Friday, April 29, 2011

நன்றி!

சினேகிதி,ரேவா,காயத்ரி,அம்முமோகன் இவர்கள் என் வலைப்பூக்களுக்கு அன்பாக வழங்கிய விருதுகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு, அவர்களுக்கு இந்த பச்சைப் பூவை வழங்குகிறேன்.

The meaning of flower colour in green is about renewal, growth, hope, health and youth.

இன்னும் இரண்டு படங்களையும் இணைத்திருக்கிறேன்..உங்களுக்குப் பிடித்த படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் சினேகிதி,ரேவா,காயத்ரி & அம்மு!


ரேவா -விருது வந்து பலநாள் கழித்து சொல்கிறேன்,தாமதத்தைப் பொறுத்தருள்க!:)
காயத்ரி(தாமதத்தைப் பொறுத்தருள்க!:) ) அம்முமோகன்-இவர்கள் என் இங்கிலீஷ் ப்ளாகுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள்,இங்கே நன்றி சொல்கிறேன்.:)
~~~~
குறிஞ்சி கதம்பம் ப்ளாக்ஸ்பாட்டில் இருந்து செய்த கேரட் சட்னி

மேனகாவின் ப்ளாகில் இருந்து இட்லிப்பொடி
கீதா ஆச்சலின் ப்ளாகிலிருந்து கைமா இட்லி
~~~
முதல் மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.போனவாரம் ஒருநாள் இந்த ப்ரோக்கோஃப்ளவரை கடையில் பார்த்ததும், இதன் பச்சைவண்ணம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது,உடனே வாங்கிட்டு வந்துட்டேன்.:)
2.பிப்ரவரி 14 அன்று மும்முரமாக காரை க்ளீன் செய்துகொண்டிருந்தோம்,அப்பொழுது வானம் மிகவும் அழகாக இருந்தது. :)
3.இந்தப் பூக்கள் பெயர் தெரியவில்லை,நல்ல வாசனையாக இருக்கிறது. வாக் போகும்பொழுது சாலையோரத்தில் இந்தக்கொடிகள் படர்ந்துகிடக்கின்றன. ட்ராஃபிக் அதிகமா இருந்தாலும்,இந்தப் பூக்களின் வாசனையை நுகரவே அந்தச்சாலைக்கு அடிக்கடி செல்கிறேன். படமெடுக்க நினைக்கிறேன், கேமரா எடுத்துப்போக நினைவு இருப்பதில்லை. அதனால் கொடியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒரு கொத்துப் பூவை பறித்துவந்து வீட்டில் வைத்திருக்கிறேன். :)


இரண்டாவது மூன்று படங்களுக்கான இணைப்புகள்
1.என்னவருக்கு கேரட் பிடிக்காது..இந்த சட்னியில் கேரட் இருப்பதே தெரியாமல் விரும்பி சாப்பிட்டார்! ;)
2.கொத்துமல்லி விதை இட்லிப்பொடி நல்ல வாசனையுடன் ருசியாக இருந்தது.
3.ஒருநாள் மாலை நேரம் சில்லி இட்லி(கைமா-ன்னா நான்வெஜ் பேர் மாதிரி இருக்கு,அதனால் சில்லி இட்லியாக்கிட்டேன்.:) ) செய்தேன்.சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது.
~~~
என்வலைப்பூக்களுக்குக் கிடைத்த விருதுகளுக்கு..
தினமும் என் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் இயற்கைக்கு..
ருசியான குறிப்புகளைப் பகிர்ந்த நட்புக்களுக்கு..
நான் எழுதுவதை எல்லாம் ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு..
இந்த நன்றிப்பதிவு உரித்தாகட்டும்!

14 comments:

  1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் மஹி.

    பச்சைப்பூ எனக்கு வாணாம்.... ஹாஸ்ஸ்ஸ்ஸ்ஸ் உற்பத்தி செய்யும்:).

    எனக்கு பருப்புவடைதான்:) வேணும்... முதல் வருகைக்காக:)))), வித் தேங்காய் சட்னி..

    ReplyDelete
  2. அதிரா,பருப்புவடை-சட்னிதானே? இப்பவே அனுப்பிடறேன்! :)

    முதல்வருகைக்கும் பச்சைப்பூ பற்றிய தகவலுக்கும் நன்றி! ;)

    ReplyDelete
  3. congrats dear...very interesting information...
    recipe sounds delicious n yummy..
    Tasty Appetite

    ReplyDelete
  4. Congrats on your awards. Thanks for trying out my recipe Mahi. Hope u liked it.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மகி! அந்த மாலை நேரத்து வானம் ஃபோட்டோ அழகு! :)

    ReplyDelete
  6. விருதிற்கு வாழ்த்துக்கள், ரெசிப்பி பகிர்வுக்கு நன்றி.அருமை மகி.

    ReplyDelete
  7. விருதுக்கு வாழ்த்துக்கள்.ஸ்நேகித சமையலை செய்து பகிர்ந்துள்ளீர்கள்.நல்ல முயற்சி.

    ReplyDelete
  8. ரெண்டாவது.. ம்ம்ம்.. அழகான தருணம்..

    மூணாவது புகைப்படம் ஸ்டைலா இருக்கு.. இதே மாதிரி சிவப்பு பூ வைத்து எடுத்திருந்தா பிட் க்கு அனுப்பியிருக்கலாம் :))

    ReplyDelete
  9. vaaltha vayathillai..

    vaalthukkal..

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் மகி!! படங்கள் அருமை!!

    ReplyDelete
  11. ஜெய்,குறிஞ்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    தேங்க்ஸ் பாலாஜி,அன்னைக்கு வானம் ரொம்ப அழகா இருந்தது. :)

    ஆசியாக்கா,நன்றி!

    ஸாதிகாக்கா,நன்றி!

    சினேகிதி,நன்றி!

    சந்தனா,தேங்க்ஸ்! சிவப்பு கலர்ல கிடைக்கலையே,இந்தக்கலர்தான் கிடைத்தது.:)

    சிவா தம்பி,வாழ்த்தற வயதெல்லாம் உங்களுக்கு வந்தாச்சு.இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்படியே சொல்லி எஸ்கேப் ஆவீங்க? :) தேங்க்ஸ்!

    சுகந்திக்கா,நன்றி!

    ReplyDelete
  12. Congrats on ur awards and nice clicks

    ReplyDelete
  13. ஷர்மி,உங்க அளவுக்கு எனக்கு கேமரா டெக்னிக்ஸ் எல்லாம் தெரியாது.நீங்க நைஸ் க்ளிக்னு சொன்னது சந்தோஷமா இருக்கு,தேங்க்ஸ்!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails