Monday, June 18, 2012

கோதுமை கச்சாயம் (இனிப்பு)

கோதுமைப் பாயசம், கேரளாவில் பிரபலமான இனிப்பு. ஊரில் எங்க வீட்டுப் பக்கத்தில் நிறைய மலையாளிகள் வீடு இருக்கும், என்ன விஷேஷம் என்றாலும் கோதுமைப் பாயசம் செய்துடுவாங்க. பலமுறை ருசி பார்த்திருக்கேன். சிலமுறை வீட்டில் செய்தும் இருக்கோம் என்று நினைவு. பலதிங்களுக்கு முன்பு எங்க(!) மார்க்கட்டில் இந்த கோதுமைப் பேக்கட்டைப் பார்த்ததும் கோதுமைப் பாயசம் நினைவு வர வாங்கிவந்துவிட்டேன்.

குக்கரில் கோதுமையைப் போட்டு வேகவிட்டால், மணிக்கணக்காய் வெந்து எக்கச்சக்க விசில் வந்தபிறகும் கோதுமை வேகாமல் கண்ணை முழிச்சுகிட்டு நின்றது! கோதுமைப்பாயசம் வைக்கப்போறேன் பேர்வழி-ன்னு பந்தாவாய் என்னவரிடம் சொல்லியாச்சு..வேறவழியில்லாமல் அதையே பாயசமாக வைச்சு, நறுக் நறுக்குன்னு கோதுமை சாப்பிட்டவாறே பாயசம் குடிச்சோம். அதன் பின்னர், இந்த கோதுமை இருப்பதே சுத்தமாய் மறந்துபோய்விட்டது. வேற ஏதாச்சும் செய்யலாம்னு ஒரு சில சமயம் தோணினாலும், சூடு கண்ட பூனையாய் அப்படியே வைச்சிருந்தேன். ஒருநாள் வெற்றிகரமா அம்மாவிடம் தொலைபேசியில் சந்தேகம் கேட்டுகிட்டு அடுத்த எக்ஸ்பெரிமென்ட்டை துவங்கினேன்!

வறட்டு கோதுமையை அப்படியே போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, இறுதியாக வெல்லம் -ஏலக்காயும் சேர்த்து அரைத்தெடுத்து கச்சாயமாக சுடுவாங்க. இனிப்புக்கு பதிலாக வரமிளகாய்-சீரகம் சேர்த்து அரைச்சு, வெங்காயம் அரிஞ்சு போட்டு காரக் கச்சாயமும் செய்வதுண்டு. சரிவருமா வராதா என்ற சந்தேகத்திலயே ஆரம்பிச்சேன். கச்சாயத்தை சுட்டு எடுத்துவைக்கும் வரை சந்தேகம் அப்படியே இருந்தது. கரெக்ட்டாக என்னவரும், பக்கத்து வீட்டு நண்பர்களும் பரிசோதனை எலிகளாக வந்தார்கள். தட்டுல வைச்சு, போட்டோ கூட சரியா எடுக்கலை, அப்படியே திகிலோடு தட்டை அவங்க கையில் கொடுத்தேன்!

சூப்பரா இருக்கு கச்சாயம் என்று அடுத்த ஈடு பொரித்து எடுப்பதற்குள் தட்டைக் காலி செய்துவிட்டார்கள்! அதுக்கப்புறம் ப்ளாகுக்கு வருகை தராமல் இருக்குமா கச்சாயம்? :))))
----------
தேவையான பொருட்கள்
கோதுமை -1 கப்
வெல்லம் - 1/2 கப் (இனிப்புக்கேற்ப )
ஏலக்காய்-2
எண்ணெய்

செய்முறை
சுத்தம் செய்த கோதுமையை க்ரைண்டரில் போட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். (வெல்லம் சேர்க்கும்போது மாவு இளகிவிடும், அதனால் தண்ணீர் கம்மியாகத் தெளித்து அரைப்பது முக்கியம்)

கோதுமையை ஊறவைக்காமல் போட்டால் அரைபடுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இந்த unpelted wheat வேறு ஏதாவது(!)க்கு உபயோகிக்கும் கோதுமையோ என்னவோ தெரியவில்லை, ஜவ்வு மாதிரி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டே இருந்தது. நானும் சலிக்காமல் ஸ்பூன் வைச்சு பிரிச்சு பிரிச்சு தள்ளி விட்டுகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், போகாத ஊருக்கு வழி தேடுகிறோமோ என்றே தோன்ற ஆரம்பிச்சது. ஆனாலும் விடாமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக அரைச்சு ஒரு வழிக்கு கொண்டுவந்துட்டமில்ல?! :)

அரைகப் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து அரைத்து..2 ஏலக்காயும் தட்டிப் போட்டு கச்சாயத்துக்கு மாவு தயாராகிவிட்டது.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, கோதுமைமாவை ஸ்பூனால் எடுத்து ஊற்றி...

ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, கச்சாயங்கள் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.
சுவையான கோதுமைக்கச்சாயம் ரெடி! கச்சாயம், பொன்னிறமாவேண்டும் என்பதைவிடவும், கொஞ்சம் நல்லாவே டார்க் ப்ரவுன் கலர் ஆகும்வரை வேகவைத்து எடுத்தால் நன்று.

இன்னுமொரு விஷயம் என்னன்னா, இந்தக் கச்சாயம் செய்த உடனே சாப்பிடுவதை விடவும், பழசாகி சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். அப்ப, ப்ரெஷ்ஷாச் சாப்புட நல்லா இருக்காதான்னு எக்குத்தப்பாக் கேக்கப்படாது, என்ன வேகத்தில் கச்சாயம் காலியாகுதுன்னு பாருங்க! :))))))
ஒரு க்ளிக் பண்ணிவிட்டு, தட்டை கொண்டுவந்து காஃபி டேபிளில் வைக்கும் முன் 2 கச்சாயம் காணோம்! சீக்கிரமா வந்து எடுத்துக்குங்க, அப்புறம் தட்டு காலியானபிறகு வந்து ஏமாந்து போயிராதீங்க! ;)

"விடாது கருப்பு!" மாதிரி இந்த முறை வேற ஒரு ப்ராண்ட் கோதுமை வாங்கிவந்திருக்கிறேன், சீக்கிரமா காரக்கச்சாய எக்ஸ்பெரிமென்ட்டும் செய்து பார்த்துடலாம், என்ன சொல்றீங்க? ;)))))

38 comments:

 1. Looks yum, enoda amma ithai kothumai maville saivanga.

  ReplyDelete
 2. கோதுமை மாவில் அவசரத்துக்கு ஏதாவது செய்யணுன்னா நான் இது மாதிரி செய்து பார்த்திருக்கிறேன்.அதை கோதுமை பணியாரம்னு இங்க சொல்லுவாங்க..ஆனா ஊற வச்சு அரைச்சதுனால ரொம்ப வலு வலுப்பா இல்லாம மாவை சுட்டதுனால சுவையில கண்டிப்பா வித்தியாசம் தெரியும்.நான் செய்து பார்க்க போறேன்.

  ReplyDelete
 3. முதல்ல பார்த்ததும் ஓட்டை போடாத அதிரசம்னு நினைச்சேன்.:)

  ReplyDelete
 4. கச்சாயம்_புது பெயரா இருக்கேன்னு பார்த்தால் அதிரசத்தைத்தான் இந்தப் பெயரில் சொல்றீங்கன்னு நினைச்சேன்.அடுத்து போண்டா?பணியாரம்? என நினைத்து கடைசியில் வடை என முடிவு செய்து படித்துக்கொண்டே வந்தால் கச்சாயம்னு சொல்லிட்டீங்க.மொத்தத்தில் பெயர்,செய்முறை எல்லாமே புதிதாக உள்ளது.

  செய்து பார்க்கலாம் என்றால் ஊற வைக்காத கோதுமையை அரைச்சு கிரைண்டர் போச்சுன்னா என்ன செய்றது?பகிர்வுக்கு நன்றி மகி.

  ReplyDelete
 5. Interesting. Mahi, you can soak and then grind it. For traditional wheat dosai & godhumai halwaa we soak & grind the wheat. Droooooooooolllllllingggg :p azhaga nalla nirathil vandiruku.

  Mira’s Talent Gallery

  ReplyDelete
 6. Looks delicious!

  http://www.followfoodiee.com/

  ReplyDelete
 7. அனு, எங்க வீட்டில் இப்படிதான் செய்வது வழக்கம்,கோதுமை மாவுல இப்படி செய்ததில்லை. ட்ரை பண்ணிப் பார்க்கணும்! கருத்துக்கு நன்றிங்க!
  ~~
  ராதாராணி, அதிரசம் கலர்ல இருக்கறதால தப்பா நினைச்சிட்டீங்களா? :) இது கோதுமையை ஊறவைக்காம அரைச்சு செய்வதுங்க. ருசி சூப்பரா இருக்கும். செய்து பாருங்க! கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
  ~~
  /செய்து பார்க்கலாம் என்றால் ஊற வைக்காத கோதுமையை அரைச்சு கிரைண்டர் போச்சுன்னா என்ன செய்றது?/ நல்ல கேள்வி சித்ராக்கா! கொஞ்சம் பொறுங்க. கோதுமைய இன்னொரு முறை அரைச்சு காரக்கச்சாயம் செய்துட்டு சொல்லறேன், அப்பறம் தைரியமா செய்து பாருங்க,சரியா?! :)
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
  ~~
  /you can soak and then grind it. / இல்ல மீரா, ஊறவைச்சு அரைச்சா ருசி மாறிடும்னு நினைக்கிறேன். அப்படியே அரைச்சு செய்ததுதான் இதுவரை வழக்கம். நீங்க சொன்னமாதிரி ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
  ~~
  ப்ரீத்தி, கருத்துக்கு மிக்க நன்றி!
  ~~

  ReplyDelete
 8. I use to do, Maida maavu Kachayam in this way... Love this too...

  http://recipe-excavator.blogspot.com

  ReplyDelete
 9. பார்க்க நல்லா இருக்கு; செய்யத் தோணுது; கோதுமையும் இருக்கு. (அது வேற வேலைக்கு வாங்கினது.)

  ம்ஹும்! ;)

  இப்போதைக்கு எனக்கு இனிப்பு வேண்டாம். காரக் கச்சாயம் வந்ததுக்குப் பிறகு முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 10. ஓ...இதுதான் கச்சாயமா?மகி பாயசத்தை நறுக்கு நறுக்கு என்று கோதுமையையை கடித்துக்கொண்டே சாப்பைஇட்ட மாதிரி கச்சாயத்தையும் கோதுமையை கடித்துக்கொண்டு சாப்பிட்டீர்களா?

  முழு கோதுமையில் பாயசம் டிரைபண்ணியவர்களில் நீங்கள் தான் முதல் ஆளாக இருக்கணும்.

  ReplyDelete
 11. is it wheat modakam?i think you have used ground whole wheat instead of using wheat flour(just seeing pic)..am i right mahi?

  ReplyDelete
 12. ஆஹா.. புது விதமாக இருக்கே.. பார்க்கவே அழகு.

  நான் கோதுமை வாங்கி முளைக்கட்டி அவித்து தாளித்துக் கொட்டிச் சாப்பிட்டிருக்கிறேன்ன்.. சோளன்போல இருக்கும் சுவை.. எனக்கந்தச் சுவை பிடிக்கும்....

  இனிக் கிடைத்தால் இதை முயற்சிக்கிறேன்ன்....

  ReplyDelete
 13. மகி இந்த பிராண்ட் நல்ல இருக்காது
  TRS /EAST END /NATCO ட்ரை செய்யுங்க .இப்ப கடைக்கு போறேன் வாங்கி
  செய்திட்டு மீண்டும் வரேன் கமேண்ட :))))))
  ஊறவைத்தா ஈசியா அரைக்கலாமே ..டவுட் :))))))

  ReplyDelete
 14. சோளன்போல இருக்கும் ///

  WHICH CHOLAN :))))))
  ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் ஆஆஆ ஹஹா ஹா
  ச்சே சிரிக்க கூட முடியாம தும்மல் ஹாச்சும் ஹ்ம்ம்

  ReplyDelete
 15. angelin said...
  சோளன்போல இருக்கும் ///

  WHICH CHOLAN :))))))
  ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் ஆஆஆ ஹஹா ஹா
  ச்சே சிரிக்க கூட முடியாம தும்மல் ஹாச்சும் ஹ்ம்ம்///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஆசைக்கு ஒரு ழ, ள எழுத வழியில்லாமல் மண்ணிட்டியே முருகா.... இந்த ழ, ள வை வலையுலகில் இருந்தாவது தூக்கி விட்டால்ல் நான் திருப்பதி படியனைத்தையும் லிவ்ட்டிலேயே ஏறி முடிப்பேன்ன்ன்ன்ன்:))

  அஞ்சு கடையில எனக்கொரு இளநி ரின் வாங்கி வாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)).

  ReplyDelete
 16. கோதுமையை அறைச்சு அப்பம் குத்தறதுன்னு சொல்லுவோம். ருசி,ம்ருதுத்தன்மை ஜோரா இருக்கும். க்ரைண்டர் பரவாயில்லை. இல்லேன்னாபொருமையை சோதிச்சுடும்.பொருமையாததான் செஞ்சிருக்கே. நன்னாயிருக்கு. கோதுமைரவை அதான் தலியான்னு சொல்வார்களே அதை ஊரவைத்தும் செய்யலாம்.கொஞ்சம் குறுக்கு வழி. அரைக்கரச்சே துளி தேங்காயும் போடலாம்.கட்டின வீட்டுக்கு பணிக்கையா. இல்லே இல்லே. கசாயம் எனக்கும்
  தெறியாத பெயர். நானும் எப்போதாவது இந்தப் பெயரை உபயோகப் படுத்திக் கொள்கிறேன்.

  ReplyDelete
 17. Nice kachaayam...
  Visit my link for a surprise
  http://ushasrikumar.blogspot.in/2012/06/awesome-blogger-award-from-ranjana.html

  ReplyDelete
 18. மகி :}}}}}}}}}}}} நான் செய்திட்டேன் அடுத்த போஸ்டல போடறேன்
  சூப்பர் டேஸ்ட்.நான் அரைமணிநேரம் ஊற வைச்சுதான் செய்தேன்

  ReplyDelete
 19. MIYAAV THATS CHOLAM NOT CHOLAN :))))))

  ReplyDelete
 20. Mahi,

  ...that is indeed an amazing creation. Looks like lot of hard work has gone into this. Keep your collars up. Love the recipe...

  And its lovely to read in Tamizh:) You have got a flair narrating:)

  ReplyDelete
 21. கோதுமை கச்சாயம் சூப்பர்.

  ReplyDelete
 22. Paarkave romba nalla irukku, guess the efforts paid off..

  ReplyDelete
 23. Aha enna rusi, enna rusi(Sapidamaleyava?) ellam Mahi kaivannam ennikumnnu oru nambikkai than vera enna?

  ReplyDelete
 24. மகி கச்சாயம் நான் இது வரை கேள்வி பாத்ததில்லை ஆனா படத்த பார்த்தா சாப்புட்ட மாதிரி ஒரு பீலிங். நாம தான் யாராச்சும் எதையாவது கொடுத்தா என்ன ஏதுன்னு கேள்வி கேட்டு சாப்புடுற பரம்பரை இல்லையே :))

  ReplyDelete
 25. // ஒரு கட்டத்தில், போகாத ஊருக்கு வழி தேடுகிறோமோ என்றே தோன்ற ஆரம்பிச்சது. ஆனாலும் விடாமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக அரைச்சு ஒரு வழிக்கு கொண்டுவந்துட்டமில்ல?! :)//

  நீங்கதான் நெனச்சது வரலேன்னா வேற ஏதாச்சும் செஞ்சு ஒரு வழி பண்ணிடுவீங்களே :)) சாப்புடுற மாதிரி பண்ணிடுவீங்களே ன்னு சொன்னேன்.

  இந்த கோதுமையை அரைத்து தோசை என் நண்பி ஒருத்தவுங்க வீட்டில் சாப்பிட்டு இருக்கேன். ரெசிபி எல்லாம் கேக்கலே. இனிமே கேட்டுக்கணும்

  ReplyDelete
 26. மகி முதல் கமெண்ட் இல் கேள்வி பட்டதில்லை ய தான் இப்புடி மழலையில் கொஞ்சி இருக்கேன் :)) பூஸ் கண்ணில் படாதமாதிரி பார்த்துக்கோங்க ப்ளீஸ் :))

  ReplyDelete
 27. //இன்னுமொரு விஷயம் என்னன்னா, இந்தக் கச்சாயம் செய்த உடனே சாப்பிடுவதை விடவும், பழசாகி சாப்பிட்டால் //

  எவ்ளோ பழசாகி சாப்புடணும் ஒரு ஆறு ஏழு மாசம் பழசானா போதுமா :))) ஹீ ஹீ டவுட்டு

  ReplyDelete
 28. WHICH CHOLAN :))))))
  ராஜ ராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் ஆஆஆ ஹஹா ஹா
  ச்சே சிரிக்க கூட முடியாம தும்மல் ஹாச்சும் ஹ்ம்ம்///

  அஞ்சு பூஸ் காரன் சோளம் அத தான் சோளன் ன்னு மரியாதையா சொல்லி இருக்காங்க கிக் கிக்க்க்

  ஐயோ பூச இப்புடி கன்ப்யுஸ் பண்ணலாமா??? பூஸ் சொன்னா இளநி டின் வாங்கிட்டு வந்தீங்களா அஞ்சு?


  நான் கமெண்ட் போட வர்றதுக்குள்ளே கச்சாயம் செஞ்சே சாப்பிட்ட அஞ்சுவுக்கு கர்ர்ர்

  ReplyDelete
 29. சங்கீதா, PT, இமா, ஸாதிகாக்கா, LeelaGovind, அதிரா, ஏஞ்சல் அக்கா, அகிலா, காமாட்சிம்மா, UshaShrikumar, மலர், ஆசியாக்கா, ஹேமா,விஜிம்மா, கிரிஜா, அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

  @ சங்கீதா, மைதா-சர்க்கரை-ரவை-வாழைப்பழம் போட்டு பழக்கச்சாயம் நாங்களும் செய்வோம்! :)
  @இமா, காரக்கச்சாயம்?..ஹ்ம்ம்ம்...வெயிட் பண்ணுங்க, இன்னும் கொஞ்ச காலம்! ;) :)
  @ /முழு கோதுமையில் பாயசம் டிரைபண்ணியவர்களில் நீங்கள் தான் முதல் ஆளாக இருக்கணும்./ ரியலி ஸாதிகாக்கா? கேரளாவில இந்தப்பாயசம் செய்வாங்க, நிறைய முறை சாப்பிட்டிருக்கிறேன். இருங்க, எங்கயாவது ரெசிப்பி தேடிப்பிடிச்சு சொல்லறேன். ;)
  /பாயசத்தை நறுக்கு நறுக்கு என்று கோதுமையையை கடித்துக்கொண்டே சாப்பைஇட்ட மாதிரி கச்சாயத்தையும் கோதுமையை கடித்துக்கொண்டு சாப்பிட்டீர்களா?/ :))))) நல்லாவே கிண்டலடிக்கிறீங்க! நான் பலமுறை சொல்லிருக்கேன், வெற்றி பெற்ற சோதனை முயற்சிகள்தான் இங்க வரும்! ஸோ,தைரியமா ட்ரைப் பண்ணி, நீங்களே சாப்பிட்டுப் பாருங்க, எப்படி இருக்குதுன்னு!

  @LeelaGovind said ...is it wheat modakam?/// nope, this is a deep friend fritters made with freshly grind wheat (without soaking the wheat).
  Thanks for the comment! :)

  @ அதிராவ், கோதுமையை சோளன்;) போல அவித்து சாப்பிடுவது இப்பதான் கேள்விப்படறேன்! :) அடுத்த முறை இப்படி செய்து பாருங்க அதிரா!

  @ ஏஞ்சல் அக்கா, /TRS /EAST END /NATCO ட்ரை செய்யுங்க/ இந்தியன் ஸ்டோர் போகும்போது தேடிப்பார்க்கிறேன். அதற்குள் செய்தும் பார்த்து வலைப்பூவில் போடவும் போறேன்னு சொல்லிட்டீங்க. ரொம்ப சந்தோஷம்! ;)

  ReplyDelete
 30. @காமாட்சிம்மா, தலியா-ன்னா கோதுமை ரவையா? அதில செய்யலாமா? புது செய்முறையா இருக்கும்மா..ஷார்ட் கட், அரைக்கிற வேலை குறையும்ல? டிப்ஸுக்கு நன்றிமா!

  @ @உஷா மேடம், விருது கொடுத்ததுக்கு மிக்க நன்றிங்க!

  @ ஏஞ்சல் அக்கா, /MIYAAV THATS CHOLAM NOT CHOLAN :))))/ நீங்க வேற! அவிங்களுக்கு சொல்லி சொல்லி...இப்ப நான் ஒரு முடிவுக்கு வந்துட்டன், பக்கத்து வீட்டில கொஞ்சம் மூளைய கடனா வாங்கி கசக்கிப் புழிஞ்சாவது பூஸ் பாஷையை நானாவே புரிஞ்சிக்கிரதுன்னு! ;)))))))

  @ மலர், வாங்க! ரொம்ப சந்தோஷம் உங்களை இங்க பார்க்கறது! :)
  /You have got a flair narrating:)/ :) My pleasure! :) thank you very much! BTW, இதுல உள்குத்து எதும் இல்லைதானே? ;) ;)

  @ விஜிம்மா, /Mahi kaivannam ennikumnnu oru nambikkai than vera enna?/ உங்க நம்பிக்கை ரொம்ப சரிதான், பயப்படாம சாப்பிடலாம் என் சமையலை! :) நன்றிமா!

  @ கிரிஜா, //கேள்வி பட்டதில்லை ய தான் இப்புடி மழலையில் கொஞ்சி இருக்கேன் :)) பூஸ் கண்ணில் படாதமாதிரி பார்த்துக்கோங்க ப்ளீஸ் :)) // ஏதோ,என்னால முடிஞ்சது, கொஞ்சம் போல்டு(!) லெட்டர்ல ஹைலைட் பண்ணிவுட்டிருக்கேன். சரி,சரீ....10ஷன் ஆகப்புடாது, இப்படி பளீஈஈஈச்சுன்னு இருந்தான் பூஸ் கண்ணில படாது, இல்லன்னா கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திகிட்டு கண்டுபுடிச்சிருவாங்க.
  இப்ப கண்டுக்காம கவனிக்காமப் போயிருவாங்க, எப்பூடி நம்ம டெக்னிக்?! ;))))))

  /எவ்ளோ பழசாகி சாப்புடணும் ஒரு ஆறு ஏழு மாசம் பழசானா போதுமா :))) ஹீ ஹீ டவுட்டு / சூப்பரப்பூ! எனக்கு இப்பூடி டவுட்டு கேக்கிறவங்களை ரொம்ப புடிக்கும்! எவ்ளோ சொன்னீங்க..ஆறேழு மாசம்?? தட்ஸ் டூ ஷார்ட் கிரி..ஆறேழு வருஷங்கழிச்சு சாப்புட்டா ரொம்ப ஜூஊஊப்பரா இருக்கும்! ஹஹஹ!

  ஜோக்ஸ் அபார்ட், கச்சாயம் சுட்டு, ஒரு நாள்கழிச்சு சாப்புடுங்க. மேக்ஸிமம் 2-3 நாள் வைங்க, அதுக்குமேலன்னா ப்ரிஜ்ல வைச்சு டெஸ்ட் பண்ணிப் பாத்து, மறக்காம எனக்கும் ரிஸல்ட் சொல்லிருங்க.

  /காரன் சோளம் அத தான் சோளன் ன்னு மரியாதையா சொல்லி இருக்காங்க கிக் கிக்க்க்/ என்னாது...காரன்??? ஆட்டோக்காரன், வேலைக்காரன், தோட்டக்காரன், லாரிக்காரன் ...இந்தமாதிரிங்களா கிரி நீங்க சொல்லற காரன்??! இவங்க ஒரு புள்ளி வைக்க மறந்து கார்ன்-ஐ காரன்-ஆக்கிட்டு பூஸைப் பார்த்து கிக்க்க்க்-னு வேற சிரிக்கீறாங்கப்பா! இந்தக் கொடுமையக் கேக்க ஆளே இல்லையா? திருப்பதி ஏளு;)மலையானே, நானும் பூஸ் கூட லிஃப்ட் ஏறி வந்து உன்னைய தரிசிக்கறேன், என்னைய காப்பாத்தப்பா!!! :))))))

  ReplyDelete
 31. குழலினிது, யாழினிது, காரன் காரி எனும் கிரி மழலை அதனினுமினிது. ;))) enjoyed Giri. ;D

  ReplyDelete
 32. மகி நல்லா உத்து உத்தூஉ பாருங்க புள்ளி தெரியும்:)) ஒரு புள்ளி விட்டு போனதுக்கு பூச கரும்புள்ளி செம்புள்ளி குத்தி மொட்டை போடுறேன்னு வேண்டி இருக்கலாம் இல்லே :))

  டீச்சர் நன்றி நன்றி :))

  ReplyDelete
 33. /ஒரு புள்ளி விட்டு போனதுக்கு பூச/ ஸ்டாஆஆஆஆஆப்! நான் அந்தமாதிரி எடக்கு மடக்கு வேண்டுதல் வைக்கிறதில்ல கிரிஜா! வேணா பூஸை திருப்பதிக்கு பாதயாத்திரை வரவைக்கிறதா வேண்டிக்கிறன். :)))

  /கிரி மழலை அதனினுமினிது./ உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸப்பா! தாங்க முடீல சாமீ! ;)

  ReplyDelete
 34. மகி என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.நோய்நொடியின்றி, நீண்டகாலம் நல்ல சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. /uma said../ உமா, காலையில் உங்க கமென்ட் பார்த்து ஆச்சரியம் கலந்த சந்தோஷமா இருந்தது! எப்படி நினைவு வைச்சிருக்கீங்க? அல்லது எப்படி தெரியும் உங்களுக்கு? :)

  ரொம்ப நன்றிங்க! You made my day! :)))

  ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails