Friday, October 7, 2011

மலரும் நினைவுகள்...

ஆயுதபூஜை,விஜயதசமின்னாலே என் நினைவுக்கு வருவது செவ்வந்திப் பூ! மஞ்சள் செவ்வந்தி சீஸனாக இருக்கும், எங்கே பார்த்தாலும் பூக்கடைகள் எல்லாப்பக்கமும் செவ்வந்தியா இருக்கும். ஆயுதபூஜைக்கு பூ மார்க்கெட்ல இருந்து செவ்வந்திப் பூக்கள் வாங்கிவந்து நெருக்கமா கட்டி வீட்டில் இருக்கும் சாமிபடங்களுக்கு போடுவோம். மஞ்சள் செவ்வந்திப் பூவுக்கும், சிவப்பு குங்குமத்துக்கும் கான்ட்ராஸ்ட் சூப்பரா இருக்கும். அழகா இருக்க பூக்களா செலக்ட் பண்ணி பூவின் நடுவில் குங்குமம் வைத்து தலையில் வைச்சுக்குவோம்!:)

வீடு முழுக்க சுத்தம் செய்து, கதவு ஜன்னல் டிவி மிக்ஸி க்ரைண்டர் gas அடுப்பு முதற்கொண்டு எல்லாத்தையும் துடைத்து திருநீறு-சந்தனம்-குங்குமம் வைப்போம். சாமிபடங்கள், புத்தகங்கள், பேனா, கால்குலேட்டர், அக்காவின் சிவில் ட்ராயிங் உபகரணங்கள் எல்லாம் பொட்டு-திருநீறு வைத்து, சுண்டல்,கடலை-பொரி, பழங்கள் எல்லாம் படைத்து, அண்டை அயலார் எல்லாரையும் அழைத்து தேங்காய் உடைத்து சாமி கும்பிடுவோம்.

சுற்றிலும் இருக்கும் வீடுகள், டெய்லர் கடை, மளிகைக்கடை, ஹோட்டல், ஜெராக்ஸ் கடைகள் என்று எல்லாம் ஒரு ரவுண்டு போய் சாமி கும்பிட்டுவிட்டு, சுண்டல்-பொரி-பழங்கள் வாங்கி வருவோம். வீடுகளை விட கடைகளில்தான் அலங்காரம் நிறைய செய்திருப்பாங்க, 2-3 வெரைட்டி சுண்டலும் கிடைக்கும்! :) மற்றபடி 9 நாள் கொலு- எல்லா நாளும் சுண்டல் இதெல்லாம் எனக்கு நினைவு தெரிந்து புத்தகங்களில் படித்து தெரிந்துகொண்டதுதான்.

திருமணம் முடிந்து முதல் நவராத்திரி பெங்களூர்ல வந்தது. :) அப்பொழுது பக்கத்து வீட்டில் ஒரு தோழி கொலு வைத்திருந்தாங்க, அவங்க குட்டிப் பெண் தினமும் ஒரு மேக் அப்பில் வந்து கொலுவுக்கு அழைப்பா. நானும் போய் (பாட்டெல்லாம் பாடச்சொல்ல மாட்டாங்க! ;)) சுண்டல் சாப்ட்டு தாம்பூலம் வாங்கிவருவேன். அடுத்தவருஷம் பாஸ்டனில் ஆயுதபூஜை கொண்டாடினோம்..அதன்பின்னர் உப்பேரிபாளையத்தில் கணேஷ் டெம்பிளில் கொலுவுக்கு போன நினைவிருக்கு. போனவருஷம் இங்கே வந்தாச்சு.

இப்படி மலரும் நினைவுகளை அசைபோட்டுட்டு இந்த வருஷம் சரஸ்வதி பூஜை அன்று சாமி கும்பிட்டுட்டு கோயிலுக்கு போலாம்னு ப்ளானெல்லாம் பலமா பண்ணினோம்..ஆனா வருணபகவான் என்ன நினைச்சாரோ தெரில, செவ்வாய்-புதன் ரெண்டு நாளும் இங்கே நாள்பூரா மழை..ஒரு வேலையும் செய்யாமல் இழுத்துப் போர்த்திப் படுத்துக்கலாம் போல சரியான குளிர்! பக்கத்திலிருந்த நண்பர் குடும்பம் கூட வீட்டுக்கு வரமுடியலை. பாருங்க, எங்கூர் மழை எப்படி வந்திருக்குன்னு..

எல்லாப் பக்கமும் வரமாதிரி வானத்தில இருந்து பூமிக்குத்தானே மழை வந்திருக்கு..இவங்க ஊர் மழையென்னமோ உல்டாவா வந்தமாதிரி பில்ட்-அப் குடுக்கறாங்களேன்னெல்லாம் கோக்குமாக்கா யோசிக்கப்படாது..மழையிலயும்,குளிர்லயும் நடுங்கிட்டே நான் போட்டோ எடுத்ததுக்காகவாவது எல்லாரும் ரசிச்சுப்(!) பார்க்கோணும்,ஓக்கை?:))))))))))

சாமிக்கு வைக்க பூக்கள் நான் வளர்த்த தொட்டிச்செடிகள்ல இருந்து பறிச்சேன். நம்ம வீட்டு செடியில இருக்க பூக்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம்தான்!! மஞ்சள் செவ்வந்தி இல்லைன்னாலும் வெள்ளைச்செவ்வந்தியாவது இருந்தது. ஒரு மாசம் நான் இல்லைன்னாலும் பக்கத்துவீட்டுக்காரர் கவனிப்பில் செடிகள் பூத்திருந்தது. அழகாய் பூத்திருக்கா?:)

குளிரடிச்சாலும் பரவால்லை(!!?!!) , கோயில் போலைன்னாலும் பரவால்லைன்னு மனசத் தேத்திகிட்டு புதன்கிழமை சாயந்தரம் 4 மணிக்கு மேல 5.30 மணிக்குள்ளே நான் இதெல்லாம் செய்தேன்..கரெக்ட்டா என்னவரும் வந்தார், ஆயுதமெல்லாம்(!):) வைச்சு சாமி கும்பிட்டு இந்தப்பக்கம் திரும்பறதுக்குள்ளே பூஜைல வைச்சிருந்த ஐபேட் எங்கவீட்டய்யா கைல இருக்கு!! எ.கொ.ச..?!!! பூஜைல வைச்சா அடுத்தநாள் காலைல மறுபூஜை பண்ணி புக்ஸ்-ஐ எடுத்த காலமெல்லாம் மனக்கண்ணில் ஓடுச்சு! ஹும்,என்ன செய்ய..காலம் மாறிப்போச்சு போங்க! :) :)

போட்டோவைப் பார்த்தாலே என்னென்னனு தெரியுது, அதுக்கப்பறம் எதுக்கு ச.பொங்கல், வெ.பொங்கல், சுண்டல் இப்படின்னெல்லாம் எழுதிருக்குன்னு நீங்க திங்க் பண்ணுவீங்க..

(என்னது, பண்ணலயா?கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இப்பவாவது பண்ணுங்க.....................................................................
.................................................
...........................................
..............................
.....................
.............
.....
...ஹும், (திங்க்) பண்ணியாச்சா?!!! அது எதுக்குன்னா...போட்டோலே பேர் அடிக்க(!) போனப்ப பை மிஸ்டேக் தமிழ்ல வந்தது..தமிழ் எழுத்துக்கள் அழகா இருந்ததால் இப்புடி எழுதிட்டேன்,ஹிஹிஹிஹி!!!! (இப்ப யாரோ என்னை அடிக்க வரமாதிரி இருக்கு...அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடறேன்.)

நைவேத்யம் சூப்பரா இருந்ததுன்னு லக்ஷ்மி-சரஸ்வதி-பார்வதி மூணு பேருமே சொல்லிட்டாங்க! :) நீங்களும் சாப்ட்டுப் பார்த்து சொல்லுங்க! ஹேப்பி வீகெண்ட் எவ்ரிபடி!

26 comments:

  1. mee the firstu..erungo padichitu varen..

    ReplyDelete
  2. அப்பாடயாரும் வடை எடுக்கல அதனால எனக்குதான் :)

    ReplyDelete
  3. 2-3 வெரைட்டி சுண்டலும் கிடைக்கும்! :) மற்றபடி 9 நாள் கொலு- எல்லா நாளும் சுண்டல் இதெல்லாம் எனக்கு நினைவு தெரிந்து புத்தகங்களில் படித்து தெரிந்துகொண்டதுதான்.//

    அதே அதே சாம் ப்ளேட்:)

    ReplyDelete
  4. லக்ஷ்மி-சரஸ்வதி-பார்வதி//

    இவங்கலாம் யாரு எனக்கு முன்னாடி இவங்க எப்படி சாப்பிடலாம்??

    ReplyDelete
  5. அவ்வ எனக்கு பிடிச்ச சக்கரை பொங்கல் ம்ம் பொங்கல் வர இன்னும் நாள் இருக்கே:(
    அவ்வளோ நாள் காத்து இருக்கணுமா;;;

    அந்த மழை யில் நனியாமல் எடுத்த புகைப்படம் சூப்பர்

    அப்புறம் வெள்ளை செம்பருத்தி (பூ )so nice..

    ReplyDelete
  6. மகி..இப்பவும் எங்க வீட்ல செவ்வந்தி பூ நடுவுல குங்குமம் வைத்து வாஸ்து பாட் அலங்காரம் பண்ணுவோம்..மழையினால ஆயுத பூஜை சிம்பிளா கொண்டாடிங்க போல.....

    ReplyDelete
  7. படங்களும் பதிவும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. Superaa ezhuthi irukeenga Mahi... Intha maathiri natkala veetu naabagam varuthu.. :) Unga post padichadum manasu leesa irukku..:)
    Reva

    ReplyDelete
  9. மஹி உங்க வீட்டு செடி,பூக்கள் எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. எங்க வீட்டு தோட்டத்தில் பூக்கள் பார்க்கும் போது எல்லாம் அளவு கடந்த சந்தோசம் வரும்.செடி கிட்ட பேசிக்கிட்டு இருப்பேன்.

    ReplyDelete
  10. //நம்ம வீட்டு செடியில இருக்க பூக்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம்தான்!!
    ஆமாம் ரொம்ப சந்தோஷமா இருக்கும் //.
    நான் கூட எங்க வீட்ல பறிச்ச பூவை தான் சாமிக்கு வைக்கிறேன்
    நல்ல பதிவு மகி. nice

    ReplyDelete
  11. ஆயுதபூஜை... ரசிச்சு கொண்டாடி இருக்கிறீங்க மகி.

    ReplyDelete
  12. Sema Feast pole Irukku dear.Yeppa Yenna Varieties.Wish to be ur neighbour.Luv it.

    ReplyDelete
  13. மலரும் நினைவுகளில் மலர்,மழை பற்றிய பகிர்வும் நவராத்திரி ஸ்பெஷலும் சூப்பர்.

    ReplyDelete
  14. கொசுவத்தி பலம்ம்ம்ம்மா இருக்கே!! பெண்களூர்ல நீங்களும் ஒரு வருஷம் வந்தேளா?? :)) பாடி இருந்தீங்கன்னா அப்ப தெரியும் சேதி!! :PP

    ReplyDelete
  15. கனவுகளே.... கனவுகளே,,,, கலைந்து செல்லுங்கள்..

    என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள்.... என்னை மறந்ததேன்.... என்னை மறந்ததேன்...

    ReplyDelete
  16. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு, வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு:))))..

    மேல இங்கிலீசில சிரிக்கிறா:))), நாங்க சைனிஸ்ல சிரிப்பமில்ல... என்கிட்டயேவா:)))

    சிங்சா... ஆஆஆஆஆ குங்பூஊஊஊஊஉ.. சாஆஆஆஆஅ,, சிங்காசூஊஊஊஊ:))))))).

    ReplyDelete
  17. பழமை..ஆயின் பசுமை...பகிர்வுக்கு நன்றி...

    -பருப்பு ஆசிரியன்

    ReplyDelete
  18. copy:

    ஹையோஓஓஓஓ... தப்பாகிடுச்சே.... ஸாதிகா அக்காவின் தலைப்பில் மகியைப் பார்த்ததும்தான், கிட்னியில் பொறி தட்டியதுபோல இருந்துது, அடக் கடவுளே... மகியின் பின்னூட்டம் பார்த்தனே, பதில் போட்டதாக நினைவில்லையே என ஓடி வந்து வேர்க்க விறுவிறுக்க எழுதுகிறேன்...


    மகி..மகி... பொய் சொல்ல மாட்டேன், கடவுள் மீது ஆணை.... கடவுளே... தப்பு நடந்துபோச்ச்ச்ச்ச்... மன்னிச்சிடுங்க, நீங்க வந்து பார்த்திட்டு, அதிரா கோபத்தில பதில் போடவில்லை என நினைத்திருப்பீங்க.... நான் அப்படிப்பட்ட ஆளில்லை, நேரில் சொல்லுவனே தவிர பேசாமல் எல்லாம் போகமாட்டேன்..

    இதுதான் சொல்வார்கள் என்னமோ பட்ட காலிலேயே படுமென அப்பூடி ஆகிப்போச்சு நிலைமை...:)).

    சரி சரி இதுக்கு மேல வாணாம்:))).

    மியாவும் நன்றி மகி.

    வேணுமெண்டால் இன்னொன்றும் செய்கிறேன்....
    இமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை... ஹா..ஹா..ஹா.. இது போதும்தானே...

    ReplyDelete
  19. சிவா,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    //அப்புறம் வெள்ளை செம்பருத்தி (பூ )so nice..// கர்ர்ர்ர்ர்ர்ர்! அது வெ.செவ்வந்தி!:)
    ~~
    ராதாக்கா,மழை வரலைன்னா இன்னும் 2-3 பேரை கூப்ட்டு சாமி கும்பிட்டிருப்போம். பாட் அலங்காரம் பண்ணுவீங்களா? சூப்பர் போங்க!:)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லஷ்மிம்மா!
    ~~
    ரேவா,ஆமாங்க..மத்த நாட்களை விட இப்படி ஏதாவதுன்னும்போது வீட்டு ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியாது.
    நன்றிங்க!
    ~~
    ப்ரியா,தேங்க்ஸ்ப்பா!/செடி கிட்ட பேசிக்கிட்டு இருப்பேன்./ இதைப் பார்த்துட்டு என்னவர் சிரிக்கிறார்!:);)
    ~~
    சௌம்யா,என்னென்ன பூச்செடில்லாம் வைச்சிருக்கீங்க..போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணுங்களேன்.
    தேங்க்ஸ்!
    ~~
    /ரசிச்சு கொண்டாடி இருக்கிறீங்க மகி./ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ஒத்துக்கமாட்டேன், ரசிச்சு எழுதியிருக்கீங்கன்னு சொன்னா ஓக்கே!;)
    நன்றி இமா!
    ~~
    க்றிஸ்டி,3 வெரைட்டிதானே செய்திருக்கே? :)
    நன்றிங்க!
    ~~
    ஆசியாக்கா, ஒரே வரியில நான் எழுதின ஒரு முழு பதிவையும் சம்மரைஸ் பண்ணீட்டீங்க!:)
    நன்றி!
    ~~
    /பெண்களூர்ல நீங்களும் ஒரு வருஷம் வந்தேளா?? :))/ ஆமாம் தக்குடு! நாங்க ஜெயநகர் ஏரியா. அங்கயும் வருவேளா நீங்க?
    கொசுவத்தி புகைல மயக்கம்போட்டு நானே ஒரு வாரம் கழிச்சுத்தான் முழிச்சிருக்கேன்!;)
    தேங்க்ஸ் தக்குடு!
    ~~
    அதிரா,சைனீஸ்லயும் சிரிக்கறீங்க போல இருக்கே? சும்மா சொல்லக்கூடாது, சூப்பராவே சிரிக்கிறீங்க! :))))))))

    நீங்க கோவப்பட்டு பேசாமல் போனீங்கன்னெல்லாம் நினைப்பேனா அதிரா? நம்ம என்ன அப்புடியா பழகியிருக்கோம்? டேக் இட் ஈஸி!

    /இமா மீது ஆணை, மாயாமீது ஆணை, ஜெய் மீது ஆணை./இதான் கொஞ்சமே கொஞ்சம் இடிக்குது!!;)
    ~~
    இமா,சைனீஸுக்கு பதிலா இங்க்லீஷ் சிரிப்பா? மௌரி-ல சிரிக்காதவரைக்கும் ஒக்கை!
    தேங்க்ஸ் இமா!
    ~~
    பருப்பு ஆசிரியர், பழைய நினைவுகள் எப்பவுமே பசுமைதானே? :) நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  20. ரசிச்சு எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  21. மௌரில சிரிப்பா... வாங்க இங்க, சிரிச்சுக் காட்டுறேன். ;)))

    ReplyDelete
  22. Comment No. 22 : ஓக்கை இமா!

    Comment No.23 : :) =)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails