தேவையான பொருட்கள்
1.கொள்ளு
2.பாசிப்பயறு
3.மசூர்தால்
4.கடலைப்பருப்பு
5.உளுந்துப்பருப்பு
6.துவரம்பருப்பு
7.தட்டைப்பயறு
8.லென்டில் ( இது தோலுடன் இருக்கும் துவரம்பருப்பின் கஸின்னு சொல்லலாம்.;) அமெரிக்கன் சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் ஒருவகை தானியம். உள்ளே பருப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.)
9.பட்டாணிப்பருப்பு
பருப்புவகைகள் எல்லாம் சேர்ந்து அரைகப்
ப்ரவுன் ரைஸ்-1/2கப்
வரமிளகாய்- 7
சீரகம்-1டீஸ்பூன்
பெருங்காயம்- 1/4டீஸ்பூன்
உப்பு
தாளிக்க
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-1
கறிவேப்பிலை-கொத்துமல்லி சிறிது
தேங்காய்ப்பல்லு-2 டேபிள்ஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு- தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
செய்முறை
அரிசி,பருப்புவகைகளை களைந்து, மிளகாயுடன் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறியதும், பெருங்காயத்தூள் சேர்த்து, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, கொறகொறப்பாக அரைக்கவும். கடைசியில் சீரகம் சேர்த்து 2 சுற்று மிக்ஸியை ஓடவிட்டு மாவை எடுத்துவைக்கவும்.
(அரைத்த உடனேயும் அடையாக ஊற்றலாம்,நான் அரைத்து ஒன்றிரண்டு மணிநேரம் வைத்துவிடுவேன்.)
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய்-கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறுதியாக தேங்காய்ப்பல்லு, கொத்தமல்லித்தழை சேர்த்து ஆறவைக்கவும்.
அடை சுடும்பொழுது வதக்கிய வெங்காய கலவை,தேவையான உப்பு சேர்த்து அடைமாவில் கலந்து (தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரும் ஊற்றி கலக்கிக் கொள்ளலாம்.)
தோசைக்கல்லை காயவைத்து அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, ஒருபுறம் வெந்ததும் திருப்பிப்போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.
காரசட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். சட்னி ரெசிப்பி இங்கே.
பின்குறிப்பு-1
- பருப்புவகைகளுக்கு குறிப்பிட்ட அளவுன்னு இல்லை,இதுதான் போடணும்னும் இல்லை, வீட்டுல இருக்க பருப்புவகைகள் எல்லாத்துலயும் ஒரொரு ஸ்பூன் எடுத்துக்குங்க. அல்லது உங்களுக்கு பிடித்த பிடிக்காத தானியங்களை கூட்டி குறைச்சு எடுத்துக்கங்க.
- அடை செய்யும்போது தேங்காய் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.அதை மிஸ் பண்ணாம சேர்த்தால் சூப்பரா இருக்கும்.
- சிலசமயம் சீரகத்துக்கு பதிலா சோம்பு சேர்த்தும் அரைப்பேன்,அதுவும் டேஸ்ட் நல்லா இருக்கும்.
- அடை-அவியல் காம்பினேஷனும் நல்லா இருக்கும். தேங்காய்ச்சட்னியுடனும் சாப்பிடலாம்.
- அடை-வெல்லம்,அடை-வெண்ணெய் காம்பினேஷன் நாங்க சாப்பிடமாட்டோம், நீங்க தாராளமாச் சாப்பிடலாம்.:)
(மிக முக்கியமான)பின்குறிப்பு-2
கிச்சன்ல தீராம இருக்க சாமானையெல்லாம் போட்டு அடை சுட்டுட்டு, பொழுதுபோகாம போட்டோல இருந்ததை எண்ணி ஒன்பது வகை தானியம்னு தெரிந்ததும், ஃபேன்ஸியா "நவதானிய அடை"-ன்னு பேரு வச்சு, ஸ்டைலா ரெசிப்பியா போட்டுட்டேன்னு நினைச்சுராதீங்க மக்களே!! "ப்ரோட்டீன் ரிச் அடை", "ப்ரவுன் ரைஸ் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது", "ஹெல்த்தியான ரெசிப்பி", "சூப்பரா இருக்கு! " இப்படியெல்லாம் கமென்ட் போடுங்கன்னு அனைவரையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.(எ.கொ.ச.இ.???!!)
நன்றி வணக்கம்ம்ம்ம்ம்ம்!
ரொம்ப ஹெல்தியான அடை...இப்படி விதவிதமாக செய்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்..
ReplyDeleteஆமாம் மகி...அடையில் வெண்ணெயினை கடைசியில் சேர்த்து சாப்பிட்டு பாருங்க..ரொம்ப நல்லா இருக்கும்...
wow i did adai yesterday almost the same...except for some change with the dal combinations... love it...nice flavourfull breakfast or dinner
ReplyDeleteஅட போங்க மேடம்! ஒயுங்கான அடையே செய்ய தெர்ல..இதுல நவ தானியமினுட்டு...வெறுப்பேத்தறீங்க! ஒண்டியா இருக்குற ஆளுங்க படிக்கக்கூடாதுன்னு போட்டுருங்க!
ReplyDeleteஉங்களப் பத்தி எயுதிருக்கேன்..படிங்க!
http://apdipodu.blogspot.com/2011/06/4.html
சூப்பரா இருக்கு! (இது கண்டிப்பா நீங்க சொன்னதுக்காக இல்ல) பார்க்கவும் படிக்கவும்.
ReplyDeleteசெஞ்சு பார்த்துட்டு சுவைக்கு மார்கு போடறேன் ;-)
super raa irukku mahi.
ReplyDeleteப்ரோட்டீன் ரிச் அடை
ReplyDeleteப்ரவுன் ரைஸ் சேர்த்திருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது
ReplyDeleteஹெல்த்தியான ரெசிப்பி
ReplyDeleteசூப்பரா இருக்கு!
ReplyDeleteநெறைய டவுட்டு வருது..
ReplyDelete1) 10 இல்ல வருது!! 'ரைஸ்' தானியம் இல்லியோ!!
2) 3,8 தமிழில் கூறவும். ;)
3) எல்லாம் ஈக்வல் க்வான்டிடி போட வேணாமா? (நான் அதான் பண்ணுவேன்.)
4) வரமிளகாயை அப்புடி டிசைனாத்தான் ஊற வைக்கணுமா?
5) மிக்ஸிய எங்க ஓட விடணும்!! வீட்டச் சுத்தியா??
6) //அரைத்து ஒன்றிரண்டு மணிநேரம் வைத்துவிடுவேன்.// கூடுதலா விடலாமா!! ஒண்ணும் ஆகாதுல்ல! (இங்க வந்து உட்கார்ந்தா நேரம் போறது தெரியுறது இல்லைல்ல, அதான் கேக்குறேன். ம்.)
7) தேங்காய்க்குப் பல்லு இருக்கா!!! (வாயையே காணோம், இதுல பல்லு!! வந்து சொல்லுங்க மகி. வாங்க.)
//எல்லாத்துலயும் ஒரொரு ஸ்பூன்// ஹையோ!!! எப்புடி என் ரகசியம் உங்களுக்குத் தெரிய வந்துச்சு!!!
ReplyDeleteபி.கு 2 ;))//நினைச்சுராதீங்க மக்களே!!// சூப்பர் ;D
ReplyDeleteஎன் ரெசிபியில இருந்து இது வித்தியாசமா இருக்கு மகி. அரிசி 1 ஸ்பூன்தான் சேர்ப்பேன். மிளகாய் சேர்த்து அரைத்தது இல்லை.
ஒரு தடவை உங்க ரெசிபியும் ட்ரை பண்றேன். குறிப்புக்கு நன்றி.
இமா லீவ்ல போய்ட்டாங்க மகி. இனி 1 மாசத்துக்கு இந்தப் பக்கம் வரமாட்டாங்க. ;)
ReplyDelete"ஹெல்த்தியான ரெசிப்பி", "சூப்பரா இருக்கு"....:-)
ReplyDeleteஹெல்தி அடை ரொம்ப நல்லா மொறுமொறுன்னு சூப்பரா இருக்கு...
ReplyDeleteநீங்க பேசாம விட்ருந்தா கூட சந்தேகம் வந்துர்காது! பின் குறிப்பு 2 ல எல்லாத்தையும் போட்டு உடைச்சுடீங்களே :):)
ReplyDeleteAnyways I am going to try this with the sprouts we get readymade :) Some times my MIL makes like this...
ஹெல்தி, ரிச் அடை. இமாவின் கேள்விக்கு பதில் சொல்லுங்கோ. பாவம் இவ்வளவு கேள்விகள்.
ReplyDeleteஎந்தக் காய்கறியும் இல்ல வீட்டுல.. என்ன செய்றதுன்னு மண்டைய பிச்சிங்.. நன்றி.. வியாழன் அல்லது வெள்ளி இரவு கண்டிப்பா இது தான் :) சாப்பிட்டுப் பாத்துட்டுச் சொல்லுறம்..
ReplyDeleteஇமா.. நெல்லையும் தானியம் என்று தான் சொல்லுகிறார்கள்.. ஆனால் மகி இங்கு சொல்ல வந்தது pulses என்ற அர்த்தத்தில் என்று நினைக்கிறேன்..
வெறும் லென்டில்ஸ் என்னவென்று தெரியவில்லை..
மசூர் தால் தமிழர்கள் அவ்வளவாக பாவிப்பதில்லை.. அதனால் தமிழ்ப் பெயர் இல்லையென்றே நினைக்கிறேன்.. ஆங்கிலத்தில் ரெட் லென்டில்ஸ்..
http://2.bp.blogspot.com/-wFMS6rVfYNs/TdaSvNZRInI/AAAAAAAAAJw/qM2AoranT_c/s1600/Masoor_dal.JPG
மஹீ... நான் எதை தனித்தனிப் பதிவா எழுதுவம் என நினைச்சிட்டு வந்தேனோ.. அதை ஒருவர் எழுதிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்:). அதனால நான் அட்டடடடடடடடடடக்கி வாசிக்கிறேன்....
ReplyDeleteநல்ல அடி.. சே..சே.. அடை. நிட்சயம் செய்துபார்ப்பேன். எனக்கு தானியக் கலப்பெனில் ரொம்ப பிடிக்கும்.... சீயா மீயா மஹியா...:).
Mahi - You are a celebrity chef now :) Hahaha Btw, very good recipe. Will try soon.
ReplyDeleteகீதா,அடை-வெண்ணை/வெல்லம் சாப்பிட்டுப்பார்த்தேன்,அவ்வளவாப் பிடிக்கல. அவியல்/சட்னி சாப்பிட்டுப் பழகிடுச்சு.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சித்ரா,உங்க வீட்டுலயும் அடையா? :)
நன்றிங்க!
MCE சார்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பார் எ சேஞ்ச்,ஒண்டியா இருக்க ஆளுங்க சமைச்சுப்பார்க்கலாமே? ;)
மீரா,பாஸ் மார்க் அட்லீஸ்ட் போட்டுடுங்க! ;) நன்றி!
ப்ரியா,தேங்க்ஸ் ப்ரியா!
இமா,சொன்னதைச் செய்ததை செய்திருக்கீங்க,வெரிகுட்! நன்றி,நன்றி! உங்க சந்தேகங்களை முடிந்தளவு க்ளியர் செய்யப்பார்க்கிறேன்.
1.ரைஸை சேர்க்காமல் சந்தனா சொன்னதுபோல pulses மட்டும்தான் சொன்னேன்.
2.லென்டில்--குறிப்பில் இணைப்புத் தந்திருக்கேன். மசூர்தால் தமிழ்ப்பேர் தெரில,அதுவும் சந்தனா சொன்னது மாதிரி /மசூர் தால் தமிழர்கள் அவ்வளவாக பாவிப்பதில்லை./தெரியாமல் வாங்கியதை இப்படி தீர்த்துட்டிருக்கேன்.
3.எல்லாமே ஈக்வல் க்வான்டிடி போடணும்னு என்ன சட்டமா போட்டிருக்காங்க? நம்ம இஷ்டப்படி போடவேண்டியதுதான்!நான் சும்மா குத்துமதிப்பா போடுவேன்.;)
4.கர்ர்ர்ர்ர்ர்ர்!அது உங்க விருப்பம்.
5.மிக்ஸிய ஜஸ்ட் கிச்சனைச்சுத்தி ஓடவிடுங்க.வீட்டைச் சுத்தச் சொன்னா பாவம்,அதுக்கு ஒயர் பத்தாது.ஹிஹி
6.உங்களுக்குப் புளிப்புச்சுவை பிடிக்கும்னா அரைத்து 6-7மணிநேரம் வைத்துக்கூட சுடலாம்,ஆனா பொதுவா எல்லாரும் அரைத்த உடனே செய்வாங்க.
7.எங்க ஊர்ல தேங்காய்க்கு மூணு கண்ணு இருக்கும் இமா.தேங்காய உடச்சு பல்லு செய்து வைச்சுக்குவேன்.:)
உஸ்...ஸப்பா!! ஏழு கேள்விக்கும் பதில்சொல்லிட்டேன். லீவில போனாப் பரவால்ல இமா, கண்டிப்பா செய்து பார்த்து போட்டோ போட்டுடுங்க,சரியா?
ரெம்ப நன்றி!
ப்ரியா,நீங்களும் குட் கர்ள்!!நான் சொன்னதையே சொல்லிருக்கீங்க.கீப் இட் அப்! ;)
ReplyDeleteதேங்க்ஸ்!!
மேனகா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா.
ராஜி,உண்மையே பேசிப் பழகிருச்சா,அதே ஃப்ளோல பின்குறிப்பு2 வந்துடுச்சுங்க. அதில் சொல்லிருக்கும் எல்லாமே உண்மை,உண்மையைத் தவிர வேறில்லை!;)
சிலவகை தானியங்களை தெரியாம வாங்கிட்டேன்,குழம்பா செய்தா பிடிக்கல,இப்படி செய்தா உடலுக்கும் நல்லது,pantry-யும் காலியாகிரும். ஒரே கல்லில் ரெண்டு மாங்கா! :)
தேங்க்ஸ் ராஜி!
வானதி,அடையில் தேங்காய் போட்டிருந்தா ரிச்சா இருந்திருக்கும்,இப்போ ஒன்லி ஹெல்த்தி அடை! ;) இமாவின் சந்தேகங்களுக்கு பதில் சொல்லிட்டேன்,ஒரு முடிவுலதான் வந்திருக்காங்க போல!;)
தக்க சமயத்தில் பாயின்ட்ஸ் எடுத்துகுடுத்ததுக்கு நன்றி சந்தனா! :) லென்டில் பற்றி தகவல் இணைத்திருக்கேன். வால்மார்ட்ல கூட கிடைக்கும். ட்ரை பண்ணிப் பாருங்க.
அடி பலமோ?? வார்த்தை தடுமாறுதே? ;) கட்டாயம் செய்துபாருங்க அதிரா. நல்லா இருக்கும்.
ReplyDeleteஆமாம் நான் காலைல கமென்ட்ஸ் பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டுப்போயிட்டேன்!;) ஒருவழியா சந்தேகமெல்லாம் தீர்த்தாச்சு. இருந்தாலும் டீச்சருக்கும் இம்புட்டு பயப்படவேணாம் நீங்க! ;)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அதிரா!
மஹேஸ் அக்கா,ஃபுட் நெட்வொர்க் சேலஞ்சிலே வின்னரா(!) கூப்ட்டாக,ஹெச்.ஜி.டிவில ஹோஸ்ட்டா கூப்ட்டாக,அவ்வளோ ஏன் NBC-ல ப்ரோக்ராம் பண்ணக்கூப்ட்டாக,அல்லாத்தையும் வேணாம்னு சொல்லிட்டு ப்ளாகே கதின்னு இருக்கேன் நானு! உங்களுக்காவது புரிஞ்சதே! டாங்க்ஸு! ;) ;) ;)
எல்ஸ் இமா பீ ஸீரியஸ் இல்லா... ;))))) //நெல்லையும் தானியம் என்று// தெரியுமே. எனிவேஸ் சொன்னதுக்கு நன்றி.
ReplyDelete//வெறும் லென்டில்ஸ் என்னவென்று தெரியவில்லை..// ம், எனக்கும். ;(
//மசூர் தால் தமிழர்கள் அவ்வளவாக பாவிப்பதில்லை..// யார் சொன்னது??? எங்களைப் பார்த்தால் தமிழராகத் தெரியேல்லயோ!! ;)) நாங்க 'மைசூர்ப்பருப்பு' எண்டுவம். ;) எங்கட பக்கம் 'பருப்பு' எண்டாலே மைசூர்ப்பருப்புத்தான். துவரம்பருப்பு எல்லாம் சமைக்கிறதே இல்ல. 'தால்' தமிழ் இல்லைதானே என்ன.
//நான் சும்மா குத்துமதிப்பா போடுவேன்.// ;)
ReplyDelete//கிச்சனைச்சுத்தி// open plan ஆக இருக்கே. ;(( கிச்சன் எல்லை எதுன்னே தெரியல. ;)
7.1) இங்கும். 7.2) யாருக்கு! எதுக்காக! ஒருவேளை.... நீங்க... டென்டிஸ்ட்டா!!! சொல்லவே இல்ல!
//கொஞ்சம் திடுக்கிட்டுப்போயிட்டேன்!// ;) புரியுது. ;))) ஆனாலும் கொஞ்சமா நிம்மதியா இருக்குல்ல!! ;)
ReplyDelete//பருப்பைவச்சு ரங்கோலி// அழகா இருக்கு மகி.
ReplyDelete//துவரம்பருப்பின் கஸின்னு சொல்லலாம்//
ReplyDeleteஹா ஹா ஹா...செம...:))
நீங்க டிஸ்ப்ளே பண்ணி இருக்கறதே செம அழகா இருக்குங்க மகி... சூப்பர்... இந்த வீக் என்ட் கண்டிப்பா செய்ய போறேன்...:))
your recipes...பார்த்தாலே பசி தீரும் வகை...luvly presentation Mahi...ha ha
நவரத்தின அடைன்னு பேர் கொடுத்திருக்கலாம். அவியலுக்கு ஆகாத காய்களில்லை. அடைக்கு ஆகாத தானியங்களுமில்லை. நல்ல குறிப்பு. நல்ல பின் குறிப்பும் ஸபாஷ்
ReplyDeleteரங்கோலில நம்பர்லாம் போட்டிருக்கீங்க, அட!
ReplyDelete