1.வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்
மகி
Mahi
2.அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆமாங்க..அது என் உண்மைப்பெயரின் சுருக்கம்..என் முழுப்பெயர் ஜஸ்ட் ஐந்தெழுத்துதாங்க.அது நீளமா இருக்குன்னோ என்னவோ,சிறுவயது முதலே வீட்டில் இப்படிதான் கூப்பிடுவாங்க.அதனால் இங்கும் இதே பெயரிலேயே தொடர்கிறேன்.
3.நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
இதைப்பற்றி சொல்வதுன்னா,ஒரு குறுநாவலே எழுதலாம்.:) என்னால் முடிந்த அளவு சுருக்கிஎழுதுகிறேன்.
கையில் ஒரு டிஜிட்டல் கேமராவும், சமையல்ல ஆர்வமும்,ஏராளமான நேரமும் கிடைத்த காலங்கள்.நானும் சமைக்கிறேன்னு எனக்கே நம்பமுடியாம(!) ப்ரூஃபுக்காக (இது கொஞ்சம் ஓவராவே இருக்கோ?;) ) போட்டோ எடுத்து வைக்க ஆரம்பிச்சேன்.அப்பொழுது என் கணவரின் ஆபீஸும் வீட்டுப்பக்கத்திலேயே இருந்ததால்,ஒரு சிலநாட்கள் லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு நாள் வரேன்னு சொல்லிட்டு வரவே மாட்டாருங்க.சமைச்சு வச்சு, மண்டை காஞ்சு போய் உக்காந்திருப்பேன்.இவர் லன்ச்சுக்கு வராம இருக்க நாட்கள்ல சமைத்த உணவை அழகா டேபிள்ல அடுக்கி, போட்டோ எடுத்து அவருக்கு மெய்ல் பண்ணுவேன்.இதோ இதுதான் அப்படி முதன்முதலா அவருக்கு அனுப்பிய மெனு.
அதே வேகத்தில எடுத்த மற்றொரு நாளின் லன்ச்..
இந்த ஐடியா நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு. போட்டோவைப் பார்த்த உடனே வேலை இருந்தாலும் முடிச்சிட்டு உடனே சாப்பிட வருவாரு. அப்படி எடுத்த போட்டோஸ் எல்லாம்,மஹி'ஸ் கிச்சன் என்ற பேர்ல பிக்காசால அப்லோட் பண்ணி,என் நண்பர்களுக்கு,குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளவும் ஆரம்பிச்சேன்.
இணையத்தில உலவும்போது பல குக்கிங் ப்ளாக்ஸ்-ஐ பார்ப்பேன். இந்தத் தளங்களைப் பார்த்துப் பார்த்து நாமும் ஒரு ப்ளாக் ஓப்பன் செய்தால் என்னன்னு தோணியது.என் கம்ப்யூட்டர் அறிவு ப்ரிலிமினரி லெவல்தான்.இருந்தாலும் முயற்சித்துப்பார்க்கலாம்னு wordpress-ல ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணேன்.அதைப்பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக்குங்க. வேணாம்னா அப்படியே தொடருங்க.
அந்நேரம்தான் யூட்யூப்ல ஏதோ தேடுகையில் தமிழ்குடும்பம்.காம் கண்ணில பட்டுது. ஒரு ரெசிப்பி அனுப்பி சில மணி நேரங்கள்லயே பப்ளிஷ் பண்ணாங்க,அதுக்கு கமெண்ட்ஸ் வேற வேகமா வந்தது. எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.இவ்வளவு சிம்பிளா இருக்கே..மெய்ல்-ல டைப் பண்ணி,போட்டோஸ் அட்டாச் பண்ணி அனுப்பினாலே போதுமே,அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு(!!) ப்ளாக்ல போடணும்? இங்கேயே அனுப்புவோம்னு அனுப்ப ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல அறுசுவை.காம் அறிமுகமானது. அதிலும் உறுப்பினராகி, செல்லங்கள் என்ற த்ரெட்ல என் வீட்டுச் செல்லங்கள் பற்றி சொல்ல ஆரம்பிச்சேன். நட்பு வட்டமும் விரிவடைந்தது.
இதுக்கிடையிலே கூகுள் ப்ளாகர்-லயும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு,அதுவும் தூங்கிட்டு இருந்தது.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிறைய ஆட்கள் தனித்தனியே வலைப்பூக்கள் ஆரம்பிச்சாங்க. எனக்கும் தைரியம் வந்து பழைய அக்கவுண்ட்டை தூசு தட்டி எடுத்தேன். அதிலே ஒரு பதிவும் போட்டபின்னர் பார்த்தா,போட்டோஸ் சேர்க்க முடில.ஸ்பேஸ் இல்ல. (என்ன ஒரு நேரம் பாருங்க!) இந்த முறை விடாது கருப்பு-ரேஞ்சுல இன்னொரு அக்கவுண்ட்ல இருந்து இந்த ப்ளாகை போன பொங்கலன்று பொங்க வச்சுட்டேன்.:) [அப்ப ஸ்பேஸ் இல்லாத ப்ளாக் என்னாச்சுன்னு கேக்கறீங்களா? அதுவும் இருக்கு,Mahi's kitchen என்ற பெயரிலே,இந்த ப்ளாகின் டாப் ரைட் கார்னர்ல பாருங்க.]
4.உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவுமே செய்யலைங்க.ப்ளாகிங் என் பொழுதுபோக்கு.எனக்குப் பிடித்த,நான்ரசித்த விஷயங்களை, ரசித்துச் செய்த சமையலை,சென்று வந்த பயணங்களின் இனிமையான நினைவுகளை சேமித்து வைக்க இது ஒரு இடம்,அவ்வளவே.என் வலைப்பதிவு பிரபலமாகவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இன்னமும் வரமாட்டேனென்கிறது.இந்த வலைப்பூவில் உலவுபவர்கள்,முகம் சுளிக்காமல் வாய் விட்டு சிரித்துட்டு,இங்கே செலவிட்ட நிமிடங்கள் வீணாகவில்லை என்ற திருப்தியுடன் சென்றால் அதுவே போதும்.
5.வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆம்..பகிர்ந்திருக்கிறேன்.பெரு
பண்டோரா முறுக்கு
பூப்போல இட்லி-புதினா சட்னி: பகுதி-1,பகுதி-2,பகுதி-3
வீட் ப்ரெட் ஹல்வா
விளைவுகள்னு பாத்தா, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விளைவுகள் எதுவுமில்லை.சிறு-சிறு நிகழ்வுகளை அவ்வப்பொழுது மறந்துடுவேன்.நினைவு வைத்துக்கொள்வதில்லை.
101 சதவீதம் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.
7.நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஏற்கனவே சொன்னமாதிரி,ஆரம்பித்து அம்போ-ன்னு விட்ட ப்ளாகுகளை கணக்கிலெடுத்தால் என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் இருக்கு. அவற்றில் ஆரோக்கியமா,ஆக்டிவா பூத்துக் குலுங்குவது இந்த தமிழ் வலைப்பூ ஒன்றுதான்.
8.மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மற்ற பதிவர்கள் மீது கோபம்-பொறாமையெல்லாம் இல்லைங்க.ஒரொருவரின் தளங்கள்,ஆர்வம்,ரசனைகள் ஒவ்வொரு மாதிரி. என் விருப்பங்கள்,எண்ணங்கள் வேறுபடலாம். அதனால் நீங்க கேட்ட உணர்வுகளுக்கு இடமில்ல.
9.உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
இணையத்தில் எனக்குக் கிடைத்த தோழமைகள்தான் முதலில் கருத்து சொல்லியிருக்காங்க.அவரைப்பற்றி நானே சொல்வதைவிட,கொஞ்சம் வெயிட் பண்ணினீங்கன்னா அவங்களே சொல்லுவாங்க.. :):):)ஏன்னா..இந்தத் தொடர்பதிவைத் தொடரப்போவது அவங்களேதான்.
10.கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
அதிகமா சொல்வதற்கு ஒன்றும் இல்லை..யார் மனதையும் என் வார்த்தைகள் புண்படுத்தக்கூடாது என்று நினைத்து அதே போல இருக்க முயற்சிக்கிறேன்.
~~~~~~~~~~~~~~
வழக்கம்போல, பொறுமையா இதுவரை படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லிட்டு, படிச்ச களைப்பைப் போக்க,சூடா..மொறு-மொறு வடை!
இந்தத்தொடரை தொடர இருப்பது அன்புத்தோழி
வானதி
வானதி,சீக்கிரமா வடையை ருசித்துட்டு,சட்டுப்புட்டுனு தொடருங்க..நன்றி!
Nalla irukku unga answers ellam...
ReplyDeleteமகி, சூப்பரா எழுதியிருக்கீங்க. தமிழ் குடும்பத்தில் தொடங்கிய நட்பு, அறுசுவையில் தொடர்ந்து, இன்னும் தொடருகின்றது. போட்டோ எடுத்து படங்களை வேலைக்கு அனுப்புவது நல்ல ஐடியா. என் கணவர் பெரும்பாலும் சாப்பாடு கொண்டு போய் விடுவார்.
ReplyDeleteகொஞ்சம் டைம் தாங்க, மகி. தொடர்பதிவு சீக்கிரம் எழுதி முடிச்சிடுவேன்.
good!!!!!!!!
ReplyDeleteமஹி, ஆட்டோ-பயாக்ரஃபி நல்லாருக்கு.அதுவும் ப்ளாக் உலகத்திற்கு தாங்கள் பிரவேசித்த கதையை பொறுமையா நல்லா விளக்கியிருந்தீங்க. நிஜமாவே நல்ல காமடி கலந்து எழுதறீங்க. என்ன...வடை தான் வாய்க்கு எட்டலை
ReplyDeleteஉங்க வீட்டுல சமைச்சத போட்டோ எடுத்து போட்டா சாப்பிட வருவாரு... எங்க வீட்டுல அப்படியே எஸ்கேப் ஆய்டுவாருன்னு நினைக்கிறேன்...
ReplyDeleteவாவ்... கடைசில ஒரு போட்டோ சூப்பர் சூப்பர் சூப்பர்...அது உளுந்து மாவுல செய்யற ஒரு டிஷ் தானே மகி... நாங்க இதை "தெல்லட்டு" னு சொல்வோம்... ஏகாதசி அன்னிக்கி ஸ்பெஷல்ஆ செய்வாங்க அம்மா...
wow, beautiful answers Mahi, lovely recipe clicks(lunch photos), my fav vadai, great
ReplyDeletenice mahi!!
ReplyDeleteGood job, Mahi!! I am drooling looking at these pics :)
ReplyDelete@நித்து,நன்றி நித்து!
ReplyDelete@வானதி,இந்த போட்டோ டெக்னிக் எல்லாம் வீட்டுக்கு லன்ச்சுக்கு வரவங்களுக்குதான் வொர்க்-அவுட் ஆகும். இப்பல்லாம் இவரும் லன்ச் எடுத்துட்டுதான் போறாரு.
/கொஞ்சம் டைம் தாங்க,/டேக் யுவர் டைம் வானதி! :)
@சுகந்திக்கா,நன்றி!
@என்றும் 16,வடை வாய்க்கு எட்டலையாங்க? ஒண்ணு செய்வோம்.எங்கே இருக்கீங்க நீங்க? எங்க வீட்டுக்கு வாங்க..சுடச்சுட சாப்பிடலாம்.:)
நன்றிங்க,வருகைக்கும் கருத்துக்கும்!
@புவனா,அது உளுந்துவடையேதான்.நீங்க சொல்லற பேர் நான் கேள்விப்பட்டதில்லைங்க.இட்லிக்கு ஊறப்போட்டதுல உளுந்து கொஞ்சம் அதிகமா போட்டுட்டேனா..அதை இப்படி அட்ஜஸ்ட் பண்ணேன்.:) நன்றிங்க வருகைக்கும்,கருத்துக்கும்!
@வேணி,உங்க கமெண்ட்டைப் பார்த்து சந்தோஷமா இருக்குங்க.நன்றி!
@மேனகா,நன்றி மேனகா!
@மஹேஸ்,வீட்டுக்கு வாங்க! ;) நன்றிங்க!
ரொம்ப திரும்பிடாதீங்க.. அப்புறம் மறுபடியும் திரும்ப கஷ்டமாயிடப் போவுது.. :))
ReplyDelete//ஆச்சு. போட்டோவைப் பார்த்த உடனே வேலை இருந்தாலும் முடிச்சிட்டு உடனே சாப்பிட வருவாரு.//
ReplyDeleteஅது.. அது.. என்ன தான் போட்டோ புடிச்சு ஆச காட்டினாலும் வேலைய முடிக்காம வர மாட்டோம்ல..
மகி...இப்படி சாப்பாடினை காட்டி அசத்திவிட்டிங்க போல...பதிவு சூப்பர்ப்...கடைசி படத்தில் உள்ள வடை சூப்பர்ப்...
ReplyDeleteசுப்பர் கலக்கிட்டிங்க
ReplyDeleteவலைப்பூ ஆரம்பித்த கதை சுவாரசியமாக இருக்கிறது. ;)
ReplyDeleteபாராட்டுக்கள் வாணீ. உலகத்தில இருந்து புகை வாறது தெரியுதோ!! ;)))
/அப்புறம் மறுபடியும் திரும்ப கஷ்டமாயிடப் போவுது.. :))/கரெக்ட்டு!உடனே திரும்பிட்டேன்,டோன்ட் வொர்ரீ!:) அடுத்த கமெண்டுக்கு பதில் ஆன் த வே!;)
ReplyDeleteகீதா,மிக்க நன்றி வருகைக்கும்,ரசித்ததுக்கும்! நானென்னங்க அசத்தறேன்? உங்கள மாதிரி டயட் ரெசிப்பிதான் செய்ய வரவே மாட்டேங்குது.
யாதவன்,மிக்க நன்றி!
இமா,சுவாரசியமா இருக்கா? அப்பாடி..இங்கே ஒருத்தர், நீ பக்கம்-பக்கமா எழுதும்போதே நினைச்சேன்,யாரும் படிக்கமாட்டாங்க என்றுன்னு சொல்லி கிண்டல் பண்ணிகிட்டு இருக்காரு. நன்றி இமா!
அருமை வாணி.பகிர்வு வித்தியாசமாக இருக்கிறது.
ReplyDeleteintresting answers mahi.... as usual kalakala photos than...
ReplyDeleteபதில்கள் அனைத்தும் மிக யதார்த்தமாக இருக்கு. படங்களும் அழகு!
ReplyDeleteநான் கூட உங்களை போலவே சமைத்ததை விதவிதமாக போட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். இந்தியாவில இருக்கும் என் தம்பி தங்கைக்கு மெயிலில் அனுப்பிவைப்பேன். ஆனா பாருங்க அப்பக்கூட நான் தான் செய்தேன்னு நம்பமாட்றாங்க:)
bathilgal arumai... padangal superb....
ReplyDeletehttp://akilaskitchen.blogspot.com
Regards,
Akila.
கொஞ்சம் பெரியதாக இருந்தாலும் போரடிக்காமல் இருந்தது உங்க தொடர் பதிவு பதில்கள்! அதுவும் படங்களுடன், அருமை!
ReplyDelete@ஆசியாக்கா,கருத்துக்கு நன்றி!
ReplyDeleteBTW,பேரு மட்டும் மாறிப்போச்சா,இல்ல வானதி ப்ளாக்ல போடற கமெண்ட்டை இங்க போட்டீங்களா?? ;)
@சாரு,நன்றி சாரு! போட்டோவ வச்சுதானே ப்ளாக்ல என் பொழப்பே ஓடிட்டு இருக்கு?:)
@ப்ரியா,/அப்பக்கூட நான் தான் செய்தேன்னு நம்பமாட்றாங்க:)/அது அப்படித்தான்ப்பா.ஊர்ல நம்ம அதிசயமா கிச்சனுக்கு போவோமா,அதனால அவங்களுக்கு நம்ம பொண்ணுதான் இப்படி சமைக்குதான்னு ஆச்சர்யம் போகவே போகாது.ஒண்ணு அவங்களை இங்கே கூப்பிடணும்,இல்லே நம்ம ஊருக்கு போகைல அங்கே நம்ம கைவரிசைய காட்டி நம்பவைக்கணும்.:) கருத்துக்கு நன்றி ப்ரியா!
@அகிலா,நன்றிங்க!
@அஸ்மா,நல்வரவு! பதிவு கொஞ்சம் நீளமாதான் போச்சுங்க.இதைவிட நீளமா(!!) டைப்பண்ணி இருந்தேன்.அப்புறம் மெது-மெதுவா குறைச்சே இப்படி!
நன்றிங்க,வருகக்கும் கருத்துக்கும்.
மகி லன்ச் செய்யுரதே பெரிய வேலையா இருக்கும் ..னீங்க ரொம்ப பொருமைசாலிங்க அழகா அதை டெகரேட் செய்து போட்டோ எடுத்து அனுப்பியிருக்கீங்க.சூப்பர்ப்.அண்ணனுக்கு போட்டோவை காட்டி பசியெடுக்க வைத்து இருக்கீங்க.ம்ம்ம்...நல்ல ஐடியாதான்.
ReplyDeleteபதிவு நல்லா இருக்கு.அழகா எழுதியிருக்கீங்க.
hey nanthan fistuuuuu.
ReplyDeletevadai enakunthan..
simply super.
nan silavalitha neram veen pogavillai..toching..
great...
24
ReplyDelete25
ReplyDeleteஎங்க வீட்டுல அப்படியே எஸ்கேப் ஆய்டுவாருன்னு நினைக்கிறேன்...
ReplyDelete--pinna sapida uira vaala venamaa...chumaa thamsu..
கொயினி,நன்றிங்க!
ReplyDeleteசிவா,ரெண்டு பல்லு முளைச்ச குட்டிப்பாப்பா போட்டோ ப்ரொபைல்லதான் வச்சிருக்கீங்கன்னு பாத்தா..நீங்களும் அதே மாதிரிதான் இருக்கீங்க.:)
நன்றி சிவா!
வடை அழகா இருக்கு. எனக்கு ஒரு பார்சல் ப்ளீஸ். :?)
ReplyDeleteகொஞ்சம் லேட்டா வந்து வடையக் கேக்கறீங்க புனிதா! ஆனா,பத்திரமா ப்ரிட்ஜிலதான் வச்சிருக்கேன்,தயிரில ஊறப்போட்டு. அனுப்பிவிடவா???
ReplyDeleteநன்றீங்க வருகைக்கும் கருத்துக்கும்.
Mahi u gr8.
ReplyDeleteI am out of state. I came today. I am sorry I did't see this one.
Very nice explanations.
thanks for sharing with us.
விஜி,நன்றிங்க!
ReplyDelete