Tuesday, May 3, 2011

ப்ரோக்கோஃப்ளவர் ஸ்டிர் ஃப்ரை

ப்ரோக்கோ ஃப்ளவர் அல்லது க்ரீன் காலிஃப்ளவர் என்பது காலிஃப்ளவர்-ப்ரோக்கலி இரண்டும் கலந்து உருவான காய்.இதனைப் பற்றிய தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.
தேவையான பொருட்கள்
ப்ரோக்கோ ஃப்ளவர்-1
வெங்காயம்-1
பூண்டு-4பற்கள்
சீரகம்-1டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து
கறிமசாலா பொடி-2 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் பொடி-1டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை

ப்ரோக்கோஃப்ளவரைக் கழுவி பெரிய பூக்களாக நறுக்கிவைக்கவும்.
வெங்காயம்-பூண்டை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் காயவைத்து,சீரகம் தாளித்து வெங்காயம்-பூண்டு-கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் ப்ரோக்கோ ஃப்ளவர் சேர்க்கவும்.
கடாயை மூடி 2 நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் மசாலாப் பொடி சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

தேங்காய்ப்பால் பொடியைத்தூவி, தீயை அணைத்துவிடவும். அடுப்பின் சூட்டிலேயே ஓரிருநிமிடம் வைக்கவும்.
சுவையான ப்ரோக்கோஃப்ளவர் ஸ்டிர் ஃப்ரை தயார். சப்பாத்தி-சாதம் இரண்டுக்குமே பொருத்தமான சைட் டிஷ்.

சமைக்கும் நேரம் முழுவதும் அடுப்பை ஹை ஃப்ளேமிலேயே வைத்து செய்யவேண்டும்.
காய் முழுவதும் வேகாமல் சற்றே க்ரன்ச்சியாக இருப்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி.
காலிஃப்ளவர்-ப்ரோக்கலி இவற்றை இப்படி க்ரன்ச்சியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
நான் சிக்கன்65 பவுடர் யூஸ் பண்ணியிருக்கிறேன், அவரவர் விருப்பப்படி ஏதாவதொரு மசாலாபொடி சேர்த்துக்கொள்ளலாம். :)

21 comments:

  1. ப்ரோக்கோலி எனக்கு ரொம்ப பிடிக்கும்,சூப்பர் ஸ்டிர் ஃப்ரை..

    ReplyDelete
  2. நானும் ஒரு ப்ரோக்கோலி ரெசிப்பி செய்தேன்,அதானே பார்த்தேன்,நான் செய்தால் அந்த வாடை உனக்கு வந்து விடுமே..மகி.

    ReplyDelete
  3. ப்ரோக்கோஃப்ளவர் இப்போதான் கேள்விபடுகிறேன்..நல்லாயிருக்கு மகி!!

    ReplyDelete
  4. Broccoli fry super Mahi, yummy starter..

    ReplyDelete
  5. உங்களின் புகைப்படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது மகி... குறிப்புடன் நீங்கள் தரும் படங்களை அதிகம் ரசித்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. ஆசியாக்கா,இது ப்ரோக்கோலி இல்லை. காலிஃப்ளவர்+ப்ரோக்கோலி இந்த ரெண்டுகாய்களின் மிக்ஸ்தான் ப்ரோக்கோஃப்ளவர்.
    BTW,நீங்க செய்த ப்ரோக்கலி வாசனை காலைல இருந்தே மூக்கைத்துளைக்குது,எப்ப போஸ்ட் பண்ணறீங்க?;)

    சினேகிதி,தேங்க்ஸ்ங்க!

    மேனகா,நானும் இந்தக்காயை இப்பதான் 1ஸ்ட் டைம் பாத்தேன்,உடனே வாங்கிட்டுவந்துட்டேன்.:)

    சரஸ்,நன்றிங்க.ஸ்டார்ட்டரா வைப்பதும் சூப்பர் ஐடியா!

    ப்ரியா,முடிந்த அளவு படங்களுடன் ரெசிப்பிதான் போஸ்ட் பண்ண முயற்சிக்கிறேன்,உங்களுக்கும் பிடித்திருப்பது சந்தோஷம்!:)

    ReplyDelete
  7. ப்ரோகோ ப்ளவரா?? இதென்ன கலப்பினமா? :))

    ReplyDelete
  8. I am learning the difference between califlower and brocli now only.
    Meantime what is this a new flower.....?
    Whatever it may be the photo is superda chellam. Like to taste.
    vijimma.

    ReplyDelete
  9. Wondeful combo,luks very temping...

    ReplyDelete
  10. super recipe. I never heard or seen this vegetable.

    ReplyDelete
  11. நானும் இந்த பச்சை கலர், பிர்புள் கலர் காளிப்ளவரினை நிறைய முறை பார்த்து இருக்கின்றேன்..

    ஆனால் அதனை இந்த நாள் வரை காளிப்ளவர் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன்..இன்று தான் உங்க பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன்..

    பகிர்வுக்கு ரொம்ப நன்றி மகி..

    ReplyDelete
  12. சந்துவின் சந்தேகம்தான் எனக்கும் மஹி...
    //ப்ரோக்கோ ஃப்ளவர்-// இப்படி நான் பெயர் கேள்விப்படவில்லை இங்கு.

    வித்தியாசமாக இருக்கே... நான் சிலவேளை இப்படியே வறை/சுண்டல்போல செய்வதுண்டு... தண்ணியேதும் சேர்க்காமல்.

    ReplyDelete
  13. ப்ரோக்கோ ப்ளவர் புதியபெயர். விஷயங்களெல்லாம் அறியமுடிந்தது.ரெஸிப்பியும் ரொம்பவே நன்றாக உள்ளது. முன்னாடி பூவைப் பார்த்து வாங்கச் சொல்லி மருமகளிடம் சொன்னேன். புதுசு கண்ணா
    புதுசு என்று தோன்றியது

    ReplyDelete
  14. மேடம்! கிச்சனுக்குள்ள வர்றவேண்டாம்னு ஸ்பேஸ்-க்கு வந்தா அங்கயும் கிச்சன் மேட்டர்! குடும்பத்தை விட்டுட்டு தனியா அமெரிக்காவுல அல்லாடிண்டு இருக்கிற என்ன மாதிரி மாமா(அதாம்மா அங்கிள்!)க்களுக்கு ரொம்ப வசதியா இருக்கு உங்க டிஷ்!

    மொத தடவையா வர்றேன்..பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே!

    -பருப்பு ஆசிரியர்

    ReplyDelete
  15. மகி நானும் இந்த ப்ளவரில் பொரியல் செய்து இருக்கேன். நல்லா இருக்கும்.

    ReplyDelete
  16. பருப்பு ஆசிரியர் அங்கிள்,உங்க பேரு,ப்ரொபைல் போட்டோ எல்லாமே வித்யாசமா இருக்கு.ப்ளாக் பக்கம் எட்டிப் பாத்தேன்,நிறைய பிரசுரங்கள் வைச்சிருக்கீங்க போலருக்கு. பொறுமையா வந்து படிக்கறேன்.

    /கிச்சனுக்குள்ள வர்றவேண்டாம்னு ஸ்பேஸ்-க்கு வந்தா அங்கயும் கிச்சன் மேட்டர்/ம்ம்ம்..என்ன பண்ணறது? என் ஸ்பேஸ்ல முக்கியமான இடம் சமையலுக்கு இருக்கறதால் நிறைய பதிவுகள் அது சம்பந்தமாவே வருவதைத் தவிர்க்க முடியல.உங்களுக்கு உபயோகமா இருப்பது சந்தோஷம்!

    மிக்க நன்றி,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்!

    ReplyDelete
  17. விஜிஅக்கா,நீங்களும் இந்தக் காயை ருசித்திருக்கீங்களா? :)
    நன்றி!

    காமாட்சிமா,வாங்கி செய்துபாருங்க.நல்லா இருக்கு.
    நன்றி!

    அதிரா,எனக்கும் இது புதுசாதான் இருந்தது. ரெகுலரா காய்கறி செக்ஷனில் இருப்பதில்லை.
    கருத்துக்கு நன்றி அதிரா!

    கீதா,பர்ப்பிள் கலரும் இருக்கா?நான் பாக்கல.கிடைத்தா அதையும் வாங்கிருவோம்.
    நன்றி கீதா! :)

    வானதி,நெக்ஸ்ட் டைம் காய் வாங்கும்போது நிதானமா பாருங்க,கிடைச்சாலும் கிடைக்கும்.நல்லா இருக்கு டேஸ்ட்.வாங்கிப்பாருங்க.
    நன்றி!

    குறிஞ்சி,தேங்க்ஸ்!

    அட்டனன்ஸ் டேக்கன் சிவா! :)

    ப்ரேமா,தேங்க்ஸ்ங்க!

    புவனா,வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதுக்கு நன்றி! :)

    விஜிமா,எனக்கு புதுசா தெரிந்த விஷயத்தை எல்லாருடனும் பகிர்ந்துக்கலாமேன்னுதான் போஸ்ட் பண்ணினேன். ப்ரோக்கலி வாங்கும்போது இதுவும் கிடைக்குதான்னு பாருங்க. நன்றி!

    சந்து,ப்ரோக்கோஃப்ளவர் லிங்க் பதிவில் சேர்த்துட்டேன். :)
    நன்றி!

    ReplyDelete
  18. நல்ல சத்தான ரெசிபி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails