆம் தேதி அறுவடை செய்திருக்கிறோம், இன்னுங்கொஞ்சம் முன்னதாகவே பறித்திருக்கலாம்! ரீசண்ட்டாக  (எங்களுக்கு) அறிமுகமான ஒரு காயை வீட்டிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமான அனுபவம்!! :)  உங்களுக்கு முடியுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்!! 


20 comments:

  1. என்னாது 50:50 அக்ரிமெண்டா உங்களுக்காவது டேஸ்ட் பண்ண சான்ஸ் கிடைச்சது.. எனக்கு ஊகூம்.. இன்னும் இதை நேர்ல பார்த்ததேயில்லை.இங்க கிடைக்காது
    :( மூணார்ல கூட தேடிட்டேன்.. நான் போறப்ப இல்லையா? மூணார்லயே இல்லையானு தெரியலை..:(
    நல்லா என்ஜாய் பண்ணுங்க.. அந்த ப்ளேட்ல என்னென்ன இருக்கு.. ப்ரோக்கலி மட்டும் தெரியுது எனக்கு.. ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. ப்ரோக்கலி கோயமுத்தூர்ல எல்லாம் பழமுதிர் நிலையங்கள்ல கிடைக்குதே அபி..மதுரைல கிடைக்கலயா??! அவ்வ்வ்வ்..!!
      ஊட்டி-கொடைக்கானல்- மூணார் மாதிரி மலைப்பிரதேசங்கள்ல எங்க வளர்க்கிறாங்க என்று எனக்கு தெரில அபி. ஒரு முறை நாங்க கொடைக்கானல் போயிட்டு வரப்ப காலிஃப்ளவர் அறுவடை ஆகி லாரில ஏத்திட்டு இருந்தாங்க, அங்கே வாங்கிட்டு வந்தோம், சூப்பரா இருந்துச்சு. :) :P

      தட்டில, ஸ்பினாச் கடைஞ்சது, பாகற்காய் பொரியல், ப்ரோக்கலி பொரியல் அண்ட் சோறு!! B-) :P ஃபோக்கல் பாயிண்ட் ப்ரோக்கலி, அதான் மத்தது உனக்கு தெரில!! ;)

      Delete
  2. லெமன் மரமெல்லாம் வச்சுருக்கீங்களா அக்கா? போன போஸ்டுல பார்த்தேன்.. ஒரு நாள் மரத்தை காட்டுங்க..

    ReplyDelete
    Replies
    1. லெமன் ரொம்ப நாளா தொட்டிலயே வச்சிருக்கேனே அபி..இப்போ மண்ணிலயும் மரங்கள் இருக்கு. :) இந்த சீஸன்ல கலிஃபோர்னியா முழுக்கவே சிட்ரஸ் மரங்கள் ஏதோ பூச்சித்தாக்குதல்ல மாட்டிகிச்சு..சரியான காய்ப்பில்லை..போன வருஷ போட்டோஸ் கிடைச்சா அனுப்புறேன்..மரமெல்லாம் பழங்களா இருந்துச்சு!! B-) :)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபி!

      Delete
  3. வாவ்வ்வ்வ் எனக்கு இங்கு ஒன்றும் புகைக்கேல்லை:) அது சாம்பிராணி அப்புசாமிக்கு போட்டேன்ன் அதனால புகை வருது.

    ReplyDelete
    Replies
    1. புகை பலமா இருக்கு அதிரா...இருமல் இருமலா வருது..இருங்க, கதவு ஜன்னல் எல்லாம் திறந்து வைச்சிட்டு வரேன். :)))

      Delete
  4. நானும் இப்பூடியே நடுவேன் மகி ஒவ்வொரு வருடமும், ஆனா புரோக்கோலி வருவதே இல்லை வந்தாலும் ஒரு நகத்தளவு உருண்டைதேன் வரும்:)) அதையும் உங்கட அணிலார்போல இங்கு நத்தையாரும் ஸ்லக் காரும் ருசி பார்த்திடுவினம்.. அணில்பிள்ளை நொட் அலவுட்:) பிகோஸ்ஸ் டெய்சி கலைச்சிட்டுப் போவா மின்னல் வேகத்தில் ஹாஹா ஹா..

    ReplyDelete
    Replies
    1. இங்கும் ஜீனோ கண்ணில் பட்டா அணிலார் எல்லாரும் அதோ கதிதான்!! மழை-குளிர்ல எல்லாரும் ஹவுஸ் அரெஸ்ட் ஆன டைமில அவங்க ருசித்துட்டாங்க அதிராவ்!! ;) நத்தைகள் அதிகம் வாரதில்லை இங்கே..அதான் ப்ரோக்கலி ஸேஃப்-ஆ கிடைச்சுட்டது.

      Delete
  5. மிக அருமையா வந்திருக்கு, இலையை வறை செய்வீங்கதானே? நான் இஅலையைத்தான் வறை செய்வேன்ன், கடையில் வாங்குவதை விட சூப்பர் ரேஸ்ட்டா இருக்கும்.. கீப் இட் மேலே... ஓ புது வீடு புதுக் கார்டின்.. புதுப் புரோ:)) க்கோலி:)) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. இலைய பறிச்சா காய் முற்றாது என கேள்விப்பட்டேன், அதனால பறிக்கலை அதிரா..இப்ப காயை பறிச்சதும் அந்த இலைகளை பறிச்சு சமைக்கலாமோ?? கடையில் வாங்கும்போது கிடைக்கும் கீரைய சமைச்சிருக்கேன்.

      வாழ்த்துகளுக்கு மிக்க மிக்க நன்றீஸ்!! :D

      Delete
    2. இல்லயே இலையை பறிச்சு குட்டி குட்டியா அரிஞ்சு, தேங்காய்ப்பூப் போட்டு வறை/சுண்டல் செய்யுங்கோ, சூப்பரா இருக்கும். நான் பூச்சி கடிச்ச இலையைக்கூட, கட் பண்ணிப்பண்ணி, நல்ல பகுதிகளை எடுத்து செய்வேன், எதையும் வீணாக்க மனம் வருவதில்லை, இப்பவும் கார்டினில் கொஞ்சம் இலைகள் இருக்கு, வெளியே இறங்க முடியாத குளிர் என்பதனால் கால் வைக்காமல் இருக்கிறேன்.. குளிருக்கு நத்தை ஸ்லக்ஸ்சும் வரமாட்டாங்க... நத்தை எனில் பெரீஈஈசா எண்ணிடாதீங்க.. பெருவிரல் நகத்தளவு சைஸ்லதான் இருப்பாங்க.. அதனால்தான் பிரச்சனையே.. எவ்ளோ மருந்து போட்டாலும் மழை தூறினால் போதும் குருத்துக்களில் குடி வந்திடுவாங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எனக்கதைப் பார்த்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்திடும்... பிறகெப்படி தோட்டம் செய்வது... வீட்டிலுள்ளோரைக் கெஞ்சிக் கேட்டுத்தான் அவர்களை வெளியேத்துவேன்.

      Delete
  6. சூப்பர். ஏன் ஆர்கானிக் காய்கறி னா சும்மாவா? டேஸ்ட் கேட்கவே வேண்டாம் மகி.

    ReplyDelete
  7. ./// நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!!///

    I enjoyed it 😃


    I would like to grow. .We would start happily and rain ruins everything. .btw I like your raised bed. .

    ReplyDelete
    Replies
    1. Raised bed, all credits goes to Arun akka!! :) <3 Infact, planting also done by him only! ;)

      Spring is around the corner..all the best for your gardening!! Thanks for stopping by!

      Delete
  8. சூப்பரா வந்திருக்கு மகி !

    முன்பு நான் மட்டுமே சாப்பிடுவேன், இப்போ எல்லோருக்கும் பிடிச்ச காய்ல இதுவும் ஒன்னா மாறிடுச்சி. காய் வாங்கும்போது வரும் இலைகளை அதனுடனேயே சேர்த்து பொரியல் பண்ணிடுவேன், இல்லாட்டி சாம்பார்ல போட்டுடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. சித்ராக்கா, நானும் ஃபார்மர்ஸ் மார்க்கட்டில வாங்கும்போது இலைகளை எல்லாம் பொரியல் செய்வேன். இப்ப வீட்டில வளர்க்கையில் கண்டுக்காம விட்டுட்டேன். ஹிஹி...!
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

      Delete
  9. ப்ரோக்கலி சூப்பர்...

    நான் இதுவரை சுவைத்தது இல்லை..

    ReplyDelete
    Replies
    1. நிறைய சத்துக்கள் நிறைந்த காய்கறி அனு..வாய்ப்பு கிடைத்தா சுவைத்துப் பாருங்க. முதல்ல எனக்கு அவ்வளவா புடிக்காது, ஆனா நாம வீட்டில் வளர்க்கையில் சுவை அருமையா இருந்தது. :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  10. ஓ நிறைய அழகா வளந்திருக்கு.நமக்கு ப்ரேக்ஃபாஸ்ட் க்கு ஸ்டீம் ப்ரோக்கோலி அவளோ பிடிக்கும்.போன தடவை 2 நட்டனான் அப்டியே மாசக்கணக்கா அதே அளவிலயே நிக்குது.
    பிறவு இடம் அநியாயம் பண்ணுது எண்டுட்டு எறிஞ்சுட்டன் .ம்ம்ம்ம்ம் வீட்ல வளக்குறது சொவ்ட் ஆ ஜூப்பரா இருக்கும் .

    அணில் க்கு குடுத்து சாப்பிடுறதுக்கே நீங்க இதை வளக்கலாம் .கேக்கவே ஆசையா இருக்கு.
    அபி சென்னைல தி.நகர் சரவணாஸ் ல கீழ காய்கறி விக்கினமெல்லோ அதுல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. சுரேஜினி, 2 -2.5 மாசம் கழிச்சுதான் ப்ரோக்கலி மொட்டு வைச்சதே!! அதுவரை செடிதான் காடு மாதிரி வளந்தது. கொஞ்சம் பொறுமையா இருப்போம் என வெயிட் பண்ணியதில் கிடைத்த பலன் தான் நீங்க பார்ப்பது. நெக்ஸ்ட் டைம் காத்திருந்து பாருங்க. :) இதே போல இன்னொரு செடி, ப்ரோக்கலி கூட நட்டது..ஸ்டில் வெயிட்டிங்...வெயிட்டிங்..எப்ப பலன் கிடைக்கும் தெரில.

      அணில் ஜீனோவுக்கு தெரியாம வந்துட்டுது..இப்பல்லாம் நாங்க உஷாரு..பாதிக்கண்ணு வெளியதான் வைச்சுட்டு உக்காந்திருக்கார் எங்க காவலாளி!! :) அப்பவும் அணிலார்ஸ் என்ட்ரி இருக்கதான் செய்யுது..!! ;) :)

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஜினி!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails