Tuesday, April 2, 2013

அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை

...இவற்றை சுலபமாக நறுக்குவது எப்படி என்று இன்றைய பதிவில் பார்க்கலாம். :)

ஊரில் அன்னாசியை முழுதாக வாங்கிவந்து வீட்டில் நறுக்குவது ரொம்பவே சிரமம். ஏனென்றால் அப்போது எங்க சமையலறைகளில் கத்தி புழக்கத்தில் வரவில்லை. அரிவாள்மனைதான் உண்டு. கத்தியால் காய் நறுக்குவோர் எல்லாம் அல்ட்ரா மாடர்ன் யுவதிகள் என்ற மாயை இருந்தது அப்போது! ;) வீட்டில் எங்காவதோர் மூலையில் ஒரு மொண்ணை கத்தி கிடக்கும், அந்தக் கத்தியால் பைனாப்பிளை நறுக்குவது என்பது மலையைக் குடைந்து எலி பிடிப்பது போல! :) ;)  அத்தனை பிரச்சனைகள் இல்லாமல் சுலபமாக ருசிக்க தள்ளுவண்டிகளில் அன்னாசிப் பழம் விற்பார்கள். பழத்தை நறுக்கி, துண்டுகளாக்கி, உப்பு-மிளகாய்ப்பொடி கலவையைத் தூவி தருவார்கள், முழுப்பழமுமே வேணும் என்றாலும் வண்டிக்காரரே தோல் சீவித் தந்துவிடுவார்.

அதுவும் இல்லாமல் பயணங்களில் ரயில்வே க்ராஸிங்-ல்  பேருந்து மாட்டும்போதும் வெள்ளரி-அன்னாசி இவை உப்பு-மொளகாப்பொடி அவதாரத்துடன் சுறுசுறுப்பாக விற்பனை நடக்கும். புகைவண்டிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. [இந்நேரம் உங்களுக்கு "வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா..என்னப் பாக்காமப் போறாளே சந்திரிகா"--காதல்கோட்டை படப்பாடல் நினைவு வரணுமே, வந்துச்சா? :)))]

கடந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பெங்களூர் சென்றுவிட்டு கோவை  திரும்புகையில் ட்ரெய்ன் தமிழகத்தை தொட்ட இடத்தில் இருந்து இப்படி பைனாப்பிள் துண்டுகள் கிடைத்தன. ஆனா  துரதிர்ஷ்டவசமாக என் மூக்கு நான்ஸ்டாப்பாக ஓவர்டைம் வொர்க் செய்து அருவியாக கொட்டிக்கொண்டிருந்ததால் என்னால் இவற்றை ருசிக்க முடியவில்லை. வழக்கம் போல சொல்லவந்ததை விட்டுப்புட்டு ஊர் சுத்தறேன் பாருங்க. ஹிஹ்ஹி!:) சரி, பேக் டு த ட்ராக்!

பைனாப்பிள்/அன்னாசி பழம் நறுக்குவது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலருக்கு ஒவ்வாமை கூட வந்துவிடுமாம், இந்தத் தகவலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவ்வப்போது எடுத்துவைக்கும் படங்கள் கைகொடுக்க ஒரு பதிவும் உதயமாகிவிட்டது. :)

ஒருமுறை பைனாப்பிள் வாங்கிவந்தேன். நறுக்கலாம் என்று எடுத்தபோது அதன் தலைப்பகுதியில் தொங்கிட்டு இருந்த tag-ல் பழம் நறுக்குவது எப்படி? என டெமோ குடுத்திருந்தாங்க. ரொம்ப சுலபமா நறுக்கிரலாம் இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ  செய்தால்!
1.பழத்தின் தலையில் இருக்கும் தோகையை  நறுக்கிருங்க.
2. பழத்தை (தோலுடனே) இரண்டாக நறுக்குங்க.
3. பாதிப் பழத்தை நீளவாட்டில் துண்டுகள் போடுங்க.
4. இப்போ ஒவ்வொரு துண்டையும்  செங்குத்தா நிறுத்தி, பழத்தில்  நடுவில் இருக்கும் தண்டுப் பகுதியை நறுக்கிப் போட்டுருங்க.
5. பழத்துண்டை இடது கையில் வைத்துக்கொண்டு பழத்தின் சதைப்பகுதியை மட்டும் கத்தியால் நறுக்கி எடுங்க.
தட்ஸ் இட்..கையக் கடிக்காம பைனாப்பிள் நறுக்கிட்டோம். :)

சரி..பைனாப்பிள் எப்படி நறுக்க - என்று பார்த்தாச்சு, ஆனா வாங்கும் பழம் பழுத்திருக்கா, வாங்கிய உடனே நறுக்கி சாப்பிடலாமா அல்லது ஒரு சிலநாட்கள் பழுக்க வைக்கணுமா?  இவற்றை கண்டுபுடிக்க ஒரு ஈஸி ட்ரிக்..பைனாப்பிள் மேலே இருக்கும் தோகைப் பகுதியில் நடுவில் இருக்கும் ஒரு இலையைப் பிடித்து இழுங்க. (கடைக்காரன் பாத்துராம, பத்திரமா இழுக்கோணும், ரைட்?!;) ) ஈஸியா அந்த இலை கையோடு வந்தால் பழம் பழுத்திருக்கு, உடனே நறுக்கிச் சாப்புடலாம்!  அப்படி வராம அடம் புடிச்சா, பைனாப்பிள் இன்னும் பழுக்கலை. ஈஸின்ட் இட் சிம்பிள்?!!
~~~~~~~~~
ஆரஞ்சு
ஆரஞ்சை  தோலுரித்துச் சாப்பிடுவதை விட ஈஸி டெக்னிக் இது..இங்கே டிவி விளம்பரங்களில் பார்த்து இப்படி நறுக்க கற்றுகொண்டேன். :)
வட்டமாக நறுக்கிய ஆரஞ்ச் வில்லைகளின் ஒரு ஓரத்தில் கட் செய்துவிட்டு...
அழகாப் பிரிச்சா..டடா! ஆரஞ்சுப்பழம் சுவைக்கத் தயார்!
~~~
மாதுளை
 மாதுளையின் மீது கத்தியால் ஒரு கூட்டல் குறி கீறுங்க..அதை  அப்படியே பிடிச்சு இழுத்தா..
 பழம் நான்காகப் பிளந்துவிடும். அப்புறம் என்ன? மாதுளை முத்துக்களைப் பிரித்து எடுத்து..
ஸ்பூன் போட்டு சுவைக்கவேண்டியதுதான்!
~~~
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்தால் மகிழ்ச்சி! :)

26 comments:

  1. முதல்ல நான் வந்தேன்..பார்த்தேன்..சுவைத்தேன்..வெயிலுக்கு இதமான மிகவும் பிடித்த ஆரஞ்ச் ,அன்னாசி பழத்தை..:)எனக்கு ரொம்பவே உபயோகம் மகி. ஏன்னா அன்னாசி பழம் வாங்கி கட் பண்ணறப்ப எல்லாம் பாதி ஜுஸ் தட்டிலேயே ஓடி போயிரும்..:) இதனாலேயே இந்த பழத்த வாங்க யோசிப்பேன். இந்த வெயிலுக்கு சூப்பர் டிப்ஸ் கொடுத்ததுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அருமையான பதிவு மகி.... நீங்க மாதுளை சொல்லி இருப்பது போல தான், நாங்க ஆரஞ்சு, சாத்துக்குடி,மாதுளை தோல் உரிப்போம்....

    அன்னாசி பழம் சிங்கப்பூர் கடைல கட் பண்ணுவது பார்த்து கத்துகிட்டேன்... மேல, கீழ கட் பண்ணிட்டு, நேரா பழத்தை நிக்க வச்சு, சுத்தி சொரசொரப்பான பகுதி கட் பண்ணுவாங்க..

    நீங்க சொல்லி இருப்பதும் ஈஸியா இருக்கு....

    ReplyDelete
  3. ஊரில் கல்யாணத்தில் சீர் வந்தால்

    அங்கு பலாபழ, தர்பூசணீ , அன்னாச்சி எல்லாம் கட் பண்ணுவது என் வேலை.கொஞ்சம் சிரமம் தான் ஆனால் ஜாலியாக இருக்கும்
    ஆனால் இங்கு எல்லாமே ஈசியாக் எல்லாம் நேர்த்தியாக கட் செய்து ரெடி யா பேக் செய்து விற்கிறார்கள்

    எப்ப்பவுமே கட் பண்ணியுள்ள பழங்களை பார்த்தால் அழகுதான்..
    நெட் கணெக்‌ஷன் சரியில்லாததால் பிளாக்கர் ஒப்பன் செய்வது சிரமம் அதான் எந்த பதிவுகளுக்கும் வரமுடியவில்லை, இது ஒன்று ஓப்பன் ஆச்சு இதில் கமெண்ட் போட்டுட்டேன்/.//

    ReplyDelete
  4. பயனுள்ள பழமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அருமையான பதிவு மகி....
    மகி மிகவும் பயனுள்ள பதிவு...
    மிக மிக நன்றி தோழி உங்களுடைய செய்திக்கு. அதாவது எனக்கு நீங்கள் சொன்னபிறகு தான் அதை ( பிழையை) பார்த்து சரிசெய்தேன் . மீண்டும் நன்றி மகி.

    ரொட்டிக்கு சட்னி, சாம்பார் அல்லது வெறுமன ( தேங்காய் சுவையால் ) சாப்பிடவும் நல்ல இருக்கும்.

    ReplyDelete
  6. அழகான சுவையான பகிர்வு...

    அதுவும் இந்த வெயிலுக்கு சாப்பிட்டால்.... அற்புதம்...!

    ReplyDelete
  7. பைனாப்பிள் மேலே இருக்கும் தோகைப் பகுதியில் நடுவில் இருக்கும் ஒரு இலையைப் பிடித்து இழுங்க. / இப்படி செய்யலாம்னு போனேங்க... ஏற்கனவே 5,6 வந்துட்டு போயிட்டதால தோகையில இலையே இல்ல..இப்ப என்ன பண்றது?? :)

    மாதுளையைப் பாதியா நறுக்கிட்டு ஒரு குழிக்கரண்டியால் மேல்பகுதியில் தட்டினால் முத்து அனைத்தும் கீழ விழுந்துடும்.... ஜலீலாக்கா ப்ளாகில் சொல்லியிருக்காங்க...

    பழங்கள் நறுக்கும் டிப்ஸிற்கு நன்றி மஹி.

    ReplyDelete
  8. avvv!! சூப்பர் மகி. ;)
    //சிலருக்கு ஒவ்வாமை கூட வந்துவிடுமாம், இந்தத் தகவலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. // எங்க!! சொன்னா நாங்களும் படிப்பம்ல! ;)

    ReplyDelete
  9. Interesting techniques Mahi.

    I used to peel them like the shop vendor in india do.

    For pomegranate if you immerse the cut pieces and remove the pearls inside the water itself it will make your job easy.

    Mira’s Talent Gallery

    ReplyDelete
  10. Romba useful aana post Mahi... Thanks for this...
    http://recipe-excavator.blogspot.com

    ReplyDelete
  11. அட இத்தனை டெக்னிக்கா பழம் நறுக்குறதுக்கு...:)
    ஆனாலும் உங்க டெக்னிக் அன்னாசிப்பழத்துக்கும் ஆரஞ்சுப்பழத்துக்கும் ரொம்ப உதவிதான்.
    மாதுளம்பழம் இப்படிதான எங்கவீட்டில் நாங்களும் பிரிப்போம்.

    அன்னாசிப்பழம் பழுத்ததுதானான்னு பார்க்கிறது தமாஷா எழுதியிருந்தாலும் மிக மிக நல்ல உதவிக்குறிப்பு. மிக்க நன்றி மகி.
    நல்ல பழம்பதிவு...:)

    ReplyDelete
  12. ஆஹா சூப்பர்ர் மகி,ஆரஞ்சு+அன்னாச்சி பழங்களை நறுக்க ஈசியா சொல்லிக்குடுத்துட்டீங்க..மாதுளையை இப்படித்தான் நானும் நறுக்குவேன்..

    ReplyDelete
  13. இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்தால் மகிழ்ச்சி! :)//உண்மையில் மிகவும் உபயோகமான பகிர்வு மகி.

    ReplyDelete
  14. மகி,

    நல்ல உபயோகமான பதிவு. அன்னாசிப்பழம் கொஞ்சம் சண்டை போடும் என்னுடன். அதை வழிக்கு கொண்டு வரும் வித்தை சொல்லிக் கொடுத்து விட்டீர்கள்.
    நன்றி மகி.

    ReplyDelete
  15. உபயோகமான பகிர்வுக்கு நன்றி மகி.

    ReplyDelete
  16. ஆரஞ்சு வந்துடுச்சா!வெயில் காலத்துக்கு ஏற்ற பதிவு.பைனாப்பிளை வட்டவட்டமா நறுக்கிடுவேன். மாதுளையை நீங்க காட்டியுள்ள மாதிரிதான்.

    "சொல்லவந்ததை விட்டுப்புட்டு ஊர் சுத்தறேன் பாருங்க"____ஊர் சுத்தியதும் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  17. நல்ல,மிக உபயோகமான பதிவு மகி.அன்னாசி வாங்கினால் வெட்டுவது அவங்க வேலை. அந்த கன்டிஷனோடுதான் வாங்குவது.பழுத்ததா என்று பார்ப்பது" நல்லதொரு தகவல். மாதுளை இப்படியேதான் நானும் செய்வது.
    ஆரஞ்சு நல்ல டெக்னிக். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  18. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... நீ கத்தி கம்பெனி எதுலயாச்சும் ஏஜென்ட்டா சேந்து இருக்கியா என்ன? ஏன் கேக்கறேனா போன பதிவு "கட்டிங் ட்ரிம்மிங்"... இந்த பதிவு "பழம் கட் செய்வது எப்படி?"...:) But, nice useful tips (tricks)

    ReplyDelete
  19. நடுவில் இருக்கும் ஒரு இலையைப் பிடித்து இழுங்க. (கடைக்காரன் பாத்துராம, பத்திரமா இழுக்கோணும், ரைட்?!///இப்படி டெக்னிக் இருக்கா!!!!???? கடைகாரர் பார்த்தாலும் கலங்காத பரம்பரை. இனிமே அசத்திடுவோம்.

    ReplyDelete
  20. இந்த அன்னாசிப்பழம் நறுக்க நல்ல வழி. கடைக்காரனையே நறுக்கித் தரச்சொல்லிதான் வாங்குவது வழக்கம். நாமே முயற்சிக்கலாம். எப்படி இப்படி ?யோசனையெல்லாம் வரது_. நானும் யோசித்து பார்க்கிறேன். ஒண்ணும் தெரியலே. உபயோகமனேகம்.

    ReplyDelete
  21. Dear friends, I would looooove to reply your comments ASAP, but unfortunately am not in a position to type tamil. I am immensely pleased and happy with all your responses. :)
    My hand is not stopping to reply a handful of people, so I will reply them now.
    @Banu, thokai illaatha pineapple vikara kadaikkellaam neenga ethukkuppaa poreenga? Nalla kadai yaa paathu ponga, sariyaa? :) ;)
    Appuram, maathulai-ya karandila thattara trick padichirukken, but won't it spill around? I never tried it though!
    ~~
    @Imma, I don't know why, unga comment paathathum enakku "Intha poonaiyum paal kudikkumaa?" enra pazhamozhi ninaivu varuthu!! Hahaahaaa!! ;))))
    ~~
    @Mira, the taste of pomegranate may get spoiled if we immerse it in water, isn't it? Or am I wrong? I usually never wash any veggie/fruit after cutting them. avvvvv!
    ~~
    @Appavi, thanks for finding a point I have never ever imagined Ammani! :) I can think of joining as an agent in kathi company..hahaha!
    BTW, Unra brain overtime work pannuthu-nu ninaikkiren, seekiramaa blog-a update pannu. ;) ;) :)
    ~~
    @Vanathy, correct-a sonneenga! Kalangaama pineapple select panni vaangiruvom. I appreciate your brave heart. :)
    ~~

    Okay...lemme stop my tangilish now. Will try to come in tamil soon. Till then, thanks again to all the friends who have added comments for the post. :)

    ~~

    ReplyDelete
  22. New way to cut pineapple, nice useful post..

    ReplyDelete
  23. mahi, aaranju pazham vilakkam romba sooper. Enaku ippadi thoninadhaey illa. Good!
    (tamil typing is not working :()

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails