புழுங்கலரிசி(Boiled Rice) - 2 கப்
தேங்காய்த்துருவல்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-2
கடுகு-1டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டேபிள்ஸ்பூன்
பல்லுப்பல்லாக நறுக்கிய தேங்காய்த்துண்டுகள்-2டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை -கொத்தமல்லி இலை-சிறிது
எண்ணெய்
உப்பு
செய்முறை
அரிசியைக் களைந்து 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
கொஞ்சமாக நீர் தெளித்து, தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரிசியை கொறகொறப்பாக அரைத்துக்கொள்ளவும். கடைசியாக தேவையான உப்பை மாவுடன் கலந்து 2 சுற்று மிக்ஸி/க்ரைண்டரை ஓடவிட்டு எடுத்துவைக்கவும்.
வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் நறுக்கிய வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தேங்காய்ப்பல்லுகளை சேர்த்து கிளறிவிட்டு, அடுப்பின் தணலை குறைத்துக்கொண்டு, அரைத்து வைத்த மாவை கொட்டவும்.
மாவை அடிபிடிக்காமல் சிலநிமிடம் கிளறவும். கடாயில் ஒட்டாமல் வந்ததும் கொத்துமல்லி இலை சேர்த்து கலந்துவிட்டு இறக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் கொழுக்கட்டைகளாகப் பிடித்து இட்லித்தட்டில் வைத்து வேகவைத்து எடுக்கவும்.
சுவையான கொழுக்கட்டை தயார். சுடச்சுட சாப்பிட சூப்பராக இருக்கும். தேங்காய் சட்னி-காரசட்னி-கொத்துமல்லி சட்னி-புதினா சட்னி, அட, டொமட்டோ கெட்ச்-அப் கூட சைட் டிஷா வைத்து சாப்பிடலாம். :)ரெடிமேட் அரிசிமாவு வைத்து செய்த கொழுக்கட்டையின் செய்முறைக்கு இங்கே க்ளிக் பண்ணிப் பாருங்க. என் சாய்ஸ் இந்த கொழுக்கட்டைதான்.:)
~~~~
கடந்த சனிக்கிழமை இண்டியன் ஸ்டோரில் வெகு நாள் கழித்து செங்காம்பு கறிவேப்பிலை ப்ரெஷ்-ஆக இருந்தது. இந்த 2 மாதங்களாகவே சரியாக கிடைக்கவில்லை..ஒரு நாள் தெரியாமல் கடையில் இருந்த மெக்ஸிகன் பணியாளரிடம் கறிவேப்பிலை இல்லையா என்று கேட்டுவிட்டேன். ஒரு அரைமணி நேரம் லெக்ச்சர் கொடுத்தார்!
"இப்போ மழை வருதில்லையா,அதனால் கறிவேப்பிலை வரலை. இலையெல்லாம் குட்டிக்குட்டியா இருக்குதாம்..கருப்பா ஆகிடுதாம்..இன்னும் 2-3 வாரங்களில் வெதர் நல்லா ஆனதும் கறிவேப்பிலை வந்துடும்னு தோட்டத்துக்காரம்மா சொன்னாங்க..காய்ந்த இலைகள் பேக்கட்லே இருக்கு,நீங்க அதுவேணா வாங்குங்க"..
இப்படியாக தொடர்ந்த அவர் பேச்சு முடிவுக்கு வரவே மாட்டேங்குது..ஒருவழியாத் தப்பிச்சு வந்தேன். :)
"இப்போ மழை வருதில்லையா,அதனால் கறிவேப்பிலை வரலை. இலையெல்லாம் குட்டிக்குட்டியா இருக்குதாம்..கருப்பா ஆகிடுதாம்..இன்னும் 2-3 வாரங்களில் வெதர் நல்லா ஆனதும் கறிவேப்பிலை வந்துடும்னு தோட்டத்துக்காரம்மா சொன்னாங்க..காய்ந்த இலைகள் பேக்கட்லே இருக்கு,நீங்க அதுவேணா வாங்குங்க"..
இப்படியாக தொடர்ந்த அவர் பேச்சு முடிவுக்கு வரவே மாட்டேங்குது..ஒருவழியாத் தப்பிச்சு வந்தேன். :)
கறிவேப்பிலை கிடைக்காத ஆட்கள் காதிலே கொஞ்சம் புகை வரவைக்கலாமே என்ற ஒரு நல்லெண்ணத்தில்........... போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கேன். ஹிஹி!
கொழுக்கட்டை... இப்போ பண்ணப் போறேன் மகி.
ReplyDeleteகறிவேப்பிலை ;)
எனக்குத்தான் எனக்குத்தான் எல்லாமே
ReplyDeleteவறுத்த அரிசி மாவு ஊரில் இருந்து தயார் செய்து கொண்டு வருவதால் கொழுக்கட்டை அடிக்கடி செய்வதுண்டு மகி,ஆனால் அரிசி ஊறவைத்து அந்த பெரிய வேலை எல்லாம் உங்களைப்போல் என்னால் செய்ய் முடியாது மகி..
ReplyDeleteபார்க்கவே சூப்பர்...
ஆஹா,நானும் இங்கு எங்க பக்கத்து அரபி வீட்டு கருவேப்பிலை மரத்தை படம் பிடித்து போடனும்னு நினைச்சேனே!ஆனால் ஒரு இணுக்கு கூட வாங்க முடியாது...வ்ழக்கம் போல் கடையில் கிடைக்கும் ஃப்ரெஷ் கருவேப்பிலை தான்...
ReplyDeleteyummy yummy....
ReplyDeleteஇந்த முறையில் செய்த கொழுக்கட்டை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteROMBA NALLA IRRUKU
ReplyDeleteஉங்க அளவுக்கு பொறுமை இருக்கான்னு தெரியல மகி,இப்படி அந்த மாவை போட்டு கிளறுவது மலைப்பா இருக்கு...எவ்வளவோ செய்துட்டேன்,இதையும் ஒருநாள் இந்த செய்முறையில் செய்துடனும்.வேலை அதிகம்னாலும் இந்த கொழுக்கட்டை ருசியே தனிதான்.
ReplyDeleteEnakkum indha type kozhukkattai than romba pidikkum. Photos paarthu pasikka aarambithu vittadhu..
ReplyDeletei always make kozhukattai with dry rice flour.This one sounds very new and looks very delicious too
ReplyDeleteக்கும்.. இதும் கஷ்டமான ரெசிப்பி :))
ReplyDeleteஇமா செய்துட்டீங்களா?
ம். ;))
ReplyDeletehttp://imaasworld.blogspot.com/2011/04/blog-post_26.html
யமி யமி யமி. ;P
இமா,சொன்னமாதிரியே செய்து போஸ்ட்டும் பண்ணிட்டீங்க.தேங்க்ஸ் இமா! :)
ReplyDelete/க்கும்.. இதும் கஷ்டமான ரெசிப்பி :))/ இட்லிக்கு மாவரைக்கிறமாதிரிதானே? அவ்ளோ நேரங்கூட அரைக்கவேண்டாம்.எண்ணெயில் வதக்கறதும் ரொம்ப ஈஸி,2-3 நிமிஷத்திலே ஆயிடும்.இதென்ன கஷ்டம்? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
ஜெயஸ்ரீ,இந்த கொழுக்கட்டை அரிசிமாவு கொழுக்கட்டைய விட நல்லா சாஃப்ட்டா இருக்கும்,ட்ரை பண்ணிப்பாருங்க.தேங்க்ஸ்!
காயத்ரி,இது என்னவருக்கு ரொம்ப பிடித்த ரெசிப்பி.:) தேங்க்ஸ் காயத்ரி!
/அந்த மாவை போட்டு கிளறுவது மலைப்பா இருக்கு../மேனகா,நீங்க நினைக்கிற அளவுக்கு மலை போல வேலை இல்ல,ஜஸ்ட் 2-3 நிமிஷத்தில் கடாயில் ஒட்டாம வந்துடும்,அரிசி உப்மா மாதிரி கைவிடாம கிளற வேண்டியதில்ல,ஒருமுறை செய்யுங்க,எவ்ளோ ஈஸின்னு உங்களுக்கே தெரிஞ்சுடும். :)
நன்றி சினேகிதி! :)
ஸாதிகாக்கா,உங்களுக்கும் பிடிக்குமா? :) தேங்க்ஸ்!
சித்ரா,தேங்க்ஸ்ங்க!
ஆசியாக்கா,ஊர்லே அம்மாவீட்டுக்கு எதிர்வீட்டிலும் கறிவேப்பிலை மரம் இருக்கு! அரபிக்காரங்க மாதிரியெல்லாம் இல்ல,அவிங்க ரெம்ப நல்லவங்க!;)
ReplyDeleteவறுத்த அரிசிமாவில் நான் இதுவரை செய்ததில்லை..உங்க ஊர் ரெசிப்பின்னா ருசியாத்தான் இருக்கும்,அடுத்தமுறை ஊருக்கு போயிட்டு வந்ததும் போஸ்ட் பண்ணுங்க.
தேங்க்ஸ் ஆசியாக்கா!
சிவா தம்பி,எல்லாம் உங்களுக்கேதான்,எடுத்துக்குங்க!நன்றி! :)
வேலையாக இருந்ததால் முன்பு வந்தபோது எதுவும் எழுதாமல் போய் விட்டேன்.
ReplyDeleteகொழுக்கட்டை செய்வது வெகு சுலபமாக இருந்தது மகி. நேரமும் பெருசா எடுக்கல. டேஸ்டா இருந்துது. தாங்ஸ் ஃபார் தி குறிப்பு. ;))
ரொம்ப நல்லா இருக்கு மகி...இதனை எங்க வீட்டில் உப்பு உருண்டை என்று சொல்லுவாங்க...எனக்கு ரொம்ப பிடித்தது...
ReplyDeleteஇதனை கொழுக்கட்டை மாதிரி பிடிக்காமல், சிறிய உருண்டைகளாக பிடித்து வைப்போம்...அம்மா இதனை கண்டிப்பாக 2 - 3 வாரத்திற்கு ஓரு முறை எங்களுக்கு மாலை நேர் ஸ்நாக செய்து வைத்து இருப்பாங்க...
ada, nammaoor samacharam.
ReplyDeleteKolukkattai!!!!!!!!!!!!!!!
Sappidanumnnu assai vanduduchuda chellam.
Edoo kelambitten.
viji
மகி இதுல தேங்காய்க்கு பதிலா கேரட் துருவல் சேர்த்து செய்தாலும் நல்லா இருக்கும்.
ReplyDeleteHi mahi, Romba nalla irukku unga kozhakattai.
ReplyDeleteThankyou for your comments on my blog
keep visiting
anandhirajan
நல்லா இருக்கு கொழுக்கட்டை. கறிவேப்பிலை சுமார் தான் கர்ர்ர்ர்ர்.
ReplyDeleteநானும் இங்கு எங்க பக்கத்து அரபி வீட்டு கருவேப்பிலை மரத்தை படம் பிடித்து போடனும்னு நினைச்சேனே//
எல்லோரும் ஒரு மார்க்கமாவே திரியுறாங்கப்பா.
//!ஆனால் ஒரு இணுக்கு கூட வாங்க முடியாது...///
அந்த அரபி வாழ்க!!!!
my H's all time fav Mahi...paarthathum seiyanum pola irukku...Kurinjikathambam, Event : HRH-Healthy Summer
ReplyDeleteஇதை புழுங்கலரிசி கொழக்கட்டை என்று சொல்லுவோம். நீ வெங்காயம் போட்டு
ReplyDeleteசெய்திருக்கிராய். நல்ல ஐடியா. ஜெனிவா போகிறேன். செய்து பார்க்கிறேன். 2,,3 நாட்களாக எந்த போஸ்ட்டும் போகவில்லை.
நன்றி இமா!
ReplyDeleteகீதா,உப்பு உருண்டைன்னு ரெசிப்பி இணையத்தில பார்த்திருக்கேன்.நாங்க கொழுக்கட்டைன்னு சொல்லுவோம்.மாலை நேரம் சூடா சாப்பிட சூப்பரா இருக்குமே!:P
நன்றி கீதா!
விஜிம்மா,நீங்க சென்னைன்னு நினைச்சுட்டிருக்கேன்.நீங்களும் கோவையா? சந்தோஷம்!கொழுக்கட்டை செய்துட்டீங்களா?:)
சுகந்திக்கா,கேரட் சேர்த்தும் செய்திருக்கேன்.என்னவருக்கு ஆரஞ்ச் கலர்ல எதைப்பார்த்தாலும் ஒதுக்கிவைப்பார்,அதனால் கேரட்டை அதிகம் அவர் கண்ணில் படறமாதிரி போடமாட்டேன்.;)
ஆனந்தி,நன்றிங்க!
வானதி,கறிவேப்பிலை சுமார்தானா? :)
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.நன்றி வானதி!
சினேகிதி,விருதுக்கு நன்றிங்க!
குறிஞ்சி,சீக்கிரம் செய்து பாருங்க.நன்றி!
காமாட்சிம்மா,இந்தமுறையில் செய்துபாருங்க,சூப்பரா இருக்கும்.நன்றி!
Healthy n comfort snack anytime
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஷர்மி!
ReplyDelete