இந்த வருஷ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்...!
கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :)
~~~~~
அறுவடைத் திருநாளுக்கு எங்க வீட்டுத் தோட்ட அறுவடை..கத்தரிக்காய், ப்ரோக்கலி, எலுமிச்சை, ஒரு தக்காளி, இரண்டு குட்டிப் பழ மிளகாய்கள்! :))) + சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல்!
சாமி கும்பிடும் குட்டிச்சாமி!! ;)
நீங்க எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்..நன்றி!
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி டிடி அண்ணா!
Delete////கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) //// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் உண்மையில், லயா குட்டியை வீட்டில் வச்சுக்கொண்டு இவ்ளோ கோலம் போட்டிருக்கிறீங்களே... கிரேட் தான் என நினைச்சுட்டேன் ஒரு கணம் கர்ர்ர்ர்ர்ர்ர் ஏமாத்திட்டீங்க:)
ReplyDeleteகி கி கி!! பூஸை ஏமாத்தினா ஒரு ஸ்பெஷல் சந்தோஷம்தான்! ;) :)
Deleteவீட்டுத் தோட்டத்தில் பறித்ததோ சூப்பர் மகி... உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. லயா உயர்ந்திட்டா நல்லாவே.
ReplyDeleteநன்றி அதிரா! நீங்களும் பொங்கல் சூப்பரா கொண்டாடிருப்பீங்க..தாமதமா நன்றி சொல்றேன்..அஜீஸ் பண்ணிகுங்க. லயாவுக்கென்ன, அது கிடுகிடுனு உசந்துகிட்டே இருக்கு...அவ்வ்வ்வ்!!
Deleteஹா ஹா :)) ஏதோ தேர்வுக்குத் தயாராவதுபோல் முதல் நாள் இரவே கோலத்துக்குண்டான அனைத்தையும் உள்வாங்கி, மறந்துபோய்கூட பேப்பரைப் பார்த்து காப்பி அடிக்காமல் போட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன.
ReplyDeleteஉங்க வீட்டு கோலம்னே நெனச்சிட்டேன். ஹ்ம்ம்ம்ம் ??? ப்ரோக்கலி இங்கே வந்திருக்கு ! அறுவடை படு ஜோர். அக்கா என்ன வேண்டிக்கிறாங்க :))
ஆமாம் சித்ராக்கா..அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே..மொமெண்ட்தான்!! :)
Delete//என்ன வேண்டிக்கிறாங்க :))// அம்மாவுக்கு இன்னும் எப்படியெல்லாம் தொந்தரவு குடுக்கலாம்னு ஐடியா கொடு சாமி-நு வேண்டிருப்பாங்க!! ;) :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராக்கா!
///கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை.// அது தானே பார்த்தேன். அவ்வளவு நேரம் இருந்து கோலம் போடுறது இப்ப ஈஸியா இருக்காதே!
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்!! இப்படி சாணி போட்டு மெழுகி கோலம் போட இங்க ஏது வழி??! வருஷத்துக்கொரு முறை இப்படி கோலங்களை ஃபோட்டோல பாத்துக்கிறதுதான் இமா!! :)
Deleteகோலங்கள் அருமை.
ReplyDeleteஅந்தச் சாமி மேடை அழகா இருக்கு. இந்தியாவிலிருந்து வாங்கி வந்ததா?
சாமி மேடை - இங்கே ஒரு ஃப்ரெண்ட் ப்ரசெண்ட் செய்தது இமா! அது மேடை இல்ல, குட்டி சேர்..சேர் முழுக்க சாப்பிடற பண்டங்கள் வைச்சு அடுக்கி பேக் செய்து இருந்தது. ;) :)))
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Super Akka
ReplyDeleteநன்றி அபி!!
Delete