Friday, April 1, 2011

கார பன்

இந்த குறிப்பு Sharmi's Passions தளத்திலிருந்து சிலமாற்றங்களுடன் செய்தது. தேங்க்ஸ் பார் தி ரெசிப்பி ஷர்மி!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு(ஆட்டா மாவு) -11/2கப்
மைதா மாவு-1/2கப்
இன்ஸ்டன்ட் ஈஸ்ட்(Rapid Rise Yeast)-1டீஸ்பூன்
முட்டை-1
சர்க்கரை-1டீஸ்பூன்
உப்பு-1டீஸ்பூன்
பச்சைமிளகாய்-2
கொத்துமல்லி இலை-சிறிது
மிளகாய்த்தூள்-1/2டீஸ்பூன்
பூண்டு-6 பற்கள்
வெள்ளை எள்-1 டீஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்-1/2கப்

செய்முறை
1/4கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஈஸ்ட்-சர்க்கரை-உப்பு சேர்த்து நன்றாக கரைத்து (ஈஸ்ட் கரைந்து நுரைக்கட்டும்வரை) 5நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் மாவுகள்,பொடியாக நறுக்கிய ப.மிளகாய்,மிளகாய்த்தூள்,நசுக்கிய பூண்டு சேர்த்து நன்றாக கலந்துகொண்டு,

ஈஸ்ட் கலவை மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைப் பிசையவும். பின்னர் மீதியிருக்கும் தண்ணீரை தேவையான அளவு ஊற்றி நன்றாக பிசையவும்.

மாவு சப்பாத்திமாவைப் போல வந்ததும், ஆலிவ் ஆயிலையும் ஊற்றி நன்றாக பிசைந்து எண்ணெய் தடவிய பாத்திரத்தில் மாவை வைக்கவும்.

மாவின் மேல்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி, க்ளியர் ராப் பேப்பரால் பாத்திரத்தைக் கவர் செய்து, மூடி வைக்கவும்.
மாவுப்பாத்திரத்தை சற்றே சூடான இடத்தில் வைக்கவும். 2 மணிநேரம் கழித்து மாவு நன்றாக உப்பியிருக்கும்.
அதனை மீண்டும் நன்றாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பேக்கிங் தட்டில் வைத்து உருண்டைகளின் மீதும் சிறிது எண்ணெய் தடவி வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் நீர் சேர்த்து கலந்து பன்களின் மீது தடவிவிட்டு, எள்ளை தூவிவிடவும்.

375F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன்-ல் சுமார் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
சுவையான காரபன்கள் ரெடி!
கதைகளில் "அன்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்"னு சுபம் போடுவது மாதிரி "டீயுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்"-னு இந்தக்கதையை முடிப்பேன்னு பார்க்கறீங்களா? இல்லையே!!!
அடுத்த பகுதி விரைவில் தொடரும்.வெய்ட் அன்ட் ஸீ!!

:))))))))))


28 comments:

  1. சூப்பர்ர் மகி!!

    உங்களின் கேக் ரஸ்க் முட்டையில்லாமல் செய்தேன்,ரொம்ப நல்லாயிருந்தது.விரைவில் போஸ்ட் செய்கிறேன்.நன்றி மகி!!

    ReplyDelete
  2. ஆஹா பன் எனக்குதான்!!

    ReplyDelete
  3. //அன்ட் தே லிவ்ட் ஹேப்பிலி எவர் ஆஃப்டர்"னு சுபம் போடுவது மாதிரி "டீயுடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்"-னு இந்தக்கதையை முடிப்பேன்னு பார்க்கறீங்களா//

    No no, we didn't think that...we know you better now...ha ha... nice recipe Mahi..:)

    ReplyDelete
  4. கார பன் அருமையா இருக்கு மஹி!

    ReplyDelete
  5. கார பன் பார்ர்கும் பொழுதே நன்றாக இருக்கிறது.. செய்துபார்கிறேன்

    ReplyDelete
  6. ஆஹா! சூப்பர்,இப்படி ஆசை காட்டக்கூடாது மகி,உனக்கே பாவமாக தெரியலையா?

    ReplyDelete
  7. Nice Mahi. I would like to try the recipe. Looks yummy!

    ReplyDelete
  8. Loved ur savory version of the bun...luks very nice.

    ReplyDelete
  9. நடத்துங்க, கலக்குங்க. என்ஜாய். ;)))))))))))

    ReplyDelete
  10. //வெய்ட் அன்ட் ஸீ!!
    :))))))))))
    //
    ம். மீ வெய்ட்டிங் டு ஸீ... ;))

    ReplyDelete
  11. super recipe, Mahi. Will try this one very soon.

    ReplyDelete
  12. ரெண்டு ப்ளேட் பார்சல்! ஹி ஹி.. :)

    ReplyDelete
  13. ellam thallunga..mee the first..enakuthan pannu...mahima..wait panuga vanturen...:)

    ReplyDelete
  14. மஹி உங்களோட கார பன் பார்க்க நல்லா இருக்கு.

    ReplyDelete
  15. என்னதூஊஊ பன்னுல ப மிளகாய் . மிளகாய் தூள் , பூண்டாஆ.... புதுசாதான் இருக்கும் போல :-))

    ReplyDelete
  16. பெங்களூரிலே ஐயங்கார் பேக்கரியிலே கடுகு, பச்சைமிளகாய் தாளித்து ப்ரட் கிடைக்கும். இது இன்னும் அசத்தலாயிருக்கும் போலிருக்கு. எக் வழக்கம் இல்லை. போடாது பண்ணிட்டா போரது. நனறாக எழுதினே. கட்டாயம் பண்ணணும்.

    ReplyDelete
  17. கலக்குறிங்க மகி...ரொம்ப சூப்பராக இருக்குக்கின்றது...வாழ்த்துகள்...

    ReplyDelete
  18. wow mahi very nice photos of khara bun and it is very tempting Thanks for sharing
    anandhirajan
    www.anandhirajansartsncrafts.blogspot.com

    ReplyDelete
  19. ஆஹா கலக்குது கார பன்

    ReplyDelete
  20. மகி செய்யறது எல்லாமே நல்லா இருக்குன்னு பெருமூச்சு விடத் தான் முடியுது :) ம்ம்..

    ReplyDelete
  21. பார்க்கவே யம்மியா இருக்கு மகி

    ReplyDelete
  22. மேனகா,கேக் ரஸ்க் ட்ரை பண்ணி போஸ்ட் செய்ததுக்கு மிக்க நன்றி! :)

    புவனா,என்ன செய்ய? உங்கள மாதிரி மத்தவங்க எல்லாருக்கும் என்னை புரியலையே?! ;) தேங்க்ஸ் புவனா!

    அஸ்மா,நன்றிங்க!

    ஃபாயிஸா,தேங்க்ஸ் ஃபாயிஸா!

    ஆசியாக்கா,சுட சுட சாப்பிட சூப்பரா இருக்கும்,ட்ரை பண்ணி பாருங்க!

    மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்!

    ப்ரேமா,தேங்க்ஸ்ங்க!

    ஜெய்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    இமா,வெயிட் பண்ணிட்டேஏஏஏ இருங்க! :) ;) நன்றி இமா!

    நன்றி வானதி!

    பாலாஜி,பார்சல்தானே? அனுப்பிட்டாப்போச்சு. :) தேங்க்ஸ் பாலாஜி!

    காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!

    சிவா,வெயிட் பண்ணிட்டே இருக்கேன்,இன்னும் உங்களைக் காணமே?! :)

    ப்ரியா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  23. ப்ரியா ஸ்ரீராம்,தேங்க்ஸ்ங்க!

    அருணா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ஜெய் அண்ணா,இது காரசாரமா இருக்கும்! அதுக்குதான் பூண்டு-மிளகாய் எல்லாம் போடுவது. :)
    நன்றி ஜெய்அண்ணா!

    காமாட்சிமா,ஐயங்கார் பேக்கரில நான் சாப்பிட்டதில்ல..இது நீங்க சொன்னமாதிரி செய்தாலும் நல்லா இருக்கும்.செய்துபாருங்க! நன்றி! :)

    கீதா,செய்துபாருங்க..நன்றி கீதா!

    ஆனந்தி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    சௌம்யா,நன்றிங்க!

    சந்தனா,தேங்க்ஸ்! :)

    ஜலீலாக்கா,நன்றி!

    ReplyDelete
  24. ella biscutum enakuthan...appdiey saapdiveney..:)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails