Tuesday, October 4, 2011

சுண்டக்காய் வத்தக்குழம்பு

கசப்பான குழம்புன்னு டைட்டிலை வைச்சுட்டு இனிப்பு படம் வந்திருக்கேன்னு எல்லாரையும் கொஞ்சம் குழப்பணும்ல? ஒரு சிலர், இது குலோப்:) ஜாமூன் இல்லையோ, சுண்டக்காய்தானோன்னு கூட குழம்புவீங்க,கரெக்ட்டுத்தானே? ;)

என்ன பண்ணறதுngka?..என் லேப்டாப்புக்கு மண்டை குழம்பினதுல இருந்து அது இப்புடித்தான் எடக்கு மடக்கா எதாச்சும் செய்யுது! tamil software install panninaalum, tamilla type pannarathu english-lathaan varuthu. athuvaa ninaichaa tamil-a varuthu! en nilamai eppadi aakiduchunnu paarunga!! இல்லாட்டி என்னைய மாதிரி ஒரு நல்ல பொண்ணு இந்தமாதிரி எல்லாம் எழுதாதுன்னு உங்களுக்கே தெரியும். ஹிஹி!

சில வருஷங்களுக்கு முன்பு வரை எனக்கு இந்த சுண்டைக்காய் வத்தல்-மணத்தக்காளி வத்தல் இப்புடி வத்தலெல்லாம் புடிக்கவே புடிக்காது. பச்சை சுண்டைக்காய்-ல வைக்கிற குழம்புதான் புடிக்கும். எங்கயாவது கல்யாண வீடுகள்ல மத்யானம் விருந்து சாப்பாட்டில வத்தக்குழம்பு இருந்தா சாப்பிடறதோட சரி. வீட்டுல வத்தல் வாங்கற வழக்கமே இல்ல. போன வருஷம் inge பக்கத்தில இருந்த ஒரு தோழி இந்த குழம்பை ஞாபகப் படுத்தினதுல இருந்து நானும் போற வர இண்டியன் ஸ்டோர்ல எல்லாம் வத்தலைத் தேடித் தேடி தேய்ந்ததுதான்(!?) மிச்சம், எங்கயுமே கிடைக்கலை! ஸோ, ஊர்ல இருந்து வரப்ப மசாலா பெட்டில 2-3 பாக்கெட் வத்தலா வாங்கிப் போட்டு, மறக்காம வத்தக்கொழம்பு பொடியும் வாங்கிப் போட்டுட்டு வந்தேன். கொழம்பும் வைச்சு ஒரு புடி புடிச்சாச்சு! சும்மா சொல்லக்கூடாது,குழம்பு சூஊஊஊஊப்பர் டேஸ்ட்டு! :P:P
~~~~

தேவையான பொருட்கள்
சுண்டக்காய் வத்தல்-ஒரு கைப்பிடி
வெங்காயம்-1
தக்காளி-2
புளிக்கரைசல்-1/4கப்
வத்தக்குழம்பு மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை- ஒரு கொத்து
தேங்காய் - 1/4மூடி
உப்பு
நல்லெண்ணெய்

செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும், தக்காளியை நறுக்கி புளிக்கரைசலுடன் சேர்த்து கரைத்து வைக்கவும்.தேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, சுண்டைக்காய் வற்றலை சேர்த்து பொரிக்கவும்.

வற்றல் பொரிந்ததும் வெங்காயம்-கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.

கரைத்து வைத்த புளி-தக்காளி கரைசல், தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்ததும் தேங்காய் விழுது, வத்தக்குழம்பு பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
குழம்பிலிருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கினா
காரசாரமான சுண்டக்காய் வத்தக் குழம்பு ரெடி!

BTW, இந்த ரெசிப்பி வத்தகொழம்பு பாக்கெட் பின்னாடி இருந்தது, அதை அப்புடியே ஃபாலோ பண்ணிருக்கேன், போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் சக்தி மசாலாவுக்கே! ;) ;) ;)


சூடான சாதம்-வத்தக்குழம்பு-பீர்க்கங்காய் பொரியல்-ரசம்! இந்தக் காம்பினேஷன் சூப்பரா இருந்தது, செஞ்சுபாருங்க.
~~~
அப்புறம் இன்னொரு விஷயம் என்னன்னா எங்க கம்ப்யூட்டர்ல புடிச்ச வைரஸ சரி பண்ணியாச்சு, ஆனா ubuntu-ல இன்ஸ்டால் பண்ணிருக்க தமிழ் ஸாஃப்ட்வேர்ல இன்னும் பக்ஸ் (bugs) இருக்குதாம், நேரம் கிடைக்கைல மறுபடி இன்ஸ்டால் பண்ணித் தாறேன்னு எங்கூட்டுக்காரர் சொல்லிருக்கிறாரு, அதுவரைக்கும் என் தமிழ் கொஞ்சம் தடுமாறும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க, ஓக்கை?

oorukku poyittu vanthu வெறும் சிப்ஸும் டீயும் காட்டி ஏமாத்திட்டீங்களேன்னு காதில் புகை விடறவங்க:) உட்பட, எல்லாருக்கும் முதல் படத்தில இருக்க கோவை ஸ்பெஷல் குலாப் ஜாமூன்!! கூல் டவுன் aakirungka, nanri!

33 comments:

  1. நானும் மணத்தக்காளி அஞ்சு ,சுண்டக்க வத்தல் அஞ்சு பாக்கெட் கொண்டு வந்தேன் .அது கூட சுட்ட அப்பளம் செம கோம்பினஷன்.

    ReplyDelete
  2. angel akka,tkz for the quick comment! I'll try appalam combination for the next time!:)

    ReplyDelete
  3. நாந்தான் புது பிரியா .வத்த குழம்பு super

    ReplyDelete
  4. ஐ எனக்கே முதல் குலாப் ஜாமூன் .அதிரா ("na-na na-na na-na")

    ReplyDelete
  5. Vatha kulambu recipe super... sakthi masala recipe follow senja case thaan nanum.... Btw gulab jamun eppo kovai special aachu??? oru kutti sundaikkai laptop-a nokki odi varuthu... bye

    ReplyDelete
  6. /Btw gulab jamun eppo kovai special aachu???/ aachi,kovai-la vaangina ELLAME "kovai special"thaan enakku! :) ;)

    Thanks for the comment Chithra!
    ~~
    puthu priya,vaanga! Thanks for the comment(s)!:)

    ~~
    angel akka,jaakirathai!miyaav-a nonditte irukkeenga, vanthu kadichurap pokuthu! ;)

    ReplyDelete
  7. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))... ஏன் எதுக்கென ஆரும் கேட்கப்புடா கர்ர்ர்ர்ர்ர்ர்:))).

    ReplyDelete
  8. சுண்டங்காய் வத்தல் குழம்பு எனக்கு வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்...வேணும்.. வேணும்... சாப்பிட்டே பல வருஷமாகுது, முன்பு ஊரில் அம்மா பச்சை சுண்டங்காயை பொரித்து இப்படிக் குழம்பு செய்கிறவ.. சூப்பரோ சூப்பர். இங்கு கிடைக்காதாம் அவ்வ்வ்வ்வ்:))).

    ReplyDelete
  9. //angelin said...
    நானும் மணத்தக்காளி அஞ்சு ,சுண்டக்க வத்தல் அஞ்சு பாக்கெட் கொண்டு வந்தேன்//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))).

    எனக்கு நேரம் போயிட்டுது... பின்பு வாறேன்.. முருங்கையில கொஞ்சம் வேலை இருக்கூஊஊஊஊஊஊஊ:)).

    ReplyDelete
  10. /எனக்கு நேரம் போயிட்டுது... பின்பு வாறேன்.. முருங்கையில கொஞ்சம் வேலை இருக்கூஊஊஊஊஊஊஊ:))./ நேரம் போன நேரத்தில முருங்கைல என்ன வேலை? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்! சம் திங் ஃபிஷி!! (இது வே ஏஏ ஏ ஏ ற fishy !)

    ReplyDelete
  11. சுண்டக்கா வத்தகுழம்புன்னுட்டு குலோப்ஜாமுன் படம் போட்டுருக்கே மாத்தி வந்துட்டமான்னு பதிவ படிச்சதுக்கப்பறந்தான் தெரியுது சரியாத்தான் வந்திருக்கோம்... வத்தக்கொழம்பு செய்முறை சூப்பர்...

    ReplyDelete
  12. vathakulambhu romba supera iruku....

    ReplyDelete
  13. wow healthy and delicious kuzhambu,pathale sapitanu pola irruku...

    ReplyDelete
  14. நானும் தலைப்பு ஏதானும் தப்பா சொல்லிட்டீங்களோன்னு பாத்தேன். சுண்டைவத்தக்குழம்பு செய்முறை விளக்கமும் படங்களும் சூப்பர்.

    ReplyDelete
  15. Seeing gulab jamun, siripaa vandhudhu ada ennappa namma mahiyoda oorula ipadiyellam peru maathi aala yemathi vikarangalo-nu nenachen!

    wow! sundaikkai is my favourite mahi. I miss the fresh ones using which my mother used to make Yummy pitali.

    Vatha kuzhambu has its own special place in everyone's heart. Thank you for the toungue tickling recipe

    ReplyDelete
  16. இது குலோப்ஜாமூன் இல்லையோ, சுண்டக்காய்தானோ!!!! ;)

    //கசப்பான குழம்பு// krr

    //அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து இறக்கினா காரசாரமான சுண்டக்காய் வத்தக் குழம்பு ரெடி!// //இந்த ரெசிப்பி வத்தகொழம்பு பாக்கெட் பின்னாடி இருந்தது, அதை அப்புடியே ஃபாலோ பண்ணிருக்கேன்,// பொய்ய்ய்.. நம்பாதீங்க யாரும்ம்ம். ;))

    ReplyDelete
  17. //angelin said...
    ஐ எனக்கே முதல் குலாப் ஜாமூன் .அதிரா ("na-na na-na na-na"//

    karrrrrrrrrrrrrrrrrrrrrr:)) உது கைக்கும்:))))))))) அதால எனக்கு வாணாம்:))).

    ReplyDelete
  18. நல்லா சுண்டக்காய்ச்சின சுண்ட வத்தகுழம்பு ..இப்பத்தான் மதிய சாப்பாடு முடிச்சேன்..இங்க வந்து பாத்தா வத்தக்குழம்பு ...மறுபடியும் பசிக்குதே ....

    ReplyDelete
  19. சுண்டைக்காய் வத்தக்குழம்பு நாக்குல தண்ணி வர வைக்குது மஹி.சூப்பர்.

    ReplyDelete
  20. குழம்பு சூப்பர்..குலோப்ஜாமுன் ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
  21. adding onion and tomato to sundakkai vatha kuzhambhu sounds interesting. nicely made

    ReplyDelete
  22. ஜெயஸ்ரீ,வெங்காயம்-தக்காளி இல்லாம எனக்கு சமைக்கவே தெரியாதுன்னு சொல்லலாம்!;):)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஆசியாக்கா.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ப்ரியா,சீக்கிரம் செய்து சாப்பிடுங்க!:) நன்றி!
    ~~
    ராதாக்கா,மறுபடி சாப்பிடலாம் வாங்க!;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    /உது கைக்கும்:))))))))) அதால எனக்கு வாணாம்:)))/ :) :)
    ~~
    ,// பொய்ய்ய்.. நம்பாதீங்க யாரும்ம்ம். ;))////// இமா,இப்புடி குட்டை உடைச்சிட்டீங்களே!!சர்க்கரை சேர்க்கறது எனக்கு பழகிப்போச்சு! நம்ம பர்ஸனல் டச்-னு வைங்களேன்! :)
    நன்றி இமா!
    ~~
    /அட என்னப்பா நம்ம மகியோட ஊருல இப்படிஎல்லாம் பேரு மாதி ஆள ஏமாத்தி விக்கறாங்களோ-னு நெனச்சேன்/ அடேயப்பா! என்னா ஒரு வில்லத்தனம்!!! கடைக்காரங்களுக்கெல்லாம் ப்ரீயா ஐடியா தராங்களே!! அவ்வ்வ்வ்வ்வ்! நல்லவேளை,மீராக்கா இருக்க பெண்களூர்ல:) நான் இல்லைப்பா சாமி!
    ;))))))))

    ஊர்ல சுண்டைக்கா செடிய பார்க்க மட்டும்தான் சான்ஸ் கிடைச்சது. பறிக்கவெல்லாம் நேரமில்லை!:)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க மீரா!

    ReplyDelete
  23. லஷ்மிம்மா,ஒரு செகண்ட்னாலும் மத்தவங்களை குழப்பறதே ஒரு சின்ன சந்தோஷம்தானே?;) நன்றிம்மா!
    ~~
    ப்ரேமா,சாப்பிடலாம் வாங்க!:)
    நன்றி!
    ~~
    சித்ரா,நன்றிங்க!
    ~`
    ராஜேஷ்,/மாத்தி வந்துட்டமான்னு பதிவ படிச்சதுக்கப்பறந்தான் தெரியுது சரியாத்தான் வந்திருக்கோம்... /:):)
    நன்றிங்க!

    ReplyDelete
  24. /வேணும்.. வேணும்... சாப்பிட்டே பல வருஷமாகுது, முன்பு ஊரில் அம்மா பச்சை சுண்டங்காயை பொரித்து இப்படிக் குழம்பு செய்கிறவ.. சூப்பரோ சூப்பர். இங்கு கிடைக்காதாம் அவ்வ்வ்வ்வ்:)))./அதிரா,பச்சை சுண்டக்கா குழம்பு எனக்கும் ரொம்ப புடிக்கும். வத்தல் கூட கிடைக்காதா உங்களுக்கு? வத்தலை பார்சல்ல அனுப்பட்டுமா? :)

    ReplyDelete
  25. நான் பச்சை சுண்டைக்காயை காய வச்சு அப்படியே எடுத்துட்டு வந்துருவேன். கொஞ்சம் பச்சை சுண்டைக்கய் குழம்பு மாதிரியே இருக்கும். sakthi masala works out very well always.

    ReplyDelete
  26. Aha, super,I love this kuzhambu with pazhaya sadam ;) LOL Supera irukkum believe me :))
    Nice recipe Mahi

    ReplyDelete
  27. MM,Inge Vera thaniya Samaikireenga Madam.Adutha blog pakkame alai Kanomnu thedi Vanthen.Nalla Vathal Kuzhambu.Naakku Uruthu....

    ReplyDelete
  28. /நான் பச்சை சுண்டைக்காயை காய வச்சு அப்படியே எடுத்துட்டு வந்துருவேன்./ம்ம்..நல்ல ஐடியாதான்! எங்க வீட்டில் சுண்டைக்காய் செடி இல்லை.இருந்தா எடுத்துட்டு வந்துடுவேன்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுகந்திக்கா!
    ~~
    ராஜி, பழையசாதம் சாப்பிட்டதெல்லாம் அந்தக்காலம்..இப்பல்லாம் ஃப்ரிட்ஜ் -மைக்ரோவேவ் இருக்கறதால எப்பவுமே(!) சுடுசாதம்தான்!:) ஆனா நீங்க சொல்லறது பார்த்தா ஒருநாள் சாப்பிடலாம்போல ஆசையா இருக்கு!

    தேங்க்ஸ் ராஜி!
    ~~
    க்றிஸ்டி, தேடி வந்ததுக்கு தேங்க்யூ!! உங்க அளவுக்கு ஸ்பீடா போஸ்ட் போட்டதெல்லாம் ப்ளாக் ஆரம்பிச்ச புதுசுல! இப்பல்லாம் வேகம் குறைஞ்சு போச்சுங்க!:)

    ReplyDelete
  29. நான் இன்னைக்கு செய்தேன்.சூப்பரோ சுப்பர்...

    ReplyDelete
  30. உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

    ReplyDelete
  31. அட்டகாசமான அடுப்படிகள்
    http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_21.html
    உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

    ReplyDelete
  32. achooda, nanum than kulambi ponen, ethu adhuda pucha Mahi gulbjamun pooddu sundaikai kolambu vaikapoguthonnu......
    Po Mahi kolappittaiye...
    viji

    ReplyDelete
  33. அனானி,தனபாலன்,ஜலீலாக்கா, விஜிம்மா அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails