Tuesday, July 6, 2010

பீர்க்கங்காய் பொரியல்

தேவையான பொருட்கள்
பீர்க்கங்காய்-1
வெங்காயம்-சிறிது
பச்சைமிளகாய்-3(அ) காரத்துக்கேற்ப
தேங்காய்த்துருவல்-1ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
க.பருப்பு,உ.பருப்பு-தலா 1/2ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
உப்பு
எண்ணெய்

செய்முறை
பீர்க்கங்காயை தோல் சீவி நறுக்கிக்கொள்ளவும்.
வெங்காயம்,ப.மிளகாய் நறுக்கிவைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து கறிவேப்பிலை,வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பீர்க்கங்காய் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து வேகவிடவும்.
காய் வெந்ததும் தேங்காய்த்துருவல்,உப்பு சேர்த்து கிளறி, அடுப்பிலிருந்து இறக்கவும்.

இது எங்க வீட்டில் பேவரிட் பொரியல்..பீர்க்கங்காய் ஒவ்வொருமுறை வாங்கிவரும்போதும் அதில் வேறு ஏதாவது ரெசிப்பி செய்யவேண்டும் என்று நினைப்பேன்..ஆனால் டீபால்ட்டா இதே பொரியல் செய்துடுவேன். :) மிகவும் சுலபமாக இருக்கும்..விரைவாகவும் செய்துவிடலாம்..டேஸ்ட்டும் அருமையாக இருக்கும்.

இதில் பச்சைமிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம். காயிற்கு உப்பு சேர்க்கும்போது கவனமாக சேர்க்கவேண்டும்..இதுவும் கீரை போலதான்..நறுக்கி வைக்கும்போது நிறைய இருப்பதுபோல இருக்கும்,ஆனால் வெந்தபின்னர் அளவு குறைந்துவிடும்..அதனால் நான் தேங்காய்த்துருவல் சேர்க்கும்பொழுதுதான் உப்பு சேர்ப்பேன்.
~~~~~~~
ஜெய்லானி அண்ணா வழங்கிய தங்கமகன் விருதிற்காக ஒரு சிம்பிள் ட்ரீட்..

இது என் கணவர் செய்யும் ஈஸி அண்ட் ஹெல்த்தி ஸ்நாக்..எல்லோரும் எடுத்துக்கோங்க! :)

விருதுக்கு நன்றி ஜெய்லானி அண்ணா!

17 comments:

  1. Yummy poriyal..have never made perkangai poriyal..will try soon..Congrats on your award and thatz a lovely way to celebrate:-)

    ReplyDelete
  2. super poriyal & congrats on ur awards!!

    ReplyDelete
  3. பொரியல் ..ஓக்கே..!!! விருதுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..

    கேக் அருமையா இருக்கு காஃபிதான் பாதி இருக்கு ஓக்கே...ஓக்கே..அட்ஜஸ் பண்ணிக்கிறேன்.

    ReplyDelete
  4. this my fav poriyal....i can have this with white rice, congrats on your lovely award, nice treat thanks Mahi

    ReplyDelete
  5. //கேக் அருமையா இருக்கு காஃபிதான் பாதி இருக்கு ஓக்கே...ஓக்கே..அட்ஜஸ் பண்ணிக்கிறேன்//பாவம் மகி...எதோ போன போகுது என்று உங்களுக்கு கொடுத்தா ரொம்ப தான் பில்டப் எல்லாம் கொடுக்கின்றிங்க....சூப்பர்ப் பொரியல் மகி...

    ReplyDelete
  6. @நிது,அடுத்தமுறை பீர்க்கங்காய் வாங்கும்பொழுது செய்துபாருங்க.சூப்பரா இருக்கும். வருகைக்கும், வாழ்துக்கும் நன்றி!

    @நன்றி மேனகா!

    @அச்சச்சோ,இப்படி அவசரப்பட்டு கேக்-னு முடிவு பண்ணிடாதீங்க ஜெய்அண்ணா!அது கேக் இல்லை..தனி பதிவா போடறேன்.
    கப் போட்டோல சின்னதா இருக்கு..வீட்டுக்கு வாங்க.கப்-ஐ நேரில் பார்த்தாதானே தெரியும்? :)
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

    @ஆமாம் வேணி,நாங்களும் அப்படிதான்..தேங்காசாதம்-இந்தப் பொரியல் டெய்லி லன்ச்பாக்ஸ்-ல இருந்தாலும் என் கணவர் சந்தோஷமா சாப்பிடுவார்!:)

    @நன்றி கீதா!ஜெய் அண்ணாக்கு இன்னும் டைகர்-ஃபீவர் விடலையாம்..அதான் இப்படி!
    (மீ த எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்பு! )

    ReplyDelete
  7. Never made peerkangai poriyal,make always thogaiyal and chutney,sounds good!

    ReplyDelete
  8. இது எனக்கு மிகவும் பிடித்த காய்கறி! மிகவும் பிடித்த பொரியலும் கூட! அடிக்கடி செய்வதுண்டு. காய்கறியின் பச்சை நிறம் மாறாமல் அழகாக செய்திருக்கிறீர்கள்!
    கணவரின் பிஸ்கட் சாண்விட்ச் கூட சாப்பிடத்தூண்டுவதாய் அழகாக இருக்கிறது!

    ReplyDelete
  9. @@@ GEETHA ACHAL--//பாவம் மகி...எதோ போன போகுது என்று உங்களுக்கு கொடுத்தா ரொம்ப தான் பில்டப் எல்லாம் கொடுக்கின்றிங்க....//

    நாங்கலெல்லாம் கேட்டு வாங்கி குடிக்கிற ஆளுங்கோவ் . குடுக்காட்டியும் விட மாட்டோமுல்ல :-))

    ReplyDelete
  10. super poriyal... My all time fav:) congrats on your award da

    ReplyDelete
  11. பொரியல் ரொம்ப நல்லா இருக்கு மகி விருதுக்கு வாழ்த்துக்கள் , லேட்டா வந்ததால் காபி எல்லாம் தீந்து போச்சு

    ReplyDelete
  12. பொரியல் ரொம்ப நல்லா இருக்கு மகி.
    கலர் மாறாமல் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  13. மகி, சூப்பர். விருதுக்கு வாழ்த்துக்கள்.
    ஜெய், இது கேக் ஆஆஆ??? உங்க வீட்டில் இப்படி தான் கேக் செய்வீங்களா????

    ReplyDelete
  14. விருதுக்கு வாழ்த்துக்கள் மகி.

    //கேக்// ;) அழகாக இருக்கு. ;) சமைத்த ஆளுக்குப் பாராட்டுகள். ;)

    பீர்க்கங்காய் ரெசிபி... இங்க வாங்குறதே இல்லை. இதை ட்ரை பண்ணுவதற்காகவே வாங்க வேணும்.

    ReplyDelete
  15. @ராஜி,முதல்வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க!

    @மனோ மேடம்,நன்றி! அவருக்கு இந்த மாதிரி டெகரேட் செய்து பரிமாறுவது ரொம்ப பிடிக்கும். :)

    @ஜெய் அண்ணா,நீங்க சொன்னதை கேட்டு மிக்கமகிழ்ச்சி!

    @நன்றி பவித்ரா!

    @சாரு,உங்களுக்கில்லாத காபியா,வாங்க சூடா போட்டுத்தரேன். நன்றி சாரு!

    @சௌம்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    @வானதி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! பாவம் ஜெய் அண்ணா,ரொம்ப ஓட்டாதீங்க அவரை! :))

    @இமா,உங்க பாராட்டுகளை கட்டாயம் சொல்லிடறேன். பீர்கங்காய் வாங்கி பொரியல் செய்து பாருங்க. நன்றி!

    ReplyDelete
  16. @@@vanathy //ஜெய், இது கேக் ஆஆஆ??? உங்க வீட்டில் இப்படி தான் கேக் செய்வீங்களா???? //

    சரி..சரி விட்டுடுங்க வாண்ஸ்..அது பர்கர் போதுமா,,? ( ஜெய்லானீஈஈஈ எஸ்கேப்ப்ப்ப்ப்)

    ReplyDelete
  17. பீர்க்கங்காய் என்று சொல்லாத வரைக்கும் சரிதான். ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails