Tuesday, January 25, 2011

எம்ப்ராய்டரி

பள்ளியில் படிக்கும்போது பத்தாம் வகுப்பு வரை,வாரம் ஒருநாள் ஒரு பீரியட் தையல் க்ளாஸ்/பாட்டு க்ளாஸ் இருக்கும். (அடுத்து பாட்டு பாடி ஒரு போஸ்ட் பண்ணிருவேன்னு பயப்படாதீங்க,எனக்கு பாட்டெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது,ஹிஹி).க்ளாஸ்ல இருக்கும் பொண்ணுங்கள்ல பாதிப்பேர் பாட்டு க்ளாஸுக்கும்,மீதிப் பேர் தையல் க்ளாஸுக்கும் போகணும்,அடுத்தவாரம் ஆல்டர்னேட் பண்ணிக்கணும்.

பாட்டு க்ளாஸுக்கு ஒரே ஒரு பாட்டு நோட்டு மட்டும் கொண்டுபோனாப்போதும். பாட்டு டீச்சர் வந்து ஒரு பாட்டு சொல்லித்தருவாங்க. எல்லாரும் டீச்சர் பின்னாலயே கும்பலா கத்திட்டு(!),போர்டுல எழுதிப்போட்ட பாட்டை காப்பி பண்ணிக்குவோம்,அவ்ளோதான்! ஆனா தையல் க்ளாஸுக்கு குட்டியா ஒரு ஒயிட் க்ளாத்(கர்ச்சீஃப் தைப்பதுதான் ஆரம்பம்),ஊசி,சிவப்பு-பச்சை-மஞ்சள் எம்ப்ராய்டரி நூல் இப்படி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் எல்லாம் கொண்டுபோகணும்.

இதைவிட காமெடி என்னனா, மாசத்துல 2 முறைதான் தையல் க்ளாஸ் வரும், இடையில் ஏதாவது லீவ் வந்தா இன்னும் காமெடியாகிடும்,எந்த க்ரூப் பாட்டு க்ளாஸ்-எந்த க்ரூப் தையல் க்ளாஸுன்னு சண்டையே போடுவோம். ஏன்னா அன்னிக்கின்னு பார்த்து தையலுக்கு தேவையானதை எடுத்துட்டுப்போக மறந்துட்டுப்போயிருப்போம்,டீச்சர்கிட்ட திட்டு வாங்கணுமே!!:) அது ஒரு அழகிய கனாக்காலம்!

எம்ப்ராய்டரி எனக்கு மிகவும் பிடிக்கும்.வானதி ப்ளாக்ல வர எம்ப்ராய்டரிகளைப் பார்த்து என் மனசுக்குள்ள புதைந்து கிடந்த எம்ப்ராய்டரி ஆசை விழித்துக்கொண்டது. ஒருவழியா நானும் ஒரு குட்டி எம்ப்ராய்டரி பண்ணிட்டேன். :) இது ஃபெல்ட் க்ளாத்தில் செய்த எம்ப்ராய்டரி..

தேவையான டிஸைனை பேப்பரில் ட்ரேஸ் பண்ணி,பேப்பரை ஃபெல்ட் க்ளாத்துடன் சேர்த்துவைத்து..
ரன்னிங் ஸ்டிச் மூலமா முழு டிஸைனையும் தைச்சு முடித்தேன்.
அதன் பின்னர் பேப்பரை துணியிலிருந்து கிழித்து எடுத்துவிட்டு..

சங்கிலித்தையல் (chain Stitch), காம்புத்தையல் (Stem Stitch), அடைப்புத்தையல் (Filling Stitch) இவற்றால் டிஸைனை முழுக்கத் தைத்து முடித்தேன்.

பூக்களில் சங்கிலித்தையல் அவுட்லைனும், உள்ளே லேட்டிஸ் வொர்க் (Lattice Work) ஃபில்லிங்கும்..

இத்துடன் இந்த டிஸைன் முடிந்திருக்க வேண்டியது..என்னவரின் வேண்டுகோளுக்கிணங்க(!!) இலைகளையும் ஃபிஷ்போன்(Fishbone) ஸ்டிச் மூலம் ஃபில் பண்ணியதில்..

..இப்படியாக நிறைவுபெற்றது.
லேட்டிஸ் வொர்க்,ஃபிஷ் போன் ஸ்டிச் இரண்டையும் கற்றுக்கொள்ள இந்தத்தளம் மிகவும் உதவியாக இருந்தது. இந்த டிசைனும் அங்கிருந்து கிடைத்ததுதான். அதுபோக வானதியிடம் அவ்வப்பொழுது குட்டிக்குட்டி சந்தேகங்களுக் கேட்டுக்கொண்டேன்,தைத்து முடித்ததும் போட்டோவும் அனுப்பினேன். ப்ளாகில் போடுங்கோ என்று வானதி தந்த தைரியத்திலே இங்கே போஸ்டும் பண்ணிட்டேன்.எம்ப்ராய்டரியில் ஆர்வம் உள்ள யாருக்காவது இந்தப்பதிவு உபயோகமாய் இருந்தால் மகிழ்ச்சி. :)

50 comments:

  1. மகி, மிகவும் அழகா, பொறுமையா செய்து இருகிறீங்க. நான் பார்த்திட்டு இருக்கும் போது என் ஆ.காரரும் எட்டிப் பார்த்தார். அவருக்கு அந்த இலைகள் மிகவும் பிடிச்சு போச்சு.

    ReplyDelete
  2. looks neat & beautiful with perfect colour matching

    ReplyDelete
  3. நான் அந்த இலைகள் ஒட்ட வச்சதோன்னு நினைச்சேன். அதுவும் தையல் தானா?! சூப்பர்! :)

    ReplyDelete
  4. Great work,my athai used to do this and learnt lil from her,but not in touch,good that you do this :)

    ReplyDelete
  5. mahi Happy New Year & Independence Day.

    முதலவதாக உங்களிடம் மன்னிப்பு. நிங்க குடுத்த அவார்டை என்னால் காப்பி செய்ய முடியல்லை.

    அடுத்து எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாததினால் ப்ளாக் பக்கம் வர இயலவில்லை. இப்ப தான் வர முடிந்தது.
    நல்லாவே எம்பிராய்ரடி போட்டிருக்கிங்க. எனக்கு இது கூட தெரியாது நான் உங்களிடம் கத்துக்கனும்.
    சூப்பரா இருக்கு மகி.

    ReplyDelete
  6. ஆஹா மகி அசத்தலாக இருக்கு.என் மகளிடம் காட்டவேண்டும்..

    ReplyDelete
  7. மஹி சூப்பரா இருக்கும்மா. மலரும் நினைவுகள் அசத்தல்.

    ReplyDelete
  8. அசத்தல் கைவேலை. ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  9. மஹி எனக்கு இந்த எம்ராடரி ரொம்ப பிடிக்கும் ஆர்வமும் அதிகம், எங்களுக்கும் சின்னதில் ஒரு கிலாஸ் தையல் , ஒரு கிலாஸ் பாட்டு

    டிசைன் சூப்பரா இருக்கு மஹி

    ( முட்டைகோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் பா, அவருக்கும் , பிள்ளைகலுக்கும் பிடிக்காது)

    ReplyDelete
  10. அருமயான கைவேலைபாடு,என் பெயரைச்சொல்லி விரலுக்கு ஒரு வைரமோதிரம் செய்து போட்டுக்குங்க மகி.:-)

    ReplyDelete
  11. Supera embroidery pannirukkinga Mahi!

    ReplyDelete
  12. சூப்பரா இருக்கு மஹி! எனக்கும் சின்ன க்ளாஸ்லேயிருந்து இதிலெல்லாம் ஆர்வம். நேரமில்லாமலும் சில பொருட்கள் இங்கு கிடைக்காததாலும் க்ராஃப்ட் வொர்க் செய்து பகிர்ந்துக்கொள்ள முடியல. விரைவில் கொடுக்கணும். அழகான வொர்க்கிற்கு வாழ்த்துக்கள் மஹி!

    ReplyDelete
  13. asathiteenga mahi ! looks so beautiful !

    ReplyDelete
  14. என்ன ஆச்சரியம் மஹி, எனக்கு கூட கொஞ்ச நாளா தையல ஆர்வம் வந்து இப்போதுதான் கடந்த மூன்று நாளா செய்துக்கிட்டு வரேன். விரைவில் பதிவிடனும் அப்படினு நினைச்சிட்டு இருந்தேன்.இன்னைக்கு பார்த்தா, உங்க பதிவு.... அசத்தலா இருக்கு. பதிவை படிக்கும்போது எனக்கும் எனது பள்ளி நினைவுகள்தான். இன்று இந்த பதிவின் மூலம் இன்னும் கற்றுக்கொள்கிறேன். நீங்க கொடுத்திருந்த லிங்கைதான் நானும் கடந்தவாரம் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன். உண்மையிலேயே ரொம்ப பயனுள்ளதா இருக்கு. தேங்ஸ் மஹி!

    ReplyDelete
  15. ஆஹா மகி...வாழ்த்துகள் மகி...ஒரே கலக்குறிங்க...

    ReplyDelete
  16. சூப்பர் மஹி. எனக்கும் இப்படியான வேலைகள் பொறுமையாகச் செய்யப்பிடிக்கும். கொஞ்சம் செய்து வைத்திருக்கிறேன்... இப்பவும் செய்துகொண்டுதானிருக்கிறேன்... இடையில் இலாவைப் பார்த்துக் கலைபட்டு நிட்டிங்கும் தொடங்கியிருக்கிறேன்.

    ஒருநாளைக்கு எல்லாம் படமெடுத்துப் போடோணும். இன்னும் செய்யுங்க மஹி.

    ReplyDelete
  17. ஸாதிகா said...
    அருமயான கைவேலைபாடு,என் பெயரைச்சொல்லி விரலுக்கு ஒரு வைரமோதிரம் செய்து போட்டுக்குங்க மகி.:-)

    ////
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

    அதிரா கர் சொன்னேனெனச் சொல்லிடுங்க மஹி:).

    ReplyDelete
  18. சூப்பரா இருக்கு மஹி இன்னும் நிறைய டிசைன் போடா வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  19. mee
    the late...
    late and present..this is not my area...

    ReplyDelete
  20. சின்ன வயதில் செய்த எம்ராய்டரியும்,கிராஸ்டிச்சும் ஞாபகம் வந்து எங்கெங்கேயோ மனது சுற்றிவிட்டு வந்தது. எதைச் சொன்னாலும், செய்தாலும் நேர்த்தி, இதை எங்கிருந்து பிடித்தாய்.

    ReplyDelete
  21. Hi Mahi cookingladhaan kalakkureengannu paarthaa embroidarylayum kalakkureenga.nalla irukku design.innum niraiya design podungo....

    ReplyDelete
  22. wonderful colour matching with neat presentation Mahi..

    Am your newest follower now..:)
    Do drop in mine sometime..
    Tasty appetite

    ReplyDelete
  23. நன்றி மகி...எனக்கு இங்கு Gas stove கிடையாது...எல்லாம் Electric stove தான்...கத்திரிக்காய் சூடும் படத்தில் பாருங்க...எல்லாம் கரண்ட் ஸ்டவில் தான் செய்தேன்...அருமையாக இருந்தது...க்ரில் செய்த டேஸ்ட் iகிடைத்தது...

    நீங்களும் கரண்ட் ஸ்டாவிலே செய்து பாருங்க...அப்புறம் அடிக்கடி இந்த சட்னி செய்துவிடுவிங்க...

    ReplyDelete
  24. நீங்க சொன்னப்புறம் தான் பாட்டு கிளாஸ் ஞாபகம் வருது... மலரும் நினைவுகளைக் கிளறி விட்டதுக்கு நன்றி மகி... நீங்க தந்த லின்கில் ஈஸியான பேட்டர்ன்ஸ் இருக்கு... நல்ல பயனுள்ள பதிவு...

    ReplyDelete
  25. //அடுத்து பாட்டு பாடி ஒரு போஸ்ட் பண்ணிருவேன்னு பயப்படாதீங்க//
    நான் சொல்லணும்னு நெனச்சேன்... நீங்களே சொல்லிட்டீக... ஹா ஹா...

    //வானதி ப்ளாக்ல வர எம்ப்ராய்டரிகளைப் பார்த்து என் மனசுக்குள்ள புதைந்து கிடந்த எம்ப்ராய்டரி ஆசை விழித்துக்கொண்டது//
    வானதி, பாருங்க உங்க போஸ்ட் எங்களை எல்லாம் இப்படி பாதிக்குதுன்னு... ஹா ஹா ஹா... சும்மா ஜோக்... ஒகே... :)))

    வாவ்...பொறாமையா இருக்கு இதை பாத்தா... எனக்கும் ஆர்ட்க்கும் ஏணி வெச்சாலும் எட்டாது... அவர்கிட்ட இதை வரஞ்சு தரசொல்லி ட்ரை பண்றேன்... இதுக்கு என்ன மாதிரி ஊசி பாசி எல்லாம் வேணும்னு கொஞ்சம் detail சொல்லுங்களேன் மகி... கிண்டல் பண்ணலை... seriously asking...

    செவப்பு எனக்கு பிடிச்ச கலர்... அதான் இதை பாத்ததும் செஞ்சு பாக்கலாம்னு ஒரு ஆசை வந்துடுச்சு... (ரங்க்ஸ் திட்டினா உங்க பக்கம் திருப்பி விட்டுடறேன்... ஹா ஹா...)

    Now its my turn to research which college you from? No clues though... But just a simple guess... it could be "A" or "N"...right??? :))

    ReplyDelete
  26. புவனா,/அவர்கிட்ட இதை வரஞ்சு தரசொல்லி ட்ரை பண்றேன்../பாவம்,அண்ணாவை தொந்தரவு பண்ணாதீங்க.நான் லிங்க் கொடுத்திருக்க நீடில்ஸ் & த்ரெட் வெப்சைட்லயே இந்த டிஸைன் இருக்கு,ப்ரின்ட்-அவுட் எடுத்துக்குங்க.

    ஊசி-பாசி-எம்ப்ராய்டரி த்ரெட்,எம்ப்ராய்டரி ப்ரேம், இதெல்லாமே இங்கே Michales-ல கிடைக்குது.உங்க ஊர்லயும் இருக்கும்ணு நினைக்கிறேன்,செக் பண்ணிப்பாருங்க,http://www.michaels.com/

    நான் எந்த காலேஜ்னு க்ளூ ஒரு சில போஸ்ட்ல கொடுத்திருக்கேனே! A இல்லைங்க,ஆனா நீங்க கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டீங்கன்னு சொல்லி சந்தோஷப்படுத்தலாமா,இல்ல G (or) KASC-ன்னு சொல்லி உங்களை குழப்பலாமா? ;) ;)

    ReplyDelete
  27. @வானதி,தேங்க்ஸ் வானதி! இலைகள் உங்க ஆ.காரருக்கும் பிடிச்சுட்டதா,நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க! :)

    @ரம்யா,தேங்க்ஸ் ரம்யா!

    @சரஸ்,கருத்துக்கு நன்றிங்க!

    @//நான் அந்த இலைகள் ஒட்ட வச்சதோன்னு நினைச்சேன்.//??!!!பாலா,இது கிண்டலா,நிஜமா? அவ்வ்வ்வ்வ்!
    என்னவர் உங்க கமெண்ட்டைப் பார்த்துக்கேட்ட கேள்வி இது!!நன்றிங்க!

    @ராஜி,எனக்கும் டச் விட்டு பலவருஷங்கள் ஆச்சு,சும்மா ட்ரை பண்ணிப்பார்ப்போமேன்னு ஆரம்பிச்சேன்,நன்றிங்க!

    @குறிஞ்சி,நன்றீங்க!

    @விஜி, மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க!போட்டோ எதனால காப்பி பண்ணமுடிலைன்னு தெரியலயே விஜி? நான் காப்பிரைட் கூட வாங்கிவைக்கலையே! சரி பரவால்ல விடுங்க! டைம் கிடைக்கும்போது வாங்க! உடல்நிலையை கவனிச்சுக்குங்க!

    ReplyDelete
  28. @ஆசியாக்கா,கட்டாயம் ருமானாகிட்ட காட்டுங்க! அவங்க வயசுல நான் கத்துகிட்டதுதான் இதெல்லாம்!:)

    @லஷ்மிம்மா,மிக்க நன்றி!

    @கோமு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    @ஜலீலாக்கா,உங்களுக்கும் எம்ப்ராய்டரி பிடிக்குமா?
    முட்டைக்கோஸ் பத்தி உங்க கமெண்ட்தான் காமெடியா இருந்தது,அதான் பிடிக்காதோன்னு நினைச்சேன்.:)
    நன்றி ஜலீலாக்கா!

    @வேணி,நன்றிங்க!

    @ஸாதிகாக்கா,வைர மோதிரமெல்லாம் அந்தக்காலத்துலயே வாங்கிகுடுத்துட்டாரு! ;) உங்க பேரைச் சொல்லி,ஒரு வைர நெக்லஸ்(அ) வளையலுக்கு ரிக்வெஸ்ட் போட்டுக்கவா?

    @காயத்ரி,தேங்க்ஸ் காயத்ரி!

    @அஸ்மா,உங்க ஹேண்ட் வொர்க்ஸ்ம் போடுங்க,பார்க்க ஆவலாக இருக்கிறோம்! :)

    @ப்ரியா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @ப்ரியா,நீங்களும் எம்ப்ராய்டரி பண்ணிட்டு இருக்கீங்களா? வாவ்வ்வ்! சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க! எனக்கு அட்வான்ஸ்ட் லெவல்லாம் தெரியாது,இந்த மாதிரி பேஸிக் தையல்கள்தான் இப்போதைக்கு ரீஃப்ரெஷ் பண்ணறேன்.நன்றி ப்ரியா!

    @தர்ஷினி,தேங்க்ஸ் தர்ஷினி!

    ReplyDelete
  29. @கீதா,வாழ்த்துக்கு நன்றி கீதா!

    @அதிரா,நிட்டிங்கும் பண்ணறீங்களா? எனக்கென்னமோ நிட்டிங் கொஞ்சம் அலர்ஜியா இருக்கு..சீக்கிரம் உங்க கைவண்ணங்களையும் போஸ்ட் பண்ணுங்க!

    /அதிரா கர் சொன்னேனெனச் சொல்லிடுங்க மஹி:)/ நானும் என் பங்குக்கு ஒரு கர்ர்ர்ர்ர்ர்ர் சேர்த்து சொல்லிடவா? ;)

    @சாரு,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    @சிவா,தேங்க்ஸ்!

    @காமாட்சிம்மா,உங்களையும் மலரும் நினைவுகளுக்கு கூட்டிப்போயிட்டு வந்துட்டேனா? :) உங்க பாராட்டை படித்து சந்தோஷமா இருக்குது,நன்றி!

    @ரேவா,தேங்க்ஸ்ங்க!

    @கொயினி,நலம்,நலமறிய ஆவல்! எனக்கு சும்மா ஒரு டீ-யே கலக்கத்தெரியாது,இதுலே நீங்கவேற இப்படியெல்லாம் ஏத்திவிட்டா??!! :)
    நன்றி கொயினி!

    @ஜே,கட்டாயம் உங்க ப்ளாக் வரேன்.கருத்துக்கும்,பின்தொடர்வதுக்கும் நன்றிங்க!

    @கீதா,தேங்க்ஸ்!

    @பானு,ஆமாங்க அந்த சைட் மிகவும் உபயோகமான ஒன்று,அதான் லிங்க்-ஐ கொடுத்தேன். நன்றி பானு!

    ReplyDelete
  30. //அவர்கிட்ட இதை வரஞ்சு தரசொல்லி ட்ரை பண்றேன்... //
    அவரையே தைக்க சொல்லுங்க, தங்ஸ். ஊசிமணி, பாசி மணி கூவி விற்கப் போறீங்களா???? ஹா

    ReplyDelete
  31. mm
    okeee
    appadiyee mudinthaal en pakkamum vanthu pongka

    ReplyDelete
  32. எனக்கு ஒரே ஒரு டவுட்டுதான்...இதுல உங்களுக்கு ஊசியில நூலை கோத்து குடுத்து யாரு.ஹி..ஹி..!!

    இதுக்கு எங்கையாவது டிரைனிங்க் கிளாஸ் இருக்கா..? (( அதுக்காக சாக்கு தைக்கிற ஊசிக்கு சொல்லக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர் ))

    ReplyDelete
  33. உங்களுக்கு பாட்டு வேர பாடத் தெரியுமா..?..எதுக்கும் மாம்ஸ் கொஞ்சம் உஷாராதான் இருக்கனும் :-))

    ReplyDelete
  34. வாவ் அருமையா இருக்குப்பா. எனக்கு எம்ராய்டரி ரெம்ப பிடிக்கும்.கற்றுக்கொண்ட தளத்தை அறிமுக படுத்தியதற்க்கு நன்றி.
    அன்புடன்
    சித்திஷா.

    ReplyDelete
  35. மஹி...,எம்ப்ராய்டரி அழகாக போட்டு இருக்கீங்க....சின்ன வயதில் இதெல்லாம் ஸ்கூலில் இருக்கும் போது நான் அறையும் கிஉறையுமாக கத்துக்கிட்டது.... இப்ப ஒழுங்காக கத்துக்கணும்னு ஆசையாக இருக்கு எங்கே நேரம் தான் இல்லை....
    எங்களை போன்ற அரைகுறையான ஆளுகளுக்கெல்லாம் என்றாவது உங்களை போன்றவர்களின் கை வேலைபாடுகள் உதவும்.
    வாழ்த்துக்கள் மஹி...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  36. ரொம்ப அழகா இருக்கு மஹி! கலர் காம்பினேஷன் & தையல் டிசைன் எல்லாமே அருமையா இருந்தது.
    ஆக உங்க ரங்கமணியோட ஸ்வட்டர்லையும் நீங்க போட்ட Lotus எம்ப்ராய்டரி இருக்கும்னு சொல்லுங்கோ!..:)

    நல்ல வேளை அடுத்த பதிவுல தொண்டையை சரிபண்ணிண்டு பாட போறேளோனு நினைச்சேன்!...:PP

    ReplyDelete
  37. வானதி,நல்லாவே கிண்டல் பண்ணறீங்க தங்கமணியை! என்னால புவனாவை நீங்க சொன்ன கோலத்துல கற்பனை....ஸ்ஸப்பா,முடீல!! ;) :)

    /இதுக்கு எங்கையாவது டிரைனிங்க் கிளாஸ் இருக்கா..? (( அதுக்காக சாக்கு தைக்கிற ஊசிக்கு சொல்லக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர் ))/ ஜெய் அண்ணா,க்ளாஸ் யாருக்கு,உங்களுக்கா,அண்ணிக்கா? உங்களுக்குன்னா கண்டிப்பா சாக்கு-ஊசிதான்,ஹிஹி!
    எனக்கும் பாட்டுக்கும் ரொம்ப தூரம்,பயப்படாதீங்க! :)

    சித்திஷா,நீடில்ஸ் அன்ட் த்ரெட் போனீங்களா? உபயோகமா இருந்ததில் மகிழ்ச்சி!

    வீணா,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றிங்க!

    அப்ஸரா,எல்லாரும் ஏதாவதொரு விஷயத்தில அரைகுறைதான்ப்பா.:) இப்பதான் உங்க ஹேண்ட்வொர்க்ஸ் எல்லாமே பாத்தேன்,அழகா செய்திருக்கீங்க!அதெல்லாம் எனக்கு செய்யவராது.

    Thanks for stopping by Kitchen Boffin!

    //நல்ல வேளை அடுத்த பதிவுல தொண்டையை சரிபண்ணிண்டு பாட போறேளோனு நினைச்சேன்!...:PP//தக்குடு,டிஸம்பர்லே 31 நாளும் 93 கச்சேரி பண்ணதுல தொண்டை பாழாப்போயிடுத்து அம்பி! உன் ப்ளாக்ல சுக்கு கஷாயம் வைக்கறது எப்படின்னு எழுதேன்,அதைப் படிச்சுப்பாத்து குரலை சரிபண்ணிக்கறேன். :)

    /ஆக உங்க ரங்கமணியோட ஸ்வட்டர்லையும் நீங்க போட்ட Lotus எம்ப்ராய்டரி இருக்கும்னு சொல்லுங்கோ!..:)/ம்ம்..ஐடியா நன்னாருக்கு,ஆனா எங்காத்து ரங்கமணி ஸ்வட்டர்லாம் போடமாட்டார்.(அஜித்தை விட அவர் ஸ்மார்ட்டாக்கும்,கேட்டியோ? ;) )

    31 January 2011 23:14

    ReplyDelete
  38. antha ilai azhaga panni erukinga mahi

    ReplyDelete
  39. //vanathy said... //அவர்கிட்ட இதை வரஞ்சு தரசொல்லி ட்ரை பண்றேன்... //
    அவரையே தைக்க சொல்லுங்க, தங்ஸ். ஊசிமணி, பாசி மணி கூவி விற்கப் போறீங்களா???? ஹா //
    ஆமாம்... நீங்களும் கூட வரேன்னு சொன்னீங்களே வாணி... என்ன இருந்தாலும் இந்த பீல்ட்ல நீங்க தானே சீனியர்... ஹா ஹா ஹா... :))))

    //Mahi said... வானதி,நல்லாவே கிண்டல் பண்ணறீங்க தங்கமணியை! என்னால புவனாவை நீங்க சொன்ன கோலத்துல கற்பனை....ஸ்ஸப்பா,முடீல!! ;) //
    இதுக்கு வானதியே பெட்டர்... அந்த கோலத்துல என்னை கற்பனை பண்ணி நீங்க ரசிக்கறது நல்லாவே தெரியிது இங்க... டோன்ட் வொர்ரி மகி... உங்களையும் joint venture ல சேத்துக்கலாம்னு எங்க போர்டு ஓப் டைரக்டர்ஸ் approve பண்ணிட்டாங்க... ஹா ஹா ஹா... :)))

    BTW, உங்க ரசம் ரெசிபி last weekend செஞ்சேன் Mahi... ரெம்ப நல்லா இருந்தது... நான் usualஆ தக்காளிய தாளிக்கரப்ப போடுவேன்... நீங்க சொன்னது போல் புளியோட சேத்து microwaveல வெச்சு கரைச்சு செஞ்சது நல்ல flavour இருந்தது... (ரசம் பிடிக்காத ரங்க்ஸ் கூட சாப்ட்டார்... Thanks to you...)

    ReplyDelete
  40. மஹா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா!

    2 is a company,3 is a crowd-னு சொல்லுவாங்கள்ல புவனா?அதனால நீங்க 2 பேர் பிஸினஸ்ல ஃபீல்ட்வொர்க்(!?!)-ஐ கவனிங்க.நான் மைக்ரோமேனேஜ்மெண்ட் ரெம்ப நல்லா பண்ணுவேன்னு என் ரங்க்ஸ் அடிக்கடி சொல்லுவார். ஸோ,நான் அதையே பண்ணலாம்னு இருக்கேன்.ஹிஹி!

    /ரசம் ரெசிபி last weekend செஞ்சேன் Mahi... ரெம்ப நல்லா இருந்தது../ஒரு குத்துக்கு எவ்ளோ மதிப்புன்னு சொன்னீங்கன்னா,ரெசிப்பில எடிட் பண்ணிடுவேன். ;)

    தேங்க்ஸ் புவனா!

    பவித்ரா,தேங்க்ஸ்ங்க!

    ReplyDelete
  41. Hi Mahi,I accidentally bumped into your site and I am happy for that.The first picture in this posting looks like a beautiful applique.Your embroidery is so neat and I love it very much.I also have blog for embroidery and it is mahaskills.blogspot.com.Can I reach you by mail?I am also from Coimbatore and at present in the US with my daughter.Returning to India on 1st Sept.I will go through you blog fully once I am back in India.

    ReplyDelete
  42. Hi Mahalakshmi,thanks for stopping by! :)

    Give your mail id through the comment box in this same post, & I will reply you!

    Being on vacation,am not getting enough time to browse,will check your blog soon!

    Thanks again!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails