இந்த ஆவி-பூதம்-பேய்-பிசாசு இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லைன்னு சொல்லிகிட்டாலும் கொஞ்சம் பயம் உண்டு. (நம்பிக்கை வேற, பயம் வேற...என்னங் நாஞ்சொல்லறது? கரெக்ட்டுதானுங்க?!!) என்னதான் தைரியமா இருக்கற மாதிரி காட்டிகிட்டாலும் ஒரு உதறல் இருக்கத்தானே செய்யும்? டிவி-ல வர பேய்ப்படமெல்லாம் கூட நான் பார்க்கமாட்டேன். சாந்தமான படங்கள் மட்டுமே பார்க்கும் ஒரு சாந்தசொரூபி (ஹிஹி,மீ ஒன்லி,நோ டவுட்,ஓக்கை?!) முதல்முறையாக ஒரு நேரடியாக ஆவி ஆடிய டான்ஸைப் பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிகிட்டு படிக்க ஆரம்பிங்க! :)
இந்த (நீர்)ஆவியின் டான்ஸை முதல்முறை பார்த்ததும் வெலவெலத்துப் போயிட்டேன். என்ன ஒரு ஆட்டம்ங்கறீங்க?? அப்படி ஒரு வேகம், சத்தம் வேற பலமா வந்துது!!! அப்ப வீட்டுல நான் மட்டுந்தான் இருந்தேனா.. என்ன பண்ணறதுன்னும் தெரில! இவருக்கு போன் பண்ணி சொன்னாலும் வீடு வந்து சேர அரை மணி நேரமாவது ஆகும். அதுவரைக்கும் இந்த டான்ஸைப் பார்த்து என்ன செய்யறதுன்னு நினைச்சதுல ப்ளட்ப்ரஷரே எகிறிடுச்சுன்னா பாருங்களேன்!!!
நாளாக ஆக, டான்ஸ் பழகிப்போச்சு..இப்பல்லாம் (நீர்)ஆவி என்ன சத்தம் போட்டு டான்ஸ் ஆடினாலும் நான் பயப்படறதில்லை..பழகப்பழக பாலும் புளிக்கும்ணு ஒரு பழமொழி சொல்லுவாங்களே,அது மாதிரிதான் ஆகிப்போச்சு நிலைம!! பாருங்க, அந்த (நீர்)ஆவியின் நடனத்தை உங்க எல்லாருக்கும் காட்டோணும்னு வீடியோ எடுத்து இங்கே போஸ்ட் பண்ணற அளவுக்கு தைரியசாலி ஆகிட்டேன்!!
சரி, சரி..ஓக்கே!!கூல் டவுன்!!! இதுக்கே இம்புட்டு டென்ஷன் ஆனீங்கன்னா எப்புடி? வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா! டேக் இட் ஈஸி...எதோ டெரர் ஸ்டோரின்னு நினைச்சு படிக்க ஆரம்பிச்சு ஏமாந்து போயிட்டீங்க??! ;) ஹிஹிஹி..நான் எழுதின இடத்தில எல்லாம் (நீர்)ஆவின்னுதான் எழுதிருக்கேன். ஹைலைட் பண்ணிப் படிக்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்காம நீங்களும் அப்பாவியா இருந்தா ரெம்ப கஷ்டம்! என்னை மாதிரி ஒரு சிலர் உங்க தலைல நல்லா மொளகா அரைச்சிருவோம்;) ;) ... ஜாக்ரதை!!! :)
மொளகான்னதும்தான் ஞாபகம் வருது, இந்தாங்க,சுடச்சுட மொளகா பஜ்ஜி..சாப்புட்டு வாங்க!! கொஞ்சம் ஸீரியஸா பேசலாம்.
ஸீரியஸாப் பேசலாம்னு சொன்னதுக்காக அட்டென்ஷன்ல எல்லாம் நின்னுட்டு படிக்கவேணாம், உட்கார்ந்தே படிங்க! :)
குக்கர் இட்லி சாப்பிட்டு போரடிச்சுப் போனதால ஊர்ல இருந்து இட்லிச்சட்டி வாங்கிட்டு வரலாம்ணு நினைச்சிருந்தேன். இதுவரை போட்ட போட்டோஸ்ல என்னோட கிச்சனை உத்துப் பார்த்திருந்தீங்கன்னா, நான் யூஸ் பண்ணறது செராமிக் குக் டாப்-னு கண்டுபிடிச்சிருப்பீங்க. எங்களுக்கெல்லாம் வேலைவெட்டி அதிகம், அதெல்லாம் பார்க்க நேரமில்லைன்னாலும் இப்ப சொல்லிட்டேன்! ;))))))))
பாத்திரக்கடைல கேட்டப்ப, "அதெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க..இன்டக்ஷன் அடுப்பிலயே வைக்கலாம், நம்பி வாங்குங்க"ன்னாங்களா.. வாங்கிட்டு வந்தாச்சு! பொழப்புக்கெட்டு வால்மார்ட்டுக்கு ஒரு நடை போயி 100% காட்டன் துணியாப் பார்த்து ஒரு அடி ( அடிதடியில்லீங்க..one yard) வாங்கிட்டு வந்து தட்டுக்கு அளவெடுத்து துணியக் கட் பண்ணி, ஒரு சுபயோக சுபதினத்தில இட்லிச் சட்டிய அடுப்பில வச்சேன்,அம்புட்டுதான்! டான்ஸிங் ஆரம்பிச்சிருச்சு. வெறும் தண்ணி இருக்கறதாலதான் பேலன்ஸ் இல்லாம ஆடுது, இட்லிமாவை ஊத்தி தட்டை வைச்சா சரியாகிரும்ணு பார்த்தேன்..ம்ஹும், அப்பவும் டான்ஸ் நிக்கவே இல்ல!
இருந்தாலும் இந்த ஆவிக்கெல்லாம் பயப்பட்டா ஆகுமா? எடுத்த முயற்சியெல்லாம் வீணாகக் கூடாதுன்னு தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் மாதிரி அப்பப்ப இட்லிச்சட்டிலதான் இட்லி சுடறேன்..என்னதான் டான்ஸ் ஆடினாலும், இட்லி ஓரளவு சுமாரா வருது.
சரி, மொக்கைய போட்டுத் தாக்கியாச்சு, உபயோகமா ஒரு தகவலாவது சொல்லலைன்னா ப்ளாகர்(ஸ்) ஆவி வந்து அடிச்சிருமோன்னு பயம்மா இருக்கறதால அடுத்து ஒரு டிப்ஸ்!! புதுசா எவர்சில்வர் பாத்திரம் வாங்கும்போது அதிலே ஒட்டியிருக்க ஸ்டிக்கரை எடுக்கறது ஒரு நச்சுப்பிடிச்ச வேலை..அத ஈஸியா எடுக்கறதுக்கு ஒரு டெக்னிக் எங்க அக்கா சொல்லிக்குடுத்தாங்க.
அது என்னன்னா, புதுப் பாத்திரங்களை கொஞ்சம் சூடுபண்ணினா, (ரொம்ப சூடு பண்ணிராதீங்க, அதே மாதிரி காலிப் பாத்திரத்தை சூடு பண்ணனும்..தண்ணி கிண்ணி ஊத்தி கழுவறதுக்கெல்லாம் முன்னாலயே சூடு பண்ணுங்க) அந்த ஸ்டிக்கர்ல இருக்க கம் இளகி வரும், அப்ப ஸ்டிக்கரை உரிச்சா வம்பு பண்ணாம முழுசா வந்துரும். சூடா இருக்கும்போதே ஒரு துணி வைச்சு துடைச்சா கம் இருந்த இடத்திலிருக்கும் பசையும் கூட க்ளீனா வந்துரும்.
இந்த டெக்னிக் வேலை செய்யும்ங்கறதுக்கு நானே கேரண்டி..இந்தப் பாத்திரங்களைப் பாருங்களேன்,எவ்வளவு க்ளீனா வந்திருச்சு ஸ்டிக்கர் எல்லாம்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்,நன்றி,வணக்கம்! :))))))))
ஹா ஹா.. அந்த காணொளியில பாத்திரம் தெரியாத மாதிரி பதிவ போட்டுருந்தீங்கன்னா உண்மையிலயே மிரட்சியோட நடுங்கிட்டே படிச்சிருப்போம் பட் காணொளி ஸ்டில் காட்டிக்கொடுத்துருச்சே ஹா ஹா... அதனால் வந்த உடனே கண்டுபுடிச்சுட்டேன் எந்த ஆவின்னு... சரி சரி வந்தது வந்துட்டோம் இட்லியும்,மிளகா பஜ்ஜையும் ஆவியோட சேர்த்து சாப்பிட்டு போயிடுறேன்....:-)))
ReplyDeleteஎழுத்து நடை கலக்கல்.. வாழ்த்துக்கள்.
/அந்த காணொளியில பாத்திரம் தெரியாத மாதிரி/ காணொளின்னா??? ங்ஙே.. ங்ஙே. ங்ஙே!..........
ReplyDeleteடாஷ்போர்டையா சொல்றீங்க..இல்லாட்டி கூகுள் ரீடரா? இவ்வளவு சுத்தத் தமிழ் எல்லாம் எனக்கு புரியலைங்க ராஜேஷ்!!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
என் வீட்டிலும் முன்னாடி இட்லி சட்டி ஆட்டம் காட்டும். இப்ப என்ன ஆச்சோ தெரியவில்லை அடங்கி போயிருச்சு. என் அம்மா வாங்கி தந்தார்கள். அந்த சென்டிமென்ட் ரீசனுக்காக கடந்த 12 வருடங்களாக வைச்சிருக்கிறேன்.
ReplyDeleteஸ்டிக்கர் removing டெக்னிக் நல்லாத்தேன் இருக்கு. நான் பாவிப்பதே குறைவு. ஸ்டிக்கரோடு அப்படியே இல் தூங்குது.
kaanoli means video ( I think ? )
இந்த பாத்திரம் கேஸ் அடுப்பில் குதிக்காதுன்னு நினைக்கிறேன். /என் வீட்டிலும் முன்னாடி இட்லி சட்டி ஆட்டம் காட்டும். / ஓ..உங்க வீட்டில் கேஸ் ஸ்டவ்னு நினைச்சேனே..இல்லையா வானதி?
ReplyDeleteஉள்ளே இருக்க பாத்திரம்லாம் ஸ்டிக்கர் ரிமூவ் செய்யவாவது வெளியே எடுங்க!:)
தேங்க்ஸ் வானதி!
Hi Mahi ,Nalla Comedythan.Sari Ippo Aviyin nilamai yepadi Irukirathathu?.
ReplyDeleteha ha ha nalla commedy pathiram ellam pala palakuthu
ReplyDeleteஹா ஹா இனிமேல இட்லி பண்ணும்போதெல்லாம் இந்தக்காமெடி ஆவிதான் நி நைவில் வரும்.
ReplyDeleteகொஞ்சம் பொறுங்க நைட் வாறேன்:).
ReplyDeleteமகி..இது உங்களுக்கே ஒவராக தெரியவில்லை..
ReplyDeleteஆனா...இட்லி பாத்திரத்தினை பார்த்தவுடனே...இந்த ஆவியினை பற்றீ தான் எழுத போகின்றிங்க என்று நினைத்தேன்...சரியாகிவிட்டது...
துணியில் இட்லி ஊற்றுவது நல்லா இருக்கும் தானே...எங்க பாட்டி வீட்டில் தான் இப்படி செய்வாங்க..ரொம்ப சூப்பராக இருக்கும்...
ஸ்டிக்கர் கிழிப்பதற்கு சூப்பர்ப் ஐடியா...கண்டிப்பாக பயனுள்ள டிப்ஸ்...
அப்பப்பா.... ரூம் போட்டு யோசிப்பீங்க போல சாமி... அப்புறம் உங்க இட்டிலி போஸ்ட் பாதி தான் படிச்சுருக்கேன் மேடம்..... மீதியயும் முடிசுட்டு மெதுவா ஒரு நாள் வாறேன்....
ReplyDeleteநிஜமாவே ஆவி கதை சொல்லபோறீங்கன்னு நினைச்சேன்..இப்படி நீராவின்னு சொல்லி கவுத்திட்டீங்களே..ஸ்டிக்கர் டிப்ஸ்க்கு நன்றி!!
ReplyDeleteஅடடா தலைப்புப் பார்த்ததும் பதறிட்டேன்...:))) அட நம்மட கேஸ்தானா..:))
ReplyDeleteஏதும் சத்தம் கேட்டால் உடனே ஓடிப்போய் குல்ட்டினுள் பூந்திடோணும்:)), கை கால் வெளியில கொஞ்சமும் தெரிய விடமாட்டேன், அதைப்பிடிச்சு இழுத்திட்டாலும் எனப் பயம் அவ்வ்வ்வ்வ்:))).
இட்லிச் சட்டி அழகாக இருக்கு மகி. எனக்கும் இப்படிக் குட்டியாக இருக்கும் பாத்திரங்கள்தான் பிடிக்கும்.
ReplyDeleteசில கடைகளில் அடுப்புக்கென ஸ்பெஷல் கம்பி விற்குதெல்லோ.. அதை வாங்கி வச்சால், ஆட்டம் தன்னால அடங்கிடும்:))).
ReplyDeleteமிளகாயில பஜ்ஜியாஆஆஆஅ அவ்வ்வ்வ்வ்.. எனக்கு வேணும்... சுவீட் சில்லி சோஸுடன்:)).
ReplyDelete(ஆவியின் நடனம்) இட்லி பாத்திரம் ஆடியதை அழகாக படமாக்கியது ரசிக்கத்தக்கது.என்னவொரு ஆட்டம்.க்யூட்ட்...
ReplyDelete//இந்த ஆவி-பூதம்-பேய்-பிசாசு இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லைன்னு சொல்லிகிட்டாலும் கொஞ்சம் பயம் உண்டு//
ReplyDeleteஆவிக்கே ஆவிய பாத்து பயமா...ஆச்சிர்யகுறி...;))
வாவ்.. இட்லி பாத்திரம் அழகா இருக்கு மகி... எங்க கமலா ஸ்டோர்ஆ? இல்ல கண்ணனா? (இந்த பாத்திரத்துல பண்ணினா ஒருவேள இட்லி வருமோ...என்னமோ போ மகி)
//ஹைலைட் பண்ணிப் படிக்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்காம நீங்களும் அப்பாவியா இருந்தா ரெம்ப கஷ்டம்//
இதுல ஏதும் உள்குத்து இருக்கோ...கிர்ர்ரர்ர்ர்ர்....
//ஒரு துணி வைச்சு துடைச்சா கம் இருந்த இடத்திலிருக்கும் பசையும் கூட க்ளீனா வந்துரும்//
ஜெய்லானி பிரதர்... நெறைய சந்தேகம் கேக்க scope இருக்கு... விடாதீங்க கேளுங்க...:))
//வீடியோ எடுத்து இங்கே போஸ்ட் பண்ணற அளவுக்கு தைரியசாலி ஆகிட்டேன்!!// பொய்..
ReplyDeleteகோவைல இருந்து இறக்குமதி செய்தத எல்லாம் காட்டி கடுப்பேத்த நினைச்சுட்டீங்க. ஹும்! நடத்துங்க. ;)
'அது' க்யூ...ட்டா இருக்கு.
சீசனுக்கேற்ற போஸ்ட். ;)
ReplyDeleteம்!!! மீ திங்கிங் சீரியஸ்லி!!!!!! ஹலோவீனுக்கு இட்லி பாட் ஸ்டீம் விடுறது போல காஸ்ட்யூம் போட்டுப் போலாமோ!! ட்ரீட் கூட பாட்லயே போட்டுருவாங்க, பை வேணாம்.
இப்படிக்கு 'அது' ;)))
மகி ஆவியைக்காட்டப்போறார் என்று ஆவலுடன் கிளிக்கினால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
ReplyDeleteஸாதிகா said...
ReplyDeleteமகி ஆவியைக்காட்டப்போறார் என்று ஆவலுடன் கிளிக்கினால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்./////கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
ஸாதிகா அக்கா, சாமம் 12,12 அரைக்கூஊஊஊஊஊஊஉ:)) மெரினா பீச்சுக்குப் பின்பக்கமா:)) வாங்க நான் காட்டுறேன்... ஹையோ ஹையோ:)))))
//ஸாதிகா said...
ReplyDeleteமகி ஆவியைக்காட்டப்போறார் என்று ஆவலுடன் கிளிக்கினால் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..//
ஸாதிகாக்காவ் ...அப்படியே எங்க வீட்டுக்கு ஒரு தடவை வாங்களேன் அறிமுகப்படுத்தி விடுரேன் ஹி...ஹி... :-)))) நைட் 12 மணியா இருந்தா ரொம்ப நல்லது :-)))))))))
////ஹைலைட் பண்ணிப் படிக்கற டெக்னிக் எல்லாம் தெரிஞ்சுக்காம நீங்களும் அப்பாவியா இருந்தா ரெம்ப கஷ்டம்//
ReplyDeleteஇதுல ஏதும் உள்குத்து இருக்கோ...கிர்ர்ரர்ர்ர்ர்... //
”அப்பாவி”ன்னு டைரக்டா குத்திய பிறகு ஹா..ஹா.... ஹய்யோ..ஹய்யோ... :-)))
//என்னதான் டான்ஸ் ஆடினாலும், இட்லி ஓரளவு சுமாரா வருது.//
ReplyDeleteஹை....இந்த பாயிண்ட் பிடிச்சிருக்கே....!! :-))))
முதல்ல பாத்திரம் பேஸ் , ஃபிளாட்டா இருக்கான்னு பாருங்க . அப்படி இல்லாட்டி இண்டக்ஷன் அடுப்பில குதிக்கவே செய்யும் . கேஸ் ஸ்டவில 3 பக்கம் ராடு அதை கெட்டியா பிடிப்பதால் ஆடாது . :-))
ReplyDeleteஸாதிகா அக்கா, சாமம் 12,12 அரைக்கூஊஊஊஊஊஊஉ:)) மெரினா பீச்சுக்குப் பின்பக்கமா:)) வாங்க நான் காட்டுறேன்... ஹையோ ஹையோ:)))))//அதீஸ்,டிருநெல்வேலிக்கே அல்வாவா?ச்சே..கீழக்கரைக்கே தொதலா?என் கிட்டே போய் 12 மணிக்கு மெரீனா பீச்சுக்கு வரச்சொல்லுறீங்களே?ராத்திரி 1 மணிக்கு சுடசுட மெரீனாவில் உக்காந்து ஆவி பறக்க இட்லி சாப்பிடவளாக்கும் அக்கா.
ReplyDeleteஏனுங்க தம்பி ஜெய்லானி உங்க தோஸ்த் மிஸ்டர் ஜின்னை கூப்பிட்டு அறிமுகப்படுத்தப்போறீங்களா?யப்பா...இந்த கேமுக்கு நான் வல்லே.
ReplyDeleteமகி, என்னடா பேய் பிசாசு பத்தி எல்லாம் பேச ஆரம்பிச்சடன்களே-நு பார்த்தேன். அட ஆவிபறக்க மல்லிபூ இட்லி, கார சாரமா மொளகா பஜ்ஜி, காபி, டிப்ஸு னு அசத்திட்டீங்களே!
ReplyDeleteMahi......
ReplyDeleteKalkittille.....
Nanum padathapathu nija aviyooonnu payathutan arambichen...
Athu seri ennathu athu manga shape dappiya? nalla irrukku.
kanan department storea?
Vaa mahi enn blogikku.
Oru award kathukittuirrukku.
vijimma.
நாளைக்கு ஒவ்வொருவருக்கா பதில் கருத்து போட்டுடறேன். கருத்து தெரிவித்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் நன்றி!:)
ReplyDeleteவிஜிம்மா,ரொம்பநாள் கழித்து உங்க கருத்தைப் பார்த்ததில் சந்தோஷம்!:)
ReplyDeleteமாங்கா ஷேப் டப்பா--விபூதி-குங்குமம் போட்டு வைக்கறது.டப்பாவின் உள்ளே 3 அறை இருக்கு. கவனிச்சுப் பார்த்திருக்கீங்க!:) கண்ணன்-ல வாங்கல, க்ராஸ்கட்ல ஒரு பாத்திரக்கடைல வாங்கினேன்.
விருதுக்கு நன்றிம்மா!
~~
மீரா,ஒரு பதிவுல நான் சொல்லும் எல்லா விஷயங்களையும் கரெக்ட்டா கவனிக்கற ஆட்கள்ல நீங்களும் ஒண்ணு!:)
நன்றிங்க!
~~
அர்த்தராத்திரில மெரினால சுடச்சுட இட்லி சாப்ட்ட ஸாதிகாக்காவா /மிஸ்டர் ஜின்னை கூப்பிட்டு அறிமுகப்படுத்தப்போறீங்களா?யப்பா...இந்த கேமுக்கு நான் வல்லே./ இப்பூடி சொல்லறது..நம்ப முடிலயே! ;);)
~~
/பாத்திரம் பேஸ் , ஃபிளாட்டா இருக்கான்னு பாருங்க/ அதைப் பார்த்துத்தானே ஜெய் அண்ணா வாங்கினேன்? கடையில் பார்க்கையில் ஃப்ளாட்டாத்தான் தெரிந்தது.இங்க வந்து டான்ஸ் ஆடுது! :) ஏதோ ஸ்டான்ட் இருக்குன்னு பூஸும் மாமியும் சொல்றாங்க, எங்கே கிடைக்கும்னு தேடிப் பார்த்து வாங்கணும்.
இட்லி மட்டுமில்ல, இடியப்பமும் சுமாராவே வருது இட்லிப் பாத்திரம் டான்ஸ் ஆடினாலும்! :)))
நன்றி ஜெய் அண்ணா!
~~
/மெரினா பீச்சுக்குப் பின்பக்கமா:)) / ஹாஹ்ஹா! அதிரா மெரினாக்கு பின்னால ஆவியா?:)
~~
/Blogger ஸாதிகா said... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்../// :)))) பூஸின் பல்கடி வியாதி அக்காவுக்கும் தொத்திகிச்சு போல! டேக் இட் ஈஸீ ஸாதிகாக்காஆஆஆஆ! ;)
~~
/ஹலோவீனுக்கு இட்லி பாட் ஸ்டீம் விடுறது போல காஸ்ட்யூம்// அட,அட, அட!! என்ன ஒரு ஐடியா?? I am speechless Imma! :)
//கோவைல இருந்து இறக்குமதி செய்தத எல்லாம் காட்டி கடுப்பேத்த நினைச்சுட்டீங்க. // மறுபடியும் I am speechless Imma! :)
~~
/வாவ்.. இட்லி பாத்திரம் அழகா இருக்கு மகி... எங்க கமலா ஸ்டோர்ஆ? இல்ல கண்ணனா? (/ ரெண்டுமே இல்ல புவனா..கடைப்பேர் மறந்துபோச்! ;)
ReplyDelete/ஆவிக்கே ஆவிய பாத்து பயமா...ஆச்சிர்யகுறி...;))/ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இது கோபக்குறி! ... ;)
/இதுல ஏதும் உள்குத்து இருக்கோ../ நாங்க உள்குத்தெல்லாம் வைக்கிறதில்ல, வெட்டு ஒண்ணு,துண்டு மூணு(!)தான் எப்பவுமே!கி கி கி..
/ஜெய்லானி பிரதர்... நெறைய சந்தேகம் கேக்க scope இருக்கு... விடாதீங்க கேளுங்க...:))/ம்ஹும்,என்னா ஒரு வில்லத்தனம்?!உனக்கு இட்லி வரமாட்டேனு சொல்லறதில ஆச்சரியமே இல்லயம்முணி!
:)))))))))
Thanks for the thoughtfull(!) comment Bhuvana! :)
~~
ஆசியாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
~~
/சில கடைகளில் அடுப்புக்கென ஸ்பெஷல் கம்பி விற்குதெல்லோ.. /அதிரா,இது எனக்குத் தெரியாதே..போட்டோ எதாச்சும் இருந்தாக் காட்டுங்களேன்,இங்க கிடைக்குமான்னு பார்க்கிறேன்!
அழகானபாத்திரமா இருந்தா நானும் கண்ணை மூடிட்டுன்னாலும் வாங்கிடுவேன்! ;)
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அதிரா!
காரசாரமான மொளகா பஜ்ஜி வித் ஸ்வீட் சில்லி சாஸ் பார்சல் அனுப்பிட்டேன்!
~~
மேனகா,நீங்களுமா??:))))))
தேங்க்ஸ் மேனகா!
~~
ஆச்சி, இட்டிலி கதையப் படிச்சு ஆஃப் ஆகிட்டீங்களோ..ஆளக் காணம்?
தேங்க்ஸ்! :)
~~
/துணியில் இட்லி ஊற்றுவது நல்லா இருக்கும் தானே../சூப்பர் ஸாஃப்ட்டா இருக்கும் கீதா! குக்கர் இட்லி கொஞ்சம் காய்ந்து போனமாதிரி ஒரு ஃபீலிங்வரும் இந்த இட்லி சாப்ட்டீங்கன்னா! :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா!
~~
லஷ்மிம்மா, அப்ப என்னையும் நினைச்சுகிட்டே இட்லி ஊத்துவீங்கன்னு சொல்லுங்க! ;)
நன்றிம்மா!
~~
சாரு,பாத்திரமெல்லாம் புதுசுல்ல? அதான் பளபளக்குது! ;) நன்றி சாரு!
~~
க்றிஸ்டி, ஆவி இன்னும் எங்கவீட்டிலயேதாங்க குடியிருக்கு. நிரந்தர உறுப்பினர் ஆகிடுச்சு!ஹிஹி!
நன்றிங்க!
wok ring images...
ReplyDeletehttp://www.google.com/search?q=wok+ring+images&hl=en&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=YdKfTqfcGoWaiALux5R3&ved=0CB8QsAQ&biw=1280&bih=681