டாய்ஸ்டோரி வந்து ரெம்ப நாளானதால மறந்திட்டீங்களா?!!
ஹூம்,நீங்க என்னை மறந்திருந்தாலும் நான் மறக்காம உங்களையெல்லாம் பார்க்க வந்திருக்கேன். அதுவும் வெறுங்கைய வீசிட்டு வராம, 'கறுக்-முறுக்'குன்னு கடிச்சி திங்க ஸ்னாக் கூட கொண்டுவந்திருக்கேன். :)
என்னதுன்னா காயத்ரி அக்கா டயமண்ட் பிஸ்கட்டு ரெசிப்பி போஸ்ட் பண்ணிருந்தாங்களாம்,மகி அக்கா அதை செய்து பார்க்க ட்ரை பண்ணாங்க,போன வாரம். அங்கங்க காமெடி நடந்தாலும், பைனல் ரிசல்ட் எடிபிளா வந்துருச்சி! ஹிஹி!
பிஸ்கட் செய்யப்போலாம் வாங்கோ!
1/4கப் சர்க்கரை-2 ஏலக்காய மிக்ஸில போட்டு, நைஸா பவடர் பண்ணிக்குங்க. (மெய்யாலுமே பவுடர் மாறியே இருக்கும்,ஆசப்பட்டு எடுத்து மூஞ்சிக்குப் பூசிக்காதீங்க,அப்பறம் எறும்பு வந்து கடிச்சிவச்சிரும்! :))
1கப் கோதுமை மாவு கூட சர்க்கரைப் பவுடர்,2 பின்ச் பேக்கிங் சோடா,2டேபிள்ஸ்பூன் பட்டர்* (காயத்ரி அக்கா ரெசிப்பிலே பட்டர்லாம் இல்ல..இந்த மகியக்கா ஃப்ரிட்ஜ்லே தீராம கிடக்கற I Can't Believe This Is Not Butter-ஐத் தீர்க்கோணும்னு போட்டிருக்கு..நீங்க உஷாரா இருங்க,சரியா?)போட்டு நல்லா கலக்கிட்டு, கொஞ்சங்கொஞ்சமா தண்ணி ஊத்தி சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு, அதை 3 உருண்டையா பிரிச்சு உருட்டி மூடி வையுங்கோ.
எண்ணெய காயவைச்சிட்டு, இந்த உருண்டைங்கள சப்பாத்தி மாறியே தேய்ச்சு, கத்தி வச்சு கன்னாபின்னான்னு கட் பண்ணிக்குங்க.(கத்தி-கபடாவெல்லாம் யூஸ் பண்ணைல பத்தரமா செய்யோணும்,இல்லைன்னா சப்பாத்திக்கு பதிலா கைய வெட்டிக்குவீங்க,சாக்கிரதை!)
ஒரு முள்ளு கரண்டி அதுதான் ஃபோர்க் எடுத்து கட்பண்ணி வச்ச மாவுத்துண்டுகளை எல்லாம் சொம்மா குத்துகுத்துன்னு குத்திவிடுங்க.
(எதுக்கு குத்தோணும்?அப்புடியே எடுத்து எண்ணெயில போடலாமேன்னு உங்களுக்கு ஒரு கேள்வி வரோணுமே? வந்துருச்சா? கரெக்ட்டு..அதுக்கு பதில் வந்துகிட்டே இருக்கு!)
கன்னாபின்னான்னு வெட்டி குத்தி குதறி,சாரி,டங் ரோல் ஆகிருச்சி..நறுக்கி வைச்சிருக்கற மாவுத்துண்டுகளை கவனமா எடுத்து ஒரு தட்டத்துல வைச்சுக்குங்கோ.
அதுக்குள்ள எண்ணெய் காஞ்சிருக்கும். அடுப்பை ரெம்ப லோ ஹீட்டுல வைச்சு எண்ணெய் காயவைச்சு பொரியுங்கோ,அப்பத்தேன் பிஸ்கட்டு மொறூமொறுன்னு வருமாம்!
இப்ப இந்தப் படத்தைப் பாத்தீங்கன்னா அக்கா எதுக்கு முள்ளு கரண்டில குத்தினாங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிரும். ;) குத்தாம போட்டா பூரி கணக்கா புஸ்ஸுன்னு வந்திருச்சு பிஸ்கேட்டு. ஹஹ்ஹா!!
எங்களுக்கெல்லாம் ஆளுக்கு 2 குடுக்கலாம்னு இல்லாம,பிஸ்கட்டை டப்பாலே போட்டு மூடி வைச்சிருந்தாங்க.விடுவோமா நாம? நைஸா டப்பாவோட லவட்டிட்டு வந்துட்டம்,எப்புடி?!!! அவ்வ்வ்வ்...பிஸ்கட்லாம் சிந்துதுடா சட்டை போட்ட கரடி,என் முதுகுல இருந்து இறங்கு!
நீங்களும் வாங்களேன்,பிஸ்கட்டு தீர்ந்து போறதுக்குள்ள சாப்புட்டு முடிச்சிரலாம்!
:))))))))))))
எனக்கு முதல் படமும் கடைசி படமும் ரெம்பப் பிடிச்சிருக்கு.. :)
ReplyDeleteவழக்கம் போல.. ஆஆ.. பட்டிக்காட்டான் பஞ்சு முட்டாயப் பாத்த கதையா.... பாத்துட்டுப் போறேன்.. :)
ஹை.. மீ த பிஸ்கோத்து.. :)
ReplyDeletePerfect and Delicious biscuits,loved this version...will try it.
ReplyDeleteI love the way u write.... pics are very nice... biscuit-ta yen forkkala kuthuraanganu supera solli irukeenga..
ReplyDeleteReva
அழ..கா பேசுறீங்க அப்பு. ஸ்வீட். ;))
ReplyDeleteசட்டை போட்ட கரடீ.. கெதியா இறங்குங்கோ. ;)
kalakala maathiri irukku mahi. super!
ReplyDeletelooks perfect and delicious dear :)
ReplyDeleteஅப்பு எங்க வீட்டிற்கு ஒரு நாள் வாயேன்,அழகாக பேசுறியே!இங்க அக்காக்கு ரொம்ப போர் அடிக்குது,மகி அக்கா சொன்ன மாதிரி போர்க்கால் குத்தாம நானும் மைதா பிஸ்கட் செய்தேன்,நீங்க சொன்ன மாதிரி பொங்கி விட்டது,நல்ல டிப்ஸ்.நீ வந்தால் உனக்கு பிடித்த புட்டும் பழமும் தருவா இந்த ஆசியா அக்கா.
ReplyDeleteI Love biscuits and your recipe looks delicious with the beautiful pics. Thanks Mahi!
ReplyDeleteஅம்மா அடிக்கடி செய்வாங்க...எங்க வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்..
ReplyDeleteநான் ஒரு முறை செய்தேன்...இவர் ரொம்ப விருப்பமாக சாப்பிடவில்லை என்பதால் இதனை செய்வதே இல்லை...சரி..விடுங்க...அக்ஷ்தாவிற்கு செய்து கொடுத்தால் போச்சு...
Biscuits look so tasty..
ReplyDeletedelicious biscuits, dragging me to my childhood..
ReplyDeleteநல்லா இருக்கு மஹி...
ReplyDeleteநல்லா இருக்கு பிஸ்கட். ஒரு நாள் செய்து பார்க்க வேண்டும்.
ReplyDeletemy fav one.my mom always makes this for me while doing mixture.
ReplyDeleteU made it so well
பிஸ்கட் நல்ல மொறுமொறுன்னு இருக்கு..
ReplyDeletebiscuits , story and picturs all are very nice and tasty....
ReplyDeleteMy all time favorite,long time since I made this:) I add powdered sugar at the end instead putting in syrup :) Nalaiku senju saptidanum :)
ReplyDeletenice snack. My hubby's fav snack mahi. But I have one dounbt I saw one of my friend's house the biscut colour is pure white. But she did't add any food colour too.
ReplyDeleteshe used A.P flour.
போங்கப்பா... இந்த போஸ்ட் போட்டு என்னை பீல் பண்ண வெச்சுட்டீங்க... யு நோ வொய்? எங்க அம்மா நாங்க ஸ்கூல் படிக்கற காலாத்துல annual லீவ் விட்டா செய்யற மொதல் வேலை இதான்...ஹெல்ப் பண்றோம் பேர்வழினு பண்ணி ரகளை எல்லாம் ஒரே ஸ்வீட் மெமரிஸ் இப்போ... :)
ReplyDeleteஎனக்கும் இப்ப இதை ட்ரை பண்ணி பாக்கணும்னு ஆசை வந்துடுச்சு... ஹா ஹா...;)))
Thankyou nahi for visiting my blog. I am your follower now.
ReplyDeleteanandhirajan
Looks crispy and perfect
ReplyDeleteஹலோ மகி
ReplyDeleteதற்செயலா தான் உங்க ப்ளாக்-ஐ பார்த்தேன். ரொம்ப inspire ஆயிட்டேன். விளைவு, தூசு தட்டி என் இங்கிலீஷ் ப்ளாக்-ஐ எடுத்தது மட்டுமில்லாமல் புதுசா ஒரு தமிழ் ப்ளாக் வேற ஆரம்பிசுடோம்ல! தேங்க்ஸ் மகி. டைம் கிடைக்கும் பொது இந்த கத்துக்குட்டி ப்ளாக்-ஐயும் கொஞ்சம் பார்த்துட்டு போங்க.
இந்த மாதிரியே கொஞ்சம் குட்டியா கட்பண்ணி பொறிச்சு மிக்சரிலும் சேர்ப்பதுண்டு. மகிக்கு தெரியாததா அப்பு.
ReplyDeleteமகி அழகா செய்திருக்கா. நீ அதைவிட அழகா சொல்ரே. என்ன சொல்லி பாராட்றதுன்னு தெரியலே. பண்ணி சாப்பிடணும் .அவ்வளவுதான் இல்லையா?
உங்க ரெசிபி எல்லாமே சூப்பர் மகி,.பாக்கும் போதே செஞ்சு பாக்கணும் போல இருக்கும்.
ReplyDeleteபிஸ்கட் ரொம்ப நல்லா இருக்கு .ட்ரை பண்ணனும்
//கன்னாபின்னான்னு வெட்டி குத்தி குதறி,சாரி,டங் ரோல் ஆகிருச்சி..நறுக்கி வைச்சிருக்கற மாவுத்துண்டுகளை கவனமா எடுத்து ஒரு தட்டத்துல வைச்சுக்குங்கோ.//
ReplyDeleteஇந்த வரிகளை படிக்கும் போது எல்லாம் சிரிச்சு கிட்டே இருக்கேன் மஹி. எங்க அம்மா கூட பண்ணி இருக்காங்க இந்த பிஸ்கட். சக்கரைக்கு பதில் உப்பு, மிளகு தூள் போட்டு காரமாகவும் பண்ணுவாங்க. அதுவும் சூப்பர் ரா இருக்கும். இங்க எங்க வீட்டுல பிஸ்கட் கட் பண்ண ஒரு வீல் மாதிரி இருக்க ஸ்பூன் இருக்கும் அதுல கட் பண்ணுவாங்க.
எனக்கு ஒரு சந்தேகம் இது கோதுமை பிஸ்கட்டா? இல்ல மைதா பிஸ்கட்டா? என் சந்தேகத்தை தீர்த்து வைங்க நானும் இந்த பிஸ்கட் செய்யனும்.
ReplyDelete//என் சந்தேகத்தை தீர்த்து வைங்க நானும் இந்த பிஸ்கட் செய்யனும்.// மஹா,இங்கே இருக்கறது கோதுமைமாவில் செய்த பிஸ்கட்டுங்க.
ReplyDeleteமைதாமாவிலும் செய்யலாம்.இன்னுமே பெட்டர் டேஸ்ட் கிடைக்கும்.:)
இதிலே மாவு-சர்க்கரை-ஏலக்காய் எல்லாமே ஒண்ணா சேர்த்து பிசைந்து பொரிச்சிருக்கு,
அப்படி இல்லாம தனியா மாவை மட்டும் பிசைந்து பொரித்தெடுத்து, சர்க்கரைப்பாகு தனியா காய்ச்சி, பாகில் பிஸ்கட்டை ஊறவைக்கலாம். எது ஈஸீயா இருக்குதோ செய்துபாருங்க. உங்க சந்தேகத்தை எல்லாம் தீர்த்துட்டேன்னு நினைக்கிறேன்.இல்ல இன்னும் குழப்பிட்டேனா? ;)
அப்பு:எல்போர்டக்கா,பிஸ்கோத்து உங்களுக்கேதான்,என்ஜாய்!!:)
ReplyDelete{மகி:இது நம்மூர்லயும் செய்யறதுதான் சந்தனா! ஈஸியாத்தான் இருக்கும்,ட்ரை பண்ணி பார்க்கலாம்.தேங்க்ஸ்! }
அப்பு:தேங்க்ஸ் ப்ரேமாக்கா!
அப்பு:ரேவாஅக்கா,உங்க கமென்ட் பாத்து அப்புவுக்கு ரெம்ப குஷியாகிப் போச்சு,தேங்க்யூ வெரிமச்! :)
அப்பு:இமாம்மா,டெய்லி காலைல ஹொட் வாட்டர்ல தேன் கலந்து குடுப்பாங்க மகி அக்கா,அதை குடிச்சிதான் என் குரல் இவ்வளோ ஸ்வீட்டா இருக்கு. ;) :)))
நீங்க சொன்னாலும்,உந்த கரடி இறங்கமாட்டேன்னு அடம்பிடிக்கிது.
தேங்க்ஸ் பார் யுவர் சப்போட்!
மகி:தேங்க்ஸ் குறிஞ்சி&அருணா!
அப்பு:ஐ,புட்டும் பழமுமா? இதோ அப்பு பொட்டிய கட்டியாச்சு ஆசியாக்கா,எந்நேரமும் உங்க கதவைத் தட்டும்,ரெடியா இருங்கோ,ஓக்கை? நான் வந்துட்டா உங்களுக்கு போரெல்லாம் அடிக்காது.ஐ கீப் பீப்புள் எங்கேஜ்ட்,யு சீ?! :)
{மகி:நம்மையெல்லாம் கூப்பிட மாட்டேன்றாங்க,அப்புவுக்கு ஸ்பெஷல் கவனிப்பு நடக்குது.ம்ஹும்,கலிகாலம்டா சாமி!!;)}
மகி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா,ஸ்னேகிதி,கீதா,காயத்ரி,சரஸ்,சாரு,வானதி,ஜெயஸ்ரீ,மேனகா & புவனா!!
ReplyDeleteராஜி,சர்க்கரைய தூவற மெதட் புதுசா இருக்குங்க,உங்க ப்ளாகில் போஸ்ட் பண்ணுங்களேன்,அதையும் ட்ரை பண்ணிப் பாத்துடுவோம்.:)
விஜிஅக்கா,மைதாவில் செய்தா வெள்ளையா வரும்னு நினைக்கிறேன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அப்பாவி,இம்பூட்டு அப்பாவியா ப்ளாஷ்பேக் சொல்ல உங்களாலதான் முடியும்,இப்ப நீங்களே ட்ரை பண்ணிப்பாருங்களேன்.;) தேங்க்ஸ் புவனா!
ஆனந்தி,உங்க ஹேண்ட்வொர்க்ஸ் எல்லாம் ரொம்ப அழகா இருக்குங்க. பின்தொடர்வதற்கு மிக்க நன்றி! :)
அப்பு:காமாட்சிப்பாட்டி,உங்கள மாதிரி பெரியவா எல்லாம் என்னைப் பாராட்டறது ரொம்ப சந்தோஷமா இருக்கு,தேங்க்ஸ் பாட்டி! :)
மகி:சௌம்யா,ரொம்ப தேங்க்ஸ்பா,கண்டிப்பா செய்து பாருங்க!
ப்ரியா,நான் காரபிஸ்கட் செய்ததில்லை..ட்ரை பண்ணி பார்க்கணும். வீல் மாதிரி ஸ்பூனா? அழகா டிசைன் வருமோ?
தேங்க்ஸ் ப்ரியா!
Wow, beautiful and wonderful biscuits.
ReplyDeleteIniya Thamizh Puthandu Nalvazhthukkal.
thanks mahi...
ReplyDeletedoubt clear ayiduchu..
சந்தோஷம் மஹா! செய்து பார்த்து மறக்காம சொல்லணும்,சரியா?! :)
ReplyDeleteமலர்,உங்களுக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி!
Nice presentation and yummy looking biscuits
ReplyDeleteப்ரெசென்டேஷனுக்கு அழகு சேர்த்தது அப்புவும்,சட்டை போட்ட கரடியும்தான்! :)
ReplyDeleteதேங்க்ஸ் ஷர்மி!