Wednesday, June 1, 2011

தோசை,ஆறு வகை!

கோவையிலே ஹோட்டலுக்கு(கவனிக்க,ரெஸ்டாரன்ட் இல்ல,நாங்கள்லாம் கொஞ்சம் பட்டிக்காடுங்க, ஹோட்டல்ல போய் சாப்பிடறதுன்னுதான் சொல்லுவோம்!:)). ஊர்ல எல்லாம் ரெஸ்டாரன்ட் எல்லாம் போனதில்லீங்க. அன்னபூர்ணா,சுகம், ஆனந்தாஸ்,அமுதசுரபி,லலிதாஸ்,ஐயப்பாஸ் பர்ல், ஆரியபவன் இதெல்லாம் நாங்க ரெகுலரா சாப்பிடும் ஹோட்டல்கள். சான்ஸ் கிடைச்சப்ப எல்லாம் தவறாம சாப்பிடுவது காலிஃப்ளவர் ரோஸ்ட். மூணுவகை சட்னி-சாம்பாரோட சுடச்சுட மொறுமொறு தோசை சூப்பரா இருக்கும்.:P :P

இங்கே இண்டியன் ரெஸ்டாரன்ட்ஸ்லே இட்லி தோசை நான் சாப்பிடவே மாட்டேன். (சாப்பிட்டா வெறுத்துப்போயிரும்,அந்தளவுக்கு சுமார் ரகம்தான் இதுவரை சாப்பிட்ட ஹோட்டல்கள்ல எல்லாமே!) எப்பவாவது ஊர்ல சாப்பிட்ட தோசைகள் நினைவுகள் வரப்ப இப்படி வீட்டுலயே செய்து மனசைத் தேத்திக்கறது!!!!

ஆறு வகை தோசைகள் பத்தி சுருக்கமா ஒரு முன்னுரை..
  • மசால் ரோஸ்ட் என்னவருக்கு சுத்தமா பிடிக்காத ஐட்டம்..ஆனா இந்த மாதிரி செய்தா மூச்சுக்காட்டாம சாப்பிடுவார்.;) ரெசிப்பி இங்கே.
  • காலிஃப்ளவர் ரோஸ்ட் தனி போஸ்ட்டாவே போடுமளவு போட்டோஸ் இருக்கு,யாராவது ஆர்வமா கேட்டீங்கன்னா போஸ்ட் பண்ணறேன். :)
  • மஷ்ரூம் ரோஸ்ட்,இதுவும் ஊரிலே சாப்பிட்ட நினைவில் ஒருநாள் செய்துபார்த்தேன்,சூப்பரா இருந்தது,அதிலிருந்து மஷ்ரூம் வாங்கும்போதெல்லாம் செய்துடுவேன். அதுக்கு ரெசிப்பி இங்கே.
  • முட்டை தோசை,வெங்காய தோசை..எங்களுக்குத் தெரியாதா?-ன்னு கேப்பீங்க..ஓக்கே,அதுக்கு ரெசிப்பில்லாம் நான் சொல்லல..ஒன்லி போட்டோஸ்!
  • பொடி தோசை,ஏற்கனவே போஸ்ட் பண்ணியிருக்கேன்,ரெசிப்பி இங்கே.
என்ஜாய் பண்ணுங்கோஓஓஓஓ!!!
காலிஃப்ளவர் ரோஸ்ட்

~~~~~
மசால் ரோஸ்ட்
~~~~~~
ஆனியன் ரோஸ்ட்

~~~~~
முட்டை ரோஸ்ட்

~~~~~
மஷ்ரூம் ரோஸ்ட்

~~~~~
பொடி தோசை
**********************
இந்த போஸ்ட்டுக்கு என்ன டைட்டில் வைக்கலாம்னு யோசிக்கைல இந்தப்பாட்டு நினைவுக்கு வந்தது,இலவச இணைப்பா தோசையுடன் இதையும் இணைத்துட்டேன். :)

14 comments:

  1. Mahi- am inviting myself to your place- the dosa roasts looks heavenly-slurp- aasai aaru vagai sokkude manam !

    ReplyDelete
  2. கொஞ்சம் முன்னால நான் போட்ட கமண்ட் காணாமப் போச். ;( மேல இருக்கிறது ட்ரையல் சிரிப்பு. ;)

    ஏதோ புதுசா 6 தோசை ரெசிபின்னு வந்து பார்த்தா... முன்னுரை, முகவுரைன்னு போட்டு வச்சிருக்கீங்க மகி, நியாயமா??

    லிங்க் வழியா நுழைஞ்சு நுழைஞ்சு 'எங்கயோ' போய்ட்டேன்.

    இது... இது கமல் படப்பாட்டு என்று யாரோ சொன்னாங்களே!!! இல்லையா!! ;))))

    ReplyDelete
  3. Mahi, enakku pasikkudhu. Unga veettukku varatta?

    ReplyDelete
  4. தோசையம்மா தோசை நெய்யிலெ சுட்டதோசை
    அரிசிமாவு உளுந்து மாவு கலந்து சுட்ட தோசை
    மஹி சுட்டதோசை ஆறு வகை தோசை
    நல்ல நல்ல தோசை எல்லாருக்கும் ஆசை.
    மெல்ல மெல்ல புட்டு எல்லாருக்கும் கொடுத்து
    சுடசுடத் தின்போம் இன்னும் கொஞ்சம் கேட்போம்.
    ஒரு குழந்தை பாட்டு. கொஞ்சம் மாத்தி
    சின்னதாக எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
  5. Super dosai varieties... Intha paatum ennaku pidikum..:)
    Reva

    ReplyDelete
  6. Mahi,
    Roast ellam parthathum sabudunum pola asai varuthu.
    vijimma

    ReplyDelete
  7. Ithanai vagai dosai!!!!Parkave echil oorudhu..Naanum Indian restaurant la dosai order pannave matten..

    ReplyDelete
  8. எனக்கு தெரிந்து ரெண்டி வகைதான் ஒன்னு குண்டு தோசை இன்னும் ஒன்னு மெலிசு தோசை
    ம் எப்படி வகை வகைய போட்டு என்னை ஊருக்கு அனுபிடுவீங்க போலவே..ஊருக்கு போன உடனே அம்மாகிட்ட சொல்லி டெய்லி இட்லி தோசைதான்..ரொம்ப நாள் ஆச்சு saaptu.. :(((

    ReplyDelete
  9. மகி...கலக்குறிங்க...அழகாக Triangle சேப்பில் மடித்து இருக்கின்றிங்க...சூப்பர்ப்...

    எல்லா தோசையுமே அருமை...

    ReplyDelete
  10. மகி, இது அடுக்குமா? இப்படி போட்டோ எல்லாம் புடிச்சு போட்டு.... அந்த காலிஃப்ளவர் தோசை சூப்பர். விரைவில் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  11. ப்ரியா,யு ஆர் ஆல்வேஸ் வெல்கம்! :) தேங்க்ஸ் ப்ரியா!

    இமா,பாட்டு கேட்டுகிட்டே ரெசிப்பிய படிக்கணும்,வேற எங்கேயும் போகக்கூடாது.பொறுமையா 2 முறை கமென்ட் போட்டதுக்கு தேங்க்ஸ் இமா!


    காயத்ரி,வாங்க வாங்க. :)

    காமாட்சிமா,பாட்டு சூப்பர்! தேங்க்ஸ்மா!

    ரேவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க.பாட்டு உங்களுக்கும் பிடிக்குமா? ரொம்ப சந்தோஷம். :)

    விஜிமா,சாரு,மஹேஸ் அக்கா,தேங்க்ஸ்!!!

    நீங்களும் நம்ம கட்சிதானா அப்போ? :) தேங்க்ஸ் ரம்யா!

    சிவா,ரூம்ல இட்லி-தோசைல்லாம் கிடையாதா? நெக்ஸ்ட் டைம் ஊருக்கு போகும்போது அம்மாகிட்ட சொல்லி விதவிதமா தோசை சாப்பிடுங்க. :)

    கீதா,தேங்க்ஸ் கீதா!

    வானதி,செய்துபாருங்க,சூப்பரா இருக்கும்.தேங்க்ஸ் வானதி!

    ReplyDelete
  12. டாஷ்போர்ட்ல குட்டியா முதல் படம் பார்க்க பழைய காலத்து டெலிஃபோன் மாதிரி இருக்கு. ;)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails