Friday, April 19, 2013

பட்டாணி குருமா


தேவையான பொருட்கள் 
அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் -5
மிளகு-5
ஊறவைத்த பாதாம்-5
மல்லித்தூள்-11/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்(காரத்துக்கேற்ப)
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-1
சோம்பு-1/2டீஸ்பூன்
பிரியாணி இலை-1

குருமாவுக்கு
வெங்காயம்-1
தக்காளி-1
மஞ்சள் பட்டாணி/Dried Yellow Peas-1/4கப்
உப்பு
எண்ணெய் 
சீரகம்-1/2டீஸ்பூன்

செய்முறை
பட்டாணியை அலசி முதல்நாளிரவே (அல்லது 8 மணி நேரம்) ஊறவைக்கவும். தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து குழையாமல் வேகவைத்தெடுக்கவும்.
பாதாமை அரை மணி ஊறவைத்து தோலுரிக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். 
11/2கப் தண்ணீர் விட்டு, கொஞ்சமாக உப்பு சேர்த்து (பட்டாணியிலும் உப்பு இருக்கிறது, கவனம்!) நன்கு கொதிக்கவிடவும்.
மசாலா வாடை அடங்கி கொதிக்கத் துவங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்க்கவும், உப்பைச் சரிபார்த்து, தண்ணீர் அளவையும் சரிபார்த்துக்கொள்ளவும். 
குறைந்த தீயில் ஏழெட்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு, எண்ணெய் குருமாவின் மேலே மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான பட்டாணி குருமா ரெடி. சப்பாத்தி-பரோட்டா-பூரிக்கு பொருத்தமான குருமா இது. வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
பட்டாணி குழையாமல் வேகவைக்க டிப்ஸ் : பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பட்டாணி வேகத் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஹைஹீட்டில் சூடாக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் பட்டாணியைச் சேர்த்து குக்கரை மூடவும். நீராவி வேகமாக வெளியேற ஆரம்பிக்கையில் குக்கர் விசிலை போட்டு, அடுப்பை மீடியம் சூட்டுக்கு குறைக்கவும். கரெக்ட்டாக ஒரு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்தால் பதமாக வெந்த குழையாத பட்டாணி  தயார். :) 

20 comments:

  1. எட்டு மணி நேரம் ஊற வைத்து பட்டாணி தோல் பிரியாமல் குருமா அருமையா செய்திருக்கீங்க... எனக்கு குக்கரில் இரண்டு விசில் வைத்தாலும் தோல் தனியாக கழன்று விடும். அருமையா செய்திருக்கீங்க மஹி.

    ReplyDelete
  2. பட்டாணி இப்படியெல்லாம் சமைத்து சாப்பிட்டதே இல்லை.

    ReplyDelete
  3. அருமையானா குருமா மகிமா...:)
    செய்து பார்க்கிறேன். பார்க்கவே ஆசையாக இருக்கிறது.
    பகிர்விற்கு நன்றி மகி!

    ReplyDelete
  4. suddenly my tamil editor is not working. It looks great .Must taste good too .I face the same problem as Ms. Radha Rani with peas is facing .
    Any way I shall try to prepare with your recipe and let you know.
    thankyou for sharing.

    ReplyDelete
  5. மிக அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது படமும் செய்முறை விளக்கமும் மகி... நானு இதை செய்து பார்க்கிறேன்....

    ReplyDelete
  6. மகி நானும் செய்வேன் ஆனா பட்டாணி எப்பவும் குழைந்திடும் ..
    குருமா நல்லா இருக்கு ..

    ReplyDelete
  7. ஊற வச்ச பட்டாணியை குக்கர்ல குழையாம வேக வச்சு,சூப்பரா குருமா செஞ்சிருக்கீங்க‌.சப்பாத்தி எல்லாம்கூட‌ ஒரே அளவா வந்திருக்கு. இரண்டையும் சேர்த்து பார்க்கும்போது சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  8. Looks yummy. But what is pattani?

    ReplyDelete
  9. mee the first'

    5sapathi paarcel please...

    ReplyDelete
  10. குருமா நன்றாக வந்திருக்கு. தேங்காயுடன் பாதாம் சேர்த்து ருசியாகவும், ஸத்துள்ளதாகவும் இருக்கிரது குருமா! ரொட்டி பூரி எல்லாவற்றிற்கும் ஏற்றது இது.
    தோசையோட கூடத்தான் நன்றாக இருக்கும். ருசியானது.

    ReplyDelete
  11. ஆஹா சூப்பர் குருமா. நான் பட்டாணியில் சுண்டல் மட்டும்தான் செய்வேன்.

    ReplyDelete
  12. vanathy said...
    Looks yummy. But what is pattani?//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் whole chana dal. எங்கட நாட்டுக் கொண்டைக்கடலை.. சே..சே..சே... விளக்கம் சொல்லிச் சொல்லியே எனக்கு பொசுக்கெனப் போயிடும்போல இருக்கே முருகா!!:).

    ReplyDelete
  13. Siva sankar said...
    mee the first'

    5sapathi paarcel please...///

    இதாரிது புதுவரவு:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
  14. சுவையான சத்தான குருமா..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. hearing this dish for the first.. sounds interesting... a must try!! vil do n let u know later!!

    ReplyDelete
  16. Looks super inviting with the rotis..

    ReplyDelete
  17. சூப்பர் குருமாவும் அந்த 5 சப்பாத்தியும் இருந்தால் இன்று நான் டின்னர் செய்யவே வேண்டாம்,பார்சல் ப்ளீஸ்.

    ReplyDelete
  18. ராதாராணி, பட்டாணி நான் வேகவைத்த முறை ரெசிப்பில சேர்த்துட்டேன், பாருங்க! :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!
    ~~
    இமா, உங்க மாதிரி நான் தாவரபட்சிணி இல்ல..இப்படி அப்படி சமைச்சுத்தான் சாப்பிடறது! நீங்களும் முயற்சித்துப் பாருங்கோ! :)
    ~~
    ராஜி மேடம், பட்டாணி வேகவைக்க நான் சொல்லிருக்கும்படி செய்து பாருங்க. குருமா செஞ்சு பார்த்து சொல்லுங்க. ரொம்ப நல்லா இருக்கும். நன்றிங்க!
    ~~
    இளமதி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க. செய்து பார்த்து சொல்லணும்! :)
    ~~
    நன்றி விஜி, செஞ்சு பார்த்து சொல்லுங்கோ!
    ~~
    ஏஞ்சல் அக்கா, யூ டூ? :) இன்னொரு முறை செய்து பாருங்க, எல்லாம் சரியா வரும். கருத்துக்கு நன்றி!
    ~~
    சித்ராக்கா, இங்க வாங்க, காதைக் குடுங்க..ஒரு ரகசியம் சொல்றேன்! சப்பாத்தி பில்ஸ்பரி-யின் ஃப்ரோஸன் சப்பாத்தி! ;))) என்னவரை கடைக்கனுப்பியபோது 2 பேக்கட் (2x24) வீட்டுக்கு வந்துச்சு, தக்கி முக்கி தீர்த்துகிட்டிருக்கேன். ஹிஹிஹி! :)
    வருகைக்கும், ரசித்து கருத்து தந்ததுக்கும் நன்றி!
    ~~
    வானதி, பூஸக்கா கமெண்ட் பார்த்து குழம்பாதேங்கோ..நான் மெயிலில் அனுப்பிய படமே பட்டாணி..கொண்டைக்கடலை என்பது சிக் பீஸ்! ;)
    ~~
    சிவா, தட்டில இருப்பதே 4 சப்பாத்தி, நீங்க 5சப்பாத்தி பார்சல்னு சொன்னா எப்படி? ;) பரவால்ல, அனுப்பிர்ரேன்! :)) நன்றி சிவா!
    ~~
    காமாட்சிம்மா, // தேங்காயுடன் பாதாம் சேர்த்து ருசியாகவும், ஸத்துள்ளதாகவும் இருக்கிரது குருமா! // கரெக்டா கவனிச்சிருக்கீங்க..தேங்கா, பாதாம், புதினா இவை மூன்றும் அரைச்சு சேர்த்ததால் குருமா வித்யாசமான ருசில இருந்துச்சு. :) தோசைக்கும் கட்டாயம் நல்லா இருந்திருக்கும். நெக்ஸ்ட் டைம் செய்து பார்க்கிறேன்மா!
    நன்றி!
    ~~
    அடடே...அதிரா வந்திருக்காக! செங்கம்பளத்த எடுத்து விரிங்கப்பா! :)))
    அதிரா, இந்தப் பட்டாணியில் சுண்டலும் சூப்பராத்தான் இருக்கும். குருமா- புளி சேர்த்து, கத்தரிக்காய் போட்டு குழம்பு இவையும் நல்லா இருக்கும். செஞ்சு பாருங்க.

    // எங்கட நாட்டுக் கொண்டைக்கடலை.. சே..சே..சே... விளக்கம் சொல்லிச் சொல்லியே எனக்கு பொசுக்கெனப் போயிடும்போல இருக்கே முருகா!!:).// ஆஹா! இதென்ன புதுப் பூதம்??! "அங்கை" கொண்டைக்கடலை எண்டா பட்டாணியோ??!!! அவ்வ்வ்வ்வ்...
    நான் வானதிக்கு மெயில்ல படம் அனுப்பிட்டேன் அதிரா. ஐ திங்க் ஷி இஸ் க்ளியர் நவ்.

    //இதாரிது புதுவரவு:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).// :))) புதுவரவை ராகிங் பண்ணப்படாது, அன்பாத் தட்டிக் குடுத்து வரவேற்கோணும்! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிராவ்!
    ~~
    ராஜேஸ்வரி மேடம், கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    ஶ்ரீவித்யா, செய்து பாருங்க. குருமா நல்லா இருக்கும்! கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    ஹேமா, தேங்க்யூ~
    ~~
    ஆசியாக்கா, ப்ளேட்ல நாலு சப்பாத்திதான இருக்குது? நாலு போதுமா? இல்ல சூடா இன்னொரு சப்பாத்தி போட்டு பார்சல் போடவா? ;)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா!
    ~~

    ReplyDelete
  19. என்னது! பட்டாணி... கொண்டைக் கடலையாமோ!! ;)) எ.கொ.ம.இ!! இதுக்கு சீப்பு தேவையில்லை அதீஸ். ;)
    நிறம் இப்படி இருக்கு. ஆனால் பார்க்க 'க்ரீன் பீஸ்' போல இருக்கும். க்ரீஸ் பீஸ் பச்சைப்பட்டாணி. சரிதானா மகி!

    ReplyDelete
  20. மஹி,
    டிப்ஸ் ரொம்ப ரொம்ப useful. நான் இந்த டிப்ஸ் ட்ரை செஞ்சு பார்க்கிறேன்.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails