Tuesday, October 18, 2011

கைகள்-பயணம்-சாப்பாடு-வணக்கம்!

ஒரு வைகாசி மாதம் 11ஆம் தேதி கோவையின் ஒரு மூலையில் பிறந்த பையனும், அதற்கு சரியாக ஒரு மாதம் கழிச்சு கோவையின் இன்னொரு மூலையில் ஆனி மாதம் 11ஆம் தேதி பிறந்த பெண்ணும், சிலபல வருஷங்கள் கழித்து ஒன்று சேர்ந்திருக்காங்க..அது இந்தக் கைகள்ல தெரியுதா?! ;) :)
~~
இந்தமுறை ஊருக்குப் போனபோது, ப்ளைட்ல பொழுது போகலை என்று சொல்லமுடியாத மாதிரி பலவசதிகள் இருந்தது. [ப்ளைட் படத்தில் காக்பிட் உள்ளே, ப்ளைட் ட்ரைவரின் பளிச்-பளிச் தலை(!?!) கூடத்தெரியும், பாருங்க. ;) ] ஒவ்வொரு சீட்டுக்கும் ஒரு குட்டி என்டர்டெய்ன்மென்ட் கன்ஸோல் (வித் ரிமோட்)இருந்தது. கேம்ஸ், குழந்தைகள் படம், காமெடி படங்கள், டிவி சீரியல்ஸ் இப்படி பலவிஷயங்கள் இருந்தது. ஒரு சில ஹிந்தி-தமிழ் படங்களும் மூவி லிஸ்ட்ல இருந்தது. நல்ல டைம்பாஸ்!!

~~
இந்தக் கடைகள் துருக்கி ( Turkey) ஏர்போர்ட்டில் இருப்பவை. மத்திய கிழக்கு நாட்டு இனிப்புக்கள்,அலங்காரப் பொருட்கள் இந்தக் கடை பூராவும் இருந்தன. ஸ்வீட்ஸ் எல்லாமே ருசிபார்த்து வாங்கும்படி அங்கங்கே சிறு தட்டுகள்ல வைச்சிருந்தாங்க. கைவசம் யூரோ இல்லாததால் நாங்க வாங்கலை! [எனக்கு அந்த இனிப்பெல்லாம் அவ்வளவாப் புடிக்கவும் இல்லை,ஹிஹி]
அதே கடையின் ஒரு புறம் அலங்காரப் பொருட்கள்..இன்னொரு பக்கம் டர்கிஷ் ஐஸ்க்ரீம் கடை..ஏர்போர்ட்டில் ஆங்காங்கே இப்படி கடைகள் வைத்து இதே போல பாரம்பரிய ஆடைகளுடன் இருப்பவர்கள் ஐஸ்க்ரீம் விக்கிறாங்க.

~~

ப்ளைட்டுக்குள்ளே சாப்பாடு...இடதுமூலை ஒரு வெஜிடேரியன் டின்னர், அதற்கும் கீழே ஒருநாளின் லன்ச்.(ஒவ்வொரு முறையும் இந்த பன் வந்தது..சூடான பன்ல பட்டர் & ஜாம் தடவி சாப்பிட சூப்பர்!!:P ) பாலக் பனீர்-ஐ எல்லா ஏர்லைன்ஸும் குத்தகைக்கு எடுத்திருப்பாங்களோ என்னவோ..எந்த முறை போனாலும் இண்டியன்-வெஜிடேரியன் மீல் வந்த நேரங்களில் எல்லாம் தவறாமல் ப்ரெசென்ட் ஆனது இந்த பாலக் பனீர்!கர்ர்ர்ர்ர்ர்! :)

மேலேயுள்ள படங்கள்ல மற்ற மூன்றும் மும்பை ஏர்போர்ட்டில் இருக்கும் ஃபுட் கோர்ட். கே.எஃப்.சி. மற்றும் சில உணவகங்கள் இருந்தாலும், கூட்டம் இருந்ததென்னவோ இட்லி.காம் என்ற ஹோட்டல்லதான்!
எங்க போனாலும் நம்ம ஊர் சாப்பாட்ட அடிச்சுக்க முடியாதில்ல? போட்டோலே இருப்பது மைசூர் மசாலா தோசை, அதிகமில்லை, ரூ.170 மட்டுமே, இட்லி ஒரு ப்ளேட் 90ரூபாய் மட்டுமே! :)
~~
கதையின் ஆரம்பத்தில் சொன்ன பையன் அன்ட் பொண்ணு யாருன்னு பொழிப்புரை--தெளிவுரை எல்லாம் தேவையில்லை, நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க, கரெக்ட் ! ;) மீண்டும் அடுத்து ஒரு (மொக்கை) பதிவில் சந்திப்போம், அதுவரைக்கும் நன்றி, வணக்கம்!

பி.கு.: இப்புடி ஒரு மொக்கை போஸ்ட்டுக்கு டைட்டில் என்ன வைக்கறதுன்னு மண்டைக்குள்ளே பல்ப் எரியாத காரணத்தால், தற்போதைக்கு இப்புடி ஒரு டைட்டில் வைக்கப்படுகிறது. வாசகர்கள் தரும் டைட்டில்கள் வரவேற்கப்படுகின்றன. எல்லாரும் உங்க கற்பனைத்திறனை வாரிக் கொட்டுங்க..சிறந்த தலைப்பை எப்படியாவது(!) தேர்ந்தெடுத்திரலாம், ஓக்கை?

68 comments:

  1. வாங்க வாங்க
    கமெண்ட் போட்டுட்டு போங்க
    வணக்கம் ...entha titile eppdi erukkum..

    ReplyDelete
  2. உலக கைகள் கழுவும் தினம் ???

    ReplyDelete
  3. கைராசி ஜோயசியம் பார்க்கப்படும் ...okva..:)

    ReplyDelete
  4. உங்க படத்தில் உள்ள கைராசி என்ன சொல்லுதுனா ...


    தீர்க்க ரேகைகள் தீர்க்கமான ஆயுசும்,

    அறிவு ரேகை மேலே இருந்து இடது பக்கம் செல்வதால்
    அறிவு அளவுக்கு அதிகமாக (பேபி அதிரவை விட )
    இருக்கும் என்று சொல்கிறது ...

    ReplyDelete
  5. அப்பறம் லட்சுமி ரேகை பிரசன்னமா இருக்கிறதால உங்க வீட்டில பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..
    அப்புறம் அவளோதான்
    மீதி பேபி அதிராம தொடர்வார்கள் (/\)
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  6. மொக்'கைகள்' எப்பூடி... அவ்வ்வ்வ் தலைப்பு ஓகேவா.....

    ReplyDelete
  7. இணைந்த கைகள் - இது எப்புடிங்க... டைட்டில் ஓக்கேவா

    ReplyDelete
  8. எல்லாமே கைராசி.

    ReplyDelete
  9. //உலக கைகள் கழுவும் தினம் ??? //

    இதையே வச்சுடுங்க :-))

    ReplyDelete
  10. மாயா சொன்னது போல இணைந்த கைகள் நல்லா இருக்கு. அந்தப் படத்தில் ராம்கி அங்கிளும், இன்னொரு அங்கிளும் வருவார்களே அது போல சூப்பர் சீனா இருக்கு இந்தப் போட்டோ.
    யூரோ இருந்தா தான் வாங்கலாமா? அப்ப அமெரிக்கன் டாலருக்கு மதிப்பே இல்லையா? ஒபாமா, நோட் திஸ் பாயின்ட்.

    ReplyDelete
  11. :)) எப்படியோ ஒரு பதிவு தேத்தீட்ட!!!

    ReplyDelete
  12. ம்.. கை கொடுங்க.. நான் சிவாவுக்குச் சொன்னேன்:)).

    ReplyDelete
  13. கொஞ்சம் லேட்டா வந்தா ,அதுக்குள்ளே நம்ம டைட்டில மாயாசொல்லிட்டார்
    அதனால் கொஞ்சம் மாத்தி
    "இணைந்த கைகளின் பயணம் " இந்த டைட்டில் ஓகேவா ????

    ReplyDelete
  14. இடது கையில் உள்ள விரல்களில் ஒரு(அந்த ) பச்சை கல் மோதிரம் இருந்தா இன்னும் அம்சமா இருக்கும் .

    ReplyDelete
  15. 1.பயணம் -வந்தனம்!!!!
    2.வாங்க வாங்க
    கமெண்ட் போட்டுட்டு போங்க
    வணக்கம்...
    3.உலக கைகள் கழுவும் தினம் ???.(2 முறை)
    4.கைராசி ஜோயசியம் பார்க்கப்படும்
    5.மொக்'கைகள்' எப்பூடி...
    6.இணைந்த கைகள் (2 முறை)
    7.கை கொடுக்கும் கையா?
    8.எல்லாமே கைராசி.
    9."இணைந்த கைகளின் பயணம் "

    மொத்தம் பதிவான 19 வாக்குகள்ல,டைட்டிலுக்கு 11 வாக்குகள் பதிவாகிருக்கு,அதில ஏற்கனவே சொன்னதையே 2 பேர்(ஆமினா & வானதி) சப்போர்ட் பண்ணிருக்கறதால் 9 தலைப்புகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

    மக்களே, உங்ககிட்ட நான் இன்னும்,இன்னும்,இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எதிர்பார்க்கிறேன்!:) தொடர்ந்து குத்துங்கோ!:)

    ReplyDelete
  16. /இடது கையில் உள்ள விரல்களில் ஒரு(அந்த ) பச்சை கல் மோதிரம் இருந்தா இன்னும் அம்சமா இருக்கும் ./தேவதை அக்கா, கரீக்ட்டாச் சொன்னீங்க. அது சும்மா,வெள்ளைக்கல்லு(!?!) மோதிரம், பச்சைக்கல் இல்லை..பச்சைக்கல் உங்க வீட்டுக்குப் பக்கத்திலேதான் இருக்காம்,எப்புடி வாங்கறதுன்னு தெரில! ;)

    ReplyDelete
  17. 'இணைந்த கைகள்' நல்லாருக்கு, அதுதான் பொருத்தமாவும் இருக்கும்.

    மகியும் திரு.மகியும், எப்பவும் இதே போல...
    ம.கி--னும் எ-யும் போல,
    இ--யும் ச--யும் போல,
    சே-யும் தா--பும் போல
    கா--வும் கை-ளும் போல.... மனமொத்து வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். @}->--

    என்றும் அன்புடன்
    இமா

    ReplyDelete
  18. கை கொடுங்க சிவா. ;))))

    என்னாது!! கைகழுவுற தினமா!! அப்போ இத்தனை காலமும் 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படம் போல 'as usual' தானா!! உங்க கை வேணாம். ;))

    ReplyDelete
  19. இணைந்த கைகள் - 4ம் முறை

    ReplyDelete
  20. இணைந்த கைகள் - 5ம் முறை

    ReplyDelete
  21. இணைந்த கைகள் - 6ம் முறை

    ReplyDelete
  22. சூப்பர் சிங்கருக்கு ஓட்டுப் போடுற மாதிரி குத்திட்டுப் போவோம். ;)

    இணைந்த கைகள் - 7ம் முறை

    ReplyDelete
  23. இணைந்த கைகள் - 8ம் முறை

    ReplyDelete
  24. <(.. பேரன்பு மிக்க 'மகீ'ஸ் ஸ்பேஸ்' பார்வையாளர்களே!!!

    உங்கள் அமோகமான ஆதரவை,

    //இணைந்த கைகள்// தலைப்புக்குத் தருமாறு,

    தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன்.

    பி.கு:- ஆளுக்கொரு மஞ்சள் சாமந்திச்செடி இலவசமாகத் தரப்படும்.
    ப்ளீஸ் copy paste //இணைந்த கைகள் - ம் முறை// & நம்பர் டைப்பிங். ;)))

    ReplyDelete
  25. இணைந்த கைகள் - 9ம் முறை

    ReplyDelete
  26. இணைந்த கைகள் - 10ம் முறை ;))

    ReplyDelete
  27. //மக்களே, உங்ககிட்ட நான் இன்னும்,இன்னும்,இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எதிர்பார்க்கிறேன்!:) தொடர்ந்து குத்துங்கோ!:)//
    - இப்படிக்கு மகி ;)

    ~~~~~~~~~~~~~

    இணைந்த கைகள் - 11ம் முறை (0ல விடக்கூடாது.) ;))

    ReplyDelete
  28. இமா..இமா..இமா...கைவலியோடயே இப்புடி போட்டுத் தாளிக்கிறீங்kaLee?! avvvvvvvvvv!

    ReplyDelete
  29. இணைந்த கரங்களின் குவிந்த இணக்கமும்,உடன் வணக்கமும்.
    குறியுரைப்பேனே அம்மம்மாரே குறியரைப்பேனே கரத்தின் ரேகையைக் கண்ணால் பார்த்துக் குறியுரைப்பேனே.

    ReplyDelete
  30. இணைந்த கரங்களின் குவிந்த இணக்கமும்,உடன் வணக்கமும்.
    குறியுரைப்பேனே அம்மம்மாரே குறியரைப்பேனே கரத்தின் ரேகையைக் கண்ணால் பார்த்துக் குறியுரைப்பேனே.

    ReplyDelete
  31. //அது இந்தக் கைகள்ல தெரியுதா?! ;) :)//

    ஓ.. தெரியுதே... அதுல ஒரு கைய பாக்கும் போது "ஆயுசுக்கும் விடுதலை இல்லை"னு தெரியுது...:) Flightல உக்காந்து கை ரேகை ஜோசியமா? ஹா ஹா ஹா...சூப்பர் மகி...:))



    //எனக்கு அந்த இனிப்பெல்லாம் அவ்வளவாப் புடிக்கவும் இல்லை,//

    என்ன இருந்தாலும் நம்ம ஊர் குச்சி மிட்டாயும் எலந்த வடையும் மாதிரி வருமா சொல்லு..:)



    //ப்ளைட்டுக்குள்ளே சாப்பாடு//

    எனக்கு இது உலக மகா அலர்ஜி... ஒண்ணு பட்டினி கிடப்பேன் இல்லைனா நானே கொண்டு போய்டுவேன்... "Flightக்கும் கட்டு சாதம் கட்டற ஒரே ஆள் நீ தான்"னு ரங்க்ஸ் கமெண்ட் எல்லாம் காதுலே வாங்கறதில்ல...:)



    //கூட்டம் இருந்ததென்னவோ இட்லி.காம் என்ற ஹோட்டல்லதான்!//

    என்னை மாதிரி பாதிக்கப்பட்டவங்க நெறைய பேர் இருக்காங்க போல இருக்கு...நைஸ் டு நோ....:))



    //வாசகர்கள் தரும் டைட்டில்கள் வரவேற்கப்படுகின்றன//

    "ஒரு மொக்கையின் பயணம்"... இல்லைனா "ஒரு கைதியின்(நீ இல்ல) டைரி"... இந்த டாபிக் எப்படி இருக்கு மகி...:)))

    ReplyDelete
  32. ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்......

    பத்துத்தரம் கூவுவதால:))). ஒரு சொல் தலைப்பாகிடாது:))). பூஸோ கொக்கோ:)))... எல்லோரும் ஆமோதித்தால் மட்டுமே தலைப்பு வைக்க அனுமதி தரப்படும்... குச்சி ரொட்டி குருவி முட்டாய் எல்லாம் இங்க செல்லுபடி ஆகாது:)))....

    வாணுமெண்டால் தேம்ஸ்க்கு வாங்க பஞ்சாயத்தைக் கூட்டி... தலைப்பை முடிவு செய்யலாம்:))).

    ReplyDelete
  33. இறைவனிடம் கையேந்துங்கள் - முதல் படம்

    கை ராசி நல்ல ராசி

    வணக்கமுங்க

    ReplyDelete
  34. //கைவலியோடயே // க்ர்ர்ர் ;((( மறக்கணும், மறக்கணும், மறக்கணும்,

    //இப்புடி போட்டுத் தாளிக்கிறீங்kaLee?!// சேமியா ;)

    //"ஆயுசுக்கும் விடுதலை இல்லை"னு தெரியுது...:)/ கிக்! ;))

    //"ஒரு 'கை'தியின் டைரி"// நல்லாருக்கு மகி.

    //ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்...// க்ர்ர்
    பூஸ்... down! down!

    ReplyDelete
  35. //பத்துத்தரம் கூவுவதால// ஹும்!!! எண்ணத் தெரியாதோ!!

    இணைந்த கைகள் - 12ம் முறை

    ReplyDelete
  36. Hi mahi
    This is very interesting n I enjoyed reading all your experience...nalla ezhuthreenga...Padilkka supera erukku...title " inaindha kaikazh" suits well :)
    Thanx for stopping by my space...yes as u said experience alone teaches more things and I know the real taste n worth of my dish but while presenting it to others the appearance is the main thing...so it comes thru our camera ..tats y I appreciated...other than that I never judge recipes thru pic :) once again thank you so much for sharing your thought...glad to follow you for more mokkais :)

    ReplyDelete
  37. சங்கீதா,ரெசிப்பியை பாராட்டுவதும்,போட்டோஸ் பார்த்து "வாவ்" சொல்வதும் எல்லாருமே நேச்சுரலா செய்யறதுதாங்க. நானுமே அப்படித்தான்! :)

    ஆனா இன்னொருவரைப் பாராட்டுவதற்காக நம்ம திறமைகளை குறைச்சு சொல்லிக்கவேணாமேன்னு தோணுச்சு உங்க கமென்ட்டைப் பார்த்தப்ப,அதான் என்னுடைய கருத்தை சொல்லிட்டேன்!:):)

    Anyways happy to see your kind words here! Enjoy the mokkai's! ;) ;)

    ReplyDelete
  38. மோகன்,சிவா,ராஜேஷ்,லக்ஷ்மிம்மா,ஸாதிகாக்கா,அமீனா,வானதி,சுகந்திக்கா,க்றிஸ்டி,அதிரா,ஏஞ்சல் அக்கா,இமா,காமாட்சிம்மா,அப்பாவி,ஆசியாக்கா,சங்கீதா அனைவருக்கும் நன்றி! :)
    ~~
    1.பயணம் -வந்தனம்!!!!
    2.வாங்க வாங்க
    கமெண்ட் போட்டுட்டு போங்க
    வணக்கம்...
    3.உலக கைகள் கழுவும் தினம் ???.(2 முறை)
    4.கைராசி ஜோயசியம் பார்க்கப்படும்
    5.மொக்'கைகள்' எப்பூடி...
    6.இணைந்த கைகள் (13 முறை)
    7.கை கொடுக்கும் கையா?
    8.எல்லாமே கைராசி.
    9."இணைந்த கைகளின் பயணம் "
    10.இணைந்த கரங்களின் குவிந்த இணக்கமும்,உடன் வணக்கமும்.
    11.இறைவனிடம் கையேந்துங்கள் - முதல் படம்
    12.கை ராசி நல்ல ராசி
    13.வணக்கமுங்க
    என்று மொத்தம் பதிமூன்று தலைப்புகள் பதிவாகியுள்ளன. 13 ராசி நம்பர் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு மனசத் தேத்திகிட்டு வாக்கெடுப்பு இன்றுடன் முடிவடைகிறது. நாளை இவற்றில் ஒரு தலைப்பு தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும்! ;)

    நன்றி,வணக்கம்!
    :)))))))))

    ReplyDelete
  39. ////வாக்கெடுப்பு இன்றுடன் முடிவடைகிறது.// ம். not 'இத்துடன்'

    //நாளை இவற்றில் ஒரு தலைப்பு தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படும்!// ம்.

    so.. //13 ராசி நம்பர் இல்லைன்னாலும் பரவாயில்லைன்னு மனசத் தேத்தி//க்க வேணாம். இதோ..
    இணைந்த கைகள் - 14ம் முறை ;)))

    நன்றி,வணக்கம்!

    ReplyDelete
  40. மகி, கமாவுக்குப் பின்னால ஸ்பேஸ் போடணும்; இல்லாட்டி.... டெம்ப்லேட் பாதிக்கும். அ--ன் சொல்லி இருக்காங்க. ;)

    (சாரி... 'அங்க' சொல்ற பழக்கத்துல சொல்லிட்டேன்.) ;)

    ReplyDelete
  41. இந்த இரண்டு கைகளும் பார்த்தா கை
    முதல் படம் நான் துஆ கேட்கும் போது துஆ கேட்பது போல் இருக்கு.

    கடைசி படம் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது கை முசாபா போல் இருக்கு.

    ReplyDelete
  42. நம்பிக்கையா?தெரியல

    பார்த்த்தும் நினைத்தது

    இனைந்த கைகள்
    கை கொடுக்கும் கை

    ReplyDelete
  43. இமா said...
    மகி, கமாவுக்குப் பின்னால ஸ்பேஸ் போடணும்; இல்லாட்டி.... டெம்ப்லேட் பாதிக்கும். அ--ன் சொல்லி இருக்காங்க. ;///

    ஓம்..ஓம்... அந்நாளில் மர்ழியாவுக்கு.... இல்லையா இமா?...

    ஆரால ஆருக்கு எந் சந்தர்ப்பத்தில்.... எல்லாமே கம்பராமாயணத்தைக் கரைச்சுக் குடித்த பெருமையே...:)).

    ReplyDelete
  44. கை கொடுக்கும் கை.. 2ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 3ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 4ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 5ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 6ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 7ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 8ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 9ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 10ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 11ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 12ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 13ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 14ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 15ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 16ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 17ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 18ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 19ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 20ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 21ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 22ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 23ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 24 தரம்..
    கை கொடுக்கும் கை.. 25 தரம்..
    கை கொடுக்கும் கை.. 26 தரம்..
    கை கொடுக்கும் கை.. 27 தரம்..
    கை கொடுக்கும் கை.. 28ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 29ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 30ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 31ம் தரம்..
    கை கொடுக்கும் கை.. 32ம் தரம்..
    .....

    வோட்டை இப்ப்ப எண்ணுங்க பார்ப்போம்... எண்ணிக்கையை வச்சுத் தலைப்புப் போடப்போயினமாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்கிட்டயேவா.... ஹையோ இதென்ன இது ஒரு அப்பாவியைப் பார்த்து இப்பூடி முறைக்கினம்... வாணாம் சொல்லிட்டேன் நான் ரொம்ப நல்ல.....:)))).

    மகி குலுக்கல் முறையில் தெரிவு செய்யுங்கோ...

    ReplyDelete
  45. //ஆரால ஆருக்கு எந்tha சந்தர்ப்பத்தில்..// ;) me அப்ப silent reader. ;)

    //மகி குலுக்கல் முறையில் தெரிவு செய்யுங்கோ...// tc. "laptopஐ ஏன் குலுக்கிப் பழுதாக்குறீங்கள்?' எண்டு Mr.Mahi ஒண்டு தந்தாரெண்டால்.... கொட்டுறதும் அந்த number ஆகத்தான் இருக்கும். இது சதித்திட்டம். பூனையை நம்பாதீர். ;)))

    சீயா மீயா. மீ டேக்கிங் லீவ் யா. தலைப்பைப் போட்டு வைங்கோ. ரகசியமாக வந்து பார்க்கிறன்.

    ReplyDelete
  46. Mahi I enjoyed your writings and your friends comments.
    Keep writing.
    viji

    ReplyDelete
  47. அந்த முதல் போட்டோ இன்னும் கொஞ்சம் பக்கத்துல இருந்திருந்தா சிலபல விஷயங்கள் சரிபாத்து இருப்பேன். பரவாயில்லை விடுங்கோ!! டர்கிஷ் ஐஸ்க்ரீம் சாப்டேளா இல்லையா??

    ReplyDelete
  48. வாக்காளப் பெருமக்களே! உங்க எல்லாரின் ஆதரவுக்கும், விலை மதிப்பில்லாத வாக்குகளுக்கும் மற்றும் எல்லா கமெண்ட்ஸுக்கும்;) ... எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா ஒரு கூடை டாங்க்ஸ்!

    இந்த தேர்தல்ல கொடுத்த வாக்குறுதிய நிறைவேத்தாம விட்டுட்டேன்னு அடுத்த தேர்தலுக்கு ஓட்டுப் போட வராம இருந்துராதீக..அல்லாருக்கும் வெஜிடேரியன் பிரியாணி பொட்டலம் (புரியாணில தங்கம்,வைரம்லாம் போட்டு ச்பெஷலாச் செஞ்சது..ஹிஹி ),ஆளுக்கொரு சாம்சங் செல்போனு இன்னும் பல்வேறு சன்மானங்கள் வழங்கப்படும் என்று அட்வான்ஸ் வாக்குறுதி வழங்கப்படுகிறது. ஆருப்பா அங்கே..ஒரு பன்னீர் ஜோடா ப்ளீஸ்!

    .....உஸ்ஸ்ஸ்...ஷ் ..ஷ்..ஷ்!! அப்பாடி...சத்தமெல்லாம் அடங்கிருச்சு..எல்லாரும் இந்தப் போஸ்ட்டை மறந்து தீபாவளி கொண்டாடப் போயிருப்பாங்க, நைசா இந்த டைட்டில் மேட்டரை அப்பூடியே ;) உட்டுட்டு நாளைக்கு மொத வேலையா தீபாவளி வாழ்த்துப் போட்டுட்டு எஸ்கேப் ஆகிரணும்! ஆள விடுங்க சாமீ! :))))))))))) ;)))))))))))

    ReplyDelete
  49. ஆளை விடறத்துக்கு முன்னே தீபாவளி நல் வாழ்த்துக்களைப் பிடித்துக்கொண்டு உல்லாஸம் பொங்கும் இன்ப தீபாவளின்னு பாடிக் கொண்டே கொண்டடவும். இருவருக்கும்காமாட்சிம்மாவின் ஆசிகள்.

    இனிய தீபாவளி

    ReplyDelete
  50. இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  51. //ஐ அப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்......

    பத்துத்தரம் கூவுவதால:))). ஒரு சொல் தலைப்பாகிடாது:))). பூஸோ கொக்கோ:)))... எல்லோரும் ஆமோதித்தால் மட்டுமே தலைப்பு வைக்க அனுமதி தரப்படும்... குச்சி ரொட்டி குருவி முட்டாய் எல்லாம் இங்க செல்லுபடி ஆகாது:)))....//

    இன்னைக்கி மாமியின் சவுண்ட் ஓவரா கேட்குதே ஏதும் வில்லங்கமா ஹி..ஹி.... :-)))

    ReplyDelete
  52. பயணங்கள் முடிவதில்லை :-))

    ReplyDelete
  53. //கைவசம் யூரோ இல்லாததால் நாங்க வாங்கலை! [எனக்கு அந்த இனிப்பெல்லாம் அவ்வளவாப் புடிக்கவும் இல்லை,ஹிஹி]//

    இதை நான் ஏற்க போவதில்லை.. கடுப்பேத்துகிறார் மைலார்ட் ..!! :-)))


    கைவசம் கிரெடிக்ட் கார்ட் இல்லை என்ற வாதத்தை இந்த கோர்ட் ஏற்றுக்கொள்ளக்கூடாது :-)


    இதை இங்கு வந்த யாருமே சொல்லவில்லை அதுக்காக ....... நோ மோர் கொஸ்டின் பிளீஸ் :-))

    ReplyDelete
  54. ////கைவசம் யூரோ இல்லாததால் நாங்க வாங்கலை! [எனக்கு அந்த இனிப்பெல்லாம் அவ்வளவாப் புடிக்கவும் இல்லை,ஹிஹி]///

    மஹி...இந்த நரிக்கதை எங்க தாத்தா காலத்து பழசு .
    அதுக்காக டர்கிஷ் காஃபி யை மிஸ் பண்ணிட்டீங்களே :-)))

    ReplyDelete
  55. //இட்லி ஒரு ப்ளேட் 90ரூபாய் மட்டுமே! :)//

    ரொம்பவும் சீப்பா தான் தெரியுது :-) 96 ’ல மெட்ராஸ் ஏர்போர்ட் மேலே இருக்கும் ரெஸ்டாரெண்டில ஒரு இட்லி செட் (ரெண்டு இட்லி ஒரு வடை) 100 ரூபாய் .சாம்பார் நல்லா இருந்ததால திரும்ப (50 மிலிதான் இருக்கும் ) கேட்டதுல எக்ஸ்டிரா 25 ரூபாய் வந்தது. டேஸ்ட் சூப்பர் .
    ((ரகசியம் யார்கிட்டேயும் சொல்ல வேனாம் .நான் சாப்பிட்டது 8 இட்லி ))


    அந்த டைமில ஒரு இட்லி செட் வெளியே 5 ரூபாய்க்குதான் கிடைத்தது.

    ReplyDelete
  56. உங்க ராசிக்கு சொந்தங்களின் எதிர்ப்பு ஓவரா இருக்குமே..!! எந்த கைக்குன்னு நான் சொல்லமாட்டேன் :-))

    ReplyDelete
  57. /உங்க ராசிக்கு சொந்தங்களின் எதிர்ப்பு ஓவரா இருக்குமே..!! எந்த கைக்குன்னு நான் சொல்லமாட்டேன் :-)/ இந்த மாதிரி உண்மைகளை எல்லாம் புட்டுப் புட்டு வைக்கக் கூடாது ஜெய் அண்ணா!;);) BTW,எந்தக் கைக்குன்னு நானும் கேக்க மாட்டேனே! ;)

    கிரெடிட் கார்டெல்லாம் கைவசம் இருந்தது..உங்க மாம்ஸு அங்கிருந்த பர்கர் கிங்-ல பர்கர் வாங்கி சாப்ட்டார். எக்சேஞ்ச் ரேட்டுல போட்டுத் தீட்டிருவாங்கன்னு நான் தான் கண்ட்ரோல் பண்ணிட்டேன். ஹிஹி! ;)

    /ரொம்பவும் சீப்பா தான் தெரியுது :-) 96 ’ல மெட்ராஸ் ஏர்போர்ட்/ ஓ,அப்புடியா?? நான் இன்னும் சென்னை ஏர்போர்ட் போனதில்ல..போனமுறை டெல்லிலையுமே காஸ்ட்லியா இருந்த ஞாபகம்! இங்கே விலை பரவால்ல, சாம்பார் நீங்க சொன்ன மாதிரியேதான்..ஸூஊஊ ப்பரா இருந்தது! :P :P


    / டர்கிஷ் காஃபி யை மிஸ் பண்ணிட்டீங்களே :-))//ஹா...நான் ஐஸ்க்ரீம் கடையத்தான பாத்தேன்..காபிக்கடைய பாத்திருந்தா மிஸ் பண்ணிருக்க மாட்டேனே..கொஞ்சம் லேட்டா தெரியவந்திருக்கு..ஓகே..அடுத்த முறை அந்த வழியா போனா காபியை டேஸ்ட் பண்ணலைன்னாலும் படமாவது புடிச்சிட்டு வந்திடறேன்!
    ~~
    @thakkudu : நேக்கு ஐஸ் க்ரீம்லாம் புடிக்காது தக்குடு..போட்டோ எடுத்ததோட சரி! ;) / முதல் போட்டோ இன்னும் கொஞ்சம் பக்கத்துல இருந்திருந்தா/ ஏன்..சோடா புட்டி கண்ணாடிய மறந்துட்டு வந்திட்டியா? ரெண்டு கை(ரேகை)யும் தெளிவாத்தானே தெரியுது..ஜெய் அண்ணா மாதிரி நீயும் குத்து மதிப்பா ஏதானும் எடுத்து விடவேண்டியதுதானே தக்குடு? ;)
    ~~
    காமாட்சிம்மா,ஏஞ்சல் அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  58. //எக்சேஞ்ச் ரேட்டுல போட்டுத் தீட்டிருவாங்கன்னு நான் தான் கண்ட்ரோல் பண்ணிட்டேன். ஹிஹி! ;) //

    சரிதான் ...கொழும்பு ஏர் போர்டில ஒரு காஃபி விலை 10 டாலராம் .. கேட்டதும் மயக்கம் வராத குறைதான்..!!

    துபாய் ஏர் போர்டில ஒரு தடவை வாங்க வேண்டிய கட்டாயம் (ரம்ஜான் டைம் ) ஒரு சிக்கன் பர்கர் + vit c டிரிங்க் 75 dhs ஹா..ஹா.. :-))

    இது ரெடி கேஷ் மட்டுமே ..கார்டா இருந்தா எக்ஸ்டிரா 3% ..அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  59. Hai Mahes,

    Your blog is superb... Receipies are colourful (don't know about the taste...May be Mr. Arun only knows....)
    Parotta preparation eppadinu oru receipy thanga....

    ReplyDelete
  60. Haiiiiii....

    Super receipies ya....

    ReplyDelete
  61. Sharayu, thanks for stopping by and the lovely comment. :)

    I've given the parotta recipe..http://mahikitchen.blogspot.com/2010/03/blog-post_24.html

    Thanks again!
    ~

    Dev,Thanks for stopping by! :)

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails