தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து கலந்தா சரி..இதுக்கெல்லாம் ஒரு ரெசிப்பி வேணுமா?-ன்னு நீங்க கேப்பது எனக்கும் கேக்குது. ஆனா பாருங்க, ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல? அதனாலதான்!:)
ஒரு முறை என் கணவரின் கொலீக் வீட்டுக்கு போயிருந்தப்ப, அவங்க வீட்டில இந்த ரைத்தா சாப்ட்டேன். கொஞ்சம் வித்யாசமா இருந்தது..ரெசிப்பிய சொல்லுங்கன்னு கேட்டுட்டு வந்தேன்.ஆனா,சொன்னபடி கேக்கிற ஆளா இருந்தா,எங்கேயோ போயிருப்பேனே!:) அவங்க சொன்னதுல என் ருசிக்கேத்தமாதிரி மாற்றங்கள் பண்ணி செய்த ரைத்தா இது. மிகவும் சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
தயிர்-1/4கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள்-1/4கப்
இது மெஷர் பண்ணலீங்க..குட்டிக்குட்டியா இருக்குமே,படம் இதோ(நன்றி:கூகுள் இமேஜஸ்)
இந்த வெள்ளரிக்கால 2 காயை தோல்சீவி, நறுக்கி போட்டிருக்கேன்.
மிளகுத்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2 டீஸ்பூன்
உப்பு
நறுக்கிய கொத்துமல்லி இலை-சிறிது.
*****எவர்சில்வர்/பைரக்ஸ் கிண்ணம்-1*****
செய்முறை
இது மிக,மிக சுலபமான ரெசிப்பி. சமைக்கத்தெரியாதவங்க(?!) கூட ஈஸியா,நொடியில செய்துடலாம்.
முதல்ல தேவையான பொருட்கள்-ல இருக்க தயிரைத்தவிர, மற்ற எல்லாப்பொருட்களையும் ஒரு கிண்ணத்துல போடுங்க.
அவ்ளோதான்..டேஸ்ட்டி ரைத்தா ரெடி!!
தயிர் புளித்ததும்,பத்திரமா எடுத்து ப்ரிட்ஜ்(அதேதான்..போன பதிவுல வந்ததே,அதே கருப்பு ப்ரிட்ஜ்தான்) உள்ளாற வச்சுடுங்க. தேவையானப்ப..இந்த பிரியாணி சமைக்கறப்ப, ரைத்தா பண்ணறப்ப, உங்க வீட்டுல யாராவது 'எனக்கு சின்ன பவுல்-ல தயிர், மேல ஷுகர் ஸ்ப்ரிங்கிள் பண்ணி குடுங்க'-ன்னு கேட்கும்போது,தேவையான அளவு எடுத்து யூஸ் பண்ணிட்டு, மீதியை ப்ரிட்ஜில வச்சுடுங்க.ஓக்கேவா?சப்பாத்தி,பிரியாணி இவற்றுடன் சாப்பிட நல்லா இருக்கும். அப்படியே சாப்ட்டாலும் நல்லா இருக்கும். :P :P
பி.கு.
இந்த தயிர்பச்சடில உபயோகித்த தயிர் ஹோம் மேட் தயிர். தயிர் பச்சடிக்கு ரெசிப்பி சொல்லிட்டு,தயிர் எப்படிப் பண்ணறதுன்னு சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா?
விட்டமின் D மில்க்(ஹோல் மில்க்,2% மில்க் இப்படிப் பல பெயர்கள் கொண்டது) ஒரு 2 கப் எடுத்து காய்ச்சணுங்க. பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!
பால் பொங்கினதும், அடுப்பை ஸிம்-ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் சுண்ட வைங்க. அப்புறம் அடுப்பிலிருந்து இறக்கி(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;)) ஆறவையுங்க.
பால் கை பொறுக்கற சூடுக்கு ஆறினதும்(அது என்ன சூடுன்னு அங்கே ஒருத்தர் கேக்கறது தெரியுது..அதாவதுங்ணா, பால் இருக்கற கிண்ணத்த வெளிப்பக்கமா தொட்டுப்பாருங்க. ஒரு 30 செகண்ட் உங்களால கிண்ணத்த தொட முடிஞ்சா,அதுதாங்க கை பொறுக்கற சூடு) 3 டேபிள்ஸ்பூன் தயிரை பால்ல சேர்த்து ஸ்பூனால நல்லா கலந்துவிடுங்க.
தயிர் உறை ஊத்தற கிண்ணம் எவர்சில்வர்/பைரக்ஸ்-ஆக இருந்தா நல்லது. ஏன்னா, இந்த பால்+தயிர் கலவை 100% தயிர் ஆகறவரைக்கும் அது நம்ம சமைக்கும் அடுப்பு பக்கத்துலயே இருக்கணும். ப்ளாஸ்டிக் எல்லாம் வச்சீங்கன்னா,டேஞ்சருங்க.உருகிடும்! இப்படி ஒரு warm-ஆன இடத்துல ஒரு 12மணிநேரம் வச்சீங்கன்னா, கட்டித்தயிர்..இதோ இது போல ரெடியாகிடும்.
பி.கு.
இந்த தயிர்பச்சடில உபயோகித்த தயிர் ஹோம் மேட் தயிர். தயிர் பச்சடிக்கு ரெசிப்பி சொல்லிட்டு,தயிர் எப்படிப் பண்ணறதுன்னு சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா?
விட்டமின் D மில்க்(ஹோல் மில்க்,2% மில்க் இப்படிப் பல பெயர்கள் கொண்டது) ஒரு 2 கப் எடுத்து காய்ச்சணுங்க. பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!
பால் பொங்கினதும், அடுப்பை ஸிம்-ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் சுண்ட வைங்க. அப்புறம் அடுப்பிலிருந்து இறக்கி(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;)) ஆறவையுங்க.
பால் கை பொறுக்கற சூடுக்கு ஆறினதும்(அது என்ன சூடுன்னு அங்கே ஒருத்தர் கேக்கறது தெரியுது..அதாவதுங்ணா, பால் இருக்கற கிண்ணத்த வெளிப்பக்கமா தொட்டுப்பாருங்க. ஒரு 30 செகண்ட் உங்களால கிண்ணத்த தொட முடிஞ்சா,அதுதாங்க கை பொறுக்கற சூடு) 3 டேபிள்ஸ்பூன் தயிரை பால்ல சேர்த்து ஸ்பூனால நல்லா கலந்துவிடுங்க.
தயிர் உறை ஊத்தற கிண்ணம் எவர்சில்வர்/பைரக்ஸ்-ஆக இருந்தா நல்லது. ஏன்னா, இந்த பால்+தயிர் கலவை 100% தயிர் ஆகறவரைக்கும் அது நம்ம சமைக்கும் அடுப்பு பக்கத்துலயே இருக்கணும். ப்ளாஸ்டிக் எல்லாம் வச்சீங்கன்னா,டேஞ்சருங்க.உருகிடும்! இப்படி ஒரு warm-ஆன இடத்துல ஒரு 12மணிநேரம் வச்சீங்கன்னா, கட்டித்தயிர்..இதோ இது போல ரெடியாகிடும்.
பி.குறிப்புக்கு ஒரு பி.கு.
இந்த உறை ஊத்தறதுக்கு தயிருக்கு என்ன பண்ணலாம்? கடைகள்-ல விக்கற ப்ளெய்ன் low fat யோகர்ட் வாங்குங்க ஒரு முறை. அது தீரும்போது இந்த மெதட்-ஐ பாலோ பண்ணி ஈஸியா வீட்டுலயே தயிர் பண்ணிக்கலாங்க.
அது எதுக்கு low fat யோகர்ட்வாங்கோணும்?நாங்க நார்மல் யோகர்டே வாங்குவம்னு சொன்னீங்கன்னா,அது நூறு சதவீதம் அது உங்க வசதி. நாங்க கொஞ்சம் டயட் கான்ஷியஸ்..அதனால low fat யோகர்ட்தான் வாங்கறது.ஹிஹிஹி ஹி(இந்த அசட்டு சிரிப்பு எதுக்குன்னா,நீங்க கேக்க நினைச்சு, டீஸன்ட்டா கேக்காம போவீங்க பாருங்க..ஒரு கேள்வி..அதுக்கான பதில். அந்த கேள்வி "low fat யோகர்ட் வாங்கற நீங்க பால் மட்டும் ஏன் low fat/fat-free வாங்கறதில்ல?")
இன்னொரு விஷயம்..இங்கே half&half -ன்னு திக் மில்க் கிடைக்கும்..அதை மைக்ரோவேவ்ல சூடு பண்ணி உறை ஊத்தினா தயிர் சூஊஊஊப்பரா இருக்கும்.ஆனா, டயட்ல இருக்கறவங்களுக்கு அதெல்லாம் வேணாம்ல?? :)
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸப்பா..முடீல! எனக்கே தாங்க முடீல.அப்ப உங்க நிலைம?!!!!! அதனால, மொக்கைய இப்போதைக்கு இத்தோட நிறுத்திடறேன்.நன்றி!
***** ===>தேவையான பொருட்களில் இந்த ஐட்டம் மிஸ் ஆனதாக கண்டுபிடித்த துப்பறியும் நிபுணருக்கு நன்றி!:)
appo nan than first-ta ennaiku..
ReplyDeleteHehehe..Mahi, naan kittatatta rendu mani nerama unka blog-ga pala thadavai open panniten...ungalukku purinju irukumey!!! ellam oru arvathula thaan..
ReplyDeleteevlo kastamana recipe ellam enakku puriyathu...ennum konjam vilakama solli irukalam nenka:-)
ReplyDeleteHome-made thayira rombha naal kazhichu pakkaren..rombha asaya irukku...appadiye pack panni anupunka..
ReplyDeleteEnnaiku all possible doubts-ku nenkaley answer pannitenka...so yarumey sandhegam kekka mudiyathu..
ReplyDeleteநித்து,இந்த ரெசிப்பி எங்களை மாதிரி கத்துக்குட்டிகளுக்கு&சமைக்கத் தெரியாதவங்களுக்கு.நீங்கள்லாம் கிச்சன் க்வீனாச்சே! உங்களுக்கு இதெல்லாம் கஷ்டமாதாங்க இருக்கும்.ஹிஹிஹி!
ReplyDeleteயாருமே சந்தேகம் கேக்க முடியாதுங்கறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.துபாய்ல இப்ப காலை 5மணிதான் ஆகுது!:)))))))))
I love thayir pachadi with all the possible veggies,love this too,thayir looks so creamy and solid!
ReplyDeleteமகி, நல்லா இருக்கு. தயிர் வித்யாசமா இருக்கு என்று நினைச்சேன். வீட்டுல செய்த தயிர் என்றாலே சுவை அதிகம் தான்.
ReplyDelete//பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.//
ஆமாம்! எங்கையாச்சும் போவதா இருந்தா பால் சட்டியையும் தூக்கிட்டுப் போங்க. அப்புறம் விபரீதம் ஆனா மகி பொறுப்பேற்க முடியாது.
மகி மொக்கை சூப்பர்,பச்சடியும் சூப்பர்.
ReplyDeleteஇமா அமைதியான பொண்ணு. ;)
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!என்னது இமா??
ReplyDeleteஅமைதியான ஆன்ட்டி/மாமின்னு சொன்னாக்கூட ஒத்துக்கலாம்.////இமா அமைதியான பொண்ணு. ;)////இது கண்டிப்பா ஏத்துக்கப்படாது.;)
கெதியா ஒரு வாக்சின் கண்டு பிடிக்கணும். 'அவ்வ்வ்வ்' வேக வேகமாப் பரவிட்டே வருது. ;)
ReplyDeleteதயிர் பச்சடிக்கு சம விளக்கம் நல்லா இருக்கு மகி
ReplyDeleteஜெய்லானீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
ReplyDeleteஎஸ் மேடம்ம்ம்ம்ம்ம்
//Ennaiku all possible doubts-ku nenkaley answer pannitenka...so yarumey sandhegam kekka mudiyathu..//
ReplyDeleteஹா..ஹா...அது என்னை மாதிரி எல் கே ஜி படிச்சிருந்தீங்கன்னா .அப்படி சொல்லி இருக்க மாட்டீங்க சந்தேகங்கள் தொடரும் ... :-))
//தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து கலந்தா சரி..இதுக்கெல்லாம் ஒரு ரெசிப்பி வேணுமா?-ன்னு நீங்க கேப்பது எனக்கும் கேக்குது.//
ReplyDeleteவெங்காயத்தை சின்னதா வெட்டி போடனுமா ..இல்லை பெரிசு பெரிசா வெட்டி போடனுமா..? நீள வாக்கிலா இல்லை வட்டவட்டமா வா..?
ம் ..சின்ன வெங்காயமா ..? இல்லை வெரிய வெங்காயமா..?
//ஆனா பாருங்க, ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல? அதனாலதான்!: //
ஓஹ் ..அப்படியா...!!!அப்படியே முதல்ல எப்படி அரிசியை களைஞ்சு வச்சு சோறு ஆக்குவதுன்னு போடுங்களேன் ..பிளிஸ்... ஏன்னா அதுதானே முதல் ஸ்டெப்பே சமையல்ல..ஹி..ஹி..
//கடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீயைத்(!) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி!:) //
ReplyDeleteஐஸ் வாட்டர் எப்படி தயாரிக்கனும்..( அதாவது ஜில் தண்ணி )) அடுத்த பதிவுக்கு க்ளூ குடுத்துட்டேன்..
//முதல்ல தேவையான பொருட்கள்-ல இருக்க தயிரைத்தவிர, மற்ற எல்லாப்பொருட்களையும் ஒரு கிண்ணத்துல போடுங்க.//
ReplyDeleteகிண்ணம் தேவையான பொருள்ள இல்லையே என்ன செய்ய ..?
//பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை //
ReplyDeleteஆனா நான் போனா சவுண்டு குடுத்துகிட்டேதானே போவேன் . அப்போ அது நினைச்சுக்கும் ஆள் பக்கத்துலதான் இருக்குன்னு.. ஹி..ஹி.. எப்படி நம்ம ஐடியா...க்கி..க்கி...
.//அப்புறம் அடுப்பிலிருந்து இறக்கி(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;)) ஆறவையுங்க.//
ReplyDeleteஓக்கே...!! இங்கே ஆற வைக்கிறது அடுப்பையா ? இல்லை பாலையா...ஹி..ஹி..சொல்லவே இலலை
//அது நம்ம சமைக்கும் அடுப்பு பக்கத்துலயே இருக்கணும். ப்ளாஸ்டிக் எல்லாம் வச்சீங்கன்னா, டேஞ்சருங்க.உருகிடும்! //
ReplyDeleteபிளாஸ்டிக் உருகிடும் விவரம் கண்டு பிடிச்ச நவீன விஞ்ஞானி மஹி வாழ்க...வாழ்க வாழ்க...அவ்வ்வ்வ்
ஆனா நாம அன்னைக்கு எதுவும் சமைக்காம வெரும் அடுப்பு பக்கம் வச்சா கூட உருகிடுமா..?????
//இப்படி ஒரு warm-ஆன இடத்துல ஒரு 12மணிநேரம் வச்சீங்கன்னா, கட்டித்தயிர்..இதோ இது போல ரெடியாகிடும்.//
ReplyDelete12 மணிநேரத்துக்கு கொஞ்சம் முன்னே பின்னா ஆனா கட்டிதயிர் ஆகாம தண்ணி தயிரா ஆயிடுமா..?
//ஸ்ஸப்பா..முடீல! எனக்கே தாங்க முடீல.அப்ப உங்க நிலைம?!!!!! //
ReplyDeleteஉங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு எப்படி இருந்த புள்ள இந்த மாதிரி ஆகிப்போச்சே...அவ்வ்வ்வ்வ்
//அதனால, மொக்கைய இப்போதைக்கு இத்தோட நிறுத்திடறேன்.நன்றி! //
இப்பதான் கொஞ்சம் விவரமா ஆகிட்டு வறீங்க .. கீப் பிட் அப்... :-))))))))))))
@@@@சிநேகிதி said..
ReplyDeleteதயிர் பச்சடிக்கு சம விளக்கம் நல்லா இருக்கு மகி //
ஏங்க ..இவங்களை பிரியாணி செய்ய வச்சா இன்னும் எப்படியெல்லாம் அவஸ்தை படுவாங்கன்னு நீங்க கேக்க வரது புரியுது..ஹா..ஹ...
//கெதியா ஒரு வாக்சின் கண்டு பிடிக்கணும். 'அவ்வ்வ்வ்' வேக வேகமாப் பரவிட்டே வருது. ;) //
ReplyDeleteஹா..ஹா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இமா அமைதியான பொண்ணு. ;) //
ReplyDeleteஎப்பத்திலிருந்து..?
delicious pachadi,love it with briyani.
ReplyDeletemahi...superba thayir seithu irukinga..I m buying yogurt in American groceries...But when i make thayir with that yogurt its not turning good at all...My friends suggest to buy yogurt in Indian grocery and try it...Which brand r u buying...Me too using low fat yogurt...But when coming to milk Vitamin D milk...
ReplyDelete//யாருமே சந்தேகம் கேக்க முடியாதுங்கறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.துபாய்ல இப்ப காலை 5மணிதான் ஆகுது!:)))))))))//
ReplyDeleteஆஹா அடிச்சீங்க பாருங்க ஓரே பால்ல டபுள் சிக்ஸர் ( ஒன்னு நே பால்) ஹா..ஹா...
ஆஹா மகி வெயில் கூட அதிகமில்லையே!! மொக்கை தாங்கல.
ReplyDelete//பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!
//
நாங்கதான் பால் குக்கர்ல வெச்சுருவம்ல. அது வ்சிலடிச்சு கூப்பிடுமே!.
warm ஆன இடத்துல வெக்க முடியலன்னா , பால்+ தயிர் கலவையில ஒரு வர மிளகாயை போட்டு வச்சாலும் சீக்கீரம் தயிர் ஆயிரும்.
பச்சடியும்,தயிரும் சூப்பர்ர்ர்..
ReplyDeleteகீதா,நான் இண்டியன் ஸ்டோர்ல Deep desi yogurt வாங்குவேன்.சில சமயம் பக்கத்துல இருக்க லோகல்ஷாப்ஸ்ல Dannon plain yogurt-ம் வாங்குவேன்.இரண்டிலுமே இப்படி உறை ஊத்த யூஸ் பண்ணிருக்கேன்.தயிர் நல்லா இருக்கே.
ReplyDeleteஉங்க ஊர் க்ளைமேட்டுக்கு 12 மணிநேரத்துக்கு பதிலா இன்னும் ஒரு சிலமணி நேரம் அதிகமா ஆகுமோ??
நீங்க மறுபடியும் ட்ரை பண்ணிப்பாருங்க.நன்றி கீதா!
/.இவங்களை பிரியாணி செய்ய வச்சா இன்னும் எப்படியெல்லாம் அவஸ்தை படுவாங்கன்னு நீங்க கேக்க வரது புரியுது..ஹா..ஹ.../கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அவங்களுக்கு நான் செய்யற பிரியாணி எப்படி இருக்கும்னு நல்லாவே தெரியுமே...
ReplyDeletehttp://tamilkudumbam.com/-mainmenu-187/--mainmenu-188/---mainmenu-210/4569-veg-biriyani-oven-method.html
இங்கே போய்ப்பாருங்க ஜெய் அண்ணா!உங்களுக்கும் தெரியும்.கிக்..கிக்..கி!
தமிழ் குடும்பத்தில போய் கும்மி யடிச்சா நல்லாவா இருக்கும் அதனால ...நீங்களா கம்பை கையில குடுத்து அடிக்க சொல்லாதீங்க ..:-)))))))
ReplyDelete(( தமாசு ))
///வெங்காயத்தை சின்னதா வெட்டி போடனுமா ..இல்லை பெரிசு பெரிசா வெட்டி போடனுமா..? நீள வாக்கிலா இல்லை வட்டவட்டமா வா..? ம் ..சின்ன வெங்காயமா ..? இல்லை வெரிய வெங்காயமா..?
ReplyDelete///ம்ம்..சின்ன வெங்காயமா இருந்தா நீளவாக்குல வெட்டுங்க.மீடியம் சைஸ் வெங்காயமா இருந்தா வட்டவட்டமா வெட்டுங்க. பெரீய்ய வெங்காயம்னா ரெம்ப ஈஸி..தோலை(வெங்காயத்தின் தோலைத்தாங்க) உரிச்சு(இது ஆப்ஷனல்) தயிருக்குள்ள அப்பூடியே போடலாம்.ஹிஹிஹிஹி!
///ஆனா நான் போனா சவுண்டு குடுத்துகிட்டேதானே போவேன் . அப்போ அது நினைச்சுக்கும் ஆள் பக்கத்துலதான் இருக்குன்னு.. ஹி..ஹி.. எப்படி நம்ம ஐடியா.//ஜூப்பர் ஐடியா ஜெய் அண்ணா! ஆனா எல்லா ஊர் பாலும்,உங்க வீட்டுப்பால் மாதிரி அதிபுத்திசாலியா இருக்காதே? அப்ப என்ன செய்ய??
//எதுவும் சமைக்காம வெரும் அடுப்பு பக்கம் வச்சா கூட உருகிடுமா..?????//நீங்க சும்மா,ப்ளாஸ்டிக் டப்பாகிட்ட ஒரு 2நிமிஷம் பேசினாலே அது உருகிடுமே!அதுக்குப் பொறகு சமைச்சா என்ன,சமைக்கலைன்னா என்ன? கிக்,கிக்,கி!
///உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு எப்படி இருந்த புள்ள இந்த மாதிரி ஆகிப்போச்சே...அவ்வ்வ்வ்வ்//ஹூம்..இங்கயும் ஒருத்தர் இதே டயலாக்-ஐ சொல்லிட்டு இருக்காரு!எல்லாம் சகவாச தோஷம்தான் ஜெய் அண்ணா!உங்க மூளைல ஒரு 1%ஆவது உங்க சகோஸ்-க்கு இருக்காதா என்ன??:):)
இங்க வந்து உறை போட்டதுல நிறைய வாட்டி உரையாம போயிருக்கு.. நம்ம ஊருல ஒரு துளி போட்டா போதும்.. மூணு ஸ்பூன் போடணுமா? நன்றி.. உண்மையாலுமே இது எனக்கு ரொம்ப உபயோகமான குறிப்பு.. (ரைத்தாக்கு நாம இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுவோம் :) )
ReplyDelete//ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல? அதனாலதான்!:)///
ReplyDeleteஅதானே.... நீங்க சொல்லுங்கப்பா... ;-))
//சொன்னபடி கேக்கிற ஆளா இருந்தா,எங்கேயோ போயிருப்பேனே!:) ///
ஹா ஹா ஹா.. செம செம.. இந்த வரி... கலக்குறீங்கப்பா.. :-)))
///தயிர் பச்சடிக்கு ரெசிப்பி சொல்லிட்டு,தயிர் எப்படிப் பண்ணறதுன்னு சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா?///
கரெக்ட்.. இப்படி தான் ஆர்டர் படி, அழகா சொல்லிதரணும்.. :-)
//இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!//
ஹா ஹா.. எக்ஜாட்லி.... :D :D
//(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;))///
ஹா ஹா.. மகி.. சூப்பர் பா.. :-))
:)
ReplyDeleteஸ்மார்ட் ப்ளாகர் அவார்ட்:
ReplyDeleteushhhhhh..
apaa
mudiala....:))
ஹா..நகைசுவையாக ஒரு குளுகுளு ரெஸிப்பி..ரொம்ப ஜில்லென்று இருக்கு மகி.
ReplyDeleteஹாய் மகி...முதல்முறையா பின்னூட்டம் போடுறேன்...தற்செயலா உங்க வலைப்பூ கண்ணில் பட்டது...கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையும் படிச்சுட்டேன்...உங்க மொக்கைகளுக்கும் ஈஸியான சுவையான சமையல் குறிப்புகளுக்கும் புது விசிறி கிடைச்சுட்டேன்...அடிக்கடி வருவேன்.
ReplyDeleteஜெய்லானிகிட்ட செமையா மாட்டிக்கிட்டீங்க போல..;) எப்டி ஜெய்லானி இப்டிலாம்...
என்றென்றும்16
my fav thayir pachadi, great, as always hilarious writing
ReplyDelete@ராஜி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete@ஆசியாக்கா,நன்றி ஆசியாக்கா!
@பாயிஸா,நன்றிங்க!
@ப்ரேமா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@தெய்வசுகந்தி,/நாங்கதான் பால் குக்கர்ல வெச்சுருவம்ல. அது வ்சிலடிச்சு கூப்பிடுமே!./கர்ர்ர்ர்!இங்கே பெரும்பாலானவங்ககிட்ட பால்குக்கர்லாம் இல்லயே!
/பால்+ தயிர் கலவையில ஒரு வர மிளகாயை போட்டு வச்சாலும் சீக்கீரம் தயிர் ஆயிரும்./இது புது தகவல்..நன்றி சுகந்திக்கா!
/வெயில் கூட அதிகமில்லையே!! மொக்கை தாங்கல./ஹிஹி!!
@மேனகா,நன்றி மேனகா!
@சந்தனா,/ரைத்தாக்கு நாம இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா பிட்டிங் போடுவோம் :)/என்னென்ன பிட்டிங்னு சொன்னா எல்லாரும் ட்ரை பண்ணுவம்ல!:)
@ஆனந்தி,வாங்க! ரொம்ப நன்றிங்க..உங்கள மாதிரி ஆதரவு தர ஆளுங்க 4 பேர் இருந்தா போதும்.மொக்கயா போட்டு தாக்கிரமாட்டோம்?? :):)
ReplyDelete@சிவா,/ushhhhhh..
apaa
mudiala....:))/ இந்த மாதிரி வெயில் தாங்கமுடியாம அவஸ்தைப்படறவங்களுக்குதானே கூலா தயிர் ரெசிப்பி போட்டிருக்கேன்? கூல்டவுன் சிவா!
நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்.
@ஸாதிகா அக்கா,மிக்க நன்றி!
@என்றும் 16,ரொம்ப சந்தோஷங்க உங்க கருத்துக்கு.முதல் பின்னூட்டம்னு பார்த்தாலே எனக்கும் மகிழ்ச்சியா இருக்கும்.அடிக்கடி வாங்க.நன்றி!
@வேணி,நன்றி வேணி!
நல்ல பகிர்வு மகி
ReplyDeleteபடிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
தயிர் படம் கொள்ளை அழகுபா !
@@@ priya.r said...
ReplyDeleteநல்ல பகிர்வு மகி
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
தயிர் படம் கொள்ளை அழகுபா !//
தயிர இதுக்கு முன்னால பாத்ததே இல்லையா...அவ்வ்வ்வ்வ்..
பால் பாக்கெட்டை பிரிக்காம அப்படியே நாலு நாளைக்கு வெய்யில்ல வையுங்க . அஞ்சவது நாள் திறந்து பார்த்தா அங்கே பால் இல்லாம அது தயிரா இருக்கும் .என்னா ஒன்னு கெட்ட வாடை அடிக்கும் அவ்வளவுதான் ஹி..ஹி..
(( மஹி வந்து என்னா சொல்றாங்கன்னு தெரியல ஏற்கனவே ஒருத்தரை விரட்டிட்டேன்னு சொன்னாங்க ...:-)) ))
/மஹி வந்து என்னா சொல்றாங்கன்னு தெரியல/மஹி இன்னைக்கு லீவுல இருக்காங்களாம்..மண்டே வந்து பதில் சொல்வாங்களாம்.[அப்போ நீ யாருன்னு கேக்கறீங்களா? நானு மஹியோட மைண்ட்வாய்ஸுங்கோ.ஹிஹி!]
ReplyDelete/ஏற்கனவே ஒருத்தரை விரட்டிட்டேன்னு சொன்னாங்க ...:-)) )) /கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஜெய் அண்ணா,விரட்டிட்டீங்கன்னு சொன்னேனா? பயமுறுத்தாதீங்கன்னுதான சொன்னேன்?
/பால் பாக்கெட்டை பிரிக்காம அப்படியே நாலு நாளைக்கு வெய்யில்ல வையுங்க . அஞ்சவது நாள் திறந்து பார்த்தா.../அட,அட,அட!
அனுபவம் பேசுது போலயே?? :))))
@ப்ரியா,நல்வரவுங்க! நீங்க திருப்பூர்க்காரப்புள்ளதான,இந்த அலப்பறைக்கெல்லாம் நீங்க பயப்படமாட்டீங்கதானே? ;) நன்றிங்க,வருகைக்கும்,கருத்துக்கும்!
:)
ReplyDelete49
ReplyDelete50....hey half century....
ReplyDelete//ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல//
ReplyDeleteஅதானே... ப்ளாக் இருக்கறப்ப தயிர் பச்சடி என்ன தயிர் எப்படி செய்யறதுன்னு கூட போஸ்ட் போடுவோம்... கரெக்ட் தானே மகி... ஹா ஹா ஹா... சூப்பர்..
@சிவா... :)))))))))))))
ReplyDelete@புவனா,அதானே? தயிர் செய்வது எப்படின்னு போட்டுட்டமில்ல? அடுத்து ஜில்தண்ணி-சுடுசாதம் இப்படி கஷ்டமான ரெசிப்பியெல்லாம் ரெடி பண்ணிட்டு இருக்கேன் புவனா! :)
// @ப்ரியா,நல்வரவுங்க! நீங்க திருப்பூர்க்காரப்புள்ளதான,இந்த அலப்பறைக்கெல்லாம் நீங்க பயப்படமாட்டீங்கதானே? ;) நன்றிங்க,வருகைக்கும்,கருத்துக்கும்!//
ReplyDeleteரொம்ப தேங்க்ஸ் மகி ;ஹ ஹா ஆமாம் திருப்பூர் தான்பா;
சே சே !பயமெல்லாம் இல்லை ;எனக்கு தான் அப்பாவி தங்கமணிகள் சங்கம் இருக்கிறதே !நீங்களும் வருவீர்கள் தானே ! :)
உங்களின் கரிசனம் எனக்கு
மனதில் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறதுபா! நன்றி மகி
நிறைய எழுதுங்கள் ரசிக்க ,கருத்துக்களை பரிமாறி கொள்ள
நாங்களும் பின்னூட்டத்தில் வருகிறோம்பா.
@@@ priya.r said...
ReplyDelete//நல்ல பகிர்வு மகி
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
தயிர் படம் கொள்ளை அழகுபா !//
@ஜெய்லானி said
//தயிர இதுக்கு முன்னால பாத்ததே இல்லையா...அவ்வ்வ்வ்வ்..//
ஜெய்லானி சார் !
மாலை சூரியன்ரொம்ப அழகு,பௌர்ணமி நிலா கொள்ளை அழகு என்று சொல்லும் பொழுது
இதுக்கு முன்னால சூரியன்& நிலவை பாத்ததே இல்லையா என்று கேள்வி யாரும் கேட்பது இல்லை தானே
அதே போல தான் எங்கள் தோழி மகியின் தயிர் படம் ,அதை அவர் அழகாக எடுத்து காட்டிய விதமும் ;அதன் தோற்றமும் தான்
என்னை அவ்வாறு எழுத வைத்தது ;இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன்
மட்றபடி உங்களின் கம்ப்யூட்டர் டிப்ஸ் முதல் கல்யாண மாலை வரை ,உங்கள் ப்லோக்ளில் படிக்கும் silent readers லில் நானும் ஒருவர் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்
உங்கள் மூலமாக தான் மகி போன்ற தோழிகளின் அக்கறையும் ,கரிசனத்தையும் ,முதல் முதலாக பின்னூட்டம் போடும் தோழியின் மனம் வருத்தபட்டு விட கூடாது என்ற உயர்ந்த உள்ளத்தையும் புரிந்து கொள்ள முடிந்தது .
Thanks for sharing magi
ப்ரியா,எல்லாருமே காமெடியை ஸ்போர்ட்டிவா எடுத்து பதிலுக்கு காமெடி பண்ணுவாங்கன்னு எதிர்பார்க்க முடியாதில்லயா? சில பேர் சென்ஸிட்டிவ் ஆட்களாகவும் இருப்பாங்க.தெரிந்தவர்கள் என்றால் நானும் ஜெய் அண்ணாகூட சேர்ந்து காமெடி பண்ணுவேன். உங்களை இப்பதானே தெரியும்?அதான் கொஞ்சம் காஷியஸா இப்படி சொன்னேன்.பெரிய வார்த்தைகள் எல்லாம் வேணாம்.வாங்க,நீங்களும் வந்து எங்களுடன் ஜோதில ஐக்கியமாகி,காமெடி பண்ணுங்க.:)
ReplyDeleteநன்றி ப்ரியா!
மகி.. நீங்க சொல்லி கூப்பிட்ட பிறகு...ஜோதியில நானும் சேர வரேன்ப்பா.. :-)))
ReplyDelete(உன்ன எப்படா..கூப்ட்டேன்னு கேக்காதீங்க.....டாட்டா)
ஆனந்தி,நீங்கள்லாம் ஆல்ரெடி ஜோதிலதான் இருக்கீங்க!:)
ReplyDelete///ஆனந்தி,நீங்கள்லாம் ஆல்ரெடி ஜோதிலதான் இருக்கீங்க!:)///
ReplyDeleteஅப்போ சரி.. :-))
தயிர்ப் பச்சடி காமெடி பச்சடியாகவும்.கமென்ட்ஸ் படிக்க அவியலாகவும் ரொம்பவே சூப்பர்.
ReplyDeleteஆமாம் மகி,
ReplyDeleteஒவ்வொரு பதிவுக்கும் இவ்ளோஓஒ கமெண்ட்ஸா ........ அவர்கள் மீண்டும் வராதபோது கஷ்டமாத்தான் இருக்கும். மொக்கையில் காமாக்ஷி அம்மாவும் கலந்திருக்காங்கபோல !
மொக்கைப் லேபிள்ல 53 பதிவுகள் இருக்கா, அதை க்ளிக் பண்ணினா எல்லா பதிவுகளையும் உங்களால பார்க்க முடியுதா ? முதல் பக்கத்தில் வரும் பதிவுகள் தவிர்த்து மற்றதைப் பார்க்க முடிவதில்லைதானே. ஏதாவது பார்க்கலாம் என பலமுறை முயற்சித்தாலும் முடியவில்லை.