தேவையான பொருட்கள்
பேஸ்ட்ரி ஷீட்
மஷ்ரூம்-100கிராம்
வெங்காயம்(சிறியது)-1
கரம் மசாலாத்தூள்-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை-சிறிது
உப்பு
எண்ணெய்
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
பால்-2ஸ்பூன்
செய்முறை
காளானை சுத்தம் செய்து நறுக்கவும்.வெங்காயம்-கொத்துமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் காளானை சேர்த்து கிளறி, கடாயை மூடி 3 நிமிடங்கள் வேகவிடவும்.
உப்பு,கரம் மசாலாத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து, கடைசியில் கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கி ஆறவைக்கவும்.பஃப்ஸ்-க்கான ஸ்டஃபிங் ரெடி.
பேஸ்ட்ரி ஷீட்டை அரைமணி நேரம் முன்பாக ப்ரீஸரில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.
உலர் மாவு தூவி, சப்பாத்திக் கட்டையால் லேசாகத்தேய்த்து, விரும்பிய அளவில் நறுக்கிக் கொள்ளவும். ஒவ்வொரு பேஸ்ட்ரி துண்டிலும் கொஞ்சமாக ஸ்டஃபிங் வைத்து, ஓரங்களில் நீர் தடவி ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு மடிக்கவும்.
மடித்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவிவிட்டு, 425F ப்ரீஹீட் செய்த அவன்-ல் 15 நிமிடங்கள் பேக் செய்யவும்.
மாலை நேரத்தில் சட்டென்று செய்து சுவைக்க மஷ்ரூப் பஃப்ஸ் ரெடி!
இந்த காளானின் பெயர் Mushmaru Mushrooms. போனவாரம் சைனீஸ் மார்க்கெட் போயிருந்தபோது வாங்கிவந்தது. படத்திலிருப்பது ஒரு bunch. அழகா ப்ளாஸ்டிக் பேப்பர்ல ராப் பண்ணி, இன்னொரு ப்ளாஸ்டிக் கவர்ல பேக் செய்து இருந்தது. [அதுக்காகவெல்லாம் நான் வாங்கிட்டு வரலை, நிஜமாவே நல்ல ருசியாக இருந்தது. :) ]
இந்தக்காளான் பிரியாணிக்கெல்லாம் நன்றாக இருக்குமா என்று தெரியல, ஒரு பன்ச்சை பஃப்ஸ் பண்ணிட்டேன்,இன்னொரு பன்ச்சை குழம்பு செய்தேன்,சூப்பரா இருந்தது. காளான் குழம்புக்கு ரெசிப்பி இங்கே .

Nice snack for the tea time and for parties....I too am planning to make gobi puffs soon :)
ReplyDeletepuffs sounds interesting with mushroom stuffing. wonderful tea time snack
ReplyDeleteபப்ஸை பார்க்கும் போதே உடனே செய்து சாப்பிட தோன்றுகிறது..சூப்பர் ஸ்நாக்ஸ்!!
ReplyDeleteசூப்பர் மகி. நான் மின்ஸ் மீற் வைத்து, இதேபோல் செய்வதுண்டு.
ReplyDeleteகண்ட காளான் எல்லாம் வாங்கிச் சமைக்காதீங்கோ.... சிலவற்றில் நச்சுத்தன்மை உள்ளதாம்... ஒவ்வொரு வகை காளானுக்கும் ஒவ்வொருமுறை இருக்காம் சமைக்க... ஏதோ காதில் கேட்டவை....
பப்ஸ்ஐ அழகா செய்து காட்டிய மகிக்கு ஒரு சபாஷ்
ReplyDeleteமஷ்ரூம் எப்பவுமே ஃபேவரிட் தான் எனக்கு. மஷ்ரூம் பஃப்ஸ் இப்போ தான் கேள்விப்படுறேன். :) நீங்க கண்டுபிடிச்ச ரெசிப்பியா மகி?
ReplyDeleteஎன்னோட அக்கா ஒரு சிம்பிள் & சூப்பர் டிஷ் பண்ணினா மஷ்ரூம்ல, வெண்ணைல மஷ்ரூம வதக்கி பெப்பர் தூள் நிறைய போட்டு, வெங்காயம் & கொத்தமல்லி தூவி கொடுத்தா பாருங்க, இப்பவும் அந்த டேஸ்ட் நினைவில வருது :)
Sounds yummy and easy to make. Mahi, why did you brush milk on top of it before baking?
ReplyDeleteரொம்ப சூப்பர்ப் மகி...கலக்குறிங்க...
ReplyDeleteஎங்க ரெண்டு பேருக்கும் மஷ்ரூம்னா பிடிப்பதில்லை மகி. ஆனா உங்களோடது பஃப்ஸ் பார்க்க அழகா இருக்கு.
ReplyDeleteராஜி,கரெக்ட்டா சொன்னீங்க, பார்ட்டிகளுக்கு ஸ்டார்ட்டரா வைக்க இது சூப்பர் ரெசிப்பி!
ReplyDeleteதேங்க்ஸ் ராஜி!
ஜெயஸ்ரீ,ஸ்டஃபிங் எல்லாம் நம்ம சாய்ஸ்தானே..கைவசம் இருக்கற திங்க்ஸ்-ஐ வச்சு ட்ரை பண்ணவேண்டியதுதான்! ;)
தேங்க்ஸ்ங்க!
மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அப்படியே போட்டோலே இருந்து எடுத்துசாப்ட்டுங்க! :)
அதிரா,நச்சுத்தன்மை உள்ள காளான்கள் கடையில் விற்க மாட்டாங்க.இந்தக் காளானுக்கு லிங்க் கொடுத்திருக்கேன்,நேரமிருக்கும்போது பாருங்க.அக்கறையான கருத்துக்கு நன்றி அதிரா! பேஸ்ட்ரிஷீட்ல எந்த ஸ்டஃபிங் வைத்து பேக் செய்தாலும் அது ஹிட் ரெசிப்பிதானெ! :)
நன்றி ஸாதிகாக்கா! :)
/நீங்க கண்டுபிடிச்ச ரெசிப்பியா மகி?/ ஆமான்னு சொல்லி காலரைத்தூக்கி விட்டுக்க ஆசையாத்தான் இருக்கு பாலாஜி,ஆனா இதெல்லாம் ஊர்லே சாப்பிட்டதுண்டு. பேக்கரிகள்ல ஆனியன் பஃப்ஸ்,மஷ்ரூம் பஃப்ஸ், எக் பஃப்ஸ், இன்னும் பலவெரைட்டில இருக்கும். அங்கே சாப்பிட்டதை இங்கே முயற்சித்தேன், நல்லா இருந்தது.
பாசக்காரத்தம்பியா இருக்கீங்க,உங்கக்காவை பார்த்து எனக்குக் கொஞ்சம் பொறாமையா இருக்குது! ;) சில உணவுகளில் அதன் ருசியை விட யார் செய்து கொடுத்தாங்க என்பதில்தான் ஸ்பெஷாலிட்டி!
நன்றி பாலாஜி!
மீரா,பொதுவா பஃப்ஸ்,பன்,ப்ரெட் போன்ற bake செய்யும் உணவுகளில் எக்வாஷ்(முட்டையை தடவி விடுவது) செய்தா நல்லா பளபளப்பான ப்ரவுன் கலர் வரும். முட்டைக்கு பதிலாக பாலும் யூஸ் பண்ணலாம், நான் நாலே பஃப்ஸ்தானே பேக் செய்தேன்,அதனால் முட்டைக்கு பதிலா பாலைத்தடவி பேக் செய்தேன்.
ReplyDeleteசெய்து பாருங்க,நன்றி!
கீதா,கலக்கறீங்க,கலக்கறீங்க என்றே சொல்லிட்டு இருக்கீங்க,ஒருநாள் நிஜமாவே காபி கலக்கி ஒரு போஸ்ட் போட்டுடப்போறேன் பாருங்க! :) தேங்க்ஸ் கீதா!
ப்ரியா,என்னவருக்கு மஷ்ரும்னா ரொம்ப இஷ்டம்,அதனால் அடிக்கடி வாங்கிடுவோம். நீங்க வேற ஸ்டஃபிங் வைத்து செய்துபாருங்க.தேங்க்ஸ் ப்ரியா!
சூப்பரோ சூப்பர். படங்கள் அழகா இருக்கு.
ReplyDeleteநன்றி வானதி!
ReplyDeleteஇது கமென்ட் நம்பர் 13-ஐ மாத்த! :)
ReplyDeletemushroom pups nalla irukkumpola mahi...thankspa..seythu paarkkiren
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கொயினி! வெகுநாள் கழித்து வந்திருக்கீங்க..வீட்டில "எல்லாரும்" நலம்தானே? ;)
ReplyDelete