Tuesday, November 15, 2011

ரஸ்க்

தேவையான பொருள்: ஸ்வீட் பன்

செய்முறை
அவன்-ஐ 275F ப்ரீஹீட் செய்யவும்.

பன்களை நீளமான துண்டுகளாக நறுக்கவும்.

நறுக்கிய பன்துண்டுகளை பேக்கிங் ட்ரேயில் அடுக்கவும்.

பேக்கிங் ட்ரேயை அவன்-ல் வைத்து 60-70 நிமிஷங்கள் பேக் செய்யவும்.

மொறுமொறுன்னு வாயில் போட்டதும் கரையும் டேஸ்ட்டி ரஸ்க் ரெடி!

சூடான டீ & ரஸ்க்!
என்ஜாய்!
:)))
~~***~~ ~~***~~ ~~***~~
இப்ப உங்களுக்கு ஒரு சந்தேகம் வரணும், இவ்ளோ சூப்பரா இருக்கற பன்னை அப்புடியே சாப்பிடாம எதுக்கு ரஸ்க் பண்ணனும்?-அப்படின்னு!! :)

போனவாரம் இந்த பன்களை கடையில் இருந்து என்னவர் வாங்கிட்டு வந்தார், பொதுவா இது வாங்கினா டீ-காபி கூட அப்புடியே சாப்பிடறதுதான் வழக்கம். சும்மா சாப்பிடவே சூப்பரா இருக்கும். இந்த வாட்டியும் அழகா இருந்தது. ஆர்வமா பேக்கட்டை பிரிச்சு ஒரு பன்னை எடுத்தா...

பன் மேலே நல்லா இருக்கு, உள்ள சரியா bake ஆகவே இல்ல!! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! ரெண்டு ஆப்ஷன் இருக்கு, ஒண்ணு திருப்பியும் கடையில கொண்டுபோய் ரிடர்ன் பண்ணலாம், அல்லது அதையே சரி பண்ணி edible-ஆ மாத்தலாம். இதிலே முதல் ஆப்ஷன் ப்ராக்டிகலி கொஞ்சம் கஷ்டம்!

பொதுவாவே எந்தப்பொருளையும் ரிடர்ன் பண்ணுவது என்னவருக்கு ஆகாத விஷயம், அதிலும் இந்தமாதிரி perishable ஐட்டங்களை எல்லாம் திருப்பி கொண்டுபோய் ரிடர்ன் பண்ணுவது அவ்வளவா நல்லாவும் இருக்காது, அதனால் இப்படி ஸ்லோ bake செய்து ரஸ்க்கா மாத்தியாச்சு. :)

பன்னும் வேஸ்ட் ஆகலை, நம்ம ஹெல்த்தும் ஸ்பாயில் ஆகல! கரெக்ட்டுதானே..நீங்க என்ன சொல்றீங்க?!

பி.கு. கடை..கடைன்னு பொதுவா சொன்னா எப்புடி? அது எந்த கடைன்னு கேக்கறீங்களா...US மக்கள் கண்டுபிடிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன். guess பண்ணுங்க, இல்லன்னா நாளைக்கு சொல்றேன்!

19 comments:

  1. ரிஸ்கில்லாம ரஸ்க் இப்படி தான் செய்யோணும்.கொஞ்சம் சிவந்த மாதிரி இருக்கு.

    ReplyDelete
  2. ரிஸ்க் இல்லாம ரஸ்க்!! ஹா..ஹா!! ஆமாம் ஆசியாக்கா!:))))

    சிவந்தமாதிரி இருக்கா?? அது நேத்து ஈவினிங் செய்தேனா, கலர் மாறினது தெரியல.பகலில் செய்திருந்தா கரெக்ட்டா எடுத்திருப்பேன்.ஹிஹி!

    நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  3. மகி ரிஸ்க் இல்லாமல் ரஸ்க் செய்து காட்டிவிட்டீர்கள்.ரிஸ்க் இல்லாமல் இந்த ரஸ்கை சாப்பைடலாமா?சும்மா பகிடிக்கு.

    ReplyDelete
  4. உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
    http://asiyaomar.blogspot.com/2011/11/blog-post_16.html

    ReplyDelete
  5. Wow home made rusks are the best,very nice...

    ReplyDelete
  6. ரஸ்க் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.ரொம்ப சுலபமாகவே செஞ்சுட்டே. தொட்டது துலங்கறதுந்னு ஒரு பழமொழி. அது ஸரியாயிருக்கு.
    உன்னுடைய டாய்ஸெல்லாம் ரொம்ப வம்படிக்கிரது என்று எழுதினேன். போஸ்ட்டே போகமாட்டேன்னு சொல்லிவிட்டது.
    நல்ல வேளை. அதுகளின் கோபத்திலிருந்து தப்பிச்சுட்டேன்.

    ReplyDelete
  7. அடடா இப்பூடியா ரக்ஸ் செய்வது அவ்வ்வ்வ்வ்வ்:)).

    சின்ன வயதில் காய்ச்சல் வந்தால் ரக்ஸ்சும், பிளேன் ரீயும் தான் கொஞ்சம் இதமாக இருக்கும்... அந்த நினைவு வந்திட்டுது..

    ReplyDelete
  8. கடை ALDI OR வால் மார்ட்

    ReplyDelete
  9. மகி அந்த ரஸ்க்கை தக்காளி சட்னி அல்லது காரக்குழம்பு உடன் தொட்டு சாப்பிட்டு பாருங்களேன் டேஸ்டா இருக்கும்

    ReplyDelete
  10. இருவர் கூட்டணி ஒண்ணா வந்திருக்காங்க!வாங்க அதிரா & அஞ்சு அக்கா!:))))))

    /அடடா இப்பூடியா ரக்ஸ் செய்வது அவ்வ்வ்வ்வ்வ்:))./அதிரா,இப்பூடியும்:) ரக்ஸ்:):) செய்யலாம்!

    /காய்ச்சல் வந்தால்/அவ்வ்வ்வ்! இனிமே ஈவினிங் டீ குடிக்கையிலெல்லாம் காய்ச்சல் வந்தாமாதிரியே இருக்குமே! ;) நல்லவேளை ரஸ்க் 60% காலியாயிட்டுது!

    அஞ்சு அக்கா,நீங்க சொன்ன 2 கடையுமே இல்ல, 3வது கமென்ட்டைப் பாருங்கோ!:)

    ரஸ்க்குக்கு புது காம்பினேஷன் சொல்லிருக்கீங்க,ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்!
    ~~
    காமாட்சிம்மா, டாய்ஸ்கிட்ட இருந்து தப்பிச்சுட்டீங்க! அந்த Ted இருக்கானே,இன்னும் கோவம் குறையாமத்தான் இருக்கான்! ;)
    நன்றிமா!
    ~~
    சினேகிதி,நன்றிங்க!
    ~~
    ப்ரேமா,ஆமாங்க,கடைகள்ல வாங்கற ரஸ்க்கை விட இது ப்ரெஷ் அன்ட் டேஸ்ட்டி!
    தேங்க்ஸ்ங்க!
    ~~
    ஆசியாக்கா,டாங்கீஸ்! தொடர்கிறேன்.:)
    ~~
    ஸாதிகாக்கா, ரிஸ்க்கெல்லாம் கிடையாது.காபி-ரஸ்க், டீ-ரஸ்க், மில்க்-ரஸ்க், இப்படி பலவேறு காம்பினேஷன்ல ரஸ்க்ல முக்கால்வாசி காலி இங்கே,நீங்களும் தைரியமாச் சாப்பிடலாம்! ;)
    நன்றி!
    ~~
    ப்ரியா, ரஸ்க் எப்புடி இருக்குதுன்னு ஒரு வார்த்தை கூட சொல்லலியே? ;)
    ~~

    ReplyDelete
  11. மகி நான் கமெண்ட் எழுதும்போது மணி 12 க்கு மேல அத்தான் ஒனும் சொல்லாம போய்டேன் ரஸ்க் ரொம்ப சூப்பர் பா!!!!!!

    ReplyDelete
  12. அருமை நல்லா இருக்கு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  13. Bun turned into rusk ah....Neenga oru killadi

    ReplyDelete
  14. ரஸ்கை இப்படியும் செய்யலாமா மகி! ரொம்பவும் அசத்தலான ஐடியா! பார்க்கவும் கரகரப்பாக, அழகாக இருக்கிறது!!

    ReplyDelete
  15. Oh bun use panni rusk panlama? WOnderful I love rusk,will try that!

    ReplyDelete
  16. mahi edhaiyum waste seyyuradhe illai neenga...superb nalla innovative mind...ore poraamaiyaa irukku ponga.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails