இதிலே வரும் மிஷ்கா என்ற நாயின் பேச்சுக்கள்-பாடல்கள் எல்லாம் யூ-ட்யூபில் கிட்டத்தட்ட 300 இருக்கிறது. டிவி-யிலும் போய் "ஐ லவ் யூ" சொல்லிட்டு வந்திருக்காம் மிஷ்கா!!
இன்னும் காமெடி என்னதுன்னா,வீடியோவில் ஆண்குரல் சொல்லச்சொல்லும்போது கண்டுக்காம இருக்கும் மிஷ்கா பெண்குரல் வந்து சொல்லும்போதுதான் பேசஆரம்பிக்கும். நம்ம ஊர்ல நாய் ஊளையிட்டா கெட்டசகுனம்னு சொல்லுவாங்க, இவிங்க வீடியோ எடுத்து விளம்பரம் பண்றாங்கப்பா!!! :))))))))))))
~~~~~
ஏ குருவி!...நினைவிருக்கா உங்களுக்கு? அதே இடத்திலே வீட்டை(கூட்டை) ரிப்பேர் பண்ணும் வேலைகள் ஆரம்பித்திருக்கு. அதே குருவிகளா,இல்ல வேற குருவிகளான்னு தெரில..படுவேகமா கன்ஸ்ட்ரக்ஷன் நடந்துகொண்டிருக்கிறது.
கீச்-கீசுன்னு குரல்கள் பகல் முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கிறது.மாறி மாறி பறந்து போன குருவிகளில் இந்தக்குருவி வேற கொஞ்சம் முறைச்சுப் பார்க்கிற மாதிரி இருந்ததால் இத்தோடு நிறுத்திட்டேன். :)
குருவி பார்த்து கழுத்துவலியே வந்திருச்சு! டயர்ட் போக ஒரு ஈஸி ஸ்னாக் சாப்பிடலாம் வாங்க. ஸ்வீட்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,அதுக்காக எப்பவும் வீட்டிலே ஸ்டாக் வச்சுட்டே இருக்க முடியாதில்ல? அதனால் அப்பப்ப இப்படி ஒரு ஸ்வீட் பண்ணி அட்ஜஸ்ட் பண்ணிக்குவேன். :)
ஒரு கப் சூடான பால்ல 2 பரோட்டாவை பிச்சுப்போட்டு, தேவையான அளவு சர்க்கரையையும் போட்டு ஒரு 5 நிமிஷம் ஊறவைச்சா அம்புட்டுதான்..சுவையான ஸ்வீட்/ப்ரேக்ஃபாஸ்ட்/ஸ்னாக்(!?!!) ரெடி!!
பரோட்டா எப்பவாவது ஒருமுறைதான் செய்வேன், அதனால் அடிக்கடி கை கொடுப்பது சப்பாத்தி..அதே செய்முறை,பரோட்டாவுக்கு பதிலா சப்பாத்தி!! இதுவும் நல்லா இருக்கும்! :P
மேனகா , அப்ஸரா ,ஜலீலாக்கா மூவரும் தந்த விருதுகளுக்கு நன்றி! நன்றியின் அடையாளமா எவ்வளவு நாளைக்கு பூக்களையே தருவது? For a change, இந்த அழகான பூக்கூடையை வழங்குகிறேன். :)
//மிஷ்கா// ஸ்வீட் பப்பி. ;)
ReplyDeleteஒரு டவுட்டு, பழைய கூடுகளுக்கு என்ன ஆச்சு? தானாவே கரைஞ்சு போச்சா? இல்லாட்டா இவங்க அதை உடைச்சுட்டு புதுசா கட்டுறாங்களா!!
//ஸ்னாக்// இப்புடி ட்ரை பண்ணினதே இல்ல. ப்ரெட் / பண் பிச்சுப் போட்டு இப்புடி சாப்பிடுறது உண்டு. சப்பாத்தியும் நல்லா இருக்குமா? ட்ரை பண்றேன்.
அந்த அழகான பூக்கூடை யாரோடது!! ;) கடைத் தேங்காயை.. ;)))))
Mishka is cute!! interesting snack!!
ReplyDeleteபேசும் நாயின் காமெடி, கூடு உடைத்துக் கூடு கட்டும் குருவிகளின் படங்கள், Sweet ப்ரேக் பாஸ்ட்.. எல்லாமே கண்களுக்கு விருந்தாக இருந்தன. நன்றிகள் சகோ.
ReplyDeleteஅந்த ஸ்நாக்ஸ் சின்ன வயசில்ல அம்மா அடிக்கடி பண்ணித் தருவாங்க, என்னோட பிரண்ட்ஸ் கிட்ட சொன்னா சப்பாத்தியும் பாலும் என்ன காம்பிநேசனோன்னு கேலி பண்ணுவாங்க, பட் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இப்போ அத இங்க பார்த்ததும் மகிழ்ச்சியும் பழைய நினைவும் வருது. தேங்க்ஸ் மகி! :)
ReplyDeleteஅதே போல பாலுக்கு பதிலா ஜீரா ( சர்க்கரைப் பாகு ) வும் செம சூப்பரா இருக்கும். அதையும் ட்ரை பண்ணுங்க! :))
thanks for sharing all the sweet happenings..
ReplyDeleteஎங்க அம்மா கூட சப்பாத்தில பால், சக்கரை போட்டு தருவாங்க. எல்லோருக்கும் பழைய நினைவை கொண்டு வரீங்க மகி. நன்றி.
ReplyDeleteennoda friend ippadithan saapiduva. Antha ninaivu vanthuduchu Mahi. Congrats on ur award.
ReplyDeleteசூப்பர் மகி, nice போஸ்ட்
ReplyDeleteமகி.. டே மனுஷப் பயலுவளா. ஏன்டா என்னை இந்தப் பாடு படுத்துரீங்கன்னு திட்டுற மாதிரி இருக்கு :)
ReplyDeleteகுருவி பத்தி ஒரு சுவாரசியம் - ஆண் குருவி தான் வீடு கட்டுறதுக்கு முக்கியமான பொறுப்பு.. பெண் குருவி அதைய லுக்கு விட்டுட்டு அப்புறமா அங்க முட்டை இடறதா இல்லையான்னு முடிவு பண்ணுமாம் :)
என்னது, பாலும் சப்பாத்தியுமா? :)
வீடியோவை ரசித்தேன்..பூக்கூடை மிக அழகு,நன்றி மகி!!
ReplyDeleteall are very interesting....good job..congrats mahi akka..
ReplyDeleteVery nice and simple breakfast
ReplyDeleteரசித்தேன்...:-)
ReplyDeleteபாலும் சப்பாத்தியும்...ம்ம் சாப்பிட்டு பார்த்திட்டு சொல்றேன் மகி!
எனக்கு இந்த 13-ஆம் நம்பரைப் பார்த்தாலே கொஞ்சம் அலர்ஜி.அதுவும் வெள்ளிக்கிழம 13 கமென்ட்ஸ் பார்க்க ரெம்பவே அலர்ஜியா(!!) இருக்கு.எப்படியாவது நம்பரை மாத்திரணும்னு வந்துட்டேன். :) :)
ReplyDelete****
இமா,பழைய கூடு கொஞ்சம் மீதி இருந்தது,அதிலே ரிப்பேர் வொர்க் எல்லாம் பண்ணிமுடிச்சு குடிவந்துட்டாங்க. :) ஸ்னாக் ட்ரை பண்ணிப்பாருங்க.என்னை மாதிரி ஸ்வீட் பைத்தியங்களுக்கு ரெம்ப பிடிக்கும்!;)
/கடைத் தேங்காயை.. ;)))))/கர்ர்ர்ர்ர்!இது எங்க வீட்டுத் தேங்காதான்!
****
சுகந்திக்கா,தேங்க்ஸ்!
****
நிரூபன்,உங்க பேர் வித்யாசமா இருக்குங்க. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி! :)
****
பாலாஜி,நீங்களும் என்னை மாதிரிதானா? :) எனக்கு இது ரொம்ப பிடிக்கும்,இப்படி சாப்பிடறதுக்காகவே சப்பாத்தி மீதியாகும் இங்கே!;) ஜீராவில் போட்டு சாப்பிட்டதில்ல,ட்ரை பண்ணிடுவோம்!
தேங்க்ஸ் பாலாஜி!
****
ஆசியாக்கா,தேங்க்ஸ்!
****
ப்ரியா,வாங்கவாங்க!!எல்லாரும் ஒரே கூட்டமா இருப்போம் போல இருக்கே? :) தேங்க்ஸ் ப்ரியா!
****
குறிஞ்சி,நீங்களும் சாப்பிடலாமே?!:) தேங்க்ஸ் குறிஞ்சி!
****
சௌம்யா,தேங்க்ஸ்!
****
கரெக்ட்டு சந்தனா,அதுவும் கடைசி முறையா சொல்வது அதே போலதான் இருக்கு!:)
குருவி தகவலுக்கு நன்றி! நம்மள்லாம் எப்பவுமே விவரம்ல! ;)
பாலும் சப்பாத்தியும் சூப்பரா இருக்கும்!ட்ரைப் பண்ணிப்பாரு!
****
மேனகா,தேங்க்ஸ்ப்பா!
****
புவனா,தேங்க்ஸ்! :)
****
பது,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
****
ப்ரியா,சீக்கிரம் ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லுங்க!தேங்க்ஸ் ப்ரியா!
பிச்சிப்போட்ட பரோட்டவை சால்னாவில்தான் தான் ஊறவைத்து சாப்பிடுவார்கள் .நீங்கள் பாலில் ஊறவைத்து சாப்பிடுகின்றீர்கள்.
ReplyDeleteஎங்க வீட்டிலும் அடைக்கடி பாலும் பிச்சுபோட்ட சப்பாத்தியும் உண்டு. புது குருவிக்கூடு கட்டிச்சா?
ReplyDeleteஎனக்கு சப்பாத்தியினை தயிர் + சக்கரையில் போட்டு பிச்சுபோட்டு இப்படி ஊறவைத்து சாப்பிட பிடிக்கும்...
ReplyDeleteஇப்ப அக்ஷ்தாவிற்கும் அப்படி சாப்பிட பிடித்துவிட்டது...
வீடியோ, போட்டோ, ரெசிபி + மகி எழுத்து எல்லாமே சூப்பர். சும்மாவா நீங்க எனக்கு inspiration-ன்னு சொன்னேன்.
ReplyDeleteenga vitla nai kathina... enga paatiku kovam vanthu nalla thituvaangu...athuvum thitu vaangitu poidum...
ReplyDeleteneenga solra maathiri evanga video panni poduraanga... athuvum nalla than i love you solluthu....
unga sweet parota superb...
DNSW: G Roundup
Event: Dish Name Starts with H
Aai very interesting Video.
ReplyDeleteEppidi Mahi kuttiki mattum edu kannil paduthu?
Kurvi veedu sugama?
chappati pal......
mmmmmm.......
sapdudo solran thankam.
Kuskus uppuma enga veetela ellarukkum peedechudu da dear.
viji
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை இருந்தாலும் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎனக்கு நான்கு பரோட்டா பத்து சப்பாத்தி பார்சல் மகிமா