Sunday, June 5, 2011

DMV-யும் நானும்..

முதல் பகுதியைப் படிக்க

இடம் மாறியதால், என்னவர் லைசென்ஸ்-ஐயும் இந்த ஸ்டேட்டுக்கு மாற்ற வேண்டியதாகிவிட்டது. வேறு ஸ்டேட் லைசென்ஸ் இருந்தால், இங்கே எழுத்துத்தேர்வு மட்டும் போதும். அதை எழுதுவதற்காக இவரும் இவர் நண்பரும் ரெடியானாங்க. யூட்டாவில் எழுத்துத்தேர்வுக்கு 'கவனமாக'ப் படித்ததால், எனக்கு எதுவும் மறக்கவில்லை. ஒரு ட்ரை செய்து பார்ப்போமேன்னு இலவச இணைப்பா நானும் அவர்களுடன் இணைந்துகொண்டேன். ஒரு புதன் கிழமை காலங்காத்தால மூணு பேருமா DMV(Department of Motor Vehicles )-ஆபீஸ் போனோம்.

ஆஃபீஸ் திறக்கும் முன்பே பத்திருபது பேர் நின்றிருந்த க்யூவிலே நாங்களும் இணைந்து, வெயிட் பண்ணி, ஃபார்மாலிட்டியெல்லாம் முடிந்து டெஸ்ட் எழுதப்போயாச்சு. இங்கே பேப்பர் டெஸ்ட்தான், ஜஸ்ட் லைக் தட் போன நான் முதல் ஆளா டெஸ்ட்டை முடிச்சு கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டேன்,இவங்க ரெண்டு பேரும் வரவேயில்ல. அடுத்து நண்பரும் கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டார்,என்னவர் இன்னும் எழுதிட்டேஏஏஏஏஏ இருக்கிறார். அவர் வருவதுக்குள்ளே எங்க 2 பேருக்கும் பாஸ்-னு ரிஸல்ட் சொல்லிட்டாங்க, என்னவரும் டெஸ்ட்டை முடித்தார்.வெற்றிகரமா லர்னர்ஸ் பர்மிட்டை வாங்கிட்டு வந்துட்டேன். அவங்க 2 பேருக்கும் ஒரு சில நாட்களில் லைசென்ஸ் போஸ்ட்லே வந்துடுச்சு.

ஒரு வீகெண்டில் பக்கத்திலிருக்கும் ஸ்கூல் க்ரவுண்டில் போய் ப்ராக்டீஸ் பண்ணுவோம் என்று கிளம்பினோம். சால்ட்லேக் சிட்டியில் இங்கே இருக்குமளவு ட்ராஃபிக் இருக்காது,ரோடுகளும் இவ்வளவு பெரியதா இருக்காது. இங்கே ரோடுகள் நல்ல அகலமா இருக்கும், 6 லேன் ரோடெல்லாம் சாதாரணமா பார்க்கலாம். ஸ்பீட் லிமிட்டும் அதிகம். ட்ராஃபிக்கும் அதிகம். ஸ்டியரிங் வீலைத்தொட்டு பலநாளாகிட்டதால் எல்லாமே புதுசா இருந்தது எனக்கு!! இவருக்கும் ரொம்ப திகிலா இருந்ததால் கொஞ்ச நேரம் முயற்சித்துட்டு வீட்டுக்கு வந்தாச்சு.

எங்களுடன் எழுத்துத்தேர்வுக்கு வந்த நண்பரின் மனைவியும் லர்னர்ஸ் பர்மிட் வாங்கினாங்க. அவரும் கணவருடன் ட்ரைவிங் பழக ஆரம்பித்து, அவங்களுக்கும் எனக்கு நேர்ந்த அதே அனுபவம்! ஸோ,நாங்க ரெண்டு பேரும் என்ன செய்யலாம்னு தீவிரமா யோசிச்சோம். பெட்டர்ஹாஃப்-களுடன் ட்ரைவிங் ப்ராக்டீஸ் போனால் வீணா வாக்குவாதம்,டென்ஷன், பயம்,திகில் எல்லாம் வருது,அதனால் எதாவது ட்ரைவிங்ஸ்கூல்ல ஜாயின் பண்ணலாம்னு முடிவு செய்தோம். இதற்கு ரெண்டு வீட்டிலும் அமோக ஆதரவு!! :)

ஒருவழியா ட்ரைவிங் ஸ்கூல்ல முதல் க்ளாஸ் போயிட்டு வந்தாச்சு. "நாங்க 2 மணிநேரம்தான் சொல்லித்தரோம், நீங்க உங்க காரில் ப்ராக்டீஸ் பண்ணுவதில்தான் எவ்வளவு சீக்கிரம் லைஸென்ஸ் வாங்கமுடியும் என்பது இருக்கிறது"ன்னு அந்த இன்ஸ்ட்ரக்டர் சொல்லிட்டார். விட்டது தொல்லைன்னு ஹாயா இருந்த மிஸ்டர்.A-வும் மிஸ்டர்.M-ம்மும் மறுபடியும் மாட்டிகிட்டாங்க. :)
இன்ஸ்ட்ரக்டருடன் இரண்டுமணி நேரம் ட்ராஃபிக்கில் ட்ரைவ் செய்திருக்கிறோம் என்பது எங்களைவிட A &M -க்கு கான்ஃபிடன்ஸ் லெவலை பூஸ்ட் பண்ணிவிட்டது. மெதுமெதுவா நேரம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சாங்க. இடையிடையே ட்ரைவிங் ஸ்கூலில் இன்னும் சில பயிற்சி வகுப்புகள். இப்படியாக சுமாரா காரோட்ட ஆரம்பித்துவிட்டோம். இனி என்ன? ரோட் டெஸ்ட் புக் பண்ணவேண்டியதுதான்.

சாதாரணமாக நல்லா ட்ரைவ் பண்ணும் நான் லைசென்ஸ் எடுக்க ப்ராக்டீஸ் என்றால் சும்மா சொதப்புவேன். இன்டர்செக்ஷன்ல நுழையுமுன் எல்லா டைரக்ஷனும் பார்க்கணும், லேன் சேஞ்ச் பண்ணுவதற்கு முன்னும் பின்னும் கண்ணாடிகளை பார்க்கணும்,15 செகண்டுக்கு ஒருமுறை 3 கண்ணாடியையும் பார்க்கணும்.. இப்படி பல பாயின்ட்களை கோட்டை விடுவேன். இதனாலேயே ரோட் டெஸ்ட்டை போஸ்ட்போன் பண்ணிகிட்டே இருந்தேன்.

நாட்கள் ஓடிட்டே இருந்தது. தோழி லைசென்ஸும் வாங்கிட்டாங்க. நான் டெஸ்ட் அப்பாயின்ட்மென்ட் புக் பண்ணவே இல்ல. பர்மிட் ஒரு வருஷத்துக்கு குடுத்திருந்தாங்க,அதனால ரொம்ப ரிலாக்ஸா விட்டுட்டேன். சமீபத்தில் இவர் ஆபீஸில் இருந்து 2-3 பேர் லைஸென்ஸ் வாங்கினாங்க. நீ வாங்கலையா?-ன்னு பலதரப்பிலிருந்தும் கேள்விகள். தூங்கிட்டிருந்த சிங்கத்தை(ஹ்ஹிஹீ) தட்டி எழுப்பிட்டாங்க!! சிங்கமும் டெஸ்ட்டுக்கு புக் பண்ணுச்சு!! எப்பத் தெரியுமா? கரெக்ட்டா என்னவரின் பிறந்தநாள் அன்று!! இவரும் அன்று லீவ் போடுவதாக இருந்ததால் இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிட்டு அப்பாயின்ட்மென்ட்டை கன்ஃபர்ம் பண்ணிட்டேன்.

எங்க வீடு இருப்பது மலைப்பாங்கான இடம், இங்கே இருக்கும் DMV-ஆஃபீஸும் ஒரு குட்டி மலை மீதுதான் இருக்கும். டெஸ்ட்டுக்கு முதல்நாள் மாலை அங்கே போய் கொஞ்சநேரம் ப்ராக்டீஸ் பண்ணிட்டு வந்தோம். அடுத்தநாள் காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப்போய் டெஸ்டுக்கு பார்ம் வாங்கியாச்சு. நான் 14வது ஆள்! வந்த நம்பரைப் பார்த்ததுமே( ஏழு-ஐந்து ரெண்டுமே என் ராசி நம்பர், அன்னிக்கு தேதி 25! எனக்கு கிடைத்திருக்கும் நம்பர் 14! :)) ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.

இங்கே டெஸ்ட் ப்ரொஸீஜர் என்னன்னா ஒரு ஆளுக்கு 20-25 நிமிஷம் எடுப்பாங்க. DMV-ஆபீஸை சுற்றி நாலைந்து மைலுக்கு நம்மை ட்ரைவ் பண்ணச்சொல்லுவாங்க. வழியிலே ஒரு இடத்தில் ரோட்டோரம் பார்க் செய்து 20 அடிதூரம் curb-க்கு பேரலல்லா ரிவர்ஸ்லயே வரணும். அப்புறம் DMV வரவேண்டியதுதான். ஸ்கோரிங் ஷீட் வச்சு ஒரொரு தப்புக்கும் ஒரு மார்க் போட்டுகிட்டே வராங்க. -15 வரை வாங்கினா பாஸ்,அதுக்கும் மேலே தப்பு செய்தா அம்புட்டுதான்.

அன்னிக்குன்னு ரெண்டே ரெண்டு இன்ஸ்பெக்டர்ஸ்தான் இருந்தாங்க. அதிலே ஒருவர் கடு-கடுன்னு இருந்தார்,இன்னொருவர் ப்ரெண்ட்லியா தெரிந்தார். யார் வரப்போறாங்கன்னு சஸ்பென்ஸோட வெயிட் பண்ணினா அவிங்க ரெண்டுபேருமில்லாம புதுசா இன்னொருவர் வந்துவிட்டார்!! என்னவருக்கு பை-பை சொல்லிட்டு கிளம்பினேன். டெஸ்ட்டை முடித்துவந்ததும், ஒண்ணு ரெண்டு கரெக்ஷன் சொல்லிட்டு "நீ பாஸ் பண்ணிட்டே, குட் லக்! கவுன்ட்டர் நம்பர்1-க்குப் போய் லைஸென்ஸை வாங்கிக்கோ" னு சொல்லிட்டாங்க. :)))))))))

சந்தோஷமா("ஆத்தா நான் பாஸாகிட்டேன்!"ன்னெல்லாம் கத்தமுடில) கார்ல இருந்து இறங்கி என்னவரைத் தேடறேன்,தேடறேன், ஆளையே காணலை!! அக்கம் பக்கம் கார்ல இருந்தவங்ககிட்டவெல்லாம் விசாரிக்கிறேன், DMV ஆபீஸ் உள்ளே போய்ப் பார்க்கிறேன், எங்கே போனாருனே தெரில! போன் செய்தா வாய்ஸ் மெய்ல் போகுது. மறுபடி அங்கே இங்கே தேடிட்டு டென்ஷனாகி போன் பண்ணறேன், நான் பக்கத்தில இருக்க கடைல இருக்கேன், இங்கே சிக்னல் இல்லைங்கறாரு. நான் பாஸ் பண்ணிட்டேன்ங்கறேன், "நீ காரை எடுத்துட்டு மலைல இருந்து இறங்கும்போதே பாஸ் பண்ணிடுவேன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு, அங்கே வெயிட் பண்ண போரடிச்சுது, அதான் கடைக்கு வந்திருக்கேன்"னாரு. சரி,இப்பதான் நான் வந்துட்டேனே வாங்க-ன்னா " நீ தான் பாஸ் பண்ணிட்டியே, இனி நான் எதுக்கு? காரை எடுத்துட்டு கடைக்கு வந்துடு"-ன்னு போனை வச்சுட்டார். கர்ர்ர்ர்ர்ர்ர்!

கவுன்ட்டர்ல போய் லைசென்ஸை வாங்கணுமே?! இவரைத் தேடியதில் சிலபல நிமிஷங்கள் கரைந்து, அங்கே அனுமார் வால் போல கியூ நீண்டிருந்தது. எவ்வளவு வெயிட் பண்ணிட்டம்,இது என்ன பெரிய கியூன்னு மனசைத் தேத்திகிட்டு நின்னேன். என்னையக் காணம்னு இவரும் வந்து சேர்ந்தார். வந்ததும் சாவியக்குடுன்னு வாங்கிட்டு மறுபடி காருக்குப் போயிட்டு வந்தார். டெம்பரவரி லைசென்ஸைக் குடுத்து, இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள லைசென்ஸ் அனுப்பிடுவோம்னாங்க. அப்பாடான்னு சந்தோஷமா வெளியே வந்தோம்.

கால்மணி நேரம் வெயிட் பண்ணமுடியாதா? அதுக்குள்ளே கடைக்கு போகணுமா? அப்படி என்ன அவசரம் உங்களுக்கு?ன்னு கடுகடுத்துட்டே காருக்கு வந்தா......

அங்கே எனக்காக அழகான ஒரு பூந்தொட்டி காத்துட்டு இருக்குது!! அதை வாங்கத்தான் போயிருக்கார் ஐயா! :))))))

இன்னும் சிலநாட்கள் கழித்து இதைப் படிக்கையில் ஆஃப்டர் ஆல் லைசென்ஸ் வாங்கினதை ஒரு பெரிய சாதனை மாதிரி பில்டப் குடுத்து ப்ளாக்ல எல்லாம் எழுதியிருக்கோமேன்னு எனக்கே தோணும், ஆனாலும் நான் கடந்து வந்த அனுபவங்களை காலப்போக்கில் மறக்காமல் இருக்க இங்கே பதித்து வைக்கிறேன்னு வைங்களேன்! இந்த நினைவுகளை அசைபோடும்போது கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு, இருக்கும்!. :)))))))))))))

பொறுமையாப் படித்த அனைவருக்கும் நன்றி!

25 comments:

  1. கடைசி பாரா. ம். ;) ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க. முதல் கமண்ட் போட்டு இருக்கேன். எனக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி ப்ளீஸ். ;)

    இதும் மஞ்சள் பூவா!!!

    ReplyDelete
  2. ஹே வாழ்த்துக்கள் மகிமா
    உங்களுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்களும் அனுப்றேன்
    அதுக்கு பதிலா
    ஒரு மூட்டை சாக்லேட் ,அப்புறம் தேன்மிட்டாய்
    எல்லாம் பார்சல் பண்ணுங்க...

    மக்களே மகிமா வண்டி வரது ஓரம் போங்க...

    ReplyDelete
  3. Congrats Mahi! Very interesting post..

    ReplyDelete
  4. இதே மாதிரி தான் எனக்கு நடந்து..இது மாதிரி எழுதி கொள்வது ரொம்ப நல்லவிஷயம்..

    பின்னாடி பார்க்கும் பொழுது ரொம்ப நல்லா இருக்கும்..

    நீங்க இப்போ எங்கே இருக்கின்றிங்க...

    ReplyDelete
  5. Congrats Mahi! How about planning a road trip?

    ReplyDelete
  6. மகி,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? பகிர்வுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. Vazhthukal...arumayana write-up eppovum pola..

    ReplyDelete
  8. பூங்கொத்து வாங்கி குடுத்து... ஸோ ரொமான்டிக் தான் போங்கள். அடுத்து ஒரு கார் வாங்கிடுங்கோ. அப்ப தான் ஈஸியா இருக்கும்.

    ReplyDelete
  9. "கணவருடன் driving பழகறதா? டைவர்ஸ் பண்ற ஐடியா இருக்கோ"னு இங்க ஒரு common ஜோக் உண்டு...ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... அவ்ளோ சண்டை வரும்... எல்லாம் சொந்த நொந்த அனுபவம் தான்... மத்த சமயத்துல நல்லா ஓட்டற நமக்கு இவங்க கூட போறப்ப இப்படி தான் தப்பு வருமோ கொடுமை தான் போங்க... என்னோட ப்ளாஷ்பேக் எழுதணும்னு தோணுது... ஹி ஹி...லெட்ஸ் சி...:))

    ReplyDelete
  10. Aha Mahi chellam, nan unkitte vantha ennai karilaye oor suddhi kaduve thna?
    viji

    ReplyDelete
  11. அனுபவத்தை சுவைபட பகிர்ந்துள்ளீர்கள் மகி.

    ReplyDelete
  12. ///"நீ காரை எடுத்துட்டு மலைல இருந்து இறங்கும்போதே பாஸ் பண்ணிடுவேன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு, ////

    மஹி...மஹீஈஈஈ... இனிமேல்தான் நீங்க ரொம்ப ஜாக்க்ர்ர்ர்ர்ர்தையாக இருக்கோணும்:), காரை மலையிலயிருந்து இறக்குவதைவச்சே.. பாஸ்தான் எனக் கண்டுபிடிச்சவர்... இனி உங்கட சிரிப்பு அழுகைக்கெல்லாம் நடிப்போ:) உண்மையோ:) என கண்டுபிடிக்காமல் இருப்பாரோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்:).. ரொம்ப ஜாக்ர்ர்ர்ர்தையா அழுது வெல்லுங்க ஃபிரெண்டூ(தேவையானதை:))(இல்ல்ஸ் இன் பாஷையில:).

    இவ்ளோ காலமும் நாமதானே.. அவிங்களின் முகத்தைப் பார்த்தே கரெக்ட்டா அனைத்தையும் கண்டுபிடிச்சுட்டு வந்தோம்:)... இப்போ எதிர்ப்பாலாருக்கு கை மாறிடுச்சோ? இனிமேல் நாம ரொம்ப ஜாக்ரதையாத்தான் இருக்கோணும்:)))).... ஆங்ங்ங்ங்ங்ங்ங்:).

    ReplyDelete
  13. நன்றி மகி...

    பிரவுன் ரைஸ் packet பிரித்தவுடன் சீக்கிரமாக பயன்படுத்தினால் ரொம்ப நல்லது...ஒரு வேளை பழைய அரிசியாக இருக்குமா என்று பாருங்க..

    பிரவுன் ரைஸ் , மற்ற அரிசியினை போல ரொம்ப நாள் வைத்தால் நல்லா இருக்காது...Its has expiration.

    ReplyDelete
  14. இமா,ஸ்பெஷல் பார்ட்டிதானே? குடுக்கறேன்,எப்போ இங்கே வரீங்கன்னுசொல்லுங்க! முதல் கருத்துக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் இமா!

    தேங்க்ஸ் சிவா! தேன்மிட்டாயெல்லாம் ஞாபகப்படுத்தினா நான் என்ன செய்ய? சாக்லேட் வேணா அனுப்பிடறேன்.

    காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!

    கீதா,உங்களுக்கும் இதே அனுபவமா? சொல்லவே இல்லயே? ;) உங்க அடுத்த கேள்விக்கு பதில் அடுத்த போஸ்ட்ல. :)

    என்னது...ரோட் ட்ரிப்பா? ஆள விடுங்க சாமி! நான் பேசஞ்சரா பேக்ஸீட்ல உட்கார்ந்துட்டுவேணா உங்கவீட்டுக்கு வரேன் மஹேஸ் அக்கா! ;)

    ஆசியாக்கா,வெகுநாளுக்கப்புறம் உங்க கமென்ட்டைப்பார்த்து சந்தோஷம். நன்றி ஆசியாக்கா!

    மேனகா,தேங்க்ஸ்!

    நித்து,தேங்க்ஸ் நித்து!:)

    ReplyDelete
  15. வானதி,பூச்செடியே வாங்கி தந்திருக்கார்!!:) கார்தானே..மெதுவா வாங்கலாம். தேங்க்ஸ் வானதி!

    தங்கமணி-ரங்கமணி கலாட்டால அடுத்ததா இந்த ட்ரைவிங் போஸ்ட்டைப் போடுங்க புவனா! ஒரு சிலருக்குதான் கணவர்களுடன் கத்துக்கறது சரியா இருக்கு,நமக்கெல்லாம் இப்படித்தான் காமெடி ஆகுது. நன்றி!

    விஜிமா,அடுத்த ட்ரிப் நேரா இங்கே வந்துருங்க,ஊர் சுத்திப்பார்த்துட்டு கான்ஸஸ் போலாம்! ;)

    ஸாதிகாக்கா,தேங்க்ஸ் ஸாதிகாக்கா!

    அதிரா,கரெக்ட்டாச் சொன்னீங்க போங்க! இனி எக்ஸ்ட்ரா ஜாக்கிரதையாத்தான் இருக்கோணும். ;) தேங்க்ஸ் பார் தி டைம்லி அட்வைஸ்!!

    கீதா,ப்ரவுன் ரைஸை குட்டி பேக்காதான் வாங்குவேன்,இனிமேல் பார்க்கிறேன். தேங்க்ஸ்!

    ReplyDelete
  16. இமா,இந்தாங்க >>()<< சாக்லேட் சாப்பிடுங்க,மத்ததெல்லாம் வந்துட்டே இருக்கு! ஹிஹ்ஹி!

    ReplyDelete
  17. பெருசா ஏதாச்சும் வேணும். ;) இது பத்தாது. பார்க்கலாம் என்ன வருதுன்னு.

    ReplyDelete
  18. you are very determined. Congratulations! did you get the permanent original licence? Nicely narrated the incident with interesting dialogues. The boquet to greet you is a lovely gesture. He might have felt 'aha! atlast relieved' ha.ha....

    ReplyDelete
  19. Getting license sounds like the board exams of children here. ha..ha... but that is required. Don't know when India and its corrupt officials will learn & follow it.

    ReplyDelete
  20. மீரா,இன்னும் லைசென்ஸ் கார்ட் கிடைக்கலைங்க,2 மன்த்ஸ் ஆகும்னு சொல்லிருக்காங்க.இப்போதைக்கு சும்மா ஒரு பேப்பர்ல டெம்ப்ரவரி லைசென்ஸ்-னு ப்ரின்டவுட் எடுத்துக் குடுத்திருக்காங்க,அவ்வளவுதான்!

    அதான் எனக்கு ரொம்ப அங்கலாய்ப்பா இருக்கு. இவ்வளோ கஷ்டப்பட்டு/கஷ்டப்படுத்தி(!!) லைசென்ஸ் வாங்கிருக்கோம்,அட்லீஸ்ட் என் போட்டோவையாவது ப்ரின்ட்-அவுட்லே போட்டுக்குடுத்திருக்கலாம்!!ஹூம்..என்ன பண்ண,இங்கே ஸ்டேட் கவர்மென்ட் பட்ஜெட் பற்றாக்குறைல இருக்குதாம்,
    போனாப்போகுதுன்னு அட்ஜஸ்ட் பண்ணிகிட்டேன்! ;)

    லைஸென்ஸ் எடுத்தபின்னால இதெல்லாம் ஒருவிஷயமான்னு தோணுது,ஆனா டெஸ்ட்டை முடிக்கும்வரை போர்ட் எக்ஸாம் போலதான் இருந்தது.:)

    தேங்க்ஸ்ங்க!!

    ReplyDelete
  21. "நான் முதல் ஆளா டெஸ்ட்டை முடிச்சு கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டேன், அடுத்து நண்பரும் கொஸ்டின் பேப்பரை குடுத்துட்டு வந்துட்டார்"______ அப்படியா !! நான் எழுதிய இரண்டு இடங்களிலும் கொடுத்த உடனே கரெக்ஷ‌ன் பண்ணி கொடுத்திட்டாங்க.


    எக்ஸாம் ஃபீவர்ல இப்படி நெம்பரையெல்லாம் கூட்டி..... கழித்து ......கணக்குப்பண்ணி....ஹும் !!

    ட்ரைவிங் டெஸ்ட் போஸ்ட் எங்க இருக்குன்னு நேத்திலிருந்தே சுத்திசுத்தி வந்து சர்ச் பாக்ஸில் "கார்" என போட்டு கண்டுபிடிச்சேன். இன்ட்ரஸ்ட்டா இருக்கு மகி.

    ReplyDelete
  22. இங்கேயும் அப்படிதான் அக்கா! கொஸ்டின் பேப்பரை கொடுத்துட்டு அப்பாலிக்கா:) ஓரமா ஒரு பத்துநிமிஷம் வெயிட் பண்ண உடனே பேரைக் கூப்ட்டு ரிசல்ட் சொல்லிடறாங்க. :)))
    //ட்ரைவிங் டெஸ்ட் போஸ்ட் எங்க இருக்குன்னு நேத்திலிருந்தே சுத்திசுத்தி வந்து // நினைச்சேன், நீங்க தேடுவீங்களோ...லிங்க்-ஐ மெயில்ல தட்டி விடலாம்னு இருந்தேன், நீங்களே கண்டுபுடிச்சிட்டீங்க, குட் கர்ள்! ;) :)

    ReplyDelete
  23. திரும்ப முழுக்க படிச்சிருக்கேன். ஒரு டிஷ் மாங்காய் பச்சடி ப்ளீஸ். :-)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails