Thursday, July 8, 2010

க்ராஸ்-ஓவர் வெஜ். பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
பஃப் பேஸ்ட்ரி ஷீட்
வெஜிடபிள் ஸ்டஃபிங்-1கப்
முட்டை-1
மைதா(அ)ஆட்டா மாவு-1/4கப்

செய்முறை
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை பேக்-இல் குறிப்பிட்ட நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.

ஸ்டஃபிங்-ஐ தயாரித்துக் கொள்ளவும்.

உலர்ந்த மாவு தூவி பேஸ்ட்ரி ஷீட்டை செவ்வகமாக தேய்க்கவும்.அதன் நடுவில் பூரிக்கட்டையை வைத்து இரண்டாக மடித்து,கத்தியால் பேஸ்ட்ரி ஷீட்டை படத்திலுள்ளவாறு நறுக்கவும்.

நறுக்கிய துண்டுகளை கவனமாக பிரித்து பூரிக்கட்டையை எடுத்துவிட்டு ஸ்டஃபிங்-ஐ வைக்கவும்.

ஒரு ஓரத்திலிருந்து ஒரு முனையை எடுத்து எதிர்புறமாக வைத்து அழுத்திவிடவும். பின்னர் அதற்கு எதிர்புறமிருக்கும் துண்டையும் அதே போல குறுக்காக வைத்து அழுத்திவிடவும்.

இதேபோல எல்லா துண்டுகளையும் ஒட்டவும்.

முட்டையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்துகொண்டு பேஸ்ட்ரிஷீட் மீது சீராக தடவி 5நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.

400F ப்ரீஹீட் செய்த அவன்-ல் பேஸ்ட்ரி ஷீட்களை வைத்து 15நிமிடங்கள் பேக் செய்யவும்.

க்ராஸ்-ஓவர் பஃப்ஸ் ரெடி! கத்தியால் வேண்டிய அளவு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.

குறிப்பு
ஒரே ஷேப்பில் பஃப்ஸ் செய்வதற்கு பதிலாக இப்படி செய்தால் வித்யாசமாக இருக்கும். இதில் நான் ஸ்டஃப் செய்திருப்பது உருளை-கேரட்-பச்சை பட்டாணி சேர்த்த மசாலா. அவரவர் விருப்பப்படி முட்டை,மஷ்ரூம், நான்வெஜ் ஸ்டஃபிங், அல்லது பிடித்தமான பழங்கள்,ஜாம்,சாக்லேட் இனிப்புதேங்காய்த்துருவல் வைத்து பேக் செய்யலாம்.

இங்கு உபயோகித்திருக்கும் பேஸ்ட்ரிஷீட் சிறிய சதுரங்களாக இருப்பது. Pepperidge farm pastry sheet எனில் ஒரு ஷீட்டினை தேய்த்தாலே நல்ல நீளமாகும்.

32 comments:

  1. அழகாக இருக்கு மகி.
    உங்க வீட்டு..... சொல்லவில்லை. வேண்டாம். விட்டு விடலாம்.
    சுருக்கமாக.. லக்கி. ;))

    ReplyDelete
  2. ம். ;) எனக்குத்தான் வடையா!!
    தட்டுல இருக்கிற மூன்று பீஸும் கூட வேணும் எனக்கு.

    ReplyDelete
  3. mahi ungaluku porumai athikam , romba nalla irukku

    ReplyDelete
  4. இமா மாமி ,மூனு பீசையும் எடுத்துகிட்டதால என்னால நல்லா இருக்குன்னு கமெண்ட பண்ன முடியால. ஐயம் சாரி.. அடுத்த போஸ்டுக்கு சீக்கிரம் வட ச்சே..வர முயற்சி செய்கிரேன்.

    ReplyDelete
  5. இதுக்கு ரொம்ப பொருமை வேனும் செய்ய . பாக்கவே அருமையா இருக்கு .

    ReplyDelete
  6. கண்கலங்க வச்சுட்டீங்க மருமகனே!
    ட்..ட்..டிஷ்..யூ ப்ளீஸ். ;)

    ReplyDelete
  7. நல்லா இருக்கு மகி,
    பிரிக்கும் போது பொறுமையா ஆ பன்னணனும் இல்ல?
    பார்க்கும் போதே அழகா இருக்கு.

    ReplyDelete
  8. OMG !! I cant even think of making this . u need so patience and I wonder where did u get that patience from !! chance less and kudos to u

    ReplyDelete
  9. டிசைன் செய்த விதம் ரொமப் நல்லாயிருக்குப்பா...

    ReplyDelete
  10. மகி, சூப்பர். நல்ல பொறுமை உங்களுக்கு.

    இது உங்க புது ( கலிபோர்னியா??) கிச்சனா?.

    ReplyDelete
  11. ஆஹா.. அருமை.. அருமை.. இமா சொல்லாம விட்டத நான் சொல்லிடறேன்.. உங்க எலி ரொம்பவே கொடுத்து வைத்தவர் :)

    ஜெய்லானி மாதிரி எனக்கும் ஒரு சந்தேகம் மஹி.. அத பிரிச்சு வச்சே வெட்டினா மடிக்கற பிரிக்கற வேலை இருக்காதே.. ஹி ஹி..

    ReplyDelete
  12. L boarddddd.... grrrrrr.

    மாட்டி விட நினைக்காதீங்கோ. நான் சொல்ல வந்தது... விருந்தாளிகள் என்று. ;D

    ReplyDelete
  13. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.--//
    ஆஹா.. அருமை.. அருமை.. இமா சொல்லாம விட்டத நான் சொல்லிடறேன்.. உங்க எலி ரொம்பவே கொடுத்து வைத்தவர் :) //

    இதென்ன வம்பா போச்சி ..!!நான் இமா மாமின்னுதானே சொன்னேன் எலின்னு சொல்லலியே..ஹா..ஹா


    //ஜெய்லானி மாதிரி எனக்கும் ஒரு சந்தேகம் மஹி.. அத பிரிச்சு வச்சே வெட்டினா மடிக்கற பிரிக்கற வேலை இருக்காதே.. ஹி ஹி..//

    குட் கொஸ்டின் .எப்படியும் ஆட்டை வெட்ட போறது உறுதி . அதை அப்படியே வெட்டினா என்ன குளிக்க வச்சி வெட்டினா என்ன ஹி..ஹி..

    ReplyDelete
  14. @@@இமா--//கண்கலங்க வச்சுட்டீங்க மருமகனே!
    ட்..ட்..டிஷ்..யூ ப்ளீஸ். ;) //

    அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்..

    ReplyDelete
  15. அழகாக,வித்தியாசமாக உள்ளது மகி

    ReplyDelete
  16. ஓ.. இது இப்படி தானா? எப்படிப்பா இப்படி ஓட்டை போடுறாங்கன்னு நானும் ரெம்ப நாளா மண்டைய பிச்சுட்டு இருந்தேன்... தேங்க்ஸ் மகி...

    ReplyDelete
  17. @இமா,வருகைக்கும் 'சொல்லாமல்' விட்டதற்கும் நன்றி! :)

    @சாரு,நன்றி!

    @மாமியும்,மருமகனும் நல்லாவே கிண்டல் பண்ணிக்கிறீங்க ஜெய் அண்ணா! அடுத்தமுறை சீக்கிரமா வட,ச்சே வர முயற்சியுங்க. :)

    @ஆமாம் சௌம்யா,பிரிக்கும்போதுதான் கவனமா பிரிக்கணும்.மத்தபடி ஈஸிதான்.நன்றி!

    @பவித்ரா,இங்கு கிடைக்கும் ரெடிமேட் பேஸ்ட்ரிஷீட் இருந்தா ஈஸியா பண்ணலாம்ப்பா..வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

    @டிஸைன் நல்லாருக்கில்ல மேனகா?எனக்கும் ரொம்ப பிடிச்சது..அதான் செஞ்சு பார்த்துட்டேன்.நன்றி மேனகா!

    @வானதி,இவ்ளோ லேட்டா கேக்கறீங்களே?புதுவீடு பழையவீடாகிட்டது!:)

    @தெய்வசுகந்திக்கா,நன்றி!

    @எல்ல்ல்ல்ல்ல் போர்ட்,இமா கமெண்ட்டைப் பார்த்தப்பவே உன் கமெண்ட் இதான்னு கெஸ் பண்ணிட்டேன்..என் கணிப்பை சரியாக்கியதற்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நல்லாருக்குன்னு சொன்னதுக்கு ஒரு நன்றி!

    //அத பிரிச்சு வச்சே வெட்டினா மடிக்கற பிரிக்கற வேலை இருக்காதே.. ஹி ஹி..//அதைவிட சிம்பிளா ஒரு வழி இருக்கு. பேஸ்ட்ரிஷீட்,மத்த தேவையான பொருட்களை எல்லாம் அப்படியே:))))) முழுங்கிட்டு,அவன்-ல ஒரு 15மினிட்ஸ் உட்கார்ந்தம்னா ரொம்ப ரொம்ப சுலபம். ஹிஹிஹிஹிஹி!

    ReplyDelete
  18. @ஜெய்லானி அண்ணா,//இதென்ன வம்பா போச்சி ..!!நான் இமா மாமின்னுதானே சொன்னேன் எலின்னு சொல்லலியே..ஹா..ஹா//என்ன சொல்லன்னு தெரில,இப்பூடியே மெய்ன்டெய்ன் பண்ணுங்க! :) இமா,என்ன நான் சொல்வது? சரிதானே??

    ///அப்ப டிஷ்யூ கம்பனி வேலையை விட்டுடீங்கலா...அதிஸ் எங்கிருந்தாலும் வரவும்../// :))))))

    @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிக்கா அக்கா!

    @புவனா,இப்படியேதான்..அடுத்த பாட்லக்-குக்கு செய்து அசத்திருங்க..நன்றி புவனா!

    ReplyDelete
  19. //அதைவிட சிம்பிளா ஒரு வழி இருக்கு. பேஸ்ட்ரிஷீட்,மத்த தேவையான பொருட்களை எல்லாம் அப்படியே:)))))// ;) x 25

    //இமா,என்ன நான் சொல்வது? சரிதானே??// நான் என்ன சொல்வது? சரிதான். சரிதான். ;)

    ReplyDelete
  20. இமா அண்ட் மஹி.. ரெண்டு பேருக்கும் சேர்த்து ஒரு கர்ர்ர்ர்.. :)

    ReplyDelete
  21. ஆ..... வந்திட்டேன்... வந்திட்டேன்..... எலி பிடிக்க வந்திட்டேன்.. ங்ங்ங்ங்க? மகியின் கிச்சினுக்குள்ளயோ? கொஞ்சம் வழிவிடுங்கோ மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... நான் எலியைத் தேடுறேன்:).

    மகி அருமையான பேஸ்ட்ரி. கொஞ்சம் மினக்கெடவேணும், ஆனால் சூப்பராக இருக்கு.

    ReplyDelete
  22. பூஸார் தேடி வந்துட்டார் மகி. ;))
    பத்திரம் இனி. ;)

    ReplyDelete
  23. வாங்க,வாங்க அதிரா! எலியைத் தேடி வந்திருக்கீங்களா?ஓக்கே,நிதானமாத் தேடிக்கண்டுபிடிங்க. ஜெய்லானி அண்ணாவே எலியை இன்னும் கண்டுபிடிக்கலை!:)

    @சந்தனா-- :))))))

    @இமா--/நான் என்ன சொல்வது? சரிதான். சரிதான். ;)/தேங்க்ஸ் பார் தி சப்போர்ட் இமா!எச்சரிக்கைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. இமா said...
    பூஸார் தேடி வந்துட்டார் மகி. ;))
    பத்திரம் இனி. ;)
    /// ஆங்.. உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும் எனச் சொல்லிவையுங்கோ மகி:). நான் சொன்னால் ஆரும் பயப்பூடமாட்டார்களாம்:).

    ReplyDelete
  25. வாவ்... உங்களின் வித்தியாசமான பப்ஸ் டிசைனை பார்த்ததும் சமையல் ஒரு இனிய கலை என்பது புரிகிறது. உங்க கிரியேட்டிவிட்டிக்கு ஒரு சல்யூட்!

    நிச்சயம் இதை நான் முயற்சி செய்ய‌போறேன்.

    ReplyDelete
  26. Wow wounderfull recipe,too gud presentation...even step vise also excellent...

    ReplyDelete
  27. @அதிரா~~~>/ஆங்.. உந்தப் பயம் எப்பவும் இருக்கோணும் எனச் சொல்லிவையுங்கோ மகி:)./ ஆரிடம் சொல்லோணும்??எதுக்கும் எல்லாரிடமும் சொல்லிடறேன் அதிரா! :):)

    @ப்ரியா~~~>சந்தோஷமா இருக்குங்க உங்க கமெண்ட்டைப் பார்த்து! மிகவும் நன்றி! கட்டாயம் செஞ்சுபாருங்க.

    @ப்ரேமா~~~>மிகவும் நன்றிங்க ப்ரேமா!

    ReplyDelete
  28. மகி புதுமையாகவும் அருமையாகவும் இருக்கு.பேக்கிங் ராணின்னு பட்டமே கொடுக்கலாம்.

    ReplyDelete
  29. ஆசியாக்கா,வேலைகளுக்கு மத்தியிலும் வந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails