Wednesday, September 22, 2010

கேப்ஸிகம் க்ரேவி

தேவையான பொருட்கள்
கேப்ஸிகம்-1
வெங்காயம்-1(மீடியம் சைஸ்)
தக்காளி-1(மீடியம் சைஸ்)
பச்சைமிளகாய்-1
புளிக் கரைசல்-1/4கப்
வரமிளகாய்-4(காரத்துக்கேற்ப)
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
பட்டை-2" துண்டு
கிராம்பு-2
பிரிஞ்சி இலை-1
இஞ்சி-பூண்டு விழுது-1ஸ்பூன்
கொத்துமல்லி இலை-சிறிது
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

வறுத்து அரைக்க
எள்-1டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
கேப்ஸிகம்-ஐ பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெறும் கடாயில் எள், வேர்க்கடலை,மிளகாய்,தேங்காய் இவற்றை கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.

அதிகம் வறுக்க வேண்டியதில்லை.எள் பொரிந்து,கடலை சூடானதும், மற்ற பொருட்களை சேர்த்து இறக்கிவிடலாம்.கடாயின் சூட்டிலேயே மிளகாயும், தேங்காயும் சூடாகிவிடும்.வறுத்த பொருட்களை ஆறவைத்து,புளிக்கரைசலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.


கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் காயவைத்து, கேப்ஸிகம் துண்டுகளை வதக்கி,தனியாக எடுத்துவைக்கவும்.

அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்து, பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும். அத்துடன், வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து,பச்சை வாடை போகும்வரை கிளறவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

அதனுடன்,அரைத்த விழுது,மஞ்சள்தூள்,உப்பு,தேவையான நீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும், வதக்கி வைத்துள்ள கேப்ஸிகம் சேர்க்கவும்.


குறைந்த தீயில்,எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்கவிட்டு, மல்லி இலை,சர்க்கரை தூவி இறக்கவும்.
கேப்ஸிகம் க்ரேவி தயார்!
சப்பாத்தி,பிரியாணி,வெஜ்-புலாவ்,தோசை இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு
  • வரமிளகாயிற்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்க்கலாம். (வெங்காயம்,தக்காளி வதக்கும்போது சேர்த்து வதக்கவும்,)
  • மசாலா தவிர்க்க நினைத்தால், இஞ்சி-பூண்டு,பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை இல்லாமலும் செய்யலாம்.
  • புளிக்கரைசலை அரைப்பதற்கு பதிலாக, மசாலா வதங்கி வந்தபின்னர் நேரடியாக ஊற்றி கொதிக்கவிடலாம். எள்+தேங்காய்+கடலையை ட்ரையாக பொடித்து சேர்க்கலாம்.

21 comments:

  1. Recipe nalla irukku..ethuvarai gravyil ellu serthu seidathu illai..

    ReplyDelete
  2. கிரேவி வித்தியாசமாக நன்றாகயிருக்கு...

    ReplyDelete
  3. wow gravy paarkave pramathama iruku.... saapita epdi irukum.... mmmmm

    http://akilaskitchen.blogspot.com

    Regards,
    Akila.

    ReplyDelete
  4. it looks super delicious, sure to try sometime, beautiful

    ReplyDelete
  5. சூப்பர்பாக இருக்கு மகி...நானும் இது மாதிரி எப்பொவாது செய்வதுண்டு...இன்றக்கு செய்திட வேண்டியது தான்...நன்றி...

    ReplyDelete
  6. Nice recipe, Mahi. Will surely try it.

    ReplyDelete
  7. மகி கிரேவி ரொம்ப விதியாசமாக இருக்கு செய்துபார்க்கிறேன்

    ReplyDelete
  8. நல்லா இருக்குது மகி!!

    ReplyDelete
  9. புளி கரைசல் போடாம நல்லாயிருக்குமா? இந்த வாரம் பண்ணிடறேன்.. கேப்சிகம் ரெண்டு வீட்டுல கெடக்கு :)

    ReplyDelete
  10. Feel like eating roti with that gravy! Very unique recipe!

    ReplyDelete
  11. வித்தியாசமாக இருக்கு மகி!

    ReplyDelete
  12. நல்ல ரெசிப்பி. இதற்கு முன்பு கேள்விப்பட்டதில்லை.

    ReplyDelete
  13. @நித்து,செய்துபாருங்க.நல்லா இருக்கும்.நன்றி நித்து!
    @மேனகா,நன்றி மேனகா!
    @அகிலா,சாப்பிட சூப்பரா இருக்கும்ங்க,செய்து பாருங்க!:)
    @வேணி,நன்றிங்க!
    @கீதா,செய்துட்டீங்களா நேத்து? நன்றி கீதா!
    @மஹேஸ்,நன்றிங்க!
    @பாயிஸா,நன்றி!
    @சுகந்திக்கா,நன்றி!
    @சிவா,எப்ப வந்தாலும் நீங்க ஆல்வேஸ் பர்ஸ்ட்தான்.நன்றி சிவா! :)
    @சந்தனா,புளி ஊத்தினாதான் இந்த க்ரேவி டேஸ்ட்டா இருக்கும். புளி இல்லாமன்னா,கேப்ஸிகம் பொரியலா பண்ணிடறது பெஸ்ட்!
    @ராஜி,நான் வெஜ்புலாவ்-கூட சாப்ட்டேன்.சூப்பரா இருந்தது!நன்றிங்க!
    @சாரு,நன்றி சாரு!
    @ஸாதிகாக்கா,செய்து பாருங்க.நன்றி!
    @வானதி,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானதி!

    ReplyDelete
  14. மதியம் செய்தாச்சு மஹி.. புளி சேர்த்து தான்.. எள் மட்டும் கிடைக்கல..

    புலாவ்க்கு பண்ணியிருந்தேன்.. லேசான புளிப்பு சுவையோட நல்லா இருந்தது.. நல்ல மேட்ச்.. தாங்க்ஸ் :)

    ReplyDelete
  15. கேப்சிகம் கிரேவி நல்ல கும்முன்னு இருக்கு

    ReplyDelete
  16. @லாவண்யா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    @சந்தனா,செய்துபார்த்து கருத்தும் தந்ததுக்கு மிக்கநன்றி!

    @ஜலீலாக்கா,வருகைக்கும் சூப்பர் கமெண்ட்டுக்கும் நன்றி ஜலீலாக்கா!

    ReplyDelete
  17. mahi சூப்பரா இருக்கு. நானும் செய்வேன் ஆனால் புளி சேர்த்தில்லை.
    ரொட்டி,புல்க்காக்கு நல்லா இருக்கும். நான் அடிக்கடி இது செய்வேன். மஹி
    கேப்சிகம் உடம்பிற்கு ரொம்ப நல்லதும் கூட அப்படி நான் செல்லல்லை என் டாக்டர் தோழி சொல்வாங்க.

    ReplyDelete
  18. Capcicum Gravy superba irukku mahi...pulav kooda nalla irukkuma seythu paaarkkirenpa...thanks.

    ReplyDelete
  19. விஜி,கேப்ஸிகம் பற்றிய தகவலுக்கு நன்றி!புளி சேர்த்து செய்துபாருங்க.நல்லா இருக்கும்.நன்றி விஜி!

    கொயினி,எப்படி இருக்கீங்க?:)
    கேப்ஸிகம் செய்து பாருங்க.நன்றி,வருகைக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails