இண்டியன் ஸ்டோர் போகும்போதெல்லாம் பாவ்-பாஜி சாப்பிடுவது இப்பொழுது வழக்கமா நடக்குது எங்க வீட்டில். போனவாரம் ஒருமுறை பன் செய்து, டீயுடனே காலியாகிட்டதால் இந்தமுறை பாஜி செய்துவைத்துவிட்டுதான் பன்னே பேக் பண்ணினேன். சூப்பரா இருந்தது. போட்டோஸ் கொஞ்சம் நிறைய்ய்ய எடுத்துட்டேன், போடாமல் இருக்க மனசில்ல! அதனாலே "படம்பார்த்து கதை சொல்"- டைப்ல இருக்குது ரெசிப்பி, அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. :) ;) :)
முதல்ல ஒருகப் மிக்ஸ்ட் வெஜிடபிள்ஸை சுத்தம் செய்து கழுவி, பொடிப்பொடியா நறுக்கிக்கோங்க.(2 கேரட்-7பீன்ஸ்-கொஞ்சம் காலிஃப்ளவர்,ப்ரோக்கலி,1 உருளைக்கிழங்கு, ஒரு கைப்பிடி பட்டாணி சேர்த்திருக்கேன்)
ஒரு சிறிய தக்காளி, சின்னதா ஒரு பெரியவெங்காயம், ஒரு பச்சைமிளகாயைப் பொடியா நறுக்கிட்டு, குக்கர்ல எண்ணெய் காயவைச்சு சீரகம் தாளிச்சு, நறுக்கினதைப்போட்டு வதக்குங்க.
தக்காளி குழைய வதங்கினதும் காய்கறிகளைச் சேர்த்து கால்டீஸ்பூன் மஞ்சப்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாப்பொடி, ஒரு டீஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, காய்கள் அளவுக்கேற்ப உப்பு போடுங்க.
அரைக்கப் தண்ணி ஊத்தி, குக்கரை மூடி 3 விசில் விடுங்க.
ப்ரெஷர் அடங்கியதும்,குக்கரைத்திறந்தா காய்கள் இப்படி இருக்கும்..(தண்ணியில்லாம ட்ரையா இருக்கும்னு தப்பா நினைச்சுராதீங்க, கொஞ்சம் தண்ணியாத்தான் இருக்கும். :) )
மத்தாலயோ கரண்டியாலயோ காய்களை மசிச்சுவிட்டு, 1 1/2டீஸ்பூன் MDH பாவ்பாஜி மசாலாவும் போட்டு கலக்கி,
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து காய்கறி கலவையை அஞ்சாறு நிமிஷம் கிளறுங்க. மசாலா வாசம் போய், பாஜி கொஞ்சம் திக்கா வந்ததும் கொத்துமல்லித்தழை தூவி இறக்கிருங்க.
பாவ் பன்களை (ரெசிப்பி இங்கே ) ரெண்டா நறுக்கி, வெண்ணெய் தடவி டோஸ்ட் பண்ணி ஒரு தட்டுல வச்சு, கொஞ்சம் பாஜியயும் வச்சு, பாஜிமேல லைட்டா வெங்காயம்-கொத்துமல்லித்தழை தூவி, ஒரு துண்டு லெமனையும் வச்சு..
mahi, this is a gr8 post, the recipe as well as ur writing loved ur sense of humor...
ReplyDeletebaji with pao looks great mahi- i so loved ur homemade pavs
ReplyDeletethat looks super tempting Mahi..
ReplyDeleteTasty Appetite
nice reading ur post dear...
ReplyDeletedelicious combo :)
Delicious Pav-Bhaji..
ReplyDeleteபடத்தைப் பார்த்து வெளுத்துக்கட்டுங்க என்றால் எப்பூடித்தான் வெ.கட்டுவது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ReplyDeleteசூப்பராக இருக்கு மஹி, நான் சாப்பிட்டதில்லை, பொரித்தெடுக்கும் வெஜி பஜ்ஜி, ஒனியன் பஜ்ஜி இவையே வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்...
ம்ம்..பாவ்பாஜி வாசனை நாசியைத்துளைக்கிறதே.
ReplyDeleteVery colourful yummy presentation. I too made pav baji four days back. Its raining here, so enjoyed the crisp pav with hot baji. Hope you all enjoyed a yummy dinner.
ReplyDeletecake ellam enakuthan..
ReplyDelete:)
ஹாய் மஹி.., எப்படி இருக்கீங்க..?அண்ணன் நலமா..?
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் பேசுவதில் மகிழ்ச்சி...
உங்கள் பக்கம் திறந்ததும்.. அடடே..இது நம்ம ஃபேவரைட் ஆச்சேன்னு உள்ளே புகுந்து ரசிச்சு பார்த்தாச்சு..(ஆனால் சாப்பிடதான் முடியல..)இது எனது மகனுக்கு மிகவும் ஃபேவரைட்...அவனுக்காகவே செய்வதுண்டு.இப்ப இந்தியா வந்து செய்யவில்லை...
நீங்கள் செய்த முறை சற்றே வித்தியாசமாகவே இருந்தது... முடிந்த போது இது போலவும் செய்து பார்த்து சொல்கிறேன்...
அன்புடன்,
அப்சரா.
ரொம்ப நல்லா இருக்கு மகி...சூபப்ர்ப்..
ReplyDeleteகலக்குறிங்க...
என்ன ஒத்துமையோ தெரியவில்லை. இங்கேயும் என் மருமகள் பண்ணின பாவ் பாஜியும் அன்றே இருந்தது. அச்சு அசல் ஒன்றே. உனக்கு முன்னாடியே தகவலா என்று கேட்டுக்கொண்டே சாப்பிட்டேன்.மிகவும் நன்றாக இருந்தது உன் பாவ் பாஜி.
ReplyDeleteஅவ்வ்.. எனக்குப் பிடித்தது..
ReplyDeleteஇதை முதல் முறை செய்தத மறக்க முடியாது... இத்தன காய்கறிகளையும் நறுக்கிப் போட்டு வேக வைத்து குழைத்துச் செய்த பாஜியைப் பாத்து.. இதென்ன, ஒரு பாக்கெட் மசாலாவையும் தண்ணியில கரைச்சுப் பண்ணினதான்னு கேட்டா எப்படி இருக்கும்? :)
மிஸ்ஸிங் இட்.. :((
பார்க்கவே நல்லா இருக்கு. செய்து பார்த்திட வேண்டியது தான்.
ReplyDeleteரசித்துப்படித்து கருத்தும் சொன்னதுக்கு நன்றிங்க சித்ரா & அருணா! இந்த போஸ்ட்டை டைப் பண்ணும்போது தேவையானபொருட்கள்-செய்முறைன்னு எல்லாம் எழுதப் பொறுமையில்லை.அதான் இப்புடி எழுதிட்டேன். :)
ReplyDeleteதேங்க்ஸ் காயத்ரி!
அதிரா பாவ்-பாஜி வடஇந்தியர்கள் செய்வது. பாவ்=பன், பாஜி=பன்னுக்கு பக்க உணவா காய்கறிகள் சேர்த்து செய்வது. சான்ஸ் கிடைத்தா சாப்பிட்டுப்பாருங்க,எப்படி வெளுத்துக்கட்டுவதுன்னு தெரிஞ்சுடும்,ஹிஹி!
நன்றி அதிரா!
வீட்டுக்கு வாங்க ஸாதிகாக்கா,சாப்பிடலாம்! :)
மீரா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
சிவா,கேக் எல்லாமே உங்களுக்கா? எங்களுக்கு ஒரு சின்ன பீஸாவது தாங்க. ;)
அப்ஸரா,நாங்க நல்லா இருக்கோம்,நீங்க அனைவரும் நலமா? ஊரில் செட்டில் ஆகிட்டீங்களா? பாவ்-பாஜி உங்க பையனுக்கு பிடிக்குமா..சீக்கிரம் ப்ளாக்லே போஸ்ட் பண்ணுங்க.
கருத்துக்கு நன்றி அப்ஸரா!
கீதா,நன்றி கீதா!
காமாட்சிமா,உங்க வீட்டிலும் பாவ்-பாஜியா? சூப்பர் போங்க! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சந்தனா,யாரந்த ப்ளாக்ஷீப்? இத்தனை வேலை செய்ததைப் புரிந்துக்காதவங்களுக்கு பாவ்-பாஜியெல்லாம் இனி செய்யவேணாம்,
இட்லி-தோசை செய்து குடுத்துடுங்க! ;)
வானதி,செஞ்சு பாருங்க வானதி.நல்லா இருக்கும். தேங்க்ஸ்!