Friday, November 19, 2010

இன்றைய விருந்தினர்...

இன்று நாம் சந்திக்கப்போவது அழகான அணில்பிள்ளைகளை..சமீபத்தில் ஒருமுறை கடற்கரைக்கு சென்றபொழுது அவர்களைச் சந்தித்தேன்.மனித நடமாட்டத்துக்கெல்லாம் நன்றாகப் பழகியிருக்கிறார்கள் இங்கே இருக்கும் அணில்பிள்ளைகள். அழகாக போஸ் கொடுத்தாங்க..இங்கே பாருங்க,எப்படி அட்டென்ஷன்ல நிக்கிறார் என்று..

அவர் நேராகவேதான் நின்னுட்டு இருந்தார்,நான் சைட்ல வந்து போட்டோ எடுத்தேன்.. :)

இப்ப கூட ஜோடியும் சேர்ந்துகொண்டது..எதையோ சுவைத்து சுவைத்து சாப்பிடுகிறார்..
இது அதே கடலின் கரையில் இன்னொரு இடத்தில் சந்தித்த ஆட்கள்..இவரும் ஏதோ மும்முரமாக மன்ச் பண்ணிட்டு இருக்கார்..
என்னதான் சாப்பிடறாங்கன்னு உத்துப் பார்த்தா...அது வேற ஒண்ணுமில்லங்க,வைல்ட் அனிமல்ஸ்க்கு உணவு தராதீர்கள் என்று ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கும் போர்டுகளை கண்டுக்காம, மக்கள் வாரி வழங்கும் பாப்கார்ன்-ப்ரெட் இப்படிப்பட்ட உணவுகளை அணில்பிள்ளைகளும் சாப்பிட்டுப் பழகிட்டாங்க..அடடா,நான் பார்த்துட்டே இருந்ததுல கவனம் சிதறி ப்ரெட் துண்டை மண்ணுல விழுக்காட்டிட்டார்!

அதனால என்ன? அழகா கையிலெடுத்து ஊதி,ஊதி சாப்பிடலாமேன்னு சாப்பிடறார். இன்னும் கொஞ்சம் போனா எனக்கு BK பர்கர் வேணும்,ஹேப்பி மீல் வேணும், கே.எப்.ஸி.பிஸ்கட் வேணும் என்று அவர்களே கேட்டாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல!! :)

என் தொந்தரவு தாங்காம,ஒதுக்குப்புறமா போயி சாப்பிட ஆரம்பிச்சிட்டார்.போனா போகட்டும்,இத்தோட விட்டுடலாம்,என்ன சொல்றீங்க?
எங்களையும் விட்டுடு,பொழச்சுப் போறோம்னு சொல்லறீங்களா?? :):)
இருங்க,இருங்க..வந்தவங்களை வெறும் கையோட அனுப்ப முடியுமா என்ன? நீங்களும் இதோ இந்த கார்ன் ப்ளேக்ஸ்-க்ரெய்சின் குக்கீஸை சாப்பிடுங்க..
குக்கீ சாப்பிடும் ஆட்கள் ,நல்லா கை நிறைய எடுத்து, (அணில்பிள்ளை அளவுக்கு க்யூட்டா சாப்பிடலைன்னாலும் பரவால்ல :))சாப்பிடுங்க..குக்கீ ரெசிப்பியும் வேணும் என்பவர்கள் இதோ, இங்கே க்ளிக் பண்ணுங்க.

முதல் படத்துக்கும்,இந்த போஸ்டுக்கும் என்ன சம்பந்தம்னா....அணிலை பார்க்கப்போன அன்று ஒரு நண்பர் வீட்டில எடுத்த போட்டோ அது. வழக்கம்போல உங்க டாஷ்போர்டுல கேச்சிங்-ஆ இருக்கட்டுமேன்னு..ஹிஹிஹி!

ஹேப்பி வீகெண்ட்!!

20 comments:

 1. அட..அணில் பிள்ளை என்ன பாந்தமா போஸ் கொடுக்கின்றது...!

  ReplyDelete
 2. anil nalla pose kuduthu irukku..arumaya ezhuthi irukeenka..

  ReplyDelete
 3. what a superb shots... dicovery channella neenga photographera seralam... avlo nalla clicks.... neenga ezhuthiyathum rasikkum padiya iruku.... cookies nalla iruku.....

  ReplyDelete
 4. அட அழகான அணில்,படப்பிடிப்பு அருமை.

  ReplyDelete
 5. பெரிய professional போட்டோ கிராபர் ஆக வாழ்த்துக்கள் மஹி . ரொம்ப நல்லா இருக்கு போட்டோஸ் எல்லாம்

  ReplyDelete
 6. aha...vida vida photo eduthu kalaguringa...photos ellam superb...

  ReplyDelete
 7. படங்கள் செம அழகா இருக்கு..குக்கீயும் அட்டகாசமா இருக்கு மகி!!

  ReplyDelete
 8. அணில் பிள்ளைகள் அழகு மஹி.. நான் எழுதரதுக்குள்ள வீக் ஆரம்பிச்சிடும் போல.. அதனால இனிய வாரம்..

  ReplyDelete
 9. கொஞ்சம் லட்
  ஹே அணிபுள்ள என்னமா
  போஸ் கொடுக்கிறது
  பகிர்வுக்கு நன்றி
  மகிமா ...

  ReplyDelete
 10. ஹேப்பி week start...

  ReplyDelete
 11. ஆஹா, என்ன ரசனைம்மா உனக்கு.

  ReplyDelete
 12. என்னோட பிளாகில நான் கேட்ட கேள்வியே இன்னும் பாக்கி இருக்கு..!! அணில் சரி , அணில் பிள்ளை-னா யார் அது என்னது..?

  ReplyDelete
 13. வீட்டுக்கு வந்தாதானே விருந்தினர்.. ஆனா , நீங்கதானே அங்கே போய் இருக்கீங்க .. அப்போ நீங்க விருந்தினர் இல்லையே..!! :-))

  ReplyDelete
 14. //இங்கே பாருங்க,எப்படி அட்டென்ஷன்ல நிக்கிறார் என்று..//

  உங்களை பார்த்துட்டு பயந்து போய் நிக்கிற மாதிரி தெரியுது.. கையில லட்டு எதுவும் கொண்டு போகலதானே..!! ஹா..ஹா..

  ReplyDelete
 15. போட்டோக்கள் ஒவ்வொன்னும் அருமையா இருக்கு ..!! :-)))

  குக்கி சரியா இல்ல புளிக்குது ..!! ((கிடைக்காட்டி என்ன சொல்றதாம் ..))

  ReplyDelete
 16. cute photos, lovely cookies, beautiful

  ReplyDelete
 17. @ஸாதிகாக்கா,நித்து,ஆமாம் அணிலார் ரொம்ப அழகா போஸ் குடுத்தார். :) துவும் அட்டென்ஷனிலே ரொம்பநேரம் நின்னு!!

  @அகிலா,ரொம்ப சந்தோஷங்க உங்க கமெண்ட்டைப் பார்த்து.மிக்க நன்றி!

  @ஆசியாக்கா,நன்றி!

  @குறிஞ்சி,நன்றிங்க!

  @சாரு,வாழ்த்துக்கு மிக்க நன்றி! :)

  @கீதா,நன்றி!

  @மேனகா,நன்றிங்க!

  @சந்தனா,இப்ப அடுத்த வீகெண்ட் வந்துடுச்சே! எங்களுக்கு 5 டேஸ் லா..ஆ..ஆங் வீகெண்ட்!!:)

  @நன்றி சிவா! எங்களுக்கு இங்கே இனி மண்டே வரை லீவு!:)

  @லஷ்மி அம்மா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  @வானதி,நன்றிங்க!

  ReplyDelete
 18. @ஜெய் அண்ணா,வாங்க!:) ஒரொரு கேள்வியா பதில் சொல்லறேன்..
  1./அணில் பிள்ளை-னா யார் அது என்னது..?/அது இந்த கீரிப்பிள்ளை,தென்னம்பிள்ளை,அணில்பிள்ளைன்னு சொல்லுவாங்க.அதான் இது.
  2./அப்போ நீங்க விருந்தினர் இல்லையே..!! :-))/ஹிஹி!அணில் பிள்ளை நம்மை எல்லாம் பார்க்க ப்ளாகுக்கு வந்திருக்கார்.அவர்தான் இன்றைய விருந்தினர்,நானில்லீங்கோ!
  3./கையில லட்டு எதுவும் கொண்டு போகலதானே..!!/ச்சே,ச்சே,அதெல்லாம் இல்லைங்க்ணா..லட்டெல்லாம் கனவுல பார்க்கறதோட சரி.
  4./குக்கி சரியா இல்ல புளிக்குது ..!! /கரெக்ட்டு..குக்கீ செய்து இவ்ளோ நாள் வைத்தா புளிக்கதான் செய்யும்.:)
  நன்றி ஜெய் அண்ணா!

  @வேணி,3வீக் வெகேஷனுக்கப்புறம் வந்திருக்கீங்க.நன்றி வேணி!

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails